காதலுக்கு முகம் அவசியமில்லை.....

🌼காதலுக்கு முகம் அவசியமில்லை🌼

🌼ஜெயப்பிரகாஷ், கல்லூரி படித்த காலத்தில் ஒரு முறை தன் வகுப்பிலிருந்து வெளிவந்தபோது சுனிதாவை பார்த்துள்ளார். பார்த்த உடனேயே அவர் மேல் காதல் எழுந்தது. அது முதல் ஜெயப்பிரகாஷ் மனதில் நிரந்தர இடம் பிடித்தாள் சுனிதா. இது பற்றி நண்பரிடம் பகிர்ந்து கொண்டார் ஜெயப்பிரகாஷ். கல்லூரி படிப்பு முடிந்ததும் சுனிதா காதல் முடிவுக்கு வந்தது.

🌼13 வருடங்களுக்குப் பின் 2011ம் ஆண்டு... ஒரு நாள் நண்பரிடமிருந்து ஜெயப்பிரகாஷுக்கு போன்... ‘‘சுனிதா... ஒரு விபத்தில் சிக்கி கோயம்புத்தூரில் சிகிச்சை பெற்று வருகிறாள்!’’ என்று கூற

🌼முதல் காதலாயிற்றே. மீண்டும் பற்றிக் கொண்டது. ஜெயப்பிரகாஷ் உடனே சென்று நேரில் பார்த்தார். கண்கள் கலங்கின.  மனதில் உண்டாகியிருந்த காதல் மேலும் கூடியது. மனம் இளகியது. ‘‘2011ம் ஆண்டு நவம்பரில் அவளை, நான் ஆஸ்பத்திரியில் சந்தித்தபோது அவளுக்கு தலையில் ரோமமே இல்லை.

🌼முகம் சீரழிக்கப்பட்டிருந்தது. மூக்கு இல்லை, வாய் இல்லை, பற்கள் இல்லை. இவை இல்லாமல் 90 வயது பெண்மணி மாதிரி அவள் நடந்து வந்தபோது நொறுங்கி போனேன். ஆனால் அப்போதே அவளை என் துணைவியாக ஆக்கிக் கொண்டு, வாழ்நாள் முழுவதும் அவளுக்கு உறுதுணையாக இருப்பது என முடிவெடுத்தேன். அன்று இரவு அவளை மணக்க விருப்பம் தெரிவித்தேன். அவள் சிரித்தாளே ஒழிய பதில் கூறவில்லை” என்கிறார்.

🌼‘‘2012ம் ஆண்டு ஜனவரி வரை அவளுக்கு நடந்த அனைத்து ஆபரேஷன்களிலும் கூடவே இருந்தேன்.’’ ஒவ்வொரு முறை அவள் ஆபரேஷன் முடிந்து, ஐ.சி.யூ வார்டிலிருந்து வெளியே வரும்போதும் சிரிக்கும் சிரிப்பு, காதல் வயப்பட்டிருந்த ஜெயப்பிரகாஷுக்கு  மயக்கும் புன்னகையாக தோன்றியது..

🌼அவளுக்கு இதுபோல் பல அறுவை சிகிச்சைகள் நடந்து முடிந்த பின், அவளை நான் மணக்க உள்ளேன் என்ற என் தகவலை, என் தாய் ரசிக்கவில்லை. ஆனால் தந்தை ஏற்றுக் கொண்டார். பிறகு இருவரும் இணைந்து எங்கள் கல்யாணத்திற்கு சம்மதித்தனர்.

🌼அது பழம் கதை. இன்று எங்களுக்கு ஆத்மியா மற்றும் ஆத்மிக் என இரு குழந்தைகள் உள்ளனர். இவர்களின் மூலம் எங்கள் அன்பு மேலும் புரிதலுடன் கூடியுள்ளது” என்கிறார் ஜெயப்பிரகாஷ்.

🌼இதனை சமீபத்தில் ஒரு சனிக்கிழமை, ‘‘Beyond You’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக் புத்தகத்தில் பதிவு செய்திருந்தார். உடனே இது வைரலானது. காதல் வெற்றிக்கதையாயிற்று, உடனடியாக 1.5 லட்சம் மக்கள் படித்து தங்கள் ஆதரவை தெரிவித்திருந்தனர்.

🌼காதலியின் முகமும், உடலும் சிதைக்கப்பட்டு விட்டது என தெரிந்தும், 27 அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளதை நேருக்கு நேர் பார்த்தும், தன் காதலை கைவிடாத ஜெயப்பிரகாஷ் மனசு எல்லோருக்கும் வருமா?

🌼இதனால்தான் முதல் காதல் தீவிரமானது எனக் கூறுகிறார்களோ? நாமும் இந்த உண்மை காதல் ஜோடியை வாழ்த்துவோம்.

No comments:

Post a Comment

கோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....

கோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு.... நீங்கள் உணவுப்பிரியரா ? சுவையான உணவிற்கு முக்கியத்துவம் கொடுப்பவரா கோவை ம‌ற்றும் ...