காடுவெட்டி குரு குடும்ப விவகாரம் பெரிதாகப் பேசப்படுகின்றது.
டாக்டர் ராமதாசை விமர்சித்தும், ஆதரித்தும் பல பதிவுகளைப் பார்த்தேன்.
முழுவிவரம் நமக்குத் தெரியவில்லை.
நேற்று முன்தினம், குருவின் மகளை, அவரது தங்கை மகன் மனோஜ்கிரண் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
வாழ்க மணமக்கள்.
ஆனால், சொத்துகளைப் பறிக்க,
எனக்குத் தெரியாமல் என் மகள் திருமணத்தை நடத்தி இருக்கின்றார்களே என்று குருவின் மனைவி அவரது கல்லறையில் கண்ணீர் விட்டு அழுகிற படங்கள் தந்தியில் வெளிவந்துள்ளன.
அதே செய்தியில், குருவின் மாப்பிள்ளை மனோஜ்கிரண் என்ன சொல்கிறார்?
என் மாமா குருவுக்கு அப்பல்லோ மருத்துவமனையில் ரூ 32 இலட்சம் செலவு ஆனது. அதை மட்டும்தான் பா.ம.க. ஏற்றுக் கொண்டது. வன்னியர் அறக்கட்டளைக்கு 300 கோடி சொத்துகள் உள்ளன. என் மாமியார் (குருவின் மனைவி), மகன், மகள் கையெழுத்துப் போட்டால்தான் அதை மாற்ற முடியும் என்கிறார்.
இதில் நம்முடைய கேள்வி என்ன என்றால்,
32 இலட்சம் ரூபாய் குருவின் மருத்துவக் கட்டணத்தை பா.ம.க.தான் கட்டி இருக்கின்றது.
அதற்கு மேல் அவரது குடும்பத்தினர் என்ன எதிர்பார்க்கின்றார்கள்?
இதற்குப் பிறகும். எதுவுமே செய்யவில்லை என டாக்டர் இராமதாசைக் குறை சொல்வதற்கு என்ன இருக்கின்றது?
வன்னியர் சங்க அறக்கட்டளைக்கு
300 கோடி ரூபாய் சொத்து இருக்கின்றது என்றால், அறக்கட்டளைச் சட்டப்படி
அது ஒருபோதும் ஒரு குடும்பத்திற்குச் சொந்தம் ஆகி விட முடியாது.
எனவே அவரது மருமகன் அது தங்கள் குடும்பச் சொத்து போலக் கருதிப் பேசுவதும் தவறு.
அத்தகைய அறக்கட்டளைகளில் ஒரே குடும்பத்தினர் உறுப்பினராக இருப்பதும் சட்டப்படி தவறுதான்.
எங்கள் ஊர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரிப் பிரச்சினையும் இதுதான்.
அருணகிரி...

No comments:
Post a Comment