* தாழை மலர் * (Pandanus fascicularis) தற்காலத்தில் தாழம்பூ என அழைக்கப்படுகிறது.

* தாழை மலர் * (Pandanus fascicularis)
தற்காலத்தில் தாழம்பூ என அழைக்கப்படுகிறது.




நீறு பூசியும் சிவன் தலையில் இடம்பெறவில்லை என குமரகுருபரர் பாடுகிறார்.
பொய் பேசியதால் தாழ்ந்தது தாழை.
சாகாமூலி சீந்திலுக்கும், ஆலமரத்துக்கும் உள்ள விழுதுகள் போல் தாழைக்கும் விழுதுகள் உண்டு.
மணமிக்க தாழம்பூ கிருமிநாசினியாகவும் பயன்படுகிறது, அம்மைநோய் கண்ட வீட்டில் தாழம்பூவை கட்டித்தொங்க விடுவதால் அக்கிருமிகள் அழிகின்றன. ஓலைச் சுவடிகளை பூச்சி அரிக்காமல் பாதுகாக்க தாழம்பூ பயன்படும்.
நீண்டவிழுதுகள் வீட்டுக்கு வெள்ளை அடிக்கவும், நார் ஊஞ்சலாடவும், இதன் ஓலையில் தாழைப்பாய் தயாரித்தும், பூவில் வாசணைத் தைலம் எடுத்தும் பயன்டுத்தினர்.
பாரம்பரிய நிலம் சார்ந்த மரங்களை அழித்து வருவதால் இயல்பான இயற்கை சூழ்நிலை மாறிவருகிறது, மண்ணரிப்பு, சுனாமி, கடல்சீற்றம் ஆகிய பேரிடரைத் தடுக்கும் ஆற்றல் கொண்ட தாழை மரங்களால் கடற்கரையில் நம்புதாளை, வேதாளை, தாழையூத்து, பூந்தாழை,தாழைக்காடு, தாழையூர், கூடுதாழை, பெரியதாழை என பல ஊர்கள் தாழையின் பெயராலே உருவாகியுள்ளன,
இயற்கையே உயிர்களுக்கு பாதுகாப்பு, இயற்கையை அழித்து செயற்கையாக நகரமைப்புகள் செய்வது சொந்த பனத்தில் சூணியம் வைத்துக் கொள்வதற்கு சமமே.




"கோவைக்காயும் பாகைக்காயும்"

"கோவைக்காயும் பாகைக்காயும்"
'அறுசுவைகளில் கசப்புச்சுவை மிக முக்கியமே,
லேம்பிலும்கசப்புண்டு, அரளியிலும் கசப்புண்டு, வேம்பு கசப்பு உயிரை வளர்க்கும், அரளி கசப்பு உயிரை எடுக்கும்,
ஆனால் மருத்துவ குணத்தோடு நாம் சமைத்துண்ணும் பக்குவத்தில் பாகையும் கோவையும்.

நம் நாக்கில் அறுசுவைகளை அறியும் ஆறு நரம்புகள் அவை மூலம் 72000 நரம்புகளின் தோகுப்பு நரம்பு மண்டலம இவை நலம்பெற அறுசுவை அவசியம.
இனிப்பு புளிப்பு கார்ப்பு உவர்ப்பு இதிலும் இனிப்பே அதிகம், துவர்ப்பும் கசப்பும் எடுத்துக் கொள்வதே இல்லை,
நோயால் டாக்டரிடம் போனால் கசப்புசுவையில் மாத்திரை அதையும் நாக்கில் படாமல் விழுங்குவது பிறகு நோய் எப்படி விலகும் நாவில் பட்டுச்செல்லும் மருந்துகளே நலம் தரும்.

நாக்கில் நாம் அறியும் சுவையிலேயே நோய்குனமாகும்.
நாக்கை மடித்து கேசரி முத்திரை மூலம் யோகத்தை சித்திக்கும் ஆற்றலை பெறலாம், சுவை ரிசீவர் நாக்கு மூலமே நோய் தீரும் உதாரணமாக நிலவேம்பு கசாயம்.
மருத்துவ கல்வி என்பது பள்ளிபருவத்தில் இருந்தே அறிந்து கொள்ள வேண்டிய பாடம்.

* தீராத நோய் தீர்த்து ஆரோக்கிய வாழ்வு தரும் ஸ்ரீ தன்வந்திரி பகவான் *



* தீராத நோய் தீர்த்து ஆரோக்கிய வாழ்வு தரும் ஸ்ரீ தன்வந்திரி பகவான் *

மக்களை காக்கும் பொருட்டு திருமால் எடுத்த தசாவதாரங்கள் 
மத்ஸ்ய, 
கூர்ம, 
வராக, 
நரசிம்ம, 
வாமன, 
பரசுராம,
ராம,
பலராம,
கிருஷ்ண 
மற்றும் 
கல்கி என பத்து அவதாரங்களையும் கடந்து 
தத்தாத்ரேயர், வியாசர், கபிலர், போன்ற வரிசையில் திருப்பாற்கடலில் தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் கடைந்தபோது கடலில் இருந்து பல்வேறு தெய்வ வஸ்த்துகள் வெளிப்பட்ட போது அண்டமே வியக்கும் வண்ணம் ஜோதி வடிவில் தன்வந்திரி பகவான் கற்பனைக்கு எட்டாத ஆரோக்கிய அழகோடு அமிர்த கலசத்தோடு நம்மை எல்லாம் காக்க தெய்வீக மருத்துவராக திருமால்.
" ஓம் நமோ பகவதே வாசுதேவாய 
தன்வந்த்ரயே அமிர்த கலச ஹஸ்தாய
ஸர்வ ஆமய விநாசநாய த்ரைலோகாய
நாதாய ஸ்ரீ மஹா விஷ்ணவே நம:"
'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'
ஸ்ரீ ரங்கத்தில் தன்வந்திரி சந்நிதி பிரசித்தமானது,

"குமரி எனும் சோற்றுகற்றாழை"

"குமரி எனும் சோற்றுகற்றாழை"

**இரத்தம் போல் சாறு வரும் கசப்பில்லா செங்கற்றாழை**
*குமரியை வெல்ல குமரியை உண்ணு*
மருத்துவத்தின் ராணி கற்றாழை, 
மேகநோய் பலவீனம், எரிச்சல், நீர்கசியும் கிரந்தி, அரிப்பு, மஞ்சள் சிவப்பு நிறத்தில் சிறுநீர் போதல், தாது இழப்பு, அரையாப்பு, தொடைவாழை, உறுப்புக்கள் அக புற ரணங்கள், மலச்சிக்கல் என சர்வ ரோக நிவாரணியாக கற்றாலை,
கற்றாழையின் பயன்களை அறிந்து பயன்படுத்துவீர்.
உடம்பார் அழிவின் உயிராய் அழிவர்
திறம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.

உலக நாடுகளில் தமிழனின் பெருமையும் திறமையும் ஓங்கி நின்ற காலம் மாறிவிட்டதோ? என் மக்களை மூடர்களாக்குவது யார்? ஜனநாயகத்தில் போராட்டம் தேவைதானா?

உலக நாடுகளில் தமிழனின் பெருமையும் திறமையும் ஓங்கி நின்ற காலம் மாறிவிட்டதோ?
என் மக்களை மூடர்களாக்குவது யார்?
ஜனநாயகத்தில் போராட்டம் தேவைதானா?
என் மக்களின் உணர்ச்சிகளுக்கு தீணி போட்டு சட்டம் ஒழுங்கு காவல்துறை பாதுகாப்பு மருத்துவம் என அனைத்தையும் வேரோடு திசை திரும்பும் கலவாளிகள் யாரோ?
எட்டுக்கு ஒரு மஹான்கள் வாழ்ந்த இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் என் தமிழ்தாய் மண்ணில் கலவரத்தை விதைத்த விவசாயிகள் யாரடா?
ஆறாம் அறிவையும் கடந்து ஏழாம் அறிவுக்குள் பயணிக்கும் ஆற்றல் பொருந்திய என் சகோதரக் கூட்டத்தை மூடர்களாக்கியது யார்?
ஆண்களுக்கு மந்திரி போல் ஆலோசணை வழங்கியும்,
மழை பெய் என சொன்னால் பெய்த சக்தி கொண்ட என் சகோதரிகளை காவல்துறையை தாக்குவதே நம் லட்சியம் என மைக் பிடித்து பேசி அனைவரின் உணர்வுகளையும் தூண்ட செய்த விஞ்ஞானி யார்?
போராட்டம் போர்க்களம் கலவரம் நம் வளர்ச்சிக்கு தேவைதானா?
மக்களுக்காக மத்திய அரசிடம் போராட வேண்டியது மக்கள் அல்ல, மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளே?
மக்களை தூண்டி விட்டு கலவரத்தை உண்டாக்கிய நயவஞ்சகர்கள் ஸ்டெர்லைட் மீத்தேன் சாகர்மாலா போன்ற திட்டங்களை பொதுஜன கூட்டத்தில் நன்மை தீமைகளை விளக்கி அனுமதி பெற்றால் இப்படி ஒரு அவலநிலை வருமா?

மக்களுக்காக பாடுபட கைக்கூப்பி ஆட்சியில் உள்ள உத்தம வில்லன்களே.
கல்லனை கட்டிய கரிகாலன் வாழ்ந்த மண்ணில் தான் வாழ்கிறோம் என சிந்தியுங்கள்.
என் மக்களே அனைத்து கட்சி தலைவர்களாக உள்ளோரும் சுயநலவாதிகளே, எவனும் மக்கள் நலனுக்காக பாடுபடவில்லை,
வேதனை வேதனை என்னால் கண்ணீர் மட்டுமே சிந்த முடிகிறது,
சத்திரியனாக இருப்பதை விட சாணக்கியனாக இருந்தால் மட்டுமே நம் இனம் தழைக்கும்.
ஒரு காவல்த்துறையை சேர்ந்த பெண் இன்னும் நூறு பேர் செத்தாலும் பரவாயில்லை, இப்போது உயிர் நீத்த எட்டுப்பேருக்கு நீதி கிடைக்கும் வரை தீவிரமான போராட்டம் தேவை, எல்லாத்துறையை சேர்ந்த பாலிப நண்பர்களும் ஒன்று திரண்டு அரசுக்கு எதிரான போராட்டம் தேவை என்று சொல்வது தவறான கருத்து.
ஏற்கனவே பற்றி எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றிவது நல்லதா?
முகநூல் மூலமாக பதிவின் மூலம் வெறி உணர்ச்சிகளை தூண்டாதீர்,

* புற்றுநோய் அறிகுறி கண்டவுடன் கைக்கொள்ள வேண்டிய மருந்து *

* புற்றுநோய் அறிகுறி கண்டவுடன் கைக்கொள்ள வேண்டிய மருந்து *
கடந்த 2012- ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஓர் கணக்கெடுப்பில் உலகில் மொத்தம் 14.1 மில்லியன் மக்கள் புற்றுநோயால் அவதிப்பட்டு வருகி
ன்றனர்.
இன்று மக்களிடையே சளி காய்ச்சல் போல மிக சாதாரணமாக ஏற்படக்கூடிய நோயாக புற்று நோய் உருவெடுத்துள்ளது.
அதிர்ச்சி தகவலாக 2035 ல் உலகில் 24 மில்லியன் மக்கள் இப்பாதிப்புக்கு ஆட்பட வாய்ப்புள்ளதாக ஆய்வு கூறுகிறது.

அறிகுறிகள்-
தொடர்ந்து இருமல்.
இருமல் மிகச் சிறிய உடல்நல பாதிப்பு தான். ஆனால், தொடர்ந்து எந்த காரணமும் இன்றி இருமல் வந்து கொண்டே இருந்தால் அது நுரையீரல் / தொண்டை / தைராய்டு புற்று நோயாக இருக்க வாய்ப்புள்ளது.
திடீர் உடல் எடை குறைவு-
உடல் எடை திடீரென குறைய நிறைய காரணங்கள் இருக்கின்றன. தைராய்டு பிரச்சனை இருந்தால் கூட உடல் எடை குறைவு ஏற்ப்படும்.
சரியான காரணங்கள் இன்றி தீடீரென 4.5 கிலோ வரை உடல் எடை குறைவு ஏற்படுவது புற்றுநோய் அபாயத்தின் முதல் அறிகுறி. இது வயிறு, நுரையீரல், கணையம்,உணவுக்குழாய் புற்றுநோயாக இருக்கலாம்.
மார்பு பகுதியில் மாற்றங்கள்-
மார்பக புற்றுநோய் என்பது பெண்கள் மத்தியில் மட்டும் ஏற்ப்படுவதல்ல.
இது ஆண்களுக்கும் கூட ஏற்படும். மார்பு பகுதியில் திடீர் மாற்றங்கள் ஏற்படுவது கொப்பளம் போன்று தோன்றுவது, வீக்கம் நிறம் மங்குதல் போன்றவை ஏற்பட்டால் உடனே பரிசோதனை செய்வது நலம்.
சிறுநீர் மாற்றம்-
எல்லாருக்குமே சிறுநீரில் அவ்வப்போது நிறம் மாறுதல் சகஜம். ஆனால், நீண்ட நாட்கள் தொடர்ந்து சிறுநீர் நிறம் மாறியே வெளிப்படுதல் குடல் அல்லது மலக்குடல் புற்றுநோய் அறிகுறியாக இருக்கலாம்.
நிணநீர் கணுக்கள் வீக்கம்-
கழுத்து மற்றும் அக்குள் பகுதியில் நிணநீர் கணுக்கள் இருக்கும். சளி காய்ச்சல் சமயங்களில் இவற்றில் வீக்கம் தென்படும். ஆனால், தொடர்ந்து வீக்கம் இருக்குமானால் மருத்துவ பரிசோதனை நல்லது.
சருமத்தின் நிறம் மாறுதல்-
உங்கள் சருமத்தில் குறிப்பிட்ட வித்தியாசத்தில் அதிகநாள் மச்சம் புள்ளி வீக்கம் ஸ்கின் கேன்சர் அறிகுறியாகும்.
இதழ்-
உங்கள் இதழ் (உதடு) வெள்ளை/ சிகப்பு நிறத்தில் தடிப்புகள் தென்பட்டால் அது வாய் புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.
முக்கியமாக, புகை மற்றும் புகையிலை பயன்படுத்தும் நபர்களுக்கு இந்த அபாயம் ஏற்படும்.
களைப்பு / சோர்வு -
நாள் முழுக்க வேலை செய்தால் சற்று சோர்வாக உணர்வது இயல்பு. ஆனால், தொடர்ந்து களைப்பாகவே உணர்தல் புற்நோய்க்காண ஒரு அறிகுறி என்றாலும், இரத்தத்தில் சிகப்பணுக்கள், வெள்ளை அணுக்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் உடல் சோர்வு ஏற்படும்.
வயிறு வீக்கம் ( பெண்கள்)
காரணமின்றி திடீரென வயிறு வீங்குதல் கருப்பை புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். மேலும், இவ்வாறு ஏற்படும் போது முதுகு, இடுப்புவலி, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், குடல் இயக்த்தில் கோளாறுகள் கூட ஏற்படலாம்.
தொடர்ந்து இடுப்புவலி / முதுகுவலி (ஆண்கள்)
தொடர்ந்து முதுகுவலி இருந்து கொண்டே இருப்பது தண்டுவடம் பகுதியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதை வெளிப்படுத்தும் அறிகுறி. மேலும், பெருங்குடல் மற்றும் புரோஸ்டேட் தாக்கம் ஏற்பட்டிருந்தால் கூட இவ்வாறு தொடர்ந்து இடுப்புவலி ஏற்படலாம்.
இரத்தப்போக்கு ( பெண்கள்)
மாதவிடாய் காலத்தில் இன்றி, வேறு நாட்களிலும் இரத்தப்போக்கு அதிகமாக இருந்தால் அது ஏதேனும் நோய் தொற்று அல்லது கர்ப்பபை வாய் புற்றுநோய் அறிகுறியாக இருக்கலாம்.
இடுப்பு பகுதியில் மாற்றம் ( ஆண்கள் )
இடுப்பு பகுதியில் கட்டி / கடினமாக உணர்தல் போன்றவை விதை புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். ஒருவேளை இது தொடர்ந்தால் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
" வருமுன் காப்போம் என்பதற்க்கு தான் இப்பதிவு "
இன்றைய காலம் குழந்தைகளுக்கு கொடுக்கும் சிறுதீனியில் கவணம் தேவை, அனைவரும் குடிக்கும் குடிநீரும் குளிர்பானங்களில் பெரிதும் மாற்றம் தேவை.
உங்கள் நலம் கருதி.
உங்க வீட்டு வேலன்.

" Cleome gynandra "  நீண்ட காம்புடன் விரல்கள் விரிந்த மணமுடைய இலைகளையும் வெண்மையும் கருஞ்சிவப்பும் கலந்த மலர்களையும் உடைய குறுஞ்செடி. மழைக்காலங்களில்  சாலையோரங்களிலும், தரிசுகளிலும் வளர்கிறது. நல்வேளை தைவேளை என்றும் அழைப்பதுண்டு. இலை பூ விதை ஆகியவை மருத்துவ பயனுடையயவை.

** நல்ல வேளை **
" Cleome gynandra "
நீண்ட காம்புடன் விரல்கள் விரிந்த மணமுடைய இலைகளையும் வெண்மையும் கருஞ்சிவப்பும் கலந்த மலர்களையும் உடைய குறுஞ்செடி. மழைக்காலங்களில்
சாலையோரங்களிலும், தரிசுகளிலும் வளர்கிறது. நல்வேளை தைவேளை என்றும் அழைப்பதுண்டு. இலை பூ விதை ஆகியவை மருத்துவ பயனுடையயவை.

இலை நீர்கோவை நீக்கும் மருந்தாகவும், பூ கோழையகற்றிப் பசியுண்டாக்கவும், விதை இசிவு அகற்றியாகவும், வயிற்றுப் புழுக்கொல்லியாகவும், குடல் வாயுவகற்றியாகவும் பயன்படும்.
சமூலத்தை இடுத்துப் பிழிந்துவிட்டுச் சக்கையைத் தலையில் வைத்துக்கட்டி யெடுக்க நீர்க்கோவை,தலைப்பாரம், தும்மல் தலையில் குத்தல் குடைச்சல் ஆகியவை தீரும்.
இலை 1 பிடி, சுக்கு 1 துண்டு, மிளகு 6,சீரகம் 1 சிட்டிகை சிதைத்து அரை லிட்டர் நீரில் இட்டு 200 மி.லி. யாகக் காய்ச்சி, தினம் 3 வேளை 50 மி.லி. அளவாய் குடித்து வர வாதச்சுரம் சீதளச் சுரம் ஆகியவை தீரும்.
நல்ல வேளை இலைச்சாறு ஒரு துளி காதில் விட்டு வர சீழ்வருதல் நிற்கும்.
நல்ல வேளை இலையை அரைத்துப் பற்றுப் போடச் சீழ் பிடித்துக் கட்டிகள் உடைந்து ஆறும்.
பூச்சாறு 10 துளி தாய்ப்பாலில் கலந்து பிறந்த குழைந்தைகளுக்குக் கொடுக்கக் கபம்,
கணமாந்தம் சளி நிறைந்து மூச்சுத்திணறல், சுரம், நீர்கோவை ஆகியவை தீரும்.
விதையை நெய்விட்டு வறுத்து பொடித்து சிறுவர்க்கு அரை கிராம்,பெரியவர்க்கு 4 கிராம் வீதம் காலை மாலையாக மூன்று நாள் கொடுத்து நான்காம் நாள்
(விளக்கெண்ணையில்)
பேதிக்குக் கொடுக்கக் குடலிலுள்ள தட்டைப்புழுக்கள் கழியும்.
' மூலிகை அறிந்தால் மூவுலகை ஆழலாம் '
உங்கள் நலங் கருதி.
உங்க வீட்டு வேலன்.

* மாம்பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள *

* மாம்பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள *

" மாம்பழம்... என்ன பேரைக் கேட்டாலே சும்மா நாக்கில் எச்சில் ஊறுகிறதா? இருக்காதா பின்னே. பெரும்பாலும் நாம் அதிகம் விரும்பும் பழம் மாம்பழமே. மிகவும் சுவையான மாம்பழம் சுவைக்கு மட்டும் புகழ் பெற்றது அல்ல. அதனுள் உள்ள மருத்துவ குணங்களை சொன்னால் ஆச்சரியப்பட்டு விடுவீர்கள்"
அத்தனை ஆற்றல் உள்ளது அதற்கு. மாம்பழத்தில் பூரிதக் கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் சோடியத்தின் அளவு மிகவும் குறைந்தே காணப்படுகிறது. இதில் மேலும் முக்கியமாக நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி6 அதிகம் உள்ளது. வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி-யும் அதிகம் உள்ளது. பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் காப்பர் போன்ற கனிமங்களும் இதில் வளமாகக் காணப்படுகிறது. இது போக க்யூயர்சிடின், பீட்டா கரோட்டின் மற்றும் ஆஸ்ட்ராகாலின் போன்ற ஆக்சிஜெனேற்றத் தடுப்பான்கள் நிறைய உள்ளன.
இந்த சக்தி வாய்ந்த ஆக்சிஜெனேற்றத் தடுப்பான்களுக்கு இயங்கு உறுப்புகளை நடுநிலையாக்கும் சக்தி உள்ளது. இயங்கு உறுப்புகளால் அணுக்கள் பாதிக்கப்பட்டு ஏற்படும் நோய்களே இருதய நோய்கள், குறித்த காலத்திற்கு முன் வயதிற்கு வருதல், புற்று நோய் மற்றும் சிதைத்தல் நோய். சரி... மாம்பழத்தில் உள்ள மருத்துவ குணங்களால் ஏற்படும் உடல் நல நன்மைகளை பார்க்கலாமா? இரத்த அழுத்தம் மாம்பழத்தில் உள்ள வைட்டமின்களின் உள்ளடக்கம் மிகவும் அதிகம். இது நமக்கு அனைத்து வழிகளிலும் நல்ல உடல் நலத்தை கொடுத்து உதவும். வளமான அளவு பொட்டாசியம் (146 மில்லிகிராமில் 4%) மற்றும் மெக்னீசியம் (9 மில்லிகிராமில் 2%) உள்ள மாம்பழம் அதிக இரத்த அழுத்தம் கொண்ட நோயாளிகளுக்கு இயற்கை மருந்தாக அமைகிறது. கொலஸ்ட்ரால் மாம்பழத்தில் அதிக அளவு பெக்டின் என்ற கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால், இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைத்திட உதவும். எடை அதிகரிக்க உடல் எடையை அதிகரிக்க மாம்பழம் சாப்பிட்டால் சுலபமாக எடையை அதிகரிக்கலாம்.
150 கிராம் மாம்பழத்தில் 86 கலோரிகள் அடங்கியுள்ளன. இதை உடல் சுலபமாக ஈர்த்துக் கொள்ளும். மேலும் மாம்பழத்தில் உள்ள மாச்சத்து அதனை சர்க்கரையாக மாற்றுவதால், எடையை அதிகரிக்க அது உதவும். செரிமானம் செரிமானமின்மை மற்றும் அமிலத்தன்மையினால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கும் முக்கியமான பங்கு வகிக்கிறது மாம்பழம்.
மாம்பழத்தில் உள்ள செரிமான நொதிகள் இயல்பான முறையில் செரிமானம் நடந்திட உதவும். இரத்த சோகை மாம்பழத்தில் அதிகமாக இரும்புச்சத்து இருப்பதால், இரத்த சோகை உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது. மாம்பழங்களை ஒழுங்காகவும் தேவையான அளவும் உட்கொண்டால் குருதியின் அளவை அதிகரித்து இரத்த சோகையை சரிப்படுத்தும். கர்ப்பிணிகள் கர்ப்பமான பெண்களுக்கு இரும்புச் சத்து அதிகளவில் தேவைப்படுவதால், அவர்கள் மாம்பழம் உண்ணுவது மிகவும் அவசியம். பொதுவாக கர்ப்பக் காலங்களில் இரும்புச்சத்து உள்ள மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அதற்கு பதில் வளமான இரும்புச்சத்துள்ள சாறு நிறைந்த மாம்பழங்களை உண்ணுதல் சாலச் சிறந்தது. முகப்பரு முகப்பருவை சரிப்படுத்த மாம்பழம் மிகவும் உதவுகிறது. ஏனெனில் சருமங்களில் அடைப்பட்ட துவாரங்களை விடுவிக்க அது உதவும். இந்த துவாரங்கள் திறந்தவுடன் முகப்பருக்கள் மெதுவாக குறைய ஆரம்பிக்கும். அடைப்பட்ட துவாரங்களை நீக்கி விடுவதே முகப்பருவை நிறுத்த உதவும் சிறந்த வழி.
இந்த பயனை அனுபவிக்க எப்போதும் மாம்பழம் சாப்பிட வேண்டியதில்லை. அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் மாம்பழ கூழை எடுத்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விட வேண்டும். இளமை மாம்பழங்களில் உள்ள அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, கொலாஜென் புரதத்தை உடலில் சுரக்க உதவி புரிகிறது. இரத்தக் குழாய்களையும் உடலில் உள்ள இணைப்புத் திசுவையும் காக்க கொலாஜென் உதவுவதால், வயதான தோற்றத்தை வெளிப்படுத்துவதை மாம்பழம் தள்ளி வைக்கும்.
புற்றுநோய் மாம்பழத்தில் உள்ள பெக்டின், புரோஸ்டேட் புற்று நோய் வருவதையும் தடுக்கும். மூளை வளர்ச்சி மூளையின் செயல்களை பாதுகாத்து மேம்படுத்த மிகவும் முக்கியமான வைட்டமின் பி6, மாம்பழங்களில் ஏராளமாக இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி ஏற்கனவே சொன்னது போல் கேரட் மற்றும் மாம்பழங்களில் அதிக அளவு பீட்டா-கரோட்டீன் மற்றும் காரோட்டினாய்டு உள்ளது. உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை வலிமைப்படுத்த மாம்பழத்தில் உள்ள மேற்கூறிய தனிமங்கள் உதவி புரிகின்றன. சர்க்கரை நோய் இன்னும் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், சில ஆய்வின் படி, மாம்பழம், சர்க்கரை நோய்க்கான இயற்கை மருந்து. மாம்பழத்தில் உள்ள இனிப்புச்சத்தால், சர்க்கரை நோயாளிகள் அதை கண்டிப்பாக உண்ணக் கூடாது என்ற நம்பிக்கை நீண்ட நாட்களாகவே உள்ளது. ஆனால் இப்போது அது பொய் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. மாம்பழத்தை தவிர அதன் இலைகளும் கூட சர்க்கரை நோய்க்கு நல்ல மறந்தாகும். கண்களின் ஆரோக்கியம் ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான 25 விழுக்காடு வைட்டமின் ஏ சத்தை, ஒரு கப் நறுக்கிய மாம்பழங்கள் தருகின்றன. இது கண்பார்வைக்கு மிகவும் நல்லது. மேலும் இது மாலைக் கண் மற்றும் வறட்சியான கண்களை தடுக்கும். பாலுணர்ச்சியைத் தூண்டும் மாம்பழங்களில் அதிகளவு வைட்டமின் ஈ உள்ளது. பாலுணர்ச்சி தூண்டுதலுக்கும், வைட்டமின் E-க்கும் நிறைய தொடர்பு உள்ளது என்று ஆரம்ப காலங்களில் எலிகளை வைத்து நடத்திய ஆய்வுகளில் தவறு ஏற்பட்டாலும், மேலும் செய்த சில ஆராய்ச்சிகள் இதை உண்மை என்றே சொல்கிறது. வெப்ப வாதம் பச்சை மாங்காயை சாறு எடுத்து தண்ணீரில் கலந்து அதனுடன் இனிப்பை சேர்த்து பருகினால் உடல் குளிர்ச்சி அடையும். மேலும் உடலும் பாதுகாப்புடன் இருக்கும். ஆயுர்வேதத்தின் படி, மத்திய கோட்டிற்குரிய வெப்பநிலையில் இருக்கும் இடத்திற்கு செல்லும் போது அடிக்கடி சிறுநீர்ப் பெருக்கி ஏற்படவும், அயர்ந்து போகவும் வாய்ப்புள்ளது. ஏனென்றால் அதிகப்படியான சூரிய ஆற்றல், உடல் மற்றும் தசைகளை சுட்டெரிப்பதால். இதன் விளைவாக சிறுநீரகத்தில் அதிகமான நச்சுத்தன்மை புகுந்து விடும் என்பதாலேயே தான், மாம்பழத்தை அதிகம் சாப்பிடுவது நல்லது தான்.
குறிப்பு : இயற்கை மாறாத நிலையில் உள்ள பழங்கள் மட்டுமே சிறந்தது.
மலேசியாவில் இயற்கையாக பழுத்த பழங்கள் கீழே கிடக்கிறது, இங்கே காயை இரசாயண கல் வைத்து பழமாக்கி விற்ப்பது கேவலமான செயல்.

** ஆண்மை குறைவு **????????



** ஆண்மை குறைவு **
" ஆண்களுக்கு பொதுவாக சுமார் 13 அல்லது 14 வயதில் விந்து உற்பத்தி ஆரம்பம் ஆகிறது. இது 20 - 25 வயதிற்கும் அதிகமாக உற்பத்தி ஆகும் "
நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, உடலுறவில் முழு இன்பம் பெற, துரித ஸ்கலிதம், அடிக்கடி தூக்கத்தில் விந்து வெளியாதல், கை கால் நடுக்கம், கண்பார்வைக் குறைவு, உடல் மெலிவு போன்ற குறைபாடுகளுக்காக உலகம் முழுவதும் இன்று எல்லா மருந்துக் கம்பெனிகளும் போட்டி போட்டுக் கொண்டு மருந்துகளை தயார் செய்து, விளம்பரங்கள் வந்த வண்ணமாக உள்ளது.

இதன் மீது நாட்டம் கொண்டவர்கள் அறிந்தும், அறியாமலும் அதிகமான விலையைக் கொடுத்து வாங்கி உபயோகித்து பின் விளைவுகள், பக்க விளைவுகளினால் உடல் நலம் கெட்டு, மனம் கெட்டு விரக்தி அடைந்து விடுகின்றனர். ஆகவே, இதைப் பற்றிய ஒரு தெளிவான விளக்கம் இளைஞர்களுக்கு வேண்டுமல்லவா?
ஆண்களுக்கு பொதுவாக சுமார் 13 அல்லது 14 வயதில் விந்து உற்பத்தி ஆரம்பம் ஆகிறது. இது 20 - 25 வயதிற்கும் அதிகமாக உற்பத்தி ஆகும். அப்போது உடல் நல்ல பொலிவுடனும், வளர்ச்சியுடனும், உறுதியுடனும் காணப்படும். பொதுவாக இந்தக் காலக் கட்டத்தில் காம இச்சைகள் உடலில் அதிகமாக தோன்றும். இந்தச் சூழ்நிலையில் காதல் வயப்படுதல், சுய இன்ப பழக்கம், பெண்கள் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுதல், ஓரினச் சேர்க்கை, தூக்கத்தில் விந்து வெளியாதல் போன்றவைகளில் ஈடுபட்டு விந்துவை வெளிப்படுத்துவர்.
இது இயற்கையான ஒன்று தான். இதனால் எந்தப் பாதிப்பும் உடலுக்கு இல்லை. அதாவது வெளியான விந்துவை உடலானது மறுபடியும் உற்பத்தி செய்து கொள்ளும் வரை உடலுக்கு கெடுதல் இல்லை. விந்து உற்பத்தி ஆகி விந்துப் பையில் சேமித்து வைக்கப்படுகின்றது. அது நிறைந்த உடன் தாமாக வெளிப்படுத்தாவிட்டாலும் தானாக வெளியாகிவிடும். இது உடலின் ஒரு இயற்கையான சுழற்சி ஆகும்.
சிலர் திருமணத்திற்கு முன்னர் விந்துவை அதிகம் இழந்து விட்டதாக கருதிக் கொண்டு, தாமாகவே தமக்கு ஆண்மைக் குறைந்து விட்டது. தமக்கு குழந்தை பிறக்குமா? மனைவியை திருப்திபடுத்த முடியுமா? என்ற ஏக்கம் கவலையாக மாறிவிடுகின்றது. கவலை கொள்ளும் போது உடலில் உள்ள சுரப்பிகள் சுருங்கி, அதன் செயல் திறன் குறைந்துவிடும். இது பல நோய்களுக்கு காரணமாகி விடும். இதன் காரணமாக கவலை நமது ஆயுளை குறைக்கும் என்று கூறுவதுண்டு.
பயந்தவனும் கோழையும் இறந்து கொண்டே இருக்கின்றனர் என்றார் மகாத்மா காந்தி. பயம் பலத்தை கெடுக்கும் அது பிணியைத் தருவதுடன் இன்பம் அனுபவிப்பதையும் இழக்கும் படி செய்யும். ஆகவே, மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். மனதிற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நேரடித் தொடர்புண்டு.
இந்த நோயினால் இருந்து மீள முறையான வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்தல், தேவையான மருந்துகள் எவை என்று தெரிந்து கொள்ளுதல், சக்தியான உணவை உண்ணுதல் போன்றவைகள் இந்த நோய்களில் இருந்து நம்மை காப்பாற்றும்.
புகைத்தல், மது வகைகள், புகையிலை, பான்பராக் போன்றவைகளை உபயோகித்தல், டின்களில், பாட்டில்களில் வரும் பதப்படுத்தப்பட்ட இரசாயணம் கலந்த உணவுகள், பானங்கள் போன்றவைகளையும் அவ்வப் போது ஏற்படும் உடல்நலக் கோளாறுகளுக்காக உட்கொள்ளும் வீரியமிக்க மாத்திரைகள், உலோகம் கலந்த மாத்திரைகள் முதலியவைகளையும் தவிர்த்தல் வேண்டும். இவைகள் உடல் உள்ளுறுப்புகளைப் பாதிக்கச் செய்கிறது.
தினமும் காலை, மாலை சுமார் 20 நிமிடம் எளிய உடற்பயிற்சிகளை அதாவது நடத்தல், குனிந்து நிமிர்தல், நீந்துதல், உட்கார்ந்து எழுதல், மெல்லோட்டம், சைக்கிள் ஓட்டுதல், கை கால் விரல்களை நீட்டி மடக்குதல், ஜாக்கிங், ஸ்கிப்பிங், ஜம்பிங், மூச்சுப் பயிற்சி போன்றவை செய்யலாம்.
இதனால் உடல் உறுதியும், நரம்புகள், எலும்புகள் பலமும் பெறும். சாதாரண நீரை குடிக்க, குளிக்க உபயோகித்தல் நல்லது. தினமும் 7 அல்லது 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் வேண்டும். கோபத்தையும், கவலையையும் நீக்கி, சாந்தமான மனநிலையில் இருத்தல் நமது மொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கச் செய்யும். 
* 15நாட்களுக்கொரு முறை தான் விந்துவை வெளிப்படுத்துதல் வேண்டும். அடிக்கடிக் கூடாது *
மூலிகைகள்
உணவு முறை...!
சாதம், கேழ்வரகுக் கூழ், ரொட்டி, கழி போன்றனவும், கோதுமை, மக்காசோளம், கம்பு போன்ற தானியங்களில் இருந்தும் சமைத்த உணவுகள் தயார் செய்து சாப்பிட்டு வரவும்.
அன்று கிராமங்களில் சாதாரண நோய்கள் முதல் கொடிய நோய்கள் வரை எல்லாவற்றுக்கும் அருகில் உள்ள அரிய மூலிகைகளைக் கொண்டு பக்கவிளைவுகள் இன்றி குணப்படுத்தி வந்தனர். இந்த மூலிகைகளில் வியக்கத்தக்க வகையில் குணம் இருப்பது நாம் அறிந்த ஒன்று. இந்த மூலிகைகளால் குணமாக்க முடியாத நோய்களே இல்லை.
இதனை இந்து மத முன்னோர்கள் ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்த மூலிகைகள் என
அம்மைக்கு - வேப்பிலை,
சிவனுக்கு - வில்வம், 
விநாயகருக்கு - அருகம்புல், விஷ்ணுவுக்கு - துளசி, 
பிரம்மாவுக்கு - அத்தியிலை என்று வைத்து தினசரி பூஜைகளின்போது வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக உட்கொள்ள கொடுத்து நோய் வருமுன்னர் மக்களின் பொதுவான ஆரோக்கியத்தை காத்தனர். மேலும், அவ்வப்போது வரும் நோய்களை குணப்படுத்தும் மூலிகைகளை அறிந்துள்ளார்கள்.
அவைகளில் ஆண்மைக் குறைவுக்காக அத்தி, முருங்கை, அரசம்பழம், அமுக்கரா, நாவல், ஓரிதழ் தாமரை போன்றவைகள் மிக பயன் உள்ளதாக உள்ளது. 
மேலும் விரிவாக எமது முன் பதிவில் காண்க.

** மந்தாரை மலர் மகிமை **

** மந்தாரை மலர் மகிமை **
" திருவாச்சி மரம் அல்லது மந்தாரை மரம், இளமஞ்சள் நிறத்தில் அழகிய மலர்களை உடைய, இளம்பச்சை நிற இலைகளைக் கொண்டது திருவாச்சி"
இன்று மிக அரிதாகக் காணப்படும் ஒரு குறுமரமாகிவிட்டது.
சிருவாச்சி, இருவாச்சி, திரு ஆத்தி, மந்தாரை எனப் பல பெயர்களில் அழைக்கப்படுவது போலவே, திருவாச்சி மரமும் பல விதங்களில் மனிதரின் வியாதிகள் தீர, மருத்துவப் பலன்கள் தருபவை. ஆன்மீகத்திலும், சித்த வைத்தியத்திலும் பெரும் பயனாகும், திருவாச்சி, தமிழ் சங்கீத இசை உலகிலும், வாத்தியங்களுக்கு இன்றியமையாத ஒரு துணையாகவும் விளங்குகிறது.

திருவாச்சி மரம், வல்லாரை இலைகளைப் போன்ற காம்புகளைச் சுற்றி படர்ந்த பசுமையான இலைகளைக் கொண்ட, குறு மரமாகும், திருவாச்சியின் மலர்களில் உள்ள, அதிக அளவு மகரந்தத்தையும், தேனையும் சுவைக்க தேனீக்களும், வண்ணத்துப் பூச்சிகளும் போட்டியிடுவதைக் காண்பதே, கண்களுக்கு விருந்தாக அமையும். இலை, மலர் மற்றும் பட்டை இவற்றின் மூலம், நலம் தரும் மருத்துவ பலன்களைக் கொண்டது, திருவாச்சி.
" ஆன்மீகத்தில்_திருவாச்சி "
திருக்கோவில்களில் தல மரமாக விளங்கும் திருவாச்சி மரங்களின் இலைகள், வில்வ இலைகளைப் போல, சிவபெருமானுக்கு உகந்தவையாகக் கருதப்படுபவை. திருவாச்சி மலர்களும், சிவ பூஜைக்கு உகந்த மலர்களாகின்றன. திருக்கோவில்களில் அகல்களில் விளக்கேற்றும் போது, அகல்களின் கீழே, அந்தந்த நாட்களுக்கு விஷேசமாகக் கருதப்படும் இலைகளைக் கொண்டு, விளக்கேற்றுவர்.
அந்த வகையில், சிவபெருமானுக்கு உகந்த சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமைகளில், திருவாச்சி இலைகளின் மேலே, அகலில் தீபம் ஏற்றி வைத்து வழிபட, நலமாகும். காற்றுவெளியை நலமாக்கும் திருவாச்சி மரத்தை வீடுகளில் வளர்த்து வர, ஆன்மீக வளத்தோடு, ஆரோக்கியமான வாழ்க்கை நலத் தீர்வுகளும் கிடைக்கும்.

" சித்த_மருத்துவத்தில்_மந்தாரை "
உடலுக்கு நலம் தரும் திருவாச்சி மரம், வயிறு தொடர்பான அனைத்து பாதிப்புகளுக்கும் நிவாரணம் தரும், கை கால் வலிகளைப் போக்கும் தன்மை மிக்கது, உணவை உண்ணப் பயன்படும் வாழை இலைகளைப்போல திருவாச்சி இலைகள் பயன் தந்து, மனிதர்களின் உடல் மன வியாதிகளைப் போக்கும் இயல்புடையது, திருவாச்சி இலைகள். இரத்த பேதி, இரத்த வாந்தி, மலச்சிக்கல் போக்கும் ஆற்றல் உள்ளவை.

" திருவாச்சி_குடிநீர் "
திருவாச்சி பூக்களின் மொட்டுக்களை நன்கு அலசி, ஒரு லிட்டர் நீரில் இட்டு கொதிக்க வைத்து, அந்த நீர் கால் லிட்டர் அளவில் சுண்டி வந்ததும், எடுத்து வைத்துக் கொண்டு, காலை மாலை இருவேளை, இருபது அல்லது முப்பது மிலி அளவு பருகி வர, சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் புண்கள் ஆறும். பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் அதீத இரத்தப் போக்கு குணமாகும். இரத்த மூல பாதிப்புகள் விலகும்.
மலச்சிக்கல் :
செவ்வண்ண நிறங்களில் காணப்படும் சில வகை திருவாச்சி மலர்களை, நிழலில் உலர்த்தி பொடியாக்கி, உள்ளங்கை அளவு அந்த பொடியை எடுத்து, அதில் பனங் கற்கண்டு, தேன் கலந்து சாப்பிட, நாள்பட்ட மலச்சிக்கல் பாதிப்புகள் அகன்று, வயிறு சுத்தமாகும்.

" செரிமானக்_கோளாறுகள் "
திருவாச்சி மரப்பட்டையை பொடியாக்கி, நீரில் நன்கு கொதிக்க வைத்து, மூன்றில் ஒரு பங்கு அளவாக நீர் சுண்டியதும், பருகி வர, உணவு செரிமானக் கோளாறால் ஏற்படும் வயிற்றுப் போக்கு பாதிப்புகள் குணமாகும். மேலும், தசையை வலுவாக்கி, இரத்தப் போக்கை நிறுத்தி, உடலை வியாதிகளின் பாதிப்பில் இருந்து தேற்றி, உடலை வலுவாக்கும், இயல்பு மிக்கது.

" சுவாச_பிரச்சனைகள் "
மனிதரின் சுவாசப் பிரச்னைகள், வாத பாதிப்புகளால் ஏற்படும் கைகால் வலிகள், இதய பாதிப்புகள் உள்ளிட்ட பல வகை உடல் நலக் கோளாறுகளுக்கு சிறந்த தீர்வாக, திருவாச்சி இலைகளின் வைத்தியம் விளங்குகிறது. திருவாச்சி இலைகளை துவையலாக செய்து உணவுடன் கலந்து சாப்பிடுவதன் மூலம், மேற்சொன்ன பாதிப்புகள் நீங்கி, உடல் நலம் சீராகப் பெறலாம்.

" உடல்_வியாதிகள்_போக்கும்_திருவாச்சி துவையல் "
தேவை: நன்கு அலசிய திருவாச்சி இலைகள் ஒரு கைப்பிடி அளவு, புளி சிறிதளவு, சிறிய வெங்காயம் நான்கு, பச்சை மிளகாய் நான்கு மற்றும் இந்துப்பு
தேவையான அளவு:
நன்கு அலசிய திருவாச்சி இலைகளை வாணலியில் இட்டு வதக்கி வைத்துக் கொள்ளவும். பிறகு சிறிய வெங்காயம், பச்சை மிளகாயை வாணலியில் இட்டு வதக்கி எடுத்து வைத்துக் கொண்டு, வதக்கிய திருவாச்சி இலைகள், சிறிய வெங்காயம், பச்சை மிளகாய், புளி மற்றும் இந்துப்பை சேர்த்து, சிறிது நீர் விட்டு அம்மியில் வைத்து அரைத்து எடுக்க, கறிவேப்பிலை போன்ற நறுமணத்துடன் அற்புதச் சுவைமிக்க திருவாச்சி துவையல் கிடைக்கும்.
இதை உணவுடன் தொட்டு சாப்பிட ஏற்றதாக அமையும். அனைத்து வகை உணவுக்கும் சிறப்பான இணையாக இருக்கும் திருவாச்சி துவையல், தயிர் சாதத்துடன் கலந்து உண்ண கூடுதல் சிறப்புமிக்க இணையாக அமையும். சுவைமிக்க இந்த துவையலை, அம்மியில் அரைக்க வாய்ப்பு இல்லாதவர்கள், மிக்சியில் அரைக்கலாம், கூடுதல் சுவை தேவைப்படுபவர்கள் தேங்காய் சேர்த்துக் கொள்ளலாம். உடல் வியாதிகள் போக்கி, உடலுக்கு மிக்க வலு சேர்க்கும் திருவாச்சி துவையலை, அனைத்து வயதினரும் சாப்பிட்டு வர, உடல் நலமாகும்.
" அல்சர்_வராமல்_காக்கும்_திருவாச்சி இலை குடிநீர் "
சுத்தம் செய்யப்பட திருவாச்சி இலைகளை அரைத்து சாறெடுத்து, அந்தச் சாற்றுடன் நன்கு இடித்த சிறிதளவு இஞ்சியை சேர்த்து அத்துடன் சிறிது பனங்கற்கண்டை கலந்து, முன்னூறு மிலி தண்ணீரில் சுட வைத்து, சுண்டியபின் இறக்கி ஆற வைக்கவும்.
இந்தக் குடிநீரை தினமும் இருவேளை பருகி வர, காரமான உணவுகள், நேரந்தவறிய உணவுகளால் ஏற்பட்ட வயிற்றுப் புண்கள் யாவும், தீரும். மேலும், வயிற்றுப் புண் வராமலும் காக்கும், உணவு செரிமானத்தை தூண்டி, வயிற்றை சீராக்கும். மேலும், வயிற்றில் உள்ள பூச்சிகளையும் வெளியேற்றும் தன்மை மிக்கது, ஜுரம், கைகால் மூட்டு வலிகளைப் போக்கும்.

" குடல்_வியாதிகள் "
மந்தாரை இலைகள் என அழைக்கப்படும் திருவாச்சி இலைகளில் உணவை உண்டு வர, பசியின்மை பாதிப்பை போக்கும், பல வகை உடல் பாதிப்புகள் விலகும். ஈர்க்குச்சிகளால் இணைக்கப்பட்ட மந்தாரை இலைகளில் சாதத்தை இட்டு, அதில் தயிரை ஊற்றி பிசைந்து, திருவாச்சி துவையலுடன் சாப்பிட்டு வர, அனைத்து வகையான குடல் வியாதிகள் விரைவில் விலகும்.

" வீக்கங்கள்_குறைய "
திருவாச்சி இலைகளின் மேல் விளக்கெண்ணை தடவி, பின் அவற்றை சூடான தணலில் வாட்டி, அடிபட்ட காயம், அடிபட்ட வீக்கங்கள் இவற்றின் மேல் வைத்து கட்டி வர, இரண்டு மூன்று மணி நேரங்களில் அடிபட்ட இடங்களில் உள்ள வீக்கங்கள் குறைந்து, தசைகளில் உள்ள காயங்களில் ஏற்பட்ட வலி நீங்கும்.
சமீப காலங்களில் பிளாஸ்டிக் உபயோகத்திற்கு தடைகள் விதிப்பதன் காரணமாக, சில சுற்றுலா மையங்களில், உணவைக் கட்டிக் கொடுப்பதில், மந்தாரை இலைகள் அதிக அளவில் பயனாகின்றன.

" சரும_வியாதிகள் "
கச்னார் என வடமொழியில் அழைக்கப்படும் இந்த இலைகளின் மருந்துப் பொருட்கள் சரும வியாதிகளைப் போக்கவும், சுவாச பாதிப்புகளால் ஏற்படும் தொண்டை வலி போன்ற கோளாறுகளையும் சரிசெய்பவை.

" கருப்பையை_வளமாக்கும்திருவாச்சி_பூ குடிநீர் "
சிறிது திருவாச்சி மலர்களை முன்னூறு மிலி தண்ணீரில் சுடவைத்து, சுண்டியபின் பனங்கற்கண்டு சேர்த்து பருகி வர, சீரற்ற மாதவிலக்கு முறையாகும், கருப்பை வளமாகும், சளியை வெளியேற்றும், கைகால் மூட்டு வலிகளைப் போக்கும்.

" கண்கள்_குளிர்ச்சி_பெற "
ஒரு பாத்திரத்தில் விளக்கெண்ணை சிறிது ஊற்றி, அதில் திருவாச்சி மலர்களை இட்டு, நன்கு காய்ச்சி ஆறியபின், உறங்கப் போகும் வேளையில், கண்களைச் சுற்றி தடவி வர, கண்களை ஒட்டி இருந்த கருவளையம் நீங்கி விடும், கண்களின் சிவந்த நிறம் மாறி, கண்களின் வெம்மை நீங்கி, குளிர்ச்சி உண்டாகும்.

" தைராய்டு_பாதிப்பு "
பெரும்பான்மை பெண்களை பாதிக்கும் தைராய்டு வியாதிகளை போக்கும் ஆற்றல் மிக்கது, திருவாச்சி மலரின் மொட்டுக்கள், பெண்களின் உடல்நிலை மற்றும் மனநிலையில் பெரும்பாதிப்புகள் ஏற்படுத்தும், தைராய்டு கோளாறுகளை சரிசெய்யும்.

" உடல்_எடையைக்_குறைக்க_உதவும் திருவாச்சி வேர் குடிநீர் "
திருவாச்சி வேரை நீரில் கொதிக்க வைத்து, நன்கு சுண்டியதும் தினமும் பருகி வர, உடல் எடை வெகுவாக குறையும்.

" மிருதங்க_குச்சி "
தமிழில் பழம்பெருமை வாய்ந்த மங்கள வாத்திய இசைக்கருவிகளில் சிறப்பிடம் மிருதங்கம் என அழைக்கப்படும் தவிலுக்கு உண்டு. வலையப்பட்டி சுப்பிரமணியன், ஹரித்வாரமங்கலம் பழனிவேல் போன்ற ஜாம்பவான்கள்,
நாதஸ்வரத்தோடு இணைந்து, தவிலில் மெய்மறக்கச் செய்யும் இன்னிசையை வாசித்து, மக்களுக்கு நல்ல பாரம்பரிய இசையை அளித்து, சாதனைகள் பல படைத்தவர்கள். வலது இடது எனும் இரு புறங்களைக்கொண்ட தவில் வாத்தியத்தில், பொதுவாக வலது புறம் கைகளால் வாசிக்கும் வண்ணமும், இடது புறம் கைகளில் சிறிய குச்சிகளைக் கொண்டு வாசிக்குமாறும் அமைந்திருக்கும்.
இடது புறம் வாசிக்க, தவில் வித்வான்களின் கைகளில் இருக்கும் குச்சி, திருவாச்சி மரத்தில் இருந்து செய்யப்படுவது ஆகும். மிகுந்த கலை நுணுக்கத்துடன் உருவாகும் இந்த தவில் குச்சியை, திருவாச்சி மரத்தில் இருந்து செய்வதற்கு, திருவாச்சி மரத்தின் எளிதில் உடையாத, மிகவும் வலிமையான அமைப்பே, காரணமாகும்.
குறிப்பு: இப்பதிவின் பனி என் நண்பர் தமிழ் ஈழ வைத்தியரை சாரும்.

** நெருஞ்சில் **

** நெருஞ்சில் **
"மனிதனுக்கு ஏற்படும் பிணிகளை நீக்கும் அருமருந்துகளான மூலிகைகள், இயற்கையின் ஏற்பாட்டில், தேவையுள்ள பகுதிகளில், தேவையான மூலிகை என்கிற வகையில் தானாகவே விளைந்து கொண்டிருக்கின்றன"
இதையெல்லாம் சரியாகக் கண்டுபிடித்து உண்டு, தங்களுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்த்துக் கொள்ளும் வித்தையை, ஒவ்வொரு உயிரினத்துக்கும் இயற்கையே கடத்தி வைத்திருக்கிறது.
ஆனால்,
வியாபார நோக்கோடு, இதையெல்லாம் திட்டமிட்டு மறக்கடித்து விட்டனர்... கடந்த இருபது, முப்பது ஆண்டுகளில்! அத்தகைய மூலிகைகளை அறிந்தால் மூவுலகை ஆளலாம்.



'நெருஞ்சில் மகிமை'
பாதையோரங்கள், புல்வெளிகள், தரிசுநிலங்கள், வயல்கள், வரப்புகள் என எங்கெங்கும் சின்னஞ்சிறு வடிவில் படர்ந்து கிடப்பவை... நெருஞ்சில். பாதங்களை பதம்பார்க்கும் முள்ளுடன் இருப்பதால்... வேண்டாத விருந்தாளியைப் பார்ப்பதுப் போல, இதைப் பார்த்து பழகிவிட்டோம். கோபமுள்ள இடத்தில்தான் குணமிருக்கும் என்பது போல, முட்களை உடைய இந்த சின்னஞ்சிறிய செடிக்குள் இருக்கும் மருத்துவக் குணம்... மகத்தானது.
விதைகள் மூலமாக இனப்பெருக்கம் செய்து, நிலங்களில் படர்ந்து வளரும் இதன் வேர், அதிக ஆழம் வரை செல்லும். இதில், சிறு நெருஞ்சில், யானை நெருஞ்சில், செப்பு நெருஞ்சில் என மூன்று வகைகள் இருக்கின்றன. சிறு நெருஞ்சில் செடி... ஐந்து இதழ்களைக் கொண்ட மஞ்சள் நிற பூக்களுடன் காணப்படும். இந்தப் பூக்கள் சூரியனின் திசை நோக்கி திரும்பும் தன்மையுடையவை. புளிய மர இலையைப் போல், ஆனால், அளவில் அதைவிட சிறிய இலைகளை உடையவை. காய்கள், நிலக்கடலைப் பருப்பு அளவில் எட்டு முதல் பத்து கூரிய நட்சத்திர வடிவ முட்களுடன் இருக்கும். யானை நெருஞ்சில்.... இலை பெரியதாகவும், காயானது சிறுநெல்லி அளவிலும் இருக்கும். செப்பு நெருஞ்சில்... இலைகள் சிறியதாகவும், மிளகு அளவிலான முட்கள் இல்லாத காய்களுடன் மூன்று இதழ்களைக் கொண்ட சிவப்பு நிற பூக்களுடன் இருக்கும். இவை அனைத்துக்குமான மருத்துவக் குணங்களில் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை.
பல நாடுகளிலும் பயன்பாடு!
நெருஞ்சில் இலையில் இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை இருக்கின்றன. பாலியல் பிரச்னைகளையும், சிறுநீரகக் கோளாறுகளையும் நீக்கும் அருமருந்தாக உள்ளது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே ஆயுர்வேதத்திலும், சீன மருத்துவத்திலும் பயன்படுத்தப்படும் பெருமை வாய்ந்தது, நெருஞ்சில். இன்றைக்கும் சீனாவில்... சிறுநீரகம் தொடர்பான நோய்கள், கல்லீரல் பாதிப்புகள், சரும நோய்கள், ரத்தநாள பாதிப்புகள், இதயநோய்களுக்கு முக்கிய மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. பல்கேரியாவில், பாலியல் வேட்கையை அதிகப்படுத்தவும், குழந்தையின்மைப் பிரச்னைக்கும் நெருஞ்சிலைப் பயன்படுத்துகின்றனர். கிரேக்க நாடுகளில், சிறுநீர் பிரச்னைகளுக்கும், மனநிலை சார்ந்த பிரச்னைகளுக்கும் இதைப் பயன்படுத்துகின்றனர்.
சிறுநீரகம் சீராகும்!
சிறுநீரகக் கோளாறுகளுக்கு நெருஞ்சில் நல்ல மருந்து. சிறுநீரகப் பாதைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். சிறுநீர் தடைப்பட்டு வலியுடன் வெளிவரும் நோய்க்கு, நெருஞ்சில்முள் நல்ல மருந்து.
சிதைந்த நெருஞ்சில் முள் 50 கிராம், கொத்தமல்லி விதை 5 கிராம் ஆகியவற்றை 500 மில்லி நீரில் இட்டு சுண்டக் காய்ச்சி, காலை-மாலை இருவேளையும் 60 மில்லி அளவு குடித்து வந்தால்... கல் அடைப்பு, சதையடைப்பு, நீர்க்கட்டு, நீர்எரிச்சல் போன்றவை குணமாகும். நெருஞ்சில் விதை, வெள்ளரி விதை இரண்டையும் சமஅளவு எடுத்துப் பொடி செய்து, அதிலிருந்து 2 கிராம் எடுத்து, இளநீரில் கலந்து குடித்து வந்தால், கல் அடைப்பு குணமாகும். இதன் இலையை நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி, கற்கண்டு சேர்த்துக் குடித்து வந்தால்... சிறுநீரில் ரத்தம் கலந்து போகும் பிரச்னை குணமாகும்.
இரண்டு நெருஞ்சில் செடியை வேருடன் பிடுங்கி, ஒரு பிடி அருகம்புல் சேர்த்து, அதில், ஒரு லிட்டர் நீர்விட்டு, அரை லிட்டர் அளவுக்கு வரும் வரை சுண்டக் காய்ச்ச வேண்டும். இதை காலை, மாலை இருவேளையும் 50 மில்லி அளவு, மூன்று நாட்கள் குடித்து வந்தால், உடல்சூடு தணியும். கண்எரிச்சல், கண்ணில் நீர்வடிதல், சொட்டுசொட்டாக சிறுநீர் போதல் ஆகியவை குணமாகும்.
கர்ப்பப்பைக் கோளாறுகளுக்கும் மருந்து!
நெருஞ்சில் வேரை, எலுமிச்சைச் சாறு சேர்த்து அரைத்து குடித்து வந்தால், பூப்படையாத பெண்கள் பூப்பெய்துவார்கள். 50 கிராம் நெருஞ்சில் இலையில் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து, அதைப் பாதியாக காய்ச்சி, தினமும் சிறிதளவு குடித்து வந்தால் பெண்களுக்கான கர்ப்பப்பைக் கோளாறுகள் சரியாவதுடன், குழந்தைப்பேறு உண்டாகும்.
*ஆண்மை அதிகரிக்கும்*
நெருஞ்சில் முள்ளை பசும்பாலில் வேகவைத்து, உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு, அதில், 2 கிராம் எடுத்து பாலில் கலந்து, காலை, மாலை இருவேளைகளும் பருகி வந்தால், ஆண்மை பெருகும். நெருஞ்சில் இலையை வெள்ளாட்டுப் பாலுடன் சேர்த்து, காய்ச்சி வடிகட்டி, தேன் சேர்த்துக் குடித்து வந்தால், ஆண்மை அதிகரிக்கும். நெருஞ்சில் வேர், கீழாநெல்லி வேர் இரண்டையும் சமஅளவு எடுத்து அரைத்து, இளநீரில் கலந்து குடித்து வந்தால், மஞ்சள் காமாலை நோய் குறையும்.
சிறுநீரகக் கோளாறுகளுக்கான அறுவை சிகிச்சைகளுக்கு அவசியமில்லாமல்... பல ஆயிரங்களை மிச்சப்படுத்தும் நெருஞ்சிலை நெஞ்சில் இருத்துங்கள்...
வாழ்வு வளமாகும்...
மருத்துவச் செலவுகள் மட்டுப்படும்.
'ட்ரைபுலுஸ் டெர்ரெஸ்ட்ரிஸ்'
(Tribulus Terrestris) என்ற தாவரவியல் பெயர் கொண்ட நெருஞ்சில், திரிகண்டம், கோகண்டம், நெருஞ்சிபுதும், காமரசி என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. கோக்ரூ என இந்தியிலும், 'கேல்ட்ராப்' (Caltrop) என ஆங்கிலத்திலும் அழைக்கப்படுகிறது. கோக்சுரா அவலேஹம், கோக்சுரா க்ருதம், கோக்சுரா க்வாதம், கோக்சுரா குக்குலு என்ற பெயர்களில், நெருஞ்சிலால் செய்யப்படும் ஆயுர்வேத மருந்துகள் கடைகளில் கிடைக் கின்றன.
* உங்கள் நலம் விரும்பி *

** சுண்டைக்காய் ** " சுண்டை அல்லது பேயத்தி (Solanum torvum) என்பது மூலிகை மருத்துவத்திலும் சமையலிலும் பயன்படும் ஒரு செடியாகும்". 



** சுண்டைக்காய் **
" சுண்டை அல்லது பேயத்தி (Solanum torvum) என்பது மூலிகை மருத்துவத்திலும் சமையலிலும் பயன்படும் ஒரு செடியாகும்". 

பொதுவாக 2 முதல் 3 மீட்டர் உயரம் வரை வளர்கிறது. மூச்சுக் குழாய்நோய்கள், வயிற்றுப் புழுக்கள், பேதிபோன்றவற்றைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது. சமையலிலும்
வத்தலாகவும், வத்தல் குழம்புசெய்யவும் பயன்படுத்தப்படுகிறது. இதில் கசப்புத் தன்மை மிகுந்தளவில் உள்ளது. சுண்டைக்காய் சாப்பிடுவதன் மூலம் குடலில் உள்ள புழுக்கள் இறந்து விடும், சர்க்கரைநோய் போன்றவைக் கட்டுப்படும். மேலும் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியும்கிடைக்கிறது.
" சுண்டை – மருத்துவ பயன்கள் "
சுண்டை காய் கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. தொண்டைச் சளியைக் குறைக்கும்; வயிற்றுப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும்; பசியை அதிகமாக்கும்.
சுண்டை கத்தரிக் குடும்பத்தைச் சார்ந்த புதர்ச்செடி ஆகும். சுண்டை இலைகள் பெரியவை, கொத்தாகவும், பல கிளைகளுடனும், சுணைகள் கொண்டதாகவும் காணப்படும்.
சுண்டை பூக்கள், தொகுப்பானவை, வெள்ளை நிறமானவை. சுண்டை காய்கள், உருண்டை வடிவமானவை, கொத்தானவை.
வீட்டுத் தோட்டங்களிலும், ஈரமான நிலங்களிலும் தானாகவே சுண்டை வளர்கின்றது. பொதுவாக சுண்டைக்காய் என்று அழைக்கப்படுகின்றது. கடுகி, அமரக்காய் போன்ற மாற்றுப் பெயர்களும் உண்டு.
சுண்டை காய்களே மருத்துவத்தில் பயன்படுபவை. சுண்டைக்காய் வற்றல், மளிகை மற்றும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.
மலைப்பகுதிகளில் விளையும் சுண்டைக்கு மலைச்சுண்டை என்கிற பெயர் உண்டு. இது அதிக கசப்பாக இருக்கும், உணவில் உபயோகிக்க முடியாதது.
தேவையான அளவு சுண்டைக்காயை, மோரில் நன்கு மூழ்கியிருக்குமாறு ஊறவைத்து, வெயிலில் காயவைத்து, வற்றலாகச் செய்துக் கொள்ள வேண்டும். இந்த சுண்டை வற்றலை தூள் செய்து கொண்டு, ¼ தேக்கரண்டி அளவில், தினமும், காலை, மாலை வேளைகளில், வெந்நீருடன் உட்கொள்ள வயிற்றுப்புழுக்கள் வெளியேறும்.
சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, மாம்பருப்பு, கறிவேப்பிலை, சீரகம் இவற்றை சம எடையாக எடுத்து, நன்கு காயவைத்து, வறுத்து, இடித்துத் தூள் செய்துக் கொள்ள வேண்டும். இதனை, 2 சிட்டிகை அளவு, 1 டம்ளர் மோருடன் கலந்து சாப்பிட்டுவர வேண்டும். காலை, மாலை வேளைகளில், 2 நாட்களுக்கு இவ்வாறு செய்துவர பேதி கட்டுப்படும்.
சுண்டைக்காய் வற்றல் தூள், 2 சிட்டிகை அளவு, 1 டம்ளர் மோரில் கலந்து பகலில் மட்டும் குடிக்கஅஜீரணம் குணமாகும்.
பச்சையான இளம் சுண்டைக்காய்களை குழம்பு செய்து, சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டுவர மூலம் கட்டுப்படும்.
சுண்டைக்காய் காரக்குழம்பு இன்றும் பிரபலமான ஒன்று. பிஞ்சு சுண்டைக்காயைச் சமைத்து சாப்பிட்டு வந்தால் தொண்டையில் உள்ள சளிக்கட்டு குறையும். இரத்தம் சுத்தமாகும்.
சுண்டைக்காய்க் குழம்பு எலும்புகள் உறுதியடையவும், நாக்கின் சுவை உணர்ச்சியை அறியும் திறனை அதிகமாக்கவும். மேலும், குரல்வளம் அதிகரிக்கவும் பயன்படும்.
குறிப்பு: சுண்டைவேர்ப் பட்டையை நிழல் காயவைத்து பொடி செய்து மூக்குப்பொடி போல் பயன் படுத்த வாசி வசப்படும்.
சித்தர்கள் கூறிய நாசிகாச் சூரணம்.
* உங்கள் நலங்கருதி *
உங்க வீட்டு வேலன்.

அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய SEX செக்ஸ் தகவல் *

அவசியம் அறிந்து கொள்ள
வேண்டிய SEX செக்ஸ் தகவல் *

“செக்ஸ்” என்பது நமது நாட்டில் அருவருக்க தக்க, வேண்டத்தகாத, வெளிப்படையாக பேச இயலாத, மறைக்கக் கூடிய ஒரு பிரச்சனையாக சமூகத்தில் இருபாலருக்கும் உள்ள ஒரு பொது நிலையாக இன்று உள்ளது. “சிக்மண்ட்பிராய்டு” என்று உளவியல் நிபுணர் “மனிதன் உயிர்வாழ்வதற்கு” உணவு என்பது எவ்விதம் அவசியமோ? அது போல், ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் வளர்ச்சிக்கு, தெளிந்த, முறையான, இயற்கையோடு ஒத்த, மனநிறைவடையக் கூடிய செக்ஸ் இருபாலருக்கும் மிகவும் அவசியம் என்று கூறுகிறார். மேலும் “மனிதர்கள் செக்ஸ் உணர்வில் திருப்தியடைய வில்லையென்றால் பல மனநோய்களுக்கும் தன்நிலையிழந்து செயல்பட்டு ஏற்படும் சமூக விரோத செயல்களுக்கும் ஆளாகிறான்” என கூறுகிறார்.
“செக்ஸ்“ அவசியத்தை வலியுறுத்தி தான், நமது முன்னோர்களும் அதனை நாம் வணங்கும் கோயில்களில் சிற்பங்களாக செதுக்கியுள்ளனர். மேலும் புனிதமான “காமசூத்திரம்” என இயற்கையான முறைப்படுத்தப்பட்ட செக்ஸ் வழிமுறை களையும் கூறக்கூடிய நூலையும் எழுதியுள்ளனர். இன்றைய காலகட்டத்தில் எது நியாயமான செக்ஸ் உணர்வு? எது செக்ஸ் பிரச்சினை? என்பதில் படித்தவர்களுக்கும், பெரிய மேதைகளுக்கும் கூட தெளிவற்ற மனநிலை உள்ளது. செக்ஸ் பற்றிய தவறான புத்தகங்கள், இளைஞர்களை தவறானப் பாதையில் திசை திருப்புகின்றன. சில அறிஞர்கள் தரும் கேள்வி பதில்களும் மன குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
ஜான் புரூக்ஷன் என்ற அறிவியல் அறிஞர் செக்ஸ் என்பதற்கு ஒரு தெளிவான விளக்கத்தை கூறியுள்ளார். அவர் கூறியதாவது “ஒரு ஆண் தனது உள்ளத்தாலும் உடலாலும் பெண்ணை மகிழ்வித்து, தானும் மகிழ்ந்து, தனது ஆணுறுப்பின் விறைப்புத்தன்மை குறையாமல் (சராசரி 5 நிமிடம் முதல் 10 நிமிடம் வரை) உடலுறவில் ஈடுபட்டு, ஆணும் பெண்ணும் உச்சகட்ட திருப்தி நிலையடைந்து (சராசரியாக 20 முதல் 30 நிமிடம்) அமைதி பெறுவது”. இவருடைய கூற்றே பல மனோதத்துவ அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும்.
இனிமேல் செக்ஸில் இருபாலருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சினைகள் என்ன? எதனால் ஏற்படுகிறது என்பதை பற்றியும், அதற்கு உண்டான, தீர்வான எனது தயாரிப்பின் மருந்துகளை பற்றியும் காண்போம். பொதுவாக செக்ஸ் சம்மந்தபட்ட பிரச்சனைகளை உண்டாவதற்கான காரணிகளை வைத்து இருபெரும் பிரிவாக மருத்துவ உலகம் பிரித்துள்ளது.
1.மனரீதியிலான பாதிப்புகள் :
அதாவது, பயம், கவலை, அறியாமை, வெறுப்புணர்ச்சி இவற்றால் ஏற்படக்கூடியது. செக்ஸில் ஏற்படும் திருப்பதியின்மையினாலும் கூட பின்னர் மனநோய்கள் உண்டாகின்றன. மனநோயும் செக்ஸ் குறைபாடும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது.
2. உடலிலுள்ள உறுப்புக்களில் ஏற்படும் மாற்றங்கள் குறைபாடுகளை உண்டாக்குகின்றன.
இரத்தகுழாய் சம்பந்தப்பட்ட நோய்கள், நாளமில்லா சுரப்பிகளின் குறைபாடுகளினால் உண்டாகும் குறைகள், தைராய்டு சுரப்பு குறைவதால் வரும் பாதிப்புகள், ஆண், பெண் ஹார்மோன் சுரப்பிகளின் குறைபாடுகள்.
3. சர்க்கரை வியாதி
சிறுநீரக கோளாறுகள் மற்றும் இரத்தசோகை போன்ற வியாதிகளினால் செக்ஸ் குறைபாடுகள் ஏற்படுகிறது. இந்தக் காரணிகளால் இருபாலருக்கும் செக்ஸில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து கொள்வோம்.
ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் :
செக்ஸ் பிரச்சினைகள் என்றாலே ஆண்களுக்கு மட்டும் தான்; அதுவும் ஆண்மைக் குறைவு ஒன்றுதான் ஊடகங்களில் அதிகம் பேசப்படுகிறது. ஆண்மைக்குறைவு என்பது ஆணுக்கு செக்ஸில் உண்டாகும் குறைபாடுதான். இதில் உண்டாகும் குறைகள் 3 வகையாக உள்ளன.
1. Erection disorder (ஆணுறுப்பின் விறைப்புத் தன்மை குறைபாடு)
பொதுவாக செக்ஸில் ஈடுபடும் பொழுது ஆணின் பிறப்புறுப்பிற்கு சராசரியாக 5 முதல் 10 நிமிடமும், பெண்ணு றுப்பில் நுழைந்தவுடன் “3 முதல் 5 நிமிடமும்” விறைப்புத்தன்மை அவசியம். இதில், விறைப்புத்தன்மை மிக எளிதில் குறைந்து ஆணுறுப்பு துவண்டு விட்டால் அது குறைபாடு மேலும் சிலருக்கு விறைப்பு தன்மையே சில நோய்களில் இருக்காது. (உ.ம்.) சர்க்கரை, சிறுநீரக செயலிழப்பு.
2. Ejaculation Premature (விந்து விரைவாக வெளிப்படுதல்) :
பொதுவாக விந்து வெளியேற 3 முதல் 5 நிமிடம் ஆக வேண்டும். அதற்கு முன்னதாகவே பெண்ணின் பிறப்புறப்பினுள் நுழையுமுன் விந்து வெளியேறினால் அது செக்ஸில் குறைபாடுதான்.நமது கிராம மக்கள் இதனை “நரம்புத்தளர்ச்சி” என்று அவர்களுக்கே உரிய பாணியில் கூறிவருகின்றனர். இது 70 % ஆண்களை பாதித்துள்ளது.
3. Inhibited Orgasam (செக்ஸ் உணர்வு குறைபாடு) :
உன்னத நிலை உணர்வற்றுயிருத்தல் செக்ஸ் நிலையில் இருக்கும் பொழுது இது ஆணுக்கு பெண்பிறப்புறுப்பினுள் நுழைந்தவுடன் விந்தணு வெளிப்படும்பொழுது ஏற்படும் செக்ஸ் உன்னத நிலை உணர்ச்சியற்றுயிருத்தல் அல்லது உணர்வுயிருந்தும் விந்து சரியாக வெளிப்படாதிருத்தல்.
4. Priapism (ஆணுறுப்பு விறைப்பில் தாங்கமுடியாத வலி) :
இந்த நிலையில் செக்ஸ் என்றாலே பயம் உண்டாகும்.
5. Dyspareunia
ஆணுறுப்பு, பெண்உறுப் பினுள் நுழைந்தவுடன் உண்டாகும் தாங்க முடியாத வலி. இது இருபாலருக்கும் உண்டாகிறது.
6. Sexual Addiction (செக்ஸ் அடிமைநிலை) :
குடிபோதை மயக்கம் மீளமுடியாமை போல் இது ஒரு செக்ஸ் அடிமைத்தனம், எந்நேரமும் அதைப்பற்றியே சிந்தித்தல். சொந்த வேலைகளைக் கூட அன்றாடம் செய்ய முடியாமல் சிரமப்படுதல். இது இருபாலருக்கும் பொதுவானது. இந்த குறைபாட்டினால் தான் கலாச்சார சீரழிவுகளை நாம் சந்திக்கிறோம்.
7. Sex arousan disorder (செக்ஸ் கிளர்ச்சி உணர்வு குறைபாடு) :
பொதுவாக செக்ஸ் உணர்வு சிலருக்கு மிகக் குறைவாகவும் இல்லாத நிலையும் இருக்கும். சிலருக்கு மிக அதிகமாக இருக்கும். ஆணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக உள்ள நிலையில் Satyriasis (சேட்டிரியாஸிஸ்) என்று மருத்துவ உலகில் கூறுகிறார்கள். பெண்ணுக்கு அதிகமாகயிருத்தல் : “Nymphomania” (நிம்போ மேனியா) என்று கூறுகிறார்கள். இந்த குறைபாட்டினால் தான் இன்று HIV தலை விரித்தாடுகிறது நம் நாட்டில். இது தவிர, சிலருக்கு (Congenital) பிறப்பிலேயே ஆணுறுப்பு நீளம் மிகக் குறைவாகவும் testes இல்லாமலும் இருக்கும் உ.ம்.
Turner’s Syndrome இந்த குறைபாடுகளை சரி செய்வது மிக கடினம்.
பெண்களுக்கு ஏற்படும் குறைபாடுகள் :
பொதுவாக ஆண்மைக்குறைவைப் போலவே பெண்மைக்குறைவு ஏற்படுகிறது. ஆனால் பெண்கள் அதனை வெளிப்படுத்துவதில்லை, பெரிதுபடுத்துவதில்லை. இதனால் பெண்மையில் ஏற்படும் பிரச்சனைகள் செக்ஸில் (மருத்துவ வியாபாரத்தில்) பெரிதுபடுத்தப்படவில்லை.
பொதுவாகஆணுக்கும் பெண்ணுக்கும் மேலே விளக்கம் கூறியதில் Inhibites Orgasm (செக்ஸ் உணர்வு உன்னத நிலை, இல்லாதிருத்தல்), Secual addiction, Sex arousam disorder, Dysparennia இருபாலருக்கும் பொதுவானதே, இன்றைய காலகட்டத்தில் கிராமப்புறங்களில் Inhibite Sexual Orgasm 90% நகர்ப்புறங்களில் Sex arousal disorder மற்றும் Sexual addiction 90% உள்ளதாக 2007 ஆம் ஆண்டு மனரீதியான செக்ஸ் குறித்த ஆய்வு அறிக்கை கூறுகிறது. மேலும் 2007 ம் ஆண்டு முடிந்த “Divorce” கோர்ட்டு தீர்ப்புகளில் 95 % செக்ஸ் பிரச்சனையை காரணம் காட்டிதான் Divorce வழங்கப்பட்டுள்ளது.
எனது தயாரிப்பில் செக்ஸ் பிரச்சனைகளுக்கு தீர்வு உண்டு.
வாட்ஸ்அப்: 9486610077.

ஹெப்படைடிஸ் - 'பி' வைரஸ் அமைதியான ஆட்கொல்லி * " HEPATITS - 'B' virus " HBV கல்லீரல் சார்ந்த உயிர் கொல்லி வைரஸ் தான் ஹெபடைடிஸ் - பி, மஞ்சள்காமாலை என கூறும் நோய். எச், ஐ , வி கிருமியை விட100% மோசமானது. உடலில் கல்லீரல் வேலை என்ன?

*
" HEPATITS - 'B' virus " HBV
கல்லீரல் சார்ந்த உயிர் கொல்லி வைரஸ் தான் ஹெபடைடிஸ் - பி, மஞ்சள்காமாலை என கூறும் நோய்.
எச், ஐ , வி கிருமியை விட100% மோசமானது.
உடலில் கல்லீரல் வேலை என்ன?
உடல் உறுப்பிலேயே அதிக வேலையை செய்யும் ஆற்றலுடையது,
உலகில் எந்த மருந்தின் ஆற்றலைக் கொண்டும் தீர்க்க முடியாததை " கீழாநெல்லி கரிசாலை அவுரி எனும் இம்மூன்று மூலிகையும் சேர்ந்தால் மட்டுமே HBV அழியும்.
ஹெப்படைடிஸ் - 'பி' வைரஸ் அமைதியான ஆட்கொல்லி *
1, இந்நோய் ஏற்பட்டவர்களுக்கு சிறுநீர் மஞ்சளாகவும், மலம் வெள்ளையாகவும் மாறும்.
2, பசியின்மை உற்சாகமின்மை இருக்கும்.
3, கண்கள் படிப்படியாக மஞ்சளாக மாறும்.
4, சோர்வு தளர்ச்சி ஏற்படும், சிலருக்கு சாப்பிட பிடிக்காது.
5, சிறுநீரில் சோற்றை இரவில் போட்டு வைத்து காலையில் மஞ்சளாக இருந்தால் உடனே நல்ல மூலிகை வைத்தியரை அனுகினால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும்.
யாராக இருந்தாலும், கீழாநெல்லி கரிசிலாங்கன்னி அவுரி என்ற நீலி சேர்ந்த மருந்தை உட்கொண்டால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும்.
இரும்புச்சத்து, பாஸ்பரஸ்,கால்சியம், விட்டமின் ஏ போன்ற சத்துக்களால் கல்லீரல் புதுப்பிக்கப் பட்டு பலம் பெறுகிறது.
இக்கலவையை இனைக்க வெள்ளாட்டின் பால் அவசியம்.
உலக சுகாதாரத்திற்கு பெரிய அச்சுறுத்தலை விளைவிக்கும் ஹெபடைடிஸ் பி வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்களுக்கு தெரிவதில்லை, ஆகையால் நம்நாட்டில் மது பிரியர்களுக்கு தொற்றின் விளைவு கல்லீரல் புற்றுநோய் அல்லது கல்லீரல் செயலிழப்பு மூலம் 25% மக்கள் இறக்கின்றனர்.
கொழுப்பு உணவுகளை செரிக்க பித்தநீரை சுரக்கும் கல்லீரல், ரத்தம் உறைவதற்குத் தேவையான புரோத்திராம்பின் எனும் பொருளை உருவாக்குவது, உடலுக்குள் நுழைந்த நச்சுக்களை வெளியேற்றுவதும், உடலுக்குத் தேவையான ஆற்றலை சேமிப்பதும், நோய் எதிர்ப்பு சக்திக்கு வேதிப்பொருட்களை உண்டாக்குவதும் என முன்னூறு வேலைகளை செய்யும் கல்லீரல் முக்கியம் தானே.

கஞ்சமலை - வேடியப்பன் மலை கனிம வளங்களை வெட்டி எடுக்கத் தான் சேலம் 8 வழி சாலை என்று தகவல்கள் பரப்பப்படுகிறதே? அது உண்மை என்பது போல் தான் அரசு தகவல்கள் கூறுகின்றன. தற்போது ஆதாரமும் வலைத்தளங்களில் வேகமாகப் பரவுகிறதே?? சீமான் தம்பிகள் வேகமாக பரப்புகிறார்களே? இதற்கான விளக்கம் என்ன மாரிதாஸ்?

கஞ்சமலை - வேடியப்பன் மலை கனிம வளங்களை வெட்டி எடுக்கத் தான் சேலம் 8 வழி சாலை என்று தகவல்கள் பரப்பப்படுகிறதே? அது உண்மை என்பது போல் தான் அரசு தகவல்கள் கூறுகின்றன. தற்போது ஆதாரமும் வலைத்தளங்களில் வேகமாகப் பரவுகிறதே?? சீமான் தம்பிகள் வேகமாக பரப்புகிறார்களே? இதற்கான விளக்கம் என்ன மாரிதாஸ்? {கேள்வி: தினேஷ்}

இந்தியாவின் 2014/15 இறக்குமதி செய்யப்பட்ட மொத்த இரும்பு தாது (iron-ore) 15-million tons. அதாவது 1.5கோடி டன் இறக்குமதி செய்துள்ளோம்.
இந்தியாவின் உள்நாடு உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் இரும்பின் தேவையும் அதிகரிக்கிறது.

அதாவது மிதி வண்டிகள் ஆரம்பித்து ரயில் வண்டிகள், ரயில் தண்டவாளங்கள் வரை - கப்பல் கட்டுவதில் ஆரம்பித்து வீட்டில் தேவைப்படும் TMT வரை - தண்ணீர் குழாய்கள் ஆரம்பித்து தெரு கரண்ட போஸ்ட் அனைத்திற்கும் இரும்பின் தேவை இருக்கிறது. அது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2014-15ல் மட்டும் 1.5கோடி டன் இறக்குமதி செய்துள்ளோம். எனவே நம் உள்நாட்டில் இருப்பை எடுத்துப் பயன்படுத்துவது தானே சரி??? எல்லா நாடும் தங்கள் உள்நாட்டில் இருந்தால் எடுத்துப் பயன்படுத்தி தானே வளர்கின்றன??? ரயில் வண்டிகள் அதிகம் வேண்டும் - கட்டிடம் கட்டக் கம்பிகள் ,குறைவான விலையில் வேண்டும், வாகனங்கள் ஓட்டுவோம் ஆனால் அது தயாரிக்க இரும்பை எடுக்க விடமாட்டோம்.. இது என்ன சரி!

இந்தியாவில் உள்நாட்டு இருப்பில் இருந்து நாம் மொத்தம் இரும்பு தாது வெட்டி எடுப்பது எவ்வளவு?இந்தியாவில் இரும்பு தாது வழங்கும் மாநிலங்கள் முக்கியமானவை யார் யார்???

ஒரிஸா , கர்நாடகா , கோவா , சட்டீஷ்கர் ,ஜார்க்கண்ட் இந்த ஐந்து மாநிலங்கள் தான் 97% தேவையைப் பூர்த்தி செய்கிறார்கள். மீதம் உள்ள மாநிலங்களில் மிக மிக குறைவு. தமிழகத்தில் உண்மையில் தனிமங்கள் இருப்பு மிக மிகக் குறைவு.

இந்தியாவில் இரும்பு தாது இருப்பில் 33.9% இருப்பது ஒரிஷாவிடம் , 12.3% இருப்பது கர்நாடகாவில் , 26.3% இருப்பது ஜார்க்கண்ட் மாநிலத்திடம் , 5%கோவா , 18.8% சத்தீஷ்கர் இந்த மாநிலங்கள் தான் நாட்டில் ஒட்டுமொத்த இரும்பு தாது வெட்டி எடுப்பதில் 97% இந்த மாநிலங்களில் தான். இவர்கள் எல்லோரும் இதே போல எங்கள் கனிமவளங்கள் அடுத்த மாநிலங்களுக்குக் கொடுக்க முடியாது எடுக்க விடமாட்டோம் என்று கூற எவ்வளவு நேரம் ஆகும்???? இது மட்டும் அல்ல இந்தியாவில் கனிமவளங்கள் ராஜஸ்தான் , ஒரிசா , கர்நாடகா , ஜார்கண்ட் என்று மாநிலங்கள் தான் முக்கியமானவை.

எனவே கொஞ்சமாது நியாயம் எது என்று சிந்திக்கவும். உங்களுக்கு இரும்பு தேவையும் அதிகம் வேண்டும். அதே நேரம் இருப்பதை எடுக்கவும் விடமாட்டோம் என்றால் என்ன சிந்தனை இது????

இந்தப் பகுதிகளில் ஏறக்குறைய 100மில்லியன் டன் இருப்பு இருப்பதாக அரசு வெளிப்படையாகத் தானே கூறுகிறது. எதையும் அரசு மறைக்கவில்லையே? அவர்கள் கொடுக்கும் தகவல்களை எடுத்து வெளியிட்டு - எதோ ரகசியத்தை வெளியிட்டது போல பரப்புவது என்ன வியாதி இங்கே???? அதை எடுத்து உள்நாட்டுத் தேவையை பூர்த்தி செய்வதன் மூலம் இறக்குமதியை வெகுவாக குறைக்கலாம் அது நேரடியாக நம் நாட்டுக்குத் தானே நல்லது???

அவ்வளவு பெரிய இடத்தைச் சுரங்கம் என்று தோண்டுவதா???? என்று சிலர் கேட்கிறார்கள். சுரங்கம் என்றால் தோண்டாமல் என்ன செய்வார்கள்??? என்ன கொடுமை இது. ஆமா தோண்ட தான் செய்வார்கள். அய்யா தமிழ்நாடு அளவு சுமார் 130,060 km² - அதில் சும்மா ஒரு பேச்சுக்கு பெரிய இடத்தை சுமார் 1000 ஹக்டர் நிலத்தை எடுத்துப் பயன்படுத்த அரசு விரும்பினால் கொடுப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஏன் என்றால் வெறும் 0.01% கூட அதன் அளவு கிடையாது மொத்த ஒப்பிடால் . எனவே எந்தப் பெரிய தவறும் இல்லை இதில். இயற்கை பாதிப்பிலாமல் உங்களால் வீடு என்ன நாட்டில் சாலையில் நடக்கக் கூட முடியாது சார்.

அதாவது நல்ல புரிந்து கொள்ளுங்கள் -நீங்கள் தீவிரமான அசைவ உணவு உண்பவராக உலகிற்குக் காட்டி கொள்ளுங்கள், உயிர் மீது அன்புடையவராக இருந்து விட்டுப் போங்கள் பொங்கல் என்றாலும் நீங்களும் கூட தினமும் சில கோடி நுண்ணுயிர்கள் தின்று தான் உயிர் வாழ்கிறீர். இது தான் இயற்கை. (சேலத்தில் காட்டுக்குள் வீடு கட்டுவதாக விளம்பரம் செய்கிறார் சிலர். அது கூட எத்தனை எத்தனை மண்புழுக்கள் , குருவிகள் தங்க வேண்டிய இடத்தில் நீங்கள் வீடு கட்டி குடியேறுவது எப்படி சரி. அய்யா வீடு கட்டும் போதே எவ்வளவு மண்ணில் வாழும் சிறு உயிரணங்கள் இறக்கும்??? இப்படியா பேசி திரிவது????

எனவே இயற்கை எந்த அளவிற்கு இதனால் பாதிப்பாகும் - அதற்கு மாறாக என்ன திட்டம் அரசிடம் உள்ளது என்ற அக்கறை எல்லாம் பசுமை தீர்ப்பாயம் சென்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அதை விட்டு விட்டு அய்யகோ மலை கனிமவளம் என்று ஆரம்பிக்க வேண்டாம்.
------------------------------------------------------------------------------
இது தனியாருக்கு கொடுப்பதாகத் தகவல் கூறுகிறதே????

நீங்களும் 1000கோடி இருந்தால் போட்டி போட்டு எடுக்க வேண்டியது தானே.. இதை அரசு நடத்த வேண்டும் என்ற அவசியமே இல்லை. மொத்த இரும்பை எடுத்துக்கொடுக்கும் வேலை தான் தனியாருடையது - நன்கு கவனித்தால் அந்த அறிக்கையில் எவ்வளவு சதவீதம் அரசும் அந்தப் பணியை செய்யப் போகும் நிறுவனமும் பகிர்மானம் இருக்கும் என்பதும் தெரியும். தனியார் லாபம் இல்லாமலா செய்வான்??? இது என்ன முட்டாள்தனமான கேள்வி லாபம் இல்லாமல் எவன் செய்வான். அது நியாயமான முறையில் இருக்கிறது என்றால் கொடுக்க தான் வேண்டும்.

அரசே நடத்தலாமே.... அய்யோ தயவு கூர்ந்து ஆரம்பித்து விட வேண்டாம்... அரசு நடத்தின இப்படியான விசயங்களில் அரசு ஊழியர்கள் காட்டிய வேலை லட்சணம் இந்த 60ஆண்டு இந்திய வரலாற்றை எடுத்துப் பார்த்தாலே தெரியும். என்னைக் கேட்டால் அரசுப் பள்ளியில் ஆரம்பித்து மருத்துவ மனை வரை அனைத்தையும் தனியாரிடம் கான்ராட்க் கொடுத்துவிடுவது மிக மிக நல்லது.

மக்களுக்குத் தேவை இலவச கல்வி அரசுப் பள்ளிகளில் - நமக்குத் தேவை தரமான கல்வி இலவசமான ஏழைக் குழந்தைகளுக்கு சென்று சேரவேண்டும் - செலவும் குறையும் அரசு ஊழியர்கள் ஆண்டு ஆண்டுக்குச் சம்பளம் பத்தவில்லை என்று போராட்டம் நடத்தி காசு கொடு இன்னும் காசு கொடு என்று அரசை மிரட்டாமல் நிம்மதியாக விடுவர். (ஆசிரியல் பணிக்கான குறைந்த பட்ச சம்பளத்தை வேண்டுமானால் அரசு நிர்ணயம் செய்யலாம் தவிர என்னைக் கேட்டால் தேவையே இல்லை இந்த அரசு ஊழியர்கள் தொல்லை).

எனவே இப்போது தான் 2000களில் ஆரம்பித்துத் தான் கொஞ்சம் கொஞ்சமாக இந்த அரசே நடத்த வேண்டும் என்ற தவறான கொள்கையை மாற்றி வருகிறது அரசு. தயவு கூர்ந்து விட்டுவிடுங்கள். இல்லை BSNL போலத் தான் ஆகும். அப்படியே லாபம் வந்தாலும் அது மக்களுக்கு வராது - இந்த ரயில்வே போல. ஆக அரசு நடத்த வேண்டும் என்று கூறுபவனுக்கு இந்த நாட்டில் அரசு ஊழியர்கள் குணம் தெரியவில்லை என்று பொருள். வங்கியைக் கொடுத்தோம் - மொத்தமும் காலி. திவால் ஆகும் நிலைக்குக் கொண்டுவந்துவிட்டனர். இதை விடவா நமது அரசு ஊழியர்கள் லட்சணம் புரியவேண்டும். எனவே போதும்.
-------------------------------------------------------------------------------------
ஆக அதற்காகவா ரோடு போடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு மீது உங்கள் பதில்???

SRM கல்லூரி அருகே ஒரு ரோடு போட்டும் - அது அந்த SRM கல்லூரி பச்சை முத்து அவர்களுக்குத் தான் என்று சொன்னால் சரியா இருக்குமா??? டெல்லி மும்பை இடையே - சென்னை பெங்களூர் இடையே - மும்பை பெங்களூர் இடையே என்று பல வகையில் நாம் Industrial Corridors அமைக்கிறோம் - அங்கே வர போகின்ற பெரும் நிறுவனங்களுக்காக தான் ரோடு போடுறாங்க என்று சொன்னால் எப்படி இருக்கும்??? இப்படி எல்லாம் பேசுறவன என்ன சொல்லி திருத்த????

எதற்கு இவ்வளவு வேகமாக போடா வேண்டும்?????

என்ன கொடுமை சார் இது.. மெதுவாக அரசு செயல்பட்ட போது ஏன் மெதுவான்னு சொல்லவேண்டியது - வேகமாக நகரும் போது அதை சந்தேக கண்ணுடன் பார்ப்பது என்ன சரி??? இந்தியாவில் சாலைகள் அமைக்கும் பணி நரேந்திர மோடி அவர்கள் ஆட்சி வந்ததில் இருந்து வேகம் தான். இது தான் உண்மை.

ஆக இங்கே போராட்டம் நடத்த என்னடா வழி எப்படி எல்லாம் போராடலாம் என்று தீவிரமாக அலைகிறது ஒரு பக்க கூட்டம். அதிலும் இந்தியாவில் இப்படி திட்டங்களை எதிர்த்து போராட்டம் நடந்தால் போதுமான நன்கொடை தர பல நாடுகள் காத்திருக்க போராட்டமே ஒரு பிசினஸ் போல ஆகிவிட்டது இந்த கேடுகெட்ட கூட்டத்திற்கு.

அதிலும் இப்போது சமீப காலமாக விடுதலைப் புலிகள் எந்தத் தீவிரவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள் வெளிநாடுகளிலும் - உள்நாட்டிலும் உட்காந்து கொண்டு ஈழத்தை வாங்கிக் கொடுத்து அங்கே மக்களை அமோகமாக வாழ வச்சுடாங்க - இங்கே தமிழக மக்களை வாழ வைக்க எந்நேரமும் எதையாது எழுதிகிட்டே திரிகிறார்கள் கேட்டால் மொழி பாசம். கடவுளே.... !!!

கேட்டுகோங்க விடுதலைப் புலிகள் அல்ல எந்தத் தீவிரவாத கூட்டமும் ஆதரவு அளித்தாலும் அந்தச் சமூகம் உருப்படாமல் போகும். இது தான் 20ஆம் நூற்றாண்டின் பாடம். புரட்சி , போர் என்று பேசும் போது வசனம் எல்லாம் நல்லா தான் இருக்கும் - பின் சமூகமே அழியும் போது தான் அதன் வேதனைப் புரியும். என்ன சொன்னாலும் விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் தான். அவர்கள் இந்த மண்ணுக்கு அல்ல இலங்கைக்கு அல்ல யாருக்கும் நண்பர்கள் இல்லை என்று ஜெயகாந்தன் கூறியது 100% உண்மை. காரணம் ஆயுதம் ஏந்தி தீவிரவாதம் ஆதரிப்பது. இங்கே அதற்கான விதையும் மெல்ல விதைக்கிறார்கள் தயவு கூர்ந்து விலகி நில்லுங்கள். இவனுக சும்மாவே இருக்கவே மாட்டானுக. எழுதி வச்சுக்கோ எவன் எல்லாம் விடுதலை புலிகள் பார்வை சரி என்றும் பிரிவினைவாத கருத்துக்களுக்கு ஆதரவாகவும் ஆயுதம் ஏந்தவும் தயார் ஆவோம் என்று திரிகிறானோ அவன் எல்லாம் தன் குடும்பத்தையும் தன்னையும் ஒரு மோசமான நிலைக்கு தள்ளுவது மட்டும் அல்லாது இந்த சமூகத்தின் சாபக்கேடாக வந்தி நிற்பான். நல்லது செய்கிறேன் பேர்வழி என்று நாசம் செய்வது தான் மிச்சம்.  மா.பொ.சி , ஜெயகாந்தன் , சோ என்று அனைவரும் இவர்களை ஆதரிப்பது இல்லை ஒழுங்கா அதன் காரணம் புரிந்து விலகி நில்லுங்கள்.

எனவே இரும்பு தாது என்னவோ தமிழகம் கொடுத்துத் தான் மற்ற மாநிலங்கள் என்று பேசுவதை விட்டுவிட்டு கொஞ்சம் நாட்டில் உள்நாட்டு உற்பத்தி அதன் தேவை சார்ந்து சிந்திக்கவும். உடனே விவசாயம் என்று ஆரம்பிக்க வேண்டாம்.

விமானம் நிலையம் எதற்கு ? சாப்பட்டுக்கு சோத்துக்கு எங்கே போவ??? சாப்வேரா சோறு போடும் விவசாயம் தான் சோறு போடும்!!! இப்படி எல்லாத் துறையையும் விவசாயத்தோடு இணைத்துப் பேசும் முட்டாள்தனத்தை விடுங்கள். சினிமா நடிகர்கள் தான் இப்படி உணர்வை தூண்டிவிட்டு காசு பார்த்து அடுத்த படம் நடிக்கிறார்கள் என்றால் நீங்கள் இதை போன்ற வசனங்களை பேசி திரிய வேண்டாம்.  எல்லாமே தனி துறை அதை விவசாயத்தில் வளர்ந்த நாட்டுடன் ஒப்பிட்டுப் பேசவும் யோசிக்கவும். அதைவிட்டு விட்டு - கார் கம்பெனி எதற்கு , சாப்வேர் கம்பெனி எதற்கு சினிமா எதற்கு என்று பேசி திரியாதீர்.

ஆக இதில் எந்த ரகசியமும் இல்லை எந்த தவறும் இல்லை.

-மாரிதாஸ்

கோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....

கோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு.... நீங்கள் உணவுப்பிரியரா ? சுவையான உணவிற்கு முக்கியத்துவம் கொடுப்பவரா கோவை ம‌ற்றும் ...