கஞ்சமலை - வேடியப்பன் மலை கனிம வளங்களை வெட்டி எடுக்கத் தான் சேலம் 8 வழி சாலை என்று தகவல்கள் பரப்பப்படுகிறதே? அது உண்மை என்பது போல் தான் அரசு தகவல்கள் கூறுகின்றன. தற்போது ஆதாரமும் வலைத்தளங்களில் வேகமாகப் பரவுகிறதே?? சீமான் தம்பிகள் வேகமாக பரப்புகிறார்களே? இதற்கான விளக்கம் என்ன மாரிதாஸ்?

கஞ்சமலை - வேடியப்பன் மலை கனிம வளங்களை வெட்டி எடுக்கத் தான் சேலம் 8 வழி சாலை என்று தகவல்கள் பரப்பப்படுகிறதே? அது உண்மை என்பது போல் தான் அரசு தகவல்கள் கூறுகின்றன. தற்போது ஆதாரமும் வலைத்தளங்களில் வேகமாகப் பரவுகிறதே?? சீமான் தம்பிகள் வேகமாக பரப்புகிறார்களே? இதற்கான விளக்கம் என்ன மாரிதாஸ்? {கேள்வி: தினேஷ்}

இந்தியாவின் 2014/15 இறக்குமதி செய்யப்பட்ட மொத்த இரும்பு தாது (iron-ore) 15-million tons. அதாவது 1.5கோடி டன் இறக்குமதி செய்துள்ளோம்.
இந்தியாவின் உள்நாடு உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் இரும்பின் தேவையும் அதிகரிக்கிறது.

அதாவது மிதி வண்டிகள் ஆரம்பித்து ரயில் வண்டிகள், ரயில் தண்டவாளங்கள் வரை - கப்பல் கட்டுவதில் ஆரம்பித்து வீட்டில் தேவைப்படும் TMT வரை - தண்ணீர் குழாய்கள் ஆரம்பித்து தெரு கரண்ட போஸ்ட் அனைத்திற்கும் இரும்பின் தேவை இருக்கிறது. அது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2014-15ல் மட்டும் 1.5கோடி டன் இறக்குமதி செய்துள்ளோம். எனவே நம் உள்நாட்டில் இருப்பை எடுத்துப் பயன்படுத்துவது தானே சரி??? எல்லா நாடும் தங்கள் உள்நாட்டில் இருந்தால் எடுத்துப் பயன்படுத்தி தானே வளர்கின்றன??? ரயில் வண்டிகள் அதிகம் வேண்டும் - கட்டிடம் கட்டக் கம்பிகள் ,குறைவான விலையில் வேண்டும், வாகனங்கள் ஓட்டுவோம் ஆனால் அது தயாரிக்க இரும்பை எடுக்க விடமாட்டோம்.. இது என்ன சரி!

இந்தியாவில் உள்நாட்டு இருப்பில் இருந்து நாம் மொத்தம் இரும்பு தாது வெட்டி எடுப்பது எவ்வளவு?இந்தியாவில் இரும்பு தாது வழங்கும் மாநிலங்கள் முக்கியமானவை யார் யார்???

ஒரிஸா , கர்நாடகா , கோவா , சட்டீஷ்கர் ,ஜார்க்கண்ட் இந்த ஐந்து மாநிலங்கள் தான் 97% தேவையைப் பூர்த்தி செய்கிறார்கள். மீதம் உள்ள மாநிலங்களில் மிக மிக குறைவு. தமிழகத்தில் உண்மையில் தனிமங்கள் இருப்பு மிக மிகக் குறைவு.

இந்தியாவில் இரும்பு தாது இருப்பில் 33.9% இருப்பது ஒரிஷாவிடம் , 12.3% இருப்பது கர்நாடகாவில் , 26.3% இருப்பது ஜார்க்கண்ட் மாநிலத்திடம் , 5%கோவா , 18.8% சத்தீஷ்கர் இந்த மாநிலங்கள் தான் நாட்டில் ஒட்டுமொத்த இரும்பு தாது வெட்டி எடுப்பதில் 97% இந்த மாநிலங்களில் தான். இவர்கள் எல்லோரும் இதே போல எங்கள் கனிமவளங்கள் அடுத்த மாநிலங்களுக்குக் கொடுக்க முடியாது எடுக்க விடமாட்டோம் என்று கூற எவ்வளவு நேரம் ஆகும்???? இது மட்டும் அல்ல இந்தியாவில் கனிமவளங்கள் ராஜஸ்தான் , ஒரிசா , கர்நாடகா , ஜார்கண்ட் என்று மாநிலங்கள் தான் முக்கியமானவை.

எனவே கொஞ்சமாது நியாயம் எது என்று சிந்திக்கவும். உங்களுக்கு இரும்பு தேவையும் அதிகம் வேண்டும். அதே நேரம் இருப்பதை எடுக்கவும் விடமாட்டோம் என்றால் என்ன சிந்தனை இது????

இந்தப் பகுதிகளில் ஏறக்குறைய 100மில்லியன் டன் இருப்பு இருப்பதாக அரசு வெளிப்படையாகத் தானே கூறுகிறது. எதையும் அரசு மறைக்கவில்லையே? அவர்கள் கொடுக்கும் தகவல்களை எடுத்து வெளியிட்டு - எதோ ரகசியத்தை வெளியிட்டது போல பரப்புவது என்ன வியாதி இங்கே???? அதை எடுத்து உள்நாட்டுத் தேவையை பூர்த்தி செய்வதன் மூலம் இறக்குமதியை வெகுவாக குறைக்கலாம் அது நேரடியாக நம் நாட்டுக்குத் தானே நல்லது???

அவ்வளவு பெரிய இடத்தைச் சுரங்கம் என்று தோண்டுவதா???? என்று சிலர் கேட்கிறார்கள். சுரங்கம் என்றால் தோண்டாமல் என்ன செய்வார்கள்??? என்ன கொடுமை இது. ஆமா தோண்ட தான் செய்வார்கள். அய்யா தமிழ்நாடு அளவு சுமார் 130,060 km² - அதில் சும்மா ஒரு பேச்சுக்கு பெரிய இடத்தை சுமார் 1000 ஹக்டர் நிலத்தை எடுத்துப் பயன்படுத்த அரசு விரும்பினால் கொடுப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஏன் என்றால் வெறும் 0.01% கூட அதன் அளவு கிடையாது மொத்த ஒப்பிடால் . எனவே எந்தப் பெரிய தவறும் இல்லை இதில். இயற்கை பாதிப்பிலாமல் உங்களால் வீடு என்ன நாட்டில் சாலையில் நடக்கக் கூட முடியாது சார்.

அதாவது நல்ல புரிந்து கொள்ளுங்கள் -நீங்கள் தீவிரமான அசைவ உணவு உண்பவராக உலகிற்குக் காட்டி கொள்ளுங்கள், உயிர் மீது அன்புடையவராக இருந்து விட்டுப் போங்கள் பொங்கல் என்றாலும் நீங்களும் கூட தினமும் சில கோடி நுண்ணுயிர்கள் தின்று தான் உயிர் வாழ்கிறீர். இது தான் இயற்கை. (சேலத்தில் காட்டுக்குள் வீடு கட்டுவதாக விளம்பரம் செய்கிறார் சிலர். அது கூட எத்தனை எத்தனை மண்புழுக்கள் , குருவிகள் தங்க வேண்டிய இடத்தில் நீங்கள் வீடு கட்டி குடியேறுவது எப்படி சரி. அய்யா வீடு கட்டும் போதே எவ்வளவு மண்ணில் வாழும் சிறு உயிரணங்கள் இறக்கும்??? இப்படியா பேசி திரிவது????

எனவே இயற்கை எந்த அளவிற்கு இதனால் பாதிப்பாகும் - அதற்கு மாறாக என்ன திட்டம் அரசிடம் உள்ளது என்ற அக்கறை எல்லாம் பசுமை தீர்ப்பாயம் சென்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அதை விட்டு விட்டு அய்யகோ மலை கனிமவளம் என்று ஆரம்பிக்க வேண்டாம்.
------------------------------------------------------------------------------
இது தனியாருக்கு கொடுப்பதாகத் தகவல் கூறுகிறதே????

நீங்களும் 1000கோடி இருந்தால் போட்டி போட்டு எடுக்க வேண்டியது தானே.. இதை அரசு நடத்த வேண்டும் என்ற அவசியமே இல்லை. மொத்த இரும்பை எடுத்துக்கொடுக்கும் வேலை தான் தனியாருடையது - நன்கு கவனித்தால் அந்த அறிக்கையில் எவ்வளவு சதவீதம் அரசும் அந்தப் பணியை செய்யப் போகும் நிறுவனமும் பகிர்மானம் இருக்கும் என்பதும் தெரியும். தனியார் லாபம் இல்லாமலா செய்வான்??? இது என்ன முட்டாள்தனமான கேள்வி லாபம் இல்லாமல் எவன் செய்வான். அது நியாயமான முறையில் இருக்கிறது என்றால் கொடுக்க தான் வேண்டும்.

அரசே நடத்தலாமே.... அய்யோ தயவு கூர்ந்து ஆரம்பித்து விட வேண்டாம்... அரசு நடத்தின இப்படியான விசயங்களில் அரசு ஊழியர்கள் காட்டிய வேலை லட்சணம் இந்த 60ஆண்டு இந்திய வரலாற்றை எடுத்துப் பார்த்தாலே தெரியும். என்னைக் கேட்டால் அரசுப் பள்ளியில் ஆரம்பித்து மருத்துவ மனை வரை அனைத்தையும் தனியாரிடம் கான்ராட்க் கொடுத்துவிடுவது மிக மிக நல்லது.

மக்களுக்குத் தேவை இலவச கல்வி அரசுப் பள்ளிகளில் - நமக்குத் தேவை தரமான கல்வி இலவசமான ஏழைக் குழந்தைகளுக்கு சென்று சேரவேண்டும் - செலவும் குறையும் அரசு ஊழியர்கள் ஆண்டு ஆண்டுக்குச் சம்பளம் பத்தவில்லை என்று போராட்டம் நடத்தி காசு கொடு இன்னும் காசு கொடு என்று அரசை மிரட்டாமல் நிம்மதியாக விடுவர். (ஆசிரியல் பணிக்கான குறைந்த பட்ச சம்பளத்தை வேண்டுமானால் அரசு நிர்ணயம் செய்யலாம் தவிர என்னைக் கேட்டால் தேவையே இல்லை இந்த அரசு ஊழியர்கள் தொல்லை).

எனவே இப்போது தான் 2000களில் ஆரம்பித்துத் தான் கொஞ்சம் கொஞ்சமாக இந்த அரசே நடத்த வேண்டும் என்ற தவறான கொள்கையை மாற்றி வருகிறது அரசு. தயவு கூர்ந்து விட்டுவிடுங்கள். இல்லை BSNL போலத் தான் ஆகும். அப்படியே லாபம் வந்தாலும் அது மக்களுக்கு வராது - இந்த ரயில்வே போல. ஆக அரசு நடத்த வேண்டும் என்று கூறுபவனுக்கு இந்த நாட்டில் அரசு ஊழியர்கள் குணம் தெரியவில்லை என்று பொருள். வங்கியைக் கொடுத்தோம் - மொத்தமும் காலி. திவால் ஆகும் நிலைக்குக் கொண்டுவந்துவிட்டனர். இதை விடவா நமது அரசு ஊழியர்கள் லட்சணம் புரியவேண்டும். எனவே போதும்.
-------------------------------------------------------------------------------------
ஆக அதற்காகவா ரோடு போடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு மீது உங்கள் பதில்???

SRM கல்லூரி அருகே ஒரு ரோடு போட்டும் - அது அந்த SRM கல்லூரி பச்சை முத்து அவர்களுக்குத் தான் என்று சொன்னால் சரியா இருக்குமா??? டெல்லி மும்பை இடையே - சென்னை பெங்களூர் இடையே - மும்பை பெங்களூர் இடையே என்று பல வகையில் நாம் Industrial Corridors அமைக்கிறோம் - அங்கே வர போகின்ற பெரும் நிறுவனங்களுக்காக தான் ரோடு போடுறாங்க என்று சொன்னால் எப்படி இருக்கும்??? இப்படி எல்லாம் பேசுறவன என்ன சொல்லி திருத்த????

எதற்கு இவ்வளவு வேகமாக போடா வேண்டும்?????

என்ன கொடுமை சார் இது.. மெதுவாக அரசு செயல்பட்ட போது ஏன் மெதுவான்னு சொல்லவேண்டியது - வேகமாக நகரும் போது அதை சந்தேக கண்ணுடன் பார்ப்பது என்ன சரி??? இந்தியாவில் சாலைகள் அமைக்கும் பணி நரேந்திர மோடி அவர்கள் ஆட்சி வந்ததில் இருந்து வேகம் தான். இது தான் உண்மை.

ஆக இங்கே போராட்டம் நடத்த என்னடா வழி எப்படி எல்லாம் போராடலாம் என்று தீவிரமாக அலைகிறது ஒரு பக்க கூட்டம். அதிலும் இந்தியாவில் இப்படி திட்டங்களை எதிர்த்து போராட்டம் நடந்தால் போதுமான நன்கொடை தர பல நாடுகள் காத்திருக்க போராட்டமே ஒரு பிசினஸ் போல ஆகிவிட்டது இந்த கேடுகெட்ட கூட்டத்திற்கு.

அதிலும் இப்போது சமீப காலமாக விடுதலைப் புலிகள் எந்தத் தீவிரவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள் வெளிநாடுகளிலும் - உள்நாட்டிலும் உட்காந்து கொண்டு ஈழத்தை வாங்கிக் கொடுத்து அங்கே மக்களை அமோகமாக வாழ வச்சுடாங்க - இங்கே தமிழக மக்களை வாழ வைக்க எந்நேரமும் எதையாது எழுதிகிட்டே திரிகிறார்கள் கேட்டால் மொழி பாசம். கடவுளே.... !!!

கேட்டுகோங்க விடுதலைப் புலிகள் அல்ல எந்தத் தீவிரவாத கூட்டமும் ஆதரவு அளித்தாலும் அந்தச் சமூகம் உருப்படாமல் போகும். இது தான் 20ஆம் நூற்றாண்டின் பாடம். புரட்சி , போர் என்று பேசும் போது வசனம் எல்லாம் நல்லா தான் இருக்கும் - பின் சமூகமே அழியும் போது தான் அதன் வேதனைப் புரியும். என்ன சொன்னாலும் விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் தான். அவர்கள் இந்த மண்ணுக்கு அல்ல இலங்கைக்கு அல்ல யாருக்கும் நண்பர்கள் இல்லை என்று ஜெயகாந்தன் கூறியது 100% உண்மை. காரணம் ஆயுதம் ஏந்தி தீவிரவாதம் ஆதரிப்பது. இங்கே அதற்கான விதையும் மெல்ல விதைக்கிறார்கள் தயவு கூர்ந்து விலகி நில்லுங்கள். இவனுக சும்மாவே இருக்கவே மாட்டானுக. எழுதி வச்சுக்கோ எவன் எல்லாம் விடுதலை புலிகள் பார்வை சரி என்றும் பிரிவினைவாத கருத்துக்களுக்கு ஆதரவாகவும் ஆயுதம் ஏந்தவும் தயார் ஆவோம் என்று திரிகிறானோ அவன் எல்லாம் தன் குடும்பத்தையும் தன்னையும் ஒரு மோசமான நிலைக்கு தள்ளுவது மட்டும் அல்லாது இந்த சமூகத்தின் சாபக்கேடாக வந்தி நிற்பான். நல்லது செய்கிறேன் பேர்வழி என்று நாசம் செய்வது தான் மிச்சம்.  மா.பொ.சி , ஜெயகாந்தன் , சோ என்று அனைவரும் இவர்களை ஆதரிப்பது இல்லை ஒழுங்கா அதன் காரணம் புரிந்து விலகி நில்லுங்கள்.

எனவே இரும்பு தாது என்னவோ தமிழகம் கொடுத்துத் தான் மற்ற மாநிலங்கள் என்று பேசுவதை விட்டுவிட்டு கொஞ்சம் நாட்டில் உள்நாட்டு உற்பத்தி அதன் தேவை சார்ந்து சிந்திக்கவும். உடனே விவசாயம் என்று ஆரம்பிக்க வேண்டாம்.

விமானம் நிலையம் எதற்கு ? சாப்பட்டுக்கு சோத்துக்கு எங்கே போவ??? சாப்வேரா சோறு போடும் விவசாயம் தான் சோறு போடும்!!! இப்படி எல்லாத் துறையையும் விவசாயத்தோடு இணைத்துப் பேசும் முட்டாள்தனத்தை விடுங்கள். சினிமா நடிகர்கள் தான் இப்படி உணர்வை தூண்டிவிட்டு காசு பார்த்து அடுத்த படம் நடிக்கிறார்கள் என்றால் நீங்கள் இதை போன்ற வசனங்களை பேசி திரிய வேண்டாம்.  எல்லாமே தனி துறை அதை விவசாயத்தில் வளர்ந்த நாட்டுடன் ஒப்பிட்டுப் பேசவும் யோசிக்கவும். அதைவிட்டு விட்டு - கார் கம்பெனி எதற்கு , சாப்வேர் கம்பெனி எதற்கு சினிமா எதற்கு என்று பேசி திரியாதீர்.

ஆக இதில் எந்த ரகசியமும் இல்லை எந்த தவறும் இல்லை.

-மாரிதாஸ்

No comments:

Post a Comment

கோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....

கோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு.... நீங்கள் உணவுப்பிரியரா ? சுவையான உணவிற்கு முக்கியத்துவம் கொடுப்பவரா கோவை ம‌ற்றும் ...