ஐயப்பனின் வேறு பெயர்கள் என்ன என்று தெரியுமா?

ஐயப்பனின் வேறு பெயர்கள்

மணிகண்டன்
பூதநாதன்
பூலோகநாதன்
தர்மசாஸ்தா எருமேலிவாசன்
ஹரிஹரசுதன்
ஹரிஹரன்
கலியுகவரதன்
கருணாசாகர்
லக்ஷ்மண பிராணதத்தா
பந்தள ராஜன்
பந்தளவாசன்
பம்பாவாசன்
ராஜசேகரன்
சபரி
சபரீஷ்
சபரீஷ்வரன்
சபரி கிரீஷ்
சாஸ்தா
வீரமணி
என்பவை எல்லாம் ஐயப்ப கடவுளின் வேறு பெயர்களில் முக்கியமானவைகளாகும்.

ஐயப்ப வழிபாடு
ஐயப்பன் மதங்களுக்கு அப்பாற்பட்ட கடவுளாக பாவிக்கப் படுகிறார். இன்றும் ஐயப்பனின் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் எருமேலியிலுள்ள முன்னாளில் கொள்ளைக்காரனாக இருந்து அய்யப்பனின் அருளால் திருந்தி அவரது நண்பராக மாறிய வாவரின் தர்காவிற்கு சென்ற பின்னரே ஐயப்பனை தரிசிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் ஐயர் (குருக்கள்) பூஜிக்காத கிராமக் கோவில்களில் உள்ள கடவுள் தான் ஐயன் - ஐயனார். சபரிமலையில் ஓரிடத்திற்கு ஆரியங்காவு என்று பெயர். ஆரியங்காவு என்றால் ஆரியனின் காடு என்று பொருள். சாஸ்தா என்பதே தமிழில் சாத்தன் என்பது. தமிழ்நாட்டில் சாத்தனூர் என்ற பெயரில் பல ஊர்கள் உள்ளன. அங்கெல்லாம் சாஸ்தாதான் முக்கிய தெய்வமாக விளங்குகிறார். தமிழ்நாட்டில் கிராமத்துக்கு கிராமம் ஐயனார் கோவில் உள்ளது. ஆனால் கேரளத்தில் கிராம தேவதையாக இல்லாமல் வேறு விதத்தில் ஐயப்ப வழிபாடு வழக்கிலுள்ளது.

ஒரு காலத்தில் எனக்கு பிடித்த பேச்சாளர் .....

ஒரு காலத்தில்  எனக்கு  பிடித்த பேச்சாளர்

கருணாநிதிக்கு எதிராக  20 மாவட்ட செயலாளர்களை திரட்டியவர்


அப்போது கூடிய கூட்டத்தை பார்த்து மலைத்து போனவன்

அறிவாலயத்தை பிடிக்கப்போகிறார் என்ற தகவல் பரவியதும் வாயிற்கதவை பூட்டிவிட்டு பின்பக்க வழியாக கோபாலபுரத்திற்கு கலைஞர்  தப்பி ஓடிய தருணம்

இன்று ஏன் இப்படி சின்ன பையன்களிடம் சின்னாபின்னமாகி போகிறார்

மதிமுகம் என்ற அவருடைய கட்சி தொலைக்காட்சியில் அவருடைய பேட்டியை பார்த்தேன்

உண்மையில் மனிதர் அழுதே விட்டார்

என்னை ஏன் இப்படி துரத்துகிறார்கள்

நான் செய்த தவறு தான் என்ன

இந்த தமிழகத்துக்கும் தமிழர்களுக்கும் நான் செய்த ஊழியத்துக்காகவாவது என்னை மதிக்க வேண்டாமா

எல்லா ஊடகங்களும் என கேவலப்படுத்துகின்றன

மனிதர் கொந்தளித்துவிட்டார்

மதியாதார்  வாயில்  மிதியாதே என்பதை மறந்ததன் விளைவு 

ஆனால் திமுகவை மட்டுமே  பழி சொல்லி முடியாதே

2006 தேர்தல்  திருச்சியில் திமுக கட்சிகள்  கூட்டணி மாநாடு

வைகோவிற்கு 31 சீட்டுகள்  இரவு 7 மணிக்கு  வைகோ மேடைக்கு வரவேண்டும்

கட் அவுட்டுகள் வைகோவிற்கு  வைக்கப்பட்டன

சரியாக 7 மணிக்கு வைகோ  சென்னையில் ஜெ விற்கு பூங்கொத்து கொடுக்க அங்கு 35 சீட்டுகள்

அவரது கட் அவுட்டுகள் மாநாட்டு பந்தலில் தீயிட்டு கொளுத்தப்பட்டன

அன்றே திமுக முடிவு செய்தது இவரை ஒழித்து கட்ட

2011 மீண்டும் இரண்டு பக்கமும் ஊசலாட்டம் இந்த முறை ஜெ அவருடைய கதையை முடித்தார்

 இன்று கோமாளியாகிப்போனது எல்லோருக்கும் தெரிகிறது அவரை தவிர

 யார் மீது கோபப்பட வேண்டுமோ  அவரை விட்டு விட்டு மோடியை அநாகரீகமாக  பேசி இன்று அரசியலில் தனிமைப்படுத்த பட்டார்

ஒரு ஊடக நண்பரிடம் பேசிய போது  அவர் சொன்னது

இது திமுக திட்டமிட்டு செய்தது இனி வைகோ பாதை பெரியார் பாதை என்றார்
திருமாவளவனுக்கும் கல்தா என்றார்

வைகோ இப்படி ஒரு வீழ்ச்சியை சந்தித்தது எனக்கு சிறிது வருத்தமே காரணம் அவருடைய தமிழ் உரை

2006 வேறு 2019 வேறு என்று உணர தவறி விட்ட மனிதர் இன்று குப்பை மேட்டில்   

அவர் அரசியல்  வாழ்வு முடிவுக்கு வந்தது

Kumar Kandasamy

படகு ஒன்றுக்கு பெயின்ட் அடிப்பதற்கான பொறுப்பு ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது - சிறு கதை...

படகு ஒன்றுக்கு பெயின்ட் அடிப்பதற்கான பொறுப்பு ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது - சிறு கதை

அவர் ப்ரஷ், பெயின்ட் என்பவற்றைக் கொண்டு வந்து படகு உரிமையாளர் வேண்டிக் கொண்டதைப் போலவே பிரகாசமான சிவப்பு நிறத்தில் பெயின்ட் அடித்துக் கொடுத்தார்.

பெயின்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது அந்தப் படகில் ஒரு சிறிய ஓட்டை இருப்பதை அவதானித்து, உடனடியாகவே அந்த ஓட்டையை சரிவர அடைத்தும் விட்டார்.

வேலை முடிந்ததும் அவர் தனக்குரிய கூலியை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார்.

அடுத்த நாள் படகின் உரிமையாளர் அந்த பெயின்டரின் வீடு தேடி வந்து ஒரு பெறுமதிமிக்க காசோலையை கொடுத்தார். அது அவர் ஏற்கனவே கூலியாக வழங்கிய தொகையைப் பார்க்கிலும் பன் மடங்கு அதிகமானது.

பெயின்டருக்கோ அதிர்ச்சி. " நீங்கள் தான் ஏற்கனவே பேசிய கூலியைத் தந்துவிட்டீர்களே? எதற்காக மீண்டும் இவ்வளவு பணம் தருகிறீர்கள்? என்று கேட்டார் பெயின்டர்.

" இல்லை. இது பெயின்ட் அடித்ததற்கான கூலி அல்ல. படகில் இருந்த ஓட்டையை அடைத்ததற்கான பரிசு" என்றார் படகின் உரிமையாளர்.

" இல்லை சேர்... அது ஒரு சிறிய வேலை. அதற்காக இவ்வளவு பெரிய தொகைப் பணத்தை தருவதெல்லாம் நியாயமாகாது. தயவு செய்து காசோலையை கொண்டு செல்லுங்கள்" என்றார் பெயின்டர்.

" நண்பரே... உங்களுக்கு விடயம் புரியவில்லை. நடந்த விடயத்தைச் சொல்கிறேன் கேளுங்கள்" என்று சொல்லி விட்டு படகு உரிமையாளர் தொடர்ந்தார்.

" நான் உங்களை படகுக்கு பெயின்ட் அடிக்கச் சொல்லும் போது அதில் இருந்த ஓட்டை பற்றிச் சொல்ல மறத்துவிட்டேன்.

பெயின்ட் அடித்துவிட்டு நீங்களும் போய்விட்டீர்கள். அது காய்ந்த பிறகு எனது பிள்ளைகள் படகை எடுத்துக் கொண்டு மீன் பிடிக்கக் கிளம்பிவிட்டார்கள்.

படகில் ஓட்டை இருந்த விடயம் அவர்களுக்குத் தெரியாது. நான் அந்த நேரத்தில் அங்கு இருக்கவுமில்லை.

நான் வந்து பார்த்த போது படகைக் காணவில்லை. படகில் ஓட்டை இருந்த விடயம் அப்போதுதான் நினைவுக்கு வர நான் பதறிப் போய்விட்டேன்.

கரையை நோக்கி ஓடினேன். ஆனால் எனது பிள்ளைகளோ மீன் பிடித்து விட்டு மகிழ்ச்சியாக திரும்பிவந்து கொண்டிருந்தார்கள். அந்தக் கணம் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கும் நிம்மதிக்கும் அளவேயில்லை.

உடனே படகில் ஏறி ஓட்டையைப் பார்த்தேன். அது நேர்த்தியாக அடைக்கப்பட்டிருந்தது. இப்போது சொல்லுங்கள். நீங்கள் செய்தது பெறுமதியற்ற சிறியதொரு வேலையா? நீங்கள் என்னுடைய பிள்ளைகளின் விலைமதிக்க முடியாத உயிர்களையல்லவா காப்பாற்றியிருக்கிறீர்கள்? உங்களது இந்தச் 'சிறிய' நற்செயலுக்காக நான் எவ்வளவுதான் பணம் தந்தாலும் ஈடாகாது." என்றார்.

நண்பர்களே... இதிலிருந்து என்ன புரிகிறது. யாருக்கு எங்கே எப்போது எப்படி என்றெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. நமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பிரதிபலன் பாராது உதவுவோம். பிறரின் கண்ணீரைத் துடைப்போம். நம் கண் முன்னே தெரியும் ஓட்டைகளை கவனமாக அடைப்போம். அப்போதுதான் நமது ஓட்டைகளை அடைப்பதற்கான மனிதர்களை இறைவன் அறியாப் புறத்திலிருந்து நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பான்.

(ஆங்கிலக் கதையொன்று. பிடித்திருந்ததால் மொழிபெயர்த்தேன். உங்களுக்கும் பிடித்திருந்தால் பகிருங்கள்)

திமுக ஈவே ராமசாமி காட்டிய வழியில் தொடர்ந்து பயணிப்போம் - தவிர உன்னைப் போல் சில பூச்சாண்டிகளுக்கு பயப்படாது மாரிதாஸ். உன்னால் ஒன்றும் ..... முடியாது மாரிதாஸ்" என்று நாகரீகமாக ஏகவசனத்தில் விமர்சனங்கள் அனுப்பிய திராவிட கழக கண்மணிகளுக்கு ...

"திமுக ஈவே ராமசாமி காட்டிய வழியில் தொடர்ந்து பயணிப்போம் - தவிர உன்னைப் போல் சில பூச்சாண்டிகளுக்கு பயப்படாது மாரிதாஸ். உன்னால் ஒன்றும் ..... முடியாது மாரிதாஸ்" என்று நாகரீகமாக ஏகவசனத்தில் விமர்சனங்கள் அனுப்பிய திராவிட கழக கண்மணிகளுக்கு


"நேற்றுவரை விடுமுறை தினம் என்று இந்துக்களின் பண்டிகைகளை மட்டும் விளம்பரம் செய்த உங்கள் கலைஞர் டீவி தான் இன்று தீப ஒளித் திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள் என்று விளம்பரம் செய்கிறது".

எதற்கு இந்த மாற்றம்??? எதுவும் செய்ய முடியாது என்றும் எதுவும் இல்லை இங்கே.... அதுவும் வோட்டுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் திமுக போன்ற அரசியல் கம்பெனி நடத்தும் கூட்டத்தை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். என்ன கொஞ்சம் அழுத்தம் கொடுக்க வேண்டும் சரியான இடத்தில் சரியான திசையில்...

திராவிட கொள்கையையும் சரி , வைக்கம் வீரர் என்று ஈவே ராமசாமி வச்சு நீங்க அளந்துவிட்ட அனைத்துப் பொய் கதைகளையும் சரி அனைத்தையும் குழிதோண்டி புதைக்கும் நாள் நெருங்குகிறது. இன்னும் கொஞ்சம் நாள் பொறுங்கள் தேர்தல் வரும் போது ஒட்டுமொத்த 234 தொகுதிகளிலும் தொகுதிக்கு ஒரு வீடியோ விதமாக 234 வீடியோ வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் எனது குழுவினர்.

மனித நேயம் மக்கள் கட்சியை கூட்டணியில் வச்சுகிட்டு மதச்சார்பின்மை பேசுறேங்க???? இருங்க உங்களுக்கு இருக்கு..

வெளிப்படையாகவே கூறுகிறேன் :

"எமது லட்சியம் ஒரு ஓட்டு கூட சபரிமலை ஐயப்பன் மீது நம்பிக்கை கொண்டவர்கள் வீட்டில் இருந்து திமுக என்ற கட்சிக்கு போகக் கூடாது. காரணம் உங்கள் திக வெளிப்படுத்தும் இந்துமத வெறுப்பு பிரச்சாரம்".
---------------------------------
நன்கு புரிந்து கொள்ளுங்கள் :

மற்ற மத நம்பிக்கைகளை மதிப்பது போல் இந்து மத ஆன்மீக நம்பிக்கைகளையும் மதிக்க முன்வாருங்கள் இது தான் என் வேண்டுகோள். அவ்வளவு தான் விஷயம். எனக்கும் திமுக கட்சிக்கும் என்ன விரோதம்? எதுவும் இல்லை. என் தாய் கொண்ட நம்பிக்கையை அவமானம் செய்யும் விதமாக திக கூட்டம் பேசி திரியும் அதைப் பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியுமா???? அந்தக் கோபம் தான் எனக்கு உங்கள் மீது. மற்றபடி கலைஞர் டீவியின் இந்த மாற்றத்தை நான் வரவேற்கிறேன். மாற்றம் தொடரவில்லை என்றால்

"திக இயக்கத்தின் இந்துமத வெறுப்பு பேச்சால் திமுக அழிந்தது என்று வரலாறு எழுதப்படும்".

{சின்ன அறிவுரை: ஸ்டாலின் அவர்களே முதலில் திக-பெரியார் கூட்டத்தை விரட்டி விடுங்க... இல்ல அவனுக வாய் ஒன்று போதும் உங்கள் தோல்வியை உறுதி செய்ய...}

-மாரிதாஸ்

தற்சமயம் ரஜினி அவர்கள் பேசிய பேச்சைத் திரித்து கூறியுள்ள இந்தச் செய்தி ஊடகங்கள் நிலை பற்றி உங்கள் கருத்து என்ன??? {கேள்வி : நிர்மல்}

தற்சமயம் ரஜினி அவர்கள் பேசிய பேச்சைத் திரித்து கூறியுள்ள இந்தச் செய்தி ஊடகங்கள் நிலை பற்றி உங்கள் கருத்து என்ன??? {கேள்வி : நிர்மல்}


 Headline Strategies Psychology அப்படினு ஒன்னு இங்கே இருக்கு. அது என்னவென்று கூறும் முன் ஒருவிஷயம்

தீபாவளி அன்று ஜீ தொலைக்காட்சியில் வெளியான ரஜினி அவர்களின் பேட்டி மிக எதார்த்தமாக இருந்தது என்றும் - அதில் ரஜினி அவர்களின் பேச்சு அருமையாக மிகவும் வெளிப்படையாக இருந்தது என்றும் "BMW கார் வச்சுருக்கேன் , ஸ்டார் ஹோட்டல்களில் சாப்பிடுகிறேன் , வீடு போயஸ் தோட்டத்தில் இருக்கு ---- நான் எப்படிங்க எளிமையா இருகேனு சொல்ல முடியும்? என்று கூறியது மிக மிக எதார்த்தமான உண்மை பேச்சு" என்று என் அம்மா , அண்ணா அனைவரும் கூறினர். "இப்படி வெளிப்படையாக தங்கள் வாழ்க்கையைக் கூறிவிட்டால் மக்களும் ரசிகர்களும் எதார்த்தம் புரிந்து வாழ்வார்கள் என்று" அந்தப் பேட்டியை பார்த்த அனைவருமே இதே கருத்தை தான் கூறினர்.

அப்போது என் அம்மாவிடம் நான் கூறினேன் "ரஜினி அவர்களுக்கு இந்தப் பேட்டி மக்களிடம் நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும் என்றால் இன்னும் இரண்டு நாளில் அவர் பெயரை கெடுக்கக் கண்டிப்பாக எதாவது செய்தியை செய்தி நிறுவனங்கள் அதுவும் புதிய தலைமுறை , நீயுஸ் 7 , ஆனந்த விகடன் , தி இந்து போன்ற செய்தி நிறுவனங்களில் செய்திகள் வெளியிடுவார்கள்". கொஞ்சம் பாருங்கள் என் கணிப்பு சரியாக இருக்கும் என்றேன். 

அதே போல் விரைவு செய்திகள் வந்தன:

நியூஸ் 7 செய்தி--------------- "7பேரை தெரியாதவர் 7 கோடி பேருக்கு தலைவர் ஆவாரா"??
சன் டீவி ---------------- "பாஜக ஆபத்தான கட்சி தான் என்று ரஜினி கூறினார்".
புதியதலைமுறை -------------"7 பேர் யார் என்றே தெரியாது என்றார் ரஜினி". பரபரப்பு செய்திகள்...

இந்தச் செய்திகளை கொஞ்சம் விட்டு விட்டு அந்தத் தலைப்புகளை அனைவரும் கொஞ்சம் கவனிக்கவும். அதில் தான் செய்தி நிறுவனங்களின் எண்ணமே இருக்கிறது. இது எல்லாமே செய்தி நிறுவனங்கள் மேற்கொள்ளும் Headline Strategies Psychology என்ற கேடுகெட்ட தந்திரம்... செய்தியை வெளியிடாமல் - தங்கள் எண்ணத்தை எப்படி மக்கள் மனதில் விதைப்பது என்று அதற்குத் தக்க செய்தியின் தலைப்பை உருவாக்குவது பரப்புவது தான் அது.

"2016ல் கேரளா மாநிலத்தில் கொச்சியில் அசாம் மாநிலத்தைச் சார்ந்த தலித் பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். 30 இடங்களில் சரமாரி வெட்டுக் காயங்கள். இந்தச் செய்தி பெரிய அளவில் விவாதமாக மாறவே இல்லை. காரணம் கேரளா கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலம் - கொலை செய்த நபர் அமீர் உல் இஸ்லாம் என்பவர்". இது விவாதம் அல்ல செய்தியாக கூடப் பெரிய அளவில் வரவில்லை. இதே நிகழ்வு உத்திரபிரதேசம் குஜராத் என்றால் ????கடந்த ஆண்டுகளில் திரிபுரா பற்றி என்றாவது செய்தி வந்தது உண்டா பாருங்கள்??? இப்போது வாரம் நாளு கெட்ட செய்தி வரும்,. காரணம் கம்யுனிஸ்ட் ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது அங்கே பிஜேபி வந்தாகிவிட்டது எனவே இனி கெட்ட செய்தி மட்டுமே வரும். பெரும்பாலான செய்தி ஊடகங்கள் இடதுசாரி சிந்தனையாளர்கள்/ தமிழகத்தில் திராவிட சிந்தனையாளர்கள் வசம் இருப்பதால் தான் வரும் வினை இது.

சென்ற மார்ச் மாதம் குஜராத்தில் குதிரை வைத்திருந்ததால் தலித் தாக்கப்ட்டு உயிர் இழந்தார் என்று செய்தி வெளியிட்டது ஞாபகம் இருக்கும் அனைவருக்கும். ஆனால் அது உண்மை அல்ல இரண்டு நாட்களில் அந்த இளைஞர் குதிரை வைத்திருந்ததால் அல்ல மாறாக அந்தப் பகுதி பெண்களிடம் வரம்பு மீறி நடந்தார் அதனால் தாக்கப்பட்டு இறந்தார் என்று விசாரணையில் வெளியானது. ஆக வெட்ட வெளிச்சமாக பிஜேபி மீது தலித் , இஸ்லாமியர்களுக்கு வெறுப்பு வரவேண்டும் என்று தூண்டுவது தான் நோக்கமே அன்றி வேறு இல்லை இதில்.

எல்லோரும் ஹைதராபாத் ரோகித் வெமுலா தற்கொலை மட்டுமே பெரும் செய்தியாக்கினர் - ஆனால் பெங்களூர் அபிசேக் தற்கொலை செய்தியாக மாறேவே மாறாது... ஏன்??? எப்படி???? காரணம் ரோகித் கம்யுனிஸ்ட் மாணாவரணியில் இருந்தார் - அபிசேக் வலதுசாரி மாணவர்கள் அணியில் இருந்தார். எனவே ரோகித் வெமுலாவுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் ஆரம்பித்து எந்த யோக்கியனும் அபிசேக் மாணவர் இறப்புக்குக் குரல் கொடுக்கவே இல்லை.

இதை ஏன் கூறுகிறேன்????? செய்திகள் எப்படி பெரிதாக்குவது எதனால் பெரிதாக்குவது எல்லாமே இங்கே உள் நோக்கங்களுடனே திட்டமிடப்படுகிறது.

அது போல் வேலையைத் தான் ரஜினி அவர்களின் பேட்டியிலும் செய்துள்ளார்கள் செய்தி நிறுவனங்கள். இதை முதலில் நாம் மக்கள் உணரவேண்டும்.

விஜயகாந்த் அவர்கள் எப்படி வீழ்த்தப்பட்டார்???? அதே பாணியில் ரஜினி அவர்களை வீழ்த்தத் திராவிட இயக்கங்கள் செய்தி நிறுவனங்களைப் பின்புலமாக கொண்டு நகர்கிறார்கள். ஒன்று கேலி செய்வோம் - இல்லை வெறுப்பைப் பரப்புவோம் இது தான் இவர்கள் செய்தி நிறுவனம் நடத்தும் தொழில் தர்மம். இங்கே தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் தாண்டி எவரும் அரசியல் செய்ய முடியாது. அப்படி அரசியல் செய்தால் எப்போது தேவையோ அப்போது பயன்படுத்திக் கொண்டு உங்களை நிர்மூலம் ஆக்குவது எப்படி என்ற கலையும் இங்கே இருக்கும் திராவிட கூட்டத்துக்கு இது நன்கு தெரியும்.

ரஜினி அவர்கள் கூறிய "அது எனக்குத் தெரியவில்லை... எதிர்க்கட்சிகள் அப்படி நினைக்கிறார்கள் என்றால் அப்படி தானே இருக்கும்" இந்த இரண்டு கூற்றை வைத்துக் கொண்டு எப்படி அவர் மீதே வெறுப்பை மக்களிடம் பரப்பலாம்?????? அதைத் தான் புதிய தலைமுறை முதல் நியூஸ் 7 வரை செய்தி நிறுவனங்கள் இங்கே செய்துள்ளார்கள். வேறு ஒன்றும் இல்லை.

{திக , கம்யுனிஸ்ட் மற்றும் அவர்கள் ஆதரவாளர்கள் நடத்தும் அனைத்துச் செய்தி ஊடகங்களும் இன்று ரஜினி முதல் எதிரி. காரணம் அவர் "ஆன்மீக அரசியல் - அவர் ஒரு தேசியவாதி".}

-------------------------------------------------------------------------------------------
முக்கியமான உண்மையை அனைவரும் கட்டாயம் உணர வேண்டும்.

1)2012ஆம் ஆண்டு இரண்டு தலைமை பத்திரிக்கையாளர்கள் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டார்கள். காரணம் ஒரு தொழில் அதிபரை 20 லட்சம் பணம் கேட்டு மிரட்டினார்கள் என்று. அந்தத் தொழில் அதிபர் ஒரு பெண்ணுடன் கள்ள உறவு வைத்திருந்தார் என்பது தகவல். அதற்கான ஆதார வீடியோ இந்தச் செய்தியாளர்களிடம் உண்டு.. அந்த வீடியோவை வைத்து மிரட்டி முதலில் சில லட்சம் பணம் பரித்துள்ளார்கள். அதன் பின் மீண்டும் பணம் கேட்டு மிரட்ட - புகாரின் பேரில் கைது.

இதில் முக்கியமான விசயம் என்ன தெரியுமா? இரண்டு செய்தியாளர்களுமே வேறு வேறு செய்தி நிறுவனந்தை சார்ந்தவர்கள் ABP News , India TV. அதாவது நொய்டாவை தலைமையிடமாக கொண்ட India TV பத்திரிக்கையாளரும் - கல்கொத்தாவை தலைமையிடமாக கொண்ட ABP News என்ற இரண்டு வேறுபட்ட நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் கைது?

இது தான் இங்கே முக்கியும். இதற்குப் பெயர் : investigative journalism.

தொடர்ந்து ஒருவிவகாரத்தைப் பின் தொடர்ந்து முழுக் கதையையும் தெரிந்து மக்களுக்கு ஆதாரத்துடன் வெளியிட்டு செய்தியின் முழு உருவத்தை உடைத்துக் காட்டுவது. ஆனால் இந்தியாவில் இதற்குப் பெயர் "சமூகத்தில் பெரிய நபர்கள் பின்புலம் அவர்கள் ரகசியம் அவர்கள் கள்ள உறவு என்று தேடி அலைவது... இதன் மூலம் அந்த நபர்களை மிரட்டி காசு பிடுங்குவது... உங்கள் வாழ்க்கையையே நாசம் செய்வோம் என்று வெளிப்படையாக மிரட்டி காசு பறிப்பது தான் இங்கே investigative journalism. இதற்கு ஒரு குரூப் news agencies என்ற முழு நேரம் வேலை செய்கிறது.

இது ஒரு கூட்டாக உழைக்காமல் எப்படி அடுத்தவன் வீட்டு விவகாரத்தை வைத்து காசு சம்பாரிப்பது என்ற கூட்டம். பல விவகாரம் வெளியில் வரவே வராது... ஏன் என்றால் அனைத்துச் செய்தி நிறுவனங்களும் இந்தவிதமான கூட்டம் உண்டு. ஒருத்தருக்கு ஒருத்தர் இசைந்து போவது ஒரு தந்திரம். இரண்டு விசயம் இது தனி ஒரு பத்திரிக்கையாளர்கள் தவறு என்று நினைக்காதீர் , அடுத்து 20 லட்சம் தானே என்று நினைக்காதீர்..

Zee TV குரூப் இந்த நிறுவனத்தின் செய்தியாளர்கள் கூட்டம் ஜிண்டால் குழுமம் மீது தவறான விதமான செய்திகளை பரப்புவது மூலம் பெரும் முதலீட்டாளர்கள் இழப்பைச் சந்திக்க வேண்டி வரும் என்று மிரட்டினர்... முதல் தவணையாக 20கோடி வேண்டும் என்றும்... அடுத்து 100 கோடி மதிப்பிலான விளம்பரங்களை தங்களுக்கு தரவேண்டும் என்றும் மிரட்டினர். ஒருகட்டத்தில் செய்வதரியாது இந்த விவகாரம் வெடித்து வெளிவந்தது...

100 கோடி??????????

இங்கே இதே போல் தான் நித்தியானந்தர் வீடியோ விவகாரம் எல்லாம்.... இப்படி வீடியோ வைத்து காசு பறிக்க முய்ச்சிபது முடியாது என்றால் வெளியிட்டு அவமானம் செய்து அதன் மூலம் தங்கள் பிடியில் இருக்கும் மற்ற நபர்களை மிரட்டுவது... 1 கோடி இரண்டு கோடி எல்லாம் இல்லை, கைமாறினால் பல 100 கோடிகளைப் பறிப்பது... இங்கே நக்கீரன் எல்லாம் மிக மிகக் கொடூரமான செய்தி கூட்டம்... என்ன வேண்டுமானாலும் எழுதலாம் யார் மீது வேண்டாலும் எழுதுவோம். செய்தியே தேவை இல்லை ஸோர்ஸ் சொன்னது என்ற என்ன செய்தி வேண்டுமானாலும் எழுதுவது கேட்டால் கருத்து சுதந்திரம் பேசுவது...

சமூக ஆர்வலர் என்று திரிபவன் பலர் பின்புலத்தில் இந்தச் செய்தி நிறுவனங்கள் கூட்டு உண்டு... இயற்கை ஆர்வலர் என்ற பெயரில் போய் எதையாது சொல்லி போராட்டம் தூண்டலாம் - அதை ஆனந்த விகடன் போன்றவர்கள் விரிவாகச் செய்தி வெளியிட்டு மிரட்டுவர்... பெரும் நிறுவனங்களைப் பொறுத்தவரை முதலீட்டாளர்கள் மீது அச்சம் கொண்டு ஒரு காலத்தில் இவர்களுக்கு பெரும் தொகையை வழங்கி வந்தார்கள் என்பது தான் உண்மை. ஆனால் இப்போது ஒன்று இரண்டு என்றால் சரி... ஒரு டஜன் கூட்டமே செய்தி நிறுவனம் என்ற பெயரில் இறங்கி விட்டதால் நிறுவனங்கள் விலகி நிற்கிறார்கள். இங்கே இந்த இயற்கை ஆர்வலர்கள் என்று உழைக்காமல் சொகுசாக திரிந்து எந்நேரமும் இயற்கை என்று பேசி கதை அளப்பவனை நம்பாதே...

எனவே செய்தி நிறுவனங்கள் / பத்திரிக்கையாளர்கள் முதல் வியாபார நோக்கமே

"சமூகத்தில் அரசியல்வாதிகள் , திரைப்பட நடிகர்கள் - நடிகைகள் , விளையாட்டு வீரர்கள் என்று பிரபலமானவர்கள் , தொழில் அதிபர்கள் இப்படிப் பிரபலமான மனிதர்கள் பின்னால் இருக்கும் ரகசியத்தைத் தேடி தெரிந்து கொள்ள வேண்டும். அதை வைத்து மிரட்டி காசு பார்க்கவேண்டும்... இது நீக்கமற இந்த நாடு முழுவதும் எல்லாச் செய்தி ஊடகத்திலும் நடக்கிறது என்பது தான் உண்மை". இதில் பெண் பத்திரிக்கையாளர்கள் தனி ரகம்.

பணம் பரிப்பது மட்டும் தான் பணம் சம்பாரிக்கும் வழியா????

இல்லை அரசியல் கட்சிகள் ஆரம்பித்து அனைவரிடமும் அவர்களுக்கு ஆதரவாகச் செய்திகள் வெளியிடவும் பணம் பெறுகிறார்கள். பொதுவாகச் செய்தி நிறுவனங்கள் நல்ல விசயம் சொல்வதை விடக் கெட்ட விசயம் வேகமான எளிதாக மக்களுக்குப் பரப்ப முடியும். நாளு குடும்பம் நல்லா இருக்கு என்று செய்தி போட்டா பார்ப்பவர் விட நாடு குடும்பம் நாசமா போச்சு என்று போட்டால் பார்ப்பவர் அதிகம்.

எனவே இந்த எதிர்மறை பிரச்சாரம் தான் செய்தி ஊடகங்களின் பலமே தவிர நல்ல விசயங்கள் பேசுவது அல்ல.

"எந்தக் கட்சிகளுக்கு ஆதரவாகப் பேச வேண்டும் என்பது விஷயம் அல்ல. எந்தக் கடைசிக்கு எதிராகப் பேச வேண்டுமே என்பது தான் முக்கியம். இதை முடிவு செய்வது இந்த டீவி முதலாளிகள் - அதற்கு வேலை செய்வது அந்த முதலாளிகளுக்கு அவர்கள் வீட்டு நாய்க் குட்டி போல் வேலை செய்யும் இந்தப் பத்திரிக்கையாளர்கள் செய்தியாளர்கள் வேலை ". தேர்தல் நேரங்களில் முதல் செய்தி முதல் முடிவு செய்தி வரை அனைத்துக்கும் காசு வாங்கும் கூட்டமே இங்கே இருக்கு. {தேர்தல் வந்தால் மக்கள் குஷியாக இருப்பார்களோ இல்லையோ ஆனால் செய்தி நிறுவனம் அனைத்துமே செய்ய வருமானம் தான்.}

இது மட்டும் அல்ல சேர் மார்கெட் முதல் IPL கிரிக்கெட் போட்டி வரை அனைத்திலும் இவர்கள் செய்தி பரப்பி காசு சம்பாரிக்கும் யுக்தி அடக்கம். வெறும் விளம்பரம் மட்டும் தான் இவர்கள் வருமானம் என்று நினைக்க வேண்டாம். பல ஆயிரம் வழி இருக்கு இங்கே செய்தி நிறுவனம் நடத்தி காசு பார்க்க.
----------------------------------------------------------------------------------------------------------
இன்னும் ஒரு எடுத்துக்காட்டு :

செய்தி : 2016ல் இந்தியா முழுவது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான குற்ற நடவடிக்கைகள் தக்குதல்கள் சம்பவம் காரணமாக (Crime/Atrocities against Scheduled Castes) சுமார் 40743 வழக்குகள் பதிவாகியுள்ளது. இதில் 10426வழக்குகள் பதிவாகியுள்ளது உத்திரபிரதேசத்தில் - கேரளாவில் 810 வழக்குகள் பதிவு..

இதே செய்தி எப்படி வெளியிடப்பட்டது?

 "உத்திரபிரதேசத்தில் அதிகம் தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்குதல் சம்பவம் என்பது போல்- கேரளாவில் குறைவு என்பது போல்". உண்மையில் கேரளாவில் தாழ்த்தப்பட்டோர் மக்கள் தொகை 30.4 லட்சம் என்றால் உத்திரபிரதேசத்தில் அது 4.13கோடி மக்கள். எனவே முதலில் இப்படி மொட்டையாக ஒப்பிடுவதே தவறு அல்லவா? அதைவிடக் கொடுமை இந்தத் தகவல் வெளியானது 2017 தீபாவளி நேரத்தில். அப்போது தான் பிஜேபி ஆட்சிக்கு வந்திருக்கும் நேரம். ஆக 2016வரை புள்ளி விவரம் கூறுவது அக்கிலேஷ் ஆட்சியின் நிர்வாகம் பற்றியது. அதைக் எடுத்து முன்வைக்கத் தெரியாத அளவிற்குச் செய்தியாளர்கள் வெறுப்பு பிரச்சாரம் இருக்கிறது இங்கே.

இதன் மூலம் பிஜேபி ஆளும் மாநிலங்களில் தாக்குதல் அதிகம் கம்யுனிஸ்ட் ஆளும் மாநிலங்களில் குறைவு என்பது போல் தோற்றத்தை உருவாக்கிவருகிறார்கள்.

அதனால் கூறுகிறேன் "இந்த நாட்டின் கேவலமான ஒரு கூட்டம் இந்தப் பத்திரிக்கையாளர்கள் கூட்டம் தான்".

-----------------------------------------------------------------------------------------------------------

இங்கே தமிழகத்தில் செய்தி நிறுவனம் நடத்தும் நபர்கள் யார் யார் அவர்கள் பின்புலம் கொஞ்சம் தேடி பாருங்கள்...

1.புதிய தலைமுறை - கல்வி தந்தை நடத்தும் செய்தி நிறுவனம். (கல்வியை வைத்து கொள்ளை அடித்தவர் எல்லாம் இன்று கல்வி உலகின் தந்தையானது ஒரு சமூகத்தை கேவலமே தவிர வேறு என்ன!)

இந்த புதிய தருதலை என்றாவது SRM பல்கலைக்கழகம் இத்தனைவருசமாக அடித்த கல்வி கொள்ளையைப் பற்றி பேசுமா???? இத்தனை வருடங்களாக சில நுறு கோடி மெடிக்கல் சீட்கள் விற்பனை செய்ததன் மூலம் அடித்த கொள்ளையை பற்றி விவாதம் நடத்துமா???? நடத்தாது... பின் இதில் வேலை செய்பவர்கள் எந்தப் பத்திரிக்கை துறையின் தர்மத்தின் கீழ் வேலை செய்கிறார்கள்???? ஒரு நல்ல நேர்மையான மனிதன் என்றால் அதைச் செய்தியாக வெளியிட வேண்டும் விவாதம் செய்ய வேண்டும் தானே????

அப்போ இந்தச் செய்தி நிறுவனத்தில் வேலை செய்யும் செந்தில் , காத்திகேயன் , கார்த்திகை செல்வன் எல்லோரும் தங்கள் முதலாளி கொடுக்கும் பணத்திற்கு வேலை செய்யும் ஊழியர்கள் தவிர அதைத் தாண்டி எதுவும் இல்லை. அப்போ அவர்கள் என்ன செய்தி வெளியிடுவர்??? தங்கள் முதலாளி கண் அசைவுக்குக் காத்திருக்கும் ஒரு வளர்ப்பு நா..க்கும் இவர்களுக்கு என்ன வித்தியாசம்???? {என்று மக்கள் நினைக்க மாட்டார்கள் }

2.நியுஸ் 7 - மணல் மாபியா வைகுண்ட ராஜன் அவர்களின் செய்தி நிறுவனம்...

வாய்கிழிய வசனம் பேசும் இந்தச் செய்தி நிறுவனத்தில் வேலை செய்யும் நெல்சன் சேவியர், சுகிதா , மனோஜ் கோபாலன் என்று எவரையாது ஒரு நாள் வாயைத் திறந்து இவர் முதலாளி நடத்தும் இடங்களில் நடந்த IT ரயிட் பற்றிப் பேச சொல்லுங்கள்??? வராது வாயில் வார்த்தையே வராது. காரணம் வார்த்தைகள் இல்லை என்பதால் அல்ல - வயிற்றுக்கு வேறு பிழைப்பு இல்லை எனவே இந்த பிழைப்புக்கு ஏற்ற வேடம் போட வேண்டும் அல்லவா அதான். வேறு எதுவும் இல்லை.

எனவே இப்படி இங்கே உள்ள செய்தியாளார்கள் என்ற பெயரில் பெரும்பாலும் ஒரு வெக்கம் கெட்ட கூட்டம் தான் வாயை வைத்துப் பிழைப்பு நடத்துகிறது என்பது நிதர்சனமான உண்மை...
----------------------------------------------------------------------------------------------------------
இறுதியாக :

இந்த விரைவு செய்தி - தற்போதைய செய்தி இதற்கெல்லாம் மக்கள் ரியாக் செய்வது சமூக வலைதளங்களிக் கொஞ்சம் நிறுத்துக் கொள்ளவும்.  வெளிப்படையாகக் கூறவேண்டும் என்றால்

பொதுவாக இங்கே வசதிவாய்ப்பு கிடைத்த நபர்கள் செய்தி நிறுவனங்களை ஆரம்பிக்க ஆசைப்படுகிறார்கள் அதன் மூலம் அரசை , சமூகத்தில் நல்ல நிலையில் உள்ள மனிதர்களை , அரசியல் கட்சிகளை , தொழில் அதிபர்களை என்று அனைவரையும் மிரட்டி வாழமுடியும். ஒரு தனி அரசங்கமே இவர்களால் நடத்த முடியும் எவனும் கேள்வி கேட்பேன் எவன் பேரையும் கெடுப்பேன் என்ற திமிர் பிடித்த அழைக்கிறார்கள் செய்தி நிறுவனம் நடத்தும் முதலாளிகள். ஆனந்த விகடன் எல்லாம் தனி ரகம். தாங்கள் சொல்வது தான் செய்தி என்றும் தங்களை மீறி இங்கே எவனும் இருக்க முடியாது என்ற பச்சை கேவலமான அருவருப்பான எண்ணம் காரணம் தான் பத்திரிக்கை துறை நடத்தத் தவிர வேறு நாட்டின் எந்த நலனும் பற்றி அக்கறையல்ல காரணம்.

நேரடியாக இந்த செய்தியாளர்களை சந்திப்பதைவிட ரஜினி அவர்கள் கருணாநிதி போன்று கேள்வி-பதிலாக தானே உருவாக்கி வெளியிடுவது தான் நல்லது. {வீடியோவாக கூட வெளியிடலாம்.}

{மிக எளிமையாக கூறினால் இங்கே யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.. ஆனால் அதை நேர்மையாக எதிர்கொள்ள இந்த திமுக , திக கூட்டத்துக்கு என்றுமே வக்கு இருக்காது. அதன் வெளிபாடு தான் இன்றய செய்தி திரிப்புகள். இது மட்டும் 100% உண்மை. }

இந்தத் தேசத்தை பிடித்த வியாதி செய்தி நிறுவனங்கள் - அவை வெளியிடும் விரைவு செய்திகள்.

-மாரிதாஸ்

நிர்மலாதேவி விவகாரத்தில் நக்கீரன் பத்திரிக்கை இவ்வளவு ஆர்வம் அவசரம் காட்டுவது ஏன்? உண்மை தான் என்ன? ஆளுநர் மாளிகை தான் காரணமா?....

நிர்மலாதேவி விவகாரத்தில் நக்கீரன் பத்திரிக்கை இவ்வளவு ஆர்வம் அவசரம் காட்டுவது ஏன்? உண்மை தான் என்ன? ஆளுநர் மாளிகை தான் காரணமா?{கேள்வி: பாலா முருகன்}


1.காமராஜர் யுனிவெர்சிட்டி , MGRயுனிவெர்சிட்டி என்று தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் கடந்த 15 வருடங்களில் நீங்கள் எடுத்துப் பார்த்தால் ஒன்று அதிமுக இல்லை திமுக அனுதாபிகள் தான் பதவியில் இருந்திருப்பர். பொதுவாகவே இது ஆளுநர் அதிகார வட்டத்தில் வந்தாலும் - ஆளும் அரசுகளின் கட்டுப்பாட்டில் தான் இருந்து வருகிறது.

2.உதவி பேராசிரியர் வேலைக்கு 15-20லட்சம் வரை லட்சம் கொடுக்க வேண்டும் , லேப் கிளர்க் வேலை என்றால் கூட 3-4லட்சம் லட்சம் கொடுத்து தான் வேலையைக் கைப்பற்றுகிறார்கள் - பல்கலைக்கழகத்தின் தலைவர் பதவிக்கு 2கோடி , 4கோடி என்று பேரம் பேசி தான் விற்பனை செய்யப்படுகிறது. இது தான் உண்மை. இதைத் தாண்டி பேப்பர் சேசிங்க் ஆரம்பித்துக் கூடுதல் மதிப்பெண் வரை அனைத்திற்கும் இங்கே வழியுண்டு. {காசு இருந்தால் என்ன வேண்டுமானாலும் இங்கே சாதிக்கலாம் என்ற ஒரு கேடுகெட்ட நிலை உருவாக்கிய பெருமை திராவிட கட்சிகளை சாரும்.}

இப்போது விசயம் "நிர்மலாதேவி இரண்டாம் ஆண்டு படிக்கும் பெண்களைத் தவறான வழிக்கு அழைத்தார் என்பது".

3.நிர்மலா தேவி விவகாரமான ஆடியோ வெளியானது 2018 மார்ச் மூன்றாவது நான்காவது வாரங்களில் - அவர் கைது செய்யப்பட்டது 2018 ஏப்ரல் 16ஆம் தேதி. இன்று ஆளுநராக இருக்கும் பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்றது 2017 அக்டோபர் 6ஆம் தேதி - அதை அடுத்து அவர் இங்கே வந்து செட்டில் ஆகி நிர்வாகத்தைத் தொடங்க டிசம்பர் ஆகிவிட்டது. {பொதுவாக 30-45 நாட்கள் தேவை ஆளுநர் மாளிகையில் புதிய ஆளுநர் குடியேறி பணிகளை முழுமையாகத் தொடங்க. ரோசய்யா அவர்கள் பதிவு விலகி சுமார் 1.5ஆண்டுகள் கழித்து தான் தமிழகத்திற்கு முழு நேர ஆளுநர் வருகிறார் என்பதால் அது இன்னும் வேலைப் பழு அதிகம்.}

4.இந்த நிலையில் வந்து 2 மாதங்களில் இதை ஆளு நர் செய்கிறார் என்று கூச்சமே இல்லாமல் விசயத்தை அப்படியே தூக்கி அந்த 79 வயது மனிதர் மீது போட்டு எதோ அவர் தான் ஆள் நியமனம் செய்து இந்த வேலையைச் செய்வது போல் தொடர்ந்து அவசரமாக , ஆர்வமாக நக்கீரன் பத்திரிக்கை எழுதுவது எனக்குத் தெரிந்து உண்மையான குற்றவாளியை காப்பாற்ற வேலை செய்வது போல் தான் தோன்றுகிறது. பல்கலைக்கழகத்தின் அனைத்துக் குற்றங்களுக்கும் காரணமே திராவிட கட்சிகள் நியமனம் செய்யும் இந்த Vice Chancellors தான் முக்கிய காரணம்.{Vice Chancellors தான் அனைத்து ஊழல்களில் கிடைக்கும் பணத்தையும் கொண்டு போய் திராவிட கட்சி தலைமைக்கு கொடுத்து அதை பங்குபிறிப்பவர்கள். இவர்களுக்குத் தெரியாமல் நிர்வாகத்தில் எதுவும் நடக்க வாய்ப்பே இல்லை என்பது ஊர் அறிந்த ரகசியம்.}

5.இந்தக் காமராஜர் பலகலைக்கழகத்தின் Vice Chancellors யார் ???? கடந்த பத்து வருடங்கள் யார் என்று கொஞ்சம் தேடுங்கள்

இப்போது ஆளுநர் நியமனம் செய்த செல்லதுரை நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது Vice Chancellors பதவி காலியாக உள்ளது. இதற்கு முன் இருந்தது யார்??? கல்யாணி மதிவாணன் அவர்கள் - இவர் திமுக உருவாகக் காரணமான 5ம் பெரும் தலைவர்களில் முக்கியமானவரான இரா. நெடுஞ்செழியன் அவர்களின் சொந்த மருமகள். அவருக்கு முன் யார் Vice Chancellors??? கற்பக குமாரவேல் இவர் யார் ? இவர் சின்னக் கலைஞர் என்று திமுக கட்சி ஆட்களால் அழைக்கப்பட்ட கோசி மணி அவர்களின் மருமகன். அதற்கு முன் Vice Chancellors இருந்தவர் யார்??? மருதமுத்து இந்த ஆள் யார் தெரியுமா???? திமுகவில் அழகிரி அவர்கள் உச்சத்தில் இருந்த போது நேரடியாகச் சென்று காலில் விழுந்து ஆசி வாங்கிவிட்டு வந்த உத்தமன்.

Vice Chancellors தாண்டி நிர்வாகத்தில் எவர் உள்ளே வரமுடியாத அளவு பலமான இந்தப் பதவிக்கு கடந்த வரலாறுகளில் ஏறக்குறைய திமுக அடிமைகள் தான் பதவிக்கு வந்து சென்றனர். {இதில் கல்யாணி மதிவாணன் அதிமுக திமுக இரண்டுமே கூட ஆதரவு உண்டு என்பது போல் தான் செய்தி} இப்போது என்ன செய்வது???? இவ்வளவு காலம் ஒரு பல்கலைக்கழகத்தை அதன் நிர்வாகத்தை இஞ் இஞ்சாக கொள்ளை அடித்து நாசம் செய்த திராவிட கட்சிகள் எவருக்கும் இங்கே நடக்கும் இந்த நிர்மலாதேவி விவகாரத்தில் பங்கு இல்லை - 2 மாதம் முன் வந்த 79 வயது மனிதர் தான் நேரடியாகக் காரணம்????

இதெல்லாம் கேட்க நகைச்சுவையாக இல்லையா??? பல்கலைக்கழகங்களின் நிர்வாகம் என்றால் என்ன என்று தெரியாதவனுக்கு வேண்டுமானால் நக்கீரன் எழுதிவரும் நிர்மலாதேவி தொடர்கதைகள் உண்மை போல் தோன்றலாம் ஆனால் நக்கீரன் பத்திரிக்கை எவரையோ காப்பாற்ற மொத்த விவகாரத்தையும் மக்கள் மத்தியில் வலுக்கட்டாயமாக்க திசைமாற்ற முயற்சிக்கிறது என்பது தான் எனக்குத் தெரிந்து உண்மை. {எழுதும் அனைத்துமே வட்டாரங்கள் சொன்ன தகவல் என்ற அடிப்படையில் நக்கீரன் எழுதி வருகிறது. இது கருத்து சுதந்திரம் என்று பெயரில் அப்படி நடக்கிறது என்று தகவல் வருகிறது இப்படி நடக்கிறது என்று தகவல்கள் வருகிறது என்று இவர்கள் இஷ்டத்திற்கு எழுதி பரப்புவது இங்கே நக்கீரன் போன்ற பத்திரிக்கைகளுக்கு மிக சர்வசாதாரணம்.}

நிர்மலாதேவி அவர்கள் ஜாமினில் வெளியே ஏன் வரவில்லை என்று கவலைப்படும் ஒரே கட்சி தலைமை யார்???? திமுக தலைமை தான் நிர்மலாதேவிக்கு ஏன் பிணை கிடைக்கவில்லை என்று கருத்து கூறியவர். இப்போதைக்கு நிர்மலாதேவி வெளியே வந்தால் அவர் தற்கொலை தான் செய்யவேண்டும். அந்த அளவுக்கு ஒரு கூட்டம் வெளியில் காத்திருக்கிறது. எனவே பாதுகாப்பாக அவர் உள்ளேயே இருந்து எந்த வெறிபிடித்த ஓநாய் அந்த வேலையைச் செய்ய சொன்னது என்ற உண்மையை உடைத்து மொத்த பல்கலைக்கழகங்களின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும் CBCID .

ஒரு பெரும் குற்றத்திற்கு முக்கிய சாட்சி சிக்கிவிட்டது - ஒன்று அந்தச் சாட்சி கொலை/தற்கொலை செய்யவேண்டும். இல்லை வழக்கை மக்கள் மத்தியில் திசைதிருப்ப தேவையான ஏற்பாடுகள் செய்யவேண்டும். இது திராவிட கட்சிகளின் பொதுவான அரசியல்பாணி. என்னைக் கேட்டால் இந்த நக்கீரன் விடும் கதைகளை எல்லாம் நம்புவதை விடக் கொஞ்சம் CBI வழக்கை முடிக்கும் வரை நீங்கள் அனைவரும் அமைதியாக இருக்கலாம். வேண்டுமானால் பாருங்கள் இந்தத் திராவிட கட்சிகள் எவனாது மாட்டுவான் - அப்போது இதே நக்கீரன் அதை "பிஜேபி உதவியுடன் ஆளுநர் மாளிகை தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி தப்பிக்கபார்க்கிறது என்று எழுதுவார்கள்" பொறுத்திருங்கள்.

அப்படி குற்றவாளி ஆளுநர் மாளிகையாக இருந்தால் கட்டாயம் கடும் தண்டனை கொடுக்கப்படவேண்டும். இல்லை என்றால் நக்கீரன் பத்திரிக்கை குழுமத்தை முழுவதும் தடை செய்ய வேண்டும். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பொய் செய்திகள் குறிப்பிட்ட கட்சிக்காகக் குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காகப் பரப்பியதற்காக.

இந்த பல்கலைக்கழகத்தின் நடந்த நடக்கும் ஊழல்கள் முறைகேடுகள் அனைத்தும் வெளியே வந்தால் திராவிட கட்சிகள் பெரிய அவப்பெயரை கொண்டு சேர்க்கும் என்பதால் - ஆளுநர் மாளிகை பத்திரிக்கை பத்திரிக்கையாளர்கள் மூலம் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மிரட்டப்படுவதாகவே நான் கருதுகிறேன். ஆய்வுக்குப் பல அரசு நிர்வாகிகளுடன் செல்லும் ஆளுநர் பாத்ரூம் எட்டிப் பார்த்தார் என்று எழுதும் அளவுக்கு இங்கே பத்திரிக்கை தரம் இருக்கு என்றால் இங்கே எதுவும் சாத்தியம்.

பல்கலைக்கழகங்கள் பற்றி நிர்வாகம் பற்றி நன்கு அறிந்தவன் என்ற முறையில் கூறுகிறேன் "தமிழகத்தின் அனைத்துப் பல்கலைக்கழகமும் கெட்டு நாசம் ஆனதற்கு முழுகாரணம் திராவிட கட்சிகள் - ஒரு தவறு இங்கே நடக்கிறது என்றால் கட்டாயம் இவர்கள் பங்கு இல்லாமல் இருக்கவே இருக்காது என்பது என் நம்பிக்கை".

-மாரிதாஸ்

காடுவெட்டி குரு குடும்ப விவகாரம் பெரிதாகப் பேசப்படுகின்றது. டாக்டர் ராமதாசை விமர்சித்தும், ஆதரித்தும் பல பதிவுகளைப் பார்த்தேன்.

காடுவெட்டி குரு குடும்ப விவகாரம் பெரிதாகப் பேசப்படுகின்றது.
டாக்டர் ராமதாசை விமர்சித்தும், ஆதரித்தும் பல பதிவுகளைப் பார்த்தேன்.


முழுவிவரம் நமக்குத் தெரியவில்லை.

நேற்று முன்தினம், குருவின் மகளை, அவரது தங்கை மகன் மனோஜ்கிரண் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

வாழ்க மணமக்கள்.

ஆனால், சொத்துகளைப் பறிக்க,
எனக்குத் தெரியாமல் என் மகள் திருமணத்தை நடத்தி இருக்கின்றார்களே என்று குருவின் மனைவி அவரது கல்லறையில் கண்ணீர் விட்டு அழுகிற படங்கள் தந்தியில்  வெளிவந்துள்ளன.

அதே செய்தியில், குருவின் மாப்பிள்ளை மனோஜ்கிரண் என்ன சொல்கிறார்?

என் மாமா குருவுக்கு அப்பல்லோ மருத்துவமனையில் ரூ 32 இலட்சம் செலவு ஆனது. அதை மட்டும்தான் பா.ம.க. ஏற்றுக் கொண்டது. வன்னியர் அறக்கட்டளைக்கு 300 கோடி சொத்துகள் உள்ளன. என் மாமியார் (குருவின் மனைவி), மகன், மகள் கையெழுத்துப் போட்டால்தான் அதை மாற்ற முடியும் என்கிறார்.

இதில் நம்முடைய கேள்வி என்ன என்றால்,
32 இலட்சம் ரூபாய் குருவின் மருத்துவக் கட்டணத்தை பா.ம.க.தான் கட்டி இருக்கின்றது.

அதற்கு மேல் அவரது குடும்பத்தினர் என்ன எதிர்பார்க்கின்றார்கள்?

இதற்குப் பிறகும். எதுவுமே செய்யவில்லை என  டாக்டர் இராமதாசைக் குறை சொல்வதற்கு என்ன இருக்கின்றது?

வன்னியர் சங்க அறக்கட்டளைக்கு
300 கோடி ரூபாய் சொத்து இருக்கின்றது என்றால், அறக்கட்டளைச் சட்டப்படி
அது ஒருபோதும் ஒரு குடும்பத்திற்குச் சொந்தம் ஆகி விட முடியாது.

எனவே அவரது மருமகன் அது தங்கள் குடும்பச் சொத்து போலக் கருதிப் பேசுவதும் தவறு.

அத்தகைய அறக்கட்டளைகளில் ஒரே குடும்பத்தினர் உறுப்பினராக இருப்பதும் சட்டப்படி தவறுதான்.

எங்கள் ஊர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரிப் பிரச்சினையும் இதுதான்.

அருணகிரி...

ஷாஜகானின் 17ஆவது மனைவிக்கு கட்டிய மண்டபத்தை விட சோழ மன்னவனின் ஒரே தாய்க்கு கட்டிய கோவில் - பரவ செய்யுங்கள்.

ஷாஜகானின் 17ஆவது மனைவிக்கு கட்டிய மண்டபத்தை விட சோழ மன்னவனின் ஒரே தாய்க்கு கட்டிய கோவில் - பரவ செய்யுங்கள்.

பளிங்குக் கல்லில் கட்டினால் மட்டும் தான் பாசமா?
ஐயா "பஞ்சவன் மாதேவி" பள்ளிப்படை கோயிலுக்கு போகணும்....வழி....என்று இழுத்ததும், அந்த பேர்ல இங்க எந்த கோயிலும் இல்லீங்களே, "ராமசாமி கோயில்” தான் ஒன்னு இருக்கு,அந்த கோயிலும் பூட்டியே தான் கெடக்கும், அங்க போகும் போது அந்த தெருவுல ஒரு பெரியவர் இருப்பாரு 

அவர கூட்டிட்டு போங்க அவர் தான் அந்த கோயில பாத்துக்குறாரு என்று வழிகாட்டினார் அந்த பெரியவர், பள்ளிப்படை கோயில் தான் இன்று பெயர் மாறி ராமசாமி கோயிலாகியுள்ளது! 

உலகப் புகழ் பெற்று இருக்க வேண்டிய இடம், வழி கேட்டு செல்லும் நிலையில் உள்ளது.

 "பட்டீஸ்வரம்" தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் உள்ள சிறிய கிராமம். இந்த ஊரின் பெற்ற துர்க்கை கோயிலின் வாயிலில் நின்று நேராக பார்த்தால் இரண்டு சாலைகள் இடது வலதாக பிரியும், இடது பக்கம் திரும்பினால் சோழர்களின் பழைய தலை நகரான "பழையாறை" செல்லும் சாலை, வலது புறம் நடந்தால் ஒரு மசூதி, அப்படியே இன்னும் நடந்தால் ஒரு சிமெண்ட் சாலை பிரிவு, அங்கே தான் பார்க்க நாதியில்லாமல் கிடக்கின்றது இந்த ஆயிரம் வருட அற்புதம்!.

தஞ்சை பெரிய கோயிலை நிர்மாணித்த ராஜ ராஜ சோழனின் மனைவி தான் இந்த "பஞ்சவன் மாதேவி" , தன்னை மிகுந்த பாசத்தோடு வளர்த்த சிற்றன்னையின் பிரிவை தாங்க முடியாமல் அவருக்காக ஒரு கோயிலை எழுப்பியுள்ளான்

 கங்கை முதல் கடாரம் வரை வென்ற "ராஜேந்திர சோழன்". உலகில் தாயிற்காக கட்டிய முதல் கோயில் அநேகமாக இதுவாகவே இருக்கக்கூடும், அதுவும் அதை ஒரு தமிழ் மன்னன் கட்டியிருக்கிறான் என்பது நாம் எவ்வளவு பெருமைப்பட வேண்டிய விசயம்.

 தன்னுடைய மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் அவளின் நினைவாக எழுப்பப்பட்ட தாஜ்மஹாலை இந்த உலகமே கொண்டாடுகிறது,

 தாஜ் மஹாலை  குறை கூற வில்லை அதுவும் பாசத்தின் வெளிப்பாடு தான், ஆனால் தாஜ் மஹால் கட்டுவதற்கு 600 வருடங்களுக்கு முன்பே தமிழகத்தில் ஒரு தாயின் பிரிவை தாளாமல் கட்டிய கோயில் ஒன்று உள்ளது என்பது உலகிற்கு தெரியுமா? 

குறைந்த பட்சம் எத்தனை தமிழர்களுக்கு தெரியும்? பளிங்குக்கல்லில் கட்டினால் மட்டும் தான் பாசமாக கணக்கிடப்படுமா?

வேதனை! இந்த பட்டீஸ்வரத்தின்அருகில் தான் சோழர்களின் மாளிகை இருந்தது, ராஜ ராஜன் தன் மகனிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு தன் கடைசி காலத்தை இங்கு தான் கழித்தார்,

 தன்னுடைய மனைவியின் பிரிவை தாங்காமல் அடிக்கடி இந்த கோயிலுக்கு வந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

 இன்றைக்கும் அந்த ஊரின் பெயர் "சோழன் மாளிகை". கேட்பாரற்று இடிந்து கிடந்த இந்த கோயிலை சில வருடங்களுக்கு முன் தான் புதுப்பித்து இருக்கிறார்கள்.

பஞ்சவன்மாதேவி எப்பேர்பட்ட சிறப்பும் முக்கியத்துவமும் வாய்ந்த பெண்மணியாக இருந்தால் தன் அன்னை அல்லாத ஒரு பெண்ணுக்கு பள்ளிப்படை அமைத்து இருப்பார் ராஜேந்திர சோழர். 

தனது சிற்றன்னையின் மேல் எத்தனை அன்பு இருந்தால் இந்த எண்ணம் அவருக்கு தோன்றி இருக்கும். இது இந்த மண்ணில் வாழ்ந்த மகத்தான பெண்ணின் நினைவிடம் மட்டும் அல்ல,

 உண்மையான தாய் பாசத்தால் தனயன் எழுப்பிய புனித தளம். உங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் இந்த புண்ணியவதி தரிசித்துவிட்டுவாருங்கள்,அப்படியே தனயன் ராஜேந்திர சோழனையும் நினைவு கூறுங்கள் ..

கலங்கிப் போய் நின்றாள் அந்த இளம்பெண் .....

கலங்கிப் போய்  நின்றாள் அந்த இளம்பெண் 
.. அந்தக் கல்லூரி வாசலில் ..!
.
ஆம் ... எப்படியாவது  அந்தக் கல்லூரியில் சேர்ந்து படித்து விட  வேண்டும்  என்று  ஏராளமான நம்பிக்கை கனவுகளோடு வந்தவளுக்கு ,
ஏமாற்றமே அங்கு  காத்திருந்தது .
.
காரணம் ... காலேஜ் அட்மிஷனுக்காக நிர்வாகம் கேட்ட தொகையை  கொடுக்க , அவளது பெற்றோரால் இயலவில்லை .
.

கூடவே வந்திருந்த பெற்றோர் , ஏமாற்றத்துடன் நின்ற தங்கள் மகளின் கலங்கிய கண்களைப் பார்க்க திராணி இல்லாமல் ,
வேறு எங்கோ பார்ப்பது போல .. 
ஆனால்     குமுறல்களை மனதுக்குள் சுமந்து  கொண்டு  , கூனிக்குறுகி  நின்று கொண்டிருந்தார்கள்  .
.
 விரக்தியோடு  வெகு நேரம்  அப்படியே  அங்கேயே   அசையாமல் நின்றிருந்தாள்   அந்தப் பெண் .
 தன் ஏமாற்றத்தை   வெளியே  காட்டினால்  ,  பெற்றோர் மனம் சங்கடப்படுமே என நினைத்து .. பொய்யாக புன்னகைத்து தன் அப்பா அம்மாவிடம் சொன்னாள் :
 “சரிப்பா..வாங்க வீட்டுக்குப் போகலாம்.. ”
.
அந்தப் பெண் கல்லூரி வெளி வாசலை நோக்கி நடக்க ஆரம்பிக்க ... தலை குனிந்தபடி அவளை தொடர்ந்தனர் அந்தப் பெற்றோர்.

அந்தப் பெண்ணின் தாய் கூட , தன் மகளின் சோகத்தை தாங்கிக் கொண்டாள்.

ஆனால் அந்த அப்பாவால் அது முடியாமல் போனது.

மகளுக்கும் , மனைவிக்கும் தெரியாமல் , தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைப்பதற்காக , வேறு பக்கம்  திரும்பிய அந்த மனிதரை ,  தற்செயலாக அந்தப் பக்கம் நின்றிருந்த இன்னொரு மனிதர் பார்த்து விட்டார்.
.

“ஹலோ ..நீங்க ஏ.எம்.வி. மெஸ் ஓனர்தானே..?”

“ஆமாம்”

“என்ன விஷயமாக இந்தக் கல்லூரிக்கு ...?”
.
கலங்கிய கண்களுடன்  தன் கதையை சொன்னார் வெங்கட்ராமன்.

அதைக் கேட்டு விட்டு ,  அந்த மனிதர் கல்லூரி நிர்வாகத்திடம் சென்று  ஏதோ பேசி விட்டு வந்தார்  .

அவ்வளவுதான் !

அடுத்த நொடியிலேயே  ,  அந்த சூழ்நிலையே  முற்றிலும்  மாறிப் போனது .

அவர் மகளின்  கனவு , அன்றைய தினமே நிறைவேறியது.

அந்தப் பெண்ணின் கல்லூரி அட்மிஷன் செலவு முழுவதையும் ராமகிருஷ்ணா மடம் ஏற்றுக் கொண்டது.
ஆம் ... அந்த இளம்பெண் தான் ஆசைப்பட்டபடியே அந்தக் கல்லூரியில் சேர்ந்து விட்டாள்.
.
எப்படி நடந்தது இந்த அதிசயம் ..?

அந்த மாணவியின் அப்பா வெங்கட்ராமன் நடத்தி வரும் ஏ.எம்.வி. மெஸ்ஸில் 
அப்படி  என்னதான் இருக்கிறது   ..?
.
அது இருக்கட்டும். 

 எங்கே இருக்கிறது இந்த ஏ.எம்.வி. மெஸ்..?

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை அருகில்..!
.
என்ன ஸ்பெஷல் இந்த  ஏ.எம்.வி. மெஸ்ஸில்..?

ஒரு ரூபாய்க்கு முழு சாப்பாடு !
.
இதைப் பற்றி சொல்கிறார் வெங்கட்ராமன்:
“”கடந்த 2007ஆம் ஆண்டு முதல் மூன்று வேளையும் , ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை நோயாளிகளுக்கு ,
ஒரு ரூபாயில் உணவு வழங்குகிறோம் .

காலையில் மருத்துவமனை உள்ளே சென்று , கஷ்டப்படும் பத்து குடும்பங்களை கண்டு பிடித்து , ஒரு ரூபாய் வாங்கிக் கொண்டு 10 டோக்கன் கொடுப்பேன் . ஒரு டோக்கனுக்கு 3 தோசைகளும் 2 இட்லிகளும் வாங்கிக் கொள்ளலாம் .

அதே போல் பகலில்  40 டோக்கன்கள் கொடுப்பேன் . இதில் முழு மதிய உணவு அவர்கள் திருப்தியாக சாப்பிடும் அளவுக்கு  கட்டி கொடுத்து விடுவோம். அதே போல் இரவு 20 டோக்கன்கள் வழங்குகிறோம் . இரவு நேரத்தில் 3 தோசை 2 சப்பாத்தி இருக்கும். வருங்காலங்களில் இதனை 100 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம் ..”
.
“எப்படி வந்தது உங்களுக்கு இப்படி ஒரு ஐடியா..?”

வெங்கட்ராமன் சொன்னார் :
”ஈரோடு அரசு மருத்துவமனயில்    உள்நோயாளிகளாக அனுமதிக்கப் பட்டிருப்பவர்கள் பெரும்பாலும் வசதி இல்லாதவர்களாகத்தான் இருக்கிறார்கள் .

அவர்களுக்கான உணவு மருத்துவமனையில் கொடுக்கப்பட்டாலும் , நோயாளிகளுக்கு துணையாக வந்தவர்கள் சாப்பிட  வெளியில்தான் செல்ல வேண்டும். பலருக்கும் இதற்கு கையில் பணம் இருக்காது. அதற்காகத்தான் இந்த திட்டம் .

ஒரு பிளாஸ்டிக் பையில், சாப்பாடு, சாம்பார், ரசம், மோர், பொறியல், அப்பளம் எல்லாவற்றையும்  கொடுத்து விடுவோம் . ஹாஸ்பிடலுக்கு போய் அவர்கள் அதை பகிர்ந்து சாப்பிட்டுக் கொள்ளலாம் .

முதலில் இதை இலவசமாக செய்ய நினைத்தேன். ஆனால் எதையும் இலவசமாக  கொடுத்தால் , அதன் அருமை நமக்கு தெரிவதில்லை. அதனால்தான் ஒரு ரூபாய் வாங்கிக் கொள்கிறேன்..”
.
“சரிங்க வெங்கட்ராமன் .. இதனால் உங்களுக்கு ...?”
.
புரிந்து கொண்டு பதில் சொன்னார் வெங்கட்ராமன் : “நஷ்டம்தான் ... ஆனால் இப்போது நிறைய பேர் இந்த திட்டத்திற்கு நன்கொடை தருகிறார்கள் . அவர்கள் பெயரையும் என் கடையில் எழுதி வைத்து விடுகிறேன்.”

பேச்சின் இடையே சிறிய இடைவெளி விட்டு விட்டு , வெங்கட்ராமன் தொடர்ந்தார் : “ கல்லூரியில் படிக்கும் என் மகள் மட்டும்  நல்ல வேலைக்குப் போய் கை நிறைய சம்பாதிக்க ஆரம்பித்து விட்டால்...”

“சம்பாதிக்க ஆரம்பித்து விட்டால்....?”

“இன்னும் நிறைய பேருக்கு ...ஏன் ..இந்த அரசு மருத்துவமனைக்கு   வரும் அத்தனை பேருக்கும் ஒரு ரூபாய் சாப்பாடு கொடுக்க முடியும் . அந்த நல்ல நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் ..”
.
அடடா... எப்பேர்ப்பட்ட ஒரு உத்தம மனிதன்  ..?
இவரது இந்த  உயர்ந்த உள்ளம்  பற்றி  அறிந்ததால்தான்  , ராமகிருஷ்ணா மடம் இவர் மகளின் கல்லூரி செலவுகளை , தானாகவே முன்வந்து ஏற்றுக் கொண்டது .
.
சற்றே  சிந்தித்துப் பார்க்கிறேன் ....
ஊர் பெயர் தெரியாத யார் யாருக்கோ எதையும் எதிர்பார்க்காமல்  இந்த மனிதர் செய்த உதவி ...
சரியான நேரத்தில் இவர் மகளுக்கு , ஏதோ ஒரு ரூபத்தில் வந்து எதிர்பாராத மிகப் பெரும்  உதவியை செய்து  இருக்கிறது .
.
அன்னபூரணி ஸ்லோகம் :

“அன்னபூர்ணே
ஸதா பூர்ணே
சங்கர ப்ராண வல்லபே !

ஞான வைராக்ய ஸித்யர்த்தம்
பிக்ஷாம் தேஹி ச பார்வதி !!”
..
[ சிவனின் ப்ராணன் போன்ற
ஓ அன்னபூர்ணா தேவியே !
ஞானமும் வைராக்யமும்
கொடுக்கும்படியான
அன்னத்தை அளிப்பாயாக ! ]
.
சரி ..அன்னபூரணியை எங்கே தரிசிப்பது..?

ஈரோட்டில் ..
அரசு மருத்துவமனைக்கு அருகில்  ...!

John Durai Asir Chelliah

காதலுக்கு முகம் அவசியமில்லை.....

🌼காதலுக்கு முகம் அவசியமில்லை🌼

🌼ஜெயப்பிரகாஷ், கல்லூரி படித்த காலத்தில் ஒரு முறை தன் வகுப்பிலிருந்து வெளிவந்தபோது சுனிதாவை பார்த்துள்ளார். பார்த்த உடனேயே அவர் மேல் காதல் எழுந்தது. அது முதல் ஜெயப்பிரகாஷ் மனதில் நிரந்தர இடம் பிடித்தாள் சுனிதா. இது பற்றி நண்பரிடம் பகிர்ந்து கொண்டார் ஜெயப்பிரகாஷ். கல்லூரி படிப்பு முடிந்ததும் சுனிதா காதல் முடிவுக்கு வந்தது.

🌼13 வருடங்களுக்குப் பின் 2011ம் ஆண்டு... ஒரு நாள் நண்பரிடமிருந்து ஜெயப்பிரகாஷுக்கு போன்... ‘‘சுனிதா... ஒரு விபத்தில் சிக்கி கோயம்புத்தூரில் சிகிச்சை பெற்று வருகிறாள்!’’ என்று கூற

🌼முதல் காதலாயிற்றே. மீண்டும் பற்றிக் கொண்டது. ஜெயப்பிரகாஷ் உடனே சென்று நேரில் பார்த்தார். கண்கள் கலங்கின.  மனதில் உண்டாகியிருந்த காதல் மேலும் கூடியது. மனம் இளகியது. ‘‘2011ம் ஆண்டு நவம்பரில் அவளை, நான் ஆஸ்பத்திரியில் சந்தித்தபோது அவளுக்கு தலையில் ரோமமே இல்லை.

🌼முகம் சீரழிக்கப்பட்டிருந்தது. மூக்கு இல்லை, வாய் இல்லை, பற்கள் இல்லை. இவை இல்லாமல் 90 வயது பெண்மணி மாதிரி அவள் நடந்து வந்தபோது நொறுங்கி போனேன். ஆனால் அப்போதே அவளை என் துணைவியாக ஆக்கிக் கொண்டு, வாழ்நாள் முழுவதும் அவளுக்கு உறுதுணையாக இருப்பது என முடிவெடுத்தேன். அன்று இரவு அவளை மணக்க விருப்பம் தெரிவித்தேன். அவள் சிரித்தாளே ஒழிய பதில் கூறவில்லை” என்கிறார்.

🌼‘‘2012ம் ஆண்டு ஜனவரி வரை அவளுக்கு நடந்த அனைத்து ஆபரேஷன்களிலும் கூடவே இருந்தேன்.’’ ஒவ்வொரு முறை அவள் ஆபரேஷன் முடிந்து, ஐ.சி.யூ வார்டிலிருந்து வெளியே வரும்போதும் சிரிக்கும் சிரிப்பு, காதல் வயப்பட்டிருந்த ஜெயப்பிரகாஷுக்கு  மயக்கும் புன்னகையாக தோன்றியது..

🌼அவளுக்கு இதுபோல் பல அறுவை சிகிச்சைகள் நடந்து முடிந்த பின், அவளை நான் மணக்க உள்ளேன் என்ற என் தகவலை, என் தாய் ரசிக்கவில்லை. ஆனால் தந்தை ஏற்றுக் கொண்டார். பிறகு இருவரும் இணைந்து எங்கள் கல்யாணத்திற்கு சம்மதித்தனர்.

🌼அது பழம் கதை. இன்று எங்களுக்கு ஆத்மியா மற்றும் ஆத்மிக் என இரு குழந்தைகள் உள்ளனர். இவர்களின் மூலம் எங்கள் அன்பு மேலும் புரிதலுடன் கூடியுள்ளது” என்கிறார் ஜெயப்பிரகாஷ்.

🌼இதனை சமீபத்தில் ஒரு சனிக்கிழமை, ‘‘Beyond You’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக் புத்தகத்தில் பதிவு செய்திருந்தார். உடனே இது வைரலானது. காதல் வெற்றிக்கதையாயிற்று, உடனடியாக 1.5 லட்சம் மக்கள் படித்து தங்கள் ஆதரவை தெரிவித்திருந்தனர்.

🌼காதலியின் முகமும், உடலும் சிதைக்கப்பட்டு விட்டது என தெரிந்தும், 27 அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளதை நேருக்கு நேர் பார்த்தும், தன் காதலை கைவிடாத ஜெயப்பிரகாஷ் மனசு எல்லோருக்கும் வருமா?

🌼இதனால்தான் முதல் காதல் தீவிரமானது எனக் கூறுகிறார்களோ? நாமும் இந்த உண்மை காதல் ஜோடியை வாழ்த்துவோம்.

ஆர்வக் கோளாரின் காரணத்தால் பிறந்த குழந்தைகளை செல்போனில் படம் எடுப்போர்கள் அறியவேண்டிய எச்சரிக்கை ரிப்போர்ட் ........

ஆர்வக் கோளாரின் காரணத்தால் பிறந்த குழந்தைகளை செல்போனில் படம் எடுப்போர்கள் அறியவேண்டிய எச்சரிக்கை ரிப்போர்ட் ........

*குழந்தைகளின் பெற்றோர்களும் மற்றும் குழந்தைக்காக ஏங்கி எதிர்பார்க்கும் பெற்றோர்களின் கவனத்திற்கு நிச்சயம் கொண்டு செல்லப்பட வேண்டிய செய்தி இது..!
கேமிரா ப்ளாஷ் ஆன் ஆகி இருப்பதை மறந்து , பிறந்து 3 மாதங்களே ஆன குழந்தையை க்ளோஸ்-அப்பில் போட்டோ எடுத்துள்ளார் அக்குழந்தையின் குடும்ப நண்பர் ஒருவர்,
ப்ளாஷின் பாதிப்பினால் ஒரு கண்ணின் பார்வையை இழந்துள்ளது அக்குழந்தை..!
புகைப்படம் எடுத்தப்பின் குழந்தையின் கண்களில் ஏதோ மாற்றத்தை கண்ட அப் பெற்றோர்கள் அதிர்ந்து போய் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு மருத்துவர்கள், குழந்தையை பரிசோதித்துவிட்டு மிக அருகாமையில் ப்ளாஷ் போடப்பட்டு படம் எடுக்கப்பட்டதால்
(கிட்டத்தட்ட 10 இன்ச் அருகாமையில்) அதானால் குழந்தையின் வலது கண் பார்வையை இழந்துள்ளது என்று கூறியுள்ளனர்..!

மேலும், சக்தி வாய்ந்த ப்ளாஷ் குழந்தைகளின் கண்ணின் கருமணியை பாதிப்புக்குள்ளாக்கி விடும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர்
நம்மில் சிலர்கள் குழந்தை பிறந்தவுடனே அக்குழந்தையை செல்போனிலும் ,சக்திவாய்ந்த காமிரா மூலமும் பலக் கோணங்களிலும் அடிக்கடி படம் எடுத்து வெளிநாட்டில் இருக்கும் குழந்தையின் தந்தைக்கும் ,அன்பர்களுக்கும் .நண்பர்களுக்கும் ஆர்வக்கோளாரின் காரணத்தினால் அனுப்புகின்றனர்.

அப்படி படம் எடுப்பதும்,
குழந்தையின் தாயார் குழந்தைகளின் மிக அருகில் செல் போன்களை வைத்துக்கொண்டு பேசுவதும் அக் குழந்தையின் உடல் நலத்திற்கு கேடுவிளைவிப்பதுடன் ,உளவியல் ரீதியாகவும் பெரும் பாதிப்பை ஏற்ப்படுத்தும் ,என்பதையும் ஏனோ மறந்து விட்டு செயல் படுகின்றனர்.
சில மருத்துவமனைகளில் குழந்தைகள் பராமரிப்பு குறித்தும் குழந்தைகளை எளிதில் பாதிப்பிற்கு உள்ளாக்கும் கதிர்வீச்சுகள் குறித்தும் பெற்றோர்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை மறந்துவிட்டு பணம் ஈட்டுவது ஒன்று மட்டுமே குறிக்கோளாய் இருந்து வருகின்றன .

எது எப்படிஇருப்பின்,பெற்றோர்களும் மற்றோர்களும் குழந்தைகள் விசயத்தில் கண்னும் கருத்துமாக விழிப்புணர்வுடன் செயல்பட்டு வந்தால் உள்ளமும் இல்லமும் சிறப்புடன் விளங்கும்....

வெள்ளை #விஷம் ...

வெள்ளை #விஷம் ...
நேற்று யதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..
ரொம்ப நாளா எனக்கு இருந்த ஒரு சந்தேகத்தை அவரிடம் கேட்டேன்..
" முன்பெல்லாம் ஒரு தெருவிலே நிறைய வீடுகளில் பசு இருக்கும். மேய்ச்சலுக்கு ஆள் வரும். எருமைகளும் நிறைய ... பசும்பாலுடன் எருமை பாலை கலந்து விற்பது சாதாரணமாக நடக்க கூடியது. கூடிப் போனா தண்ணீர் கலப்பார்கள்..
மக்கள் தொகை குறைவாக இருந்த அந்த காலங்களில் கூட காலை, மாலை இரு வேளைகளில் தான் பால் கிடைக்கும். ஏதாவது கல்யாணம் காட்சி என்றால் .. கோனார்களிடம் முன்பே சொல்லி வைக்க வேண்டும். சில வேளைகளில் பாலுக்கான Demand மிக அதிகமாக இருக்கும்.. குழந்தைக்கு பால் கிடைக்கவில்லை என்றால் நிறைய பால் பௌடர்கள் புழக்கத்தில் இருந்தன..
ஆனால் இப்போ நிலைமை வேறு.. எல்லா இடமும் அபார்ட்மெண்ட் வீடுகள் .. மேய்ச்சல் நிலம் எல்லாம் கான்க்ரீட் மயம்..விவசாய குடும்பங்களே மாடு வளர்ப்பதில்லை... என்னதான் வெண்மை புரட்சி , ஜெர்ஸி பசுக்கள், முர்ரா எருமைகள் என்றாலும் இப்போதுள்ள மக்கள் தொகைக்கு 24 X 7 பால் பாக்கெட் கிடைக்கிறது என்றால் logic இடிக்குதே.. கண்ணு போட்டா தானே மாடு பால் தரும். அவ்வளவு கண்ணு இருந்தா மாடுகள் எண்ணிக்கை எங்கேயோ போயிருக்கணுமே ... எப்படிங்க இவ்வளவு பால் கிடைக்குது ???
"" தம்பி.. நீங்க எந்த உலகத்திலே இருக்கீங்க.. எல்லாம் 20:50:30 தான்.."
"அப்படின்னா "
" 20 % தாங்க மாட்டு பால்.. 50% சோயா பால், மிச்சம் தண்ணி தான்.. நம்மூர்ல கூட சோயா பால் factory இருக்குதே .. தெரியாதா??.. இருக்குற மாடுகளை வச்சிட்டு மாட்டு பால் மட்டும் கொடுத்தா ஆளுக்கு ஒரு ஸ்பூன் பால் கூட கிடைக்காது.. நம்ம ஊர்ல இருந்து தினசரி 80000 லிட்டர் பால் சென்னைக்கு வேற அனுப்பனும்.. சொசைட்டி உத்தரவு.. எப்படி முடியும்??"
எந்த தண்ணிய ஊத்துவீங்க ...
ஹி .. ஹி .. ஊருணி, குளம் , கம்மா தண்ணி தான்.. பின்ன Aquafina வாங்கியா ஊத்த முடியும்..
இல்ல.. பால் சொசைட்டில இந்த லாக்டோமீட்டர் எல்லாம் வச்சு பாக்க மாட்டாங்க ??
பாப்பாங்க ..
அப்புறம்
பாப்பாங்க .. அவ்வளவு தான் தம்பி.. லாக்டோமீட்டர்லாம் பழசு.. வேற என்னென்னமோ டெஸ்ட் எல்லாம் பண்ராங்க இப்ப....
சரி.. அப்போ எல்லா பாக்கெட் பாலும் அப்படி தானா ??
அப்படி சொல்ல முடியாது..
அதெல்லாம் ratio கொஞ்சம் வித்தியாசப்படும் . அவ்வளவு தான்.. ஆனா மாட்டு பால் 20% - 30% தான் தம்பி.. அது போக detergent, ஸ்டார்ச், சோடியம் ஹைட்ராக்சைடு, கொஞ்சம் யூரியா.. இன்னும் என்னன்னவோ ..
சின்ன புள்ளைங்க இந்த பாலை குடிச்சு ... யோவ் .. சோயாக்கே நிறைய side effects இருக்குய்யா .. கொஞ்சம் கூடுச்சின்னா ஆஸ்த்மா .. அலர்ஜி .. Erectile dysfunction, ஆண்களுக்கு மார்பக வளர்ச்சி, பெண்களுக்கு ஹார்மோன் imbalance ..
அதுக்கு ...??
அப்புறம் நாங்க சுத்தமான பசும் பால் சாப்பிடணும்னா ??
நீங்க தான் பசு மாடு வளர்க்கணும்..
சரி.. இதுக்கே இப்படி சொல்றீங்களே.. 
வெள்ளி செவ்வாய்க்கு கடை வாசல்கள்ல உடைக்கிற தேங்காய்களை அள்ளி ஹோட்டல்களுக்கு தர்ற கான்ட்ராக்ட் ., 
பெரிய ஹோட்டல்கள்ல ஓரு தடவை பூரி சுட்ட எண்ணெய் வாங்கி ரோட்டு கடைகளுக்கு சப்ளை பண்ற கான்ட்ராக்ட், கோழி கடைகள்ல மிச்சமாகிற தலை, குடல் வாங்கி சால்னா கடைகளுக்கு கொடுக்குற கான்ட்ராக்ட் , கிராமங்கள்ல நோய்வாய் பட்ட ஆடுகளை சல்லிசா வாங்கி கறிகடைகளுக்கு சப்ளை பண்ற கான்ட்ராக்ட் ... இப்படி நிறைய இருக்கு தம்பி.. முன்னாடில்லாம் ஊர்ல ஒருத்தன் ரெண்டு பேருக்கு கேன்சர் வரும்.. இப்போ ஒவ்வொரு பெரிய ஆசுபத்திரிலேயும் போய் பாருங்க ..
நன்றி பலரும் அறிய செய்யுங்கள்

2.0 படமும் - சிட்டுக்குருவியும்....

2.0 படமும் - சிட்டுக்குருவியும்.

உண்மையில் சிட்டுக்குருவி லேஹ்யத்தில் இருப்பது என்ன ?

செல்போன் கதிர் வீச்சால் பறவைகள் இறந்து போகின்றன என்று 2.0 என்ற சங்கரின் படத்தில்  பக்ஷி என்ற கதாபாத்திரத்தில்  அக்ஷய் குமார் Tele communications  Minister ரிடம் frequency குறைக்க சொல்லும்போது அவர் சிட்டுக்குருவியை நெய்யில் வறுத்தும் ,சுட்டு சாப்பிட்ட விஷயத்தை சொல்கிறார்..நமக்கு சிட்டுக்குருவி என்றாலே மனதில் தோன்றுவது என்ன?

சிட்டுக்குருவி லேஹ்யம்

நவீன அறிவியல் வளர்ச்சியில் சிட்டுகுருவி காணாமல் போனதா?..அன்றைய பாரம்பரிய அறிவியல் சாஸ்திரத்தில் சிட்டுகுருவி லேஹ்யம் செய்து சிட்டுகுருவியை காணாமல் செய்து விட்டோமோ என்று பட்டிமன்றமே வைக்கலாம்.

போக உணர்வை அதிகரிக்க –போலி மருத்துவர்கள் உபயோகப்படுத்தியதே இந்த மாய வார்த்தை –சிட்டு குருவி லேகியம்..

ஜீவகாருண்யம் பேணுகிற சித்தர்களா –சிட்டு குருவிகளை அழித்து லேஹியம் செய்திருப்பார்கள் என்று யோசித்து கொண்டு இருக்கும் போது தான்-அண்ணன் மருத்துவர் ஸ்ரீராம் MD (S) அவர்கள் தனது சித்த மருத்துவம் டெலிக்ராம் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது உண்மை என்று உணர முடிந்தது ..

நீர்முள்ளி விதையின் குழு உரிச்சொல் (பரிபாஷை ) சிட்டுக்குருவி .

நீர்முள்ளி விதை சிட்டுக்குருவியின் விருப்பமான உணவுகளில் ஒன்று ..

ஆக சிட்டுக்குருவி என்றால் நீர்முள்ளி விதை எனபது உண்மை ..

விந்துவை கட்டும் –போக உணர்வை அதிகபடுத்தும் சிட்டுக்குருவி லேஹியதில் –சிட்டுக்குருவியே இல்லை எனபது தான் உண்மை என உணர முடிகிறது ..

சிட்டு குருவி லேஹ்யம் எப்படி செய்யலாம் வீட்டிலே ?

ஜாதிக்காய் ,ஜாதிபத்திரி ,தக்கோலம் ,அதிமதுரம் ,மாயக்காய், அதிவிடயம் ,குரோசனி,திரிபலை ,தாளிசபத்திரி ,தகர விதை ,பூனைகாலி விதை ,திரிகடு ,செண்பக மொட்டு ,கொட்டம்,வால்மிளகு ,கஞ்சா (இதற்க்கு பதில் கசகசாவிதை ),முந்திரி பழம், நாட்டு சர்க்கரை ,கற்கண்டு ,அபின் (இதுவும் இப்போது கிடைக்காது –சேர்க்க முடியாது ),தாற விதை –இவை எல்லாம் கிட்டதட்ட 15 கிராம் அளவுக்கு –நீர்முள்ளி விதை (சிட்டு குருவி ) தேவையான் அளவு பால் ,நெய் சேர்ந்து செய்யலாம் சிட்டு குருவி லேகியம்.

பரிபாஷை தெரியாதவன் மருத்துவன் ஆக முடியாது என்பற்கு உதாரணம் இந்த சிட்டு குருவி லேஹ்யம் ..

போலி மருத்துவரிடம் –ஆண்மை குறைவுக்கு மருந்து எடுத்து ஏமாற வேண்டாம் ..BAMS.,BSMS.,BUMS.,மருத்துவ படிப்பு படித்த –காசுக்கு ஆசைப்படாத ஏமாற்றாத –சித்த –ஆயுர்வேத -ஆயுஷ் உண்மையான பாரம்பரிய  மருத்துவர்களிடம்  சிகிச்சை மேற்கொண்டு நிவாரணம் பெறுங்கள் .

தரமான ஆயுஷ் சிகிச்சைக்கு..
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவனை
கடையநல்லூர் 90 4222 5333
சென்னை 90 4333 6444
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888
தேனி 90 4727 7577

முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு தொகை 2 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்வு - முதலமைச்சர் உத்தரவு

#Breaking

முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு தொகை 2 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்வு - முதலமைச்சர் உத்தரவு

ஏழை மக்கள் உயர்தர சிகிச்சை பெற உதவும் படி முதலமைச்சர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதுவரை தனியார் மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் 2 லட்சம் வரை ஏழை மக்கள் இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் சிகிச்சை பெறலாம். தற்போது இதை முதலமைச்சர் 5 லட்சமாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளார். எனவே தற்போது ஏழை மக்கள் தனியார் மருத்துவமனைகளில் வருடத்திற்கு 5 லட்சம் வரை கட்டணமில்லாமல் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

மருத்துவ காப்பீடு என்றால் என்ன மெடிக்கல் இன்ஸ்சுரன்ஸ் ?

மருத்துவ காப்பீடு என்பது பொதுவாக வருடத்திற்கு 5 - 10 ஆயிரம் ரூபாய்  வரை நாம் காப்பீடு நிறுவனங்களுக்கு செலுத்தினால் 5 (கூடுதலா கட்டிணால் கூடுதல் தொகை) லட்சம் வரை நாம் எந்த மருத்துவமனைகளிலும் கட்டணமில்லாமல் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். 5 லட்சத்தை காப்பீட்டு நிறுவனம் நமக்கு பதிலாக மருததுவமனைக்கு கட்டிவிடும்.

10 ஆயிரத்திற்கு 5 லட்சம் எப்படி காப்பீடு நிறுவனங்கள் கொடுப்பார்கள் இது எப்படி சாத்தியம் என சிலருக்கு கேள்வி எழலாம்.

1000 பேர் 10 ஆயிரம் கட்டியுள்ளார்கள் என வைத்துக் கொள்வோம். இதில் 1000 பேருக்கும் அந்த வருடம் நோய் ஏற்படாது. ஒரு சிலருக்கு தான் நொய் ஏற்படும். ஒரு சிலர் தான் சிகிச்சை பெற்றிருப்பார்கள். இதில் 5 லட்சம் வரை சிகிச்சை பெற்றவர்கள் மிகவும் குறைவாக தான் இருப்பார்கள். இதன் மூலம் காப்பீட்டு நிறுவனங்கள் லாபம் அடையும்.

மருத்துவ காப்பீட்டு திட்டம் என்பது பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டது. உதாரணமாக காப்பீடு எடுக்கும் முன்னர் ஏதும் நோய் இருந்தால் முதல் 5 வருடத்திற்கு அதற்கு இலவசமாக சிகிச்சை எடுக்க இயலாது. மேலும் சில நோய்கள் இதில் கவர் ஆகாது.

20 வருடங்களுக்கு முன்பு இவர் பொன்.மாணிகவேல் சேலம் SP யாக இருந்தார்.

20 வருடங்களுக்கு முன்பு இவர் பொன்.மாணிகவேல் சேலம் SP யாக இருந்தார்.

எங்கள் தம்மம்பட்டில் விநாயகர் சதுர்த்தி விழாவில் வேற்று மதத்தின் அதிகமாக வசிக்கும் பகுதில் 2 ஹிந்து குடும்பங்கள் மட்டும் வசிக்கும் இருவர் விநாயகர் வைத்து வழிபட அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஹிந்து முன்னணி விநாயகர் சிலை வைத்து கும்பிடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது.
ஆயிரம் போலீஸ் இறக்கிவிட்டு ஊர் முழுவதும் அமைதி.
Rdo peace மீட்டிங் ஏற்பாடு செய்து இருந்தார். அங்கு விநாயகரை வைத்து வழி படு செய்ய அனுமதிக்க முடியாது என்று சொல்லிவிட்டார்.
வந்து இறக்கினார் பொன்.மாணிகவேல் முறுக்கு மீசை ரெண்டு எலுமிச்சை காய் சொருக்கினாலும் அப்படியே நிற்கும்,சிவந்த கண்கள்,கம்பிரமான தோற்றம். எங்க ஊர் எல்லை காவல் தெய்வம் எட்டடியான் சாமி மாதிரி என்னக்கு தெரித்தார்
என்ன men.. இங்கு பிரச்சனை?
சார்,இங்க எல்லோரும் கிறித்துவர்கள்... இவனுக்கு 2 பேர் மட்டும் ஹிந்துக்கள் இவங்க ரெண்டு பேர் காக விநாயகர் சிலை வைக்க அனுமதிக்க மாட்டோம் என்று இன்ஸ்பெக்டர் முதல் Rdo வரை கோரச பாடி னார்கள்....
1000 கிறித்தவகுடும்பத்துக்கு சட்ட படி பாதுகாப்பு கொடுக்கனும் சார் தாசில்தார் சொன்னார்..
ரெண்டு பேர் இருதா சாமி கும்பிட சட்டப்படி அனுமதிக்க கூடாதுனு ஏதாவது சட்டம் இருக்கா?
போன்.மானிகவேல் கேட்டார்.
முடிச்சா நடத்தி பார் என்று எதிர் சவால் விட்டனர்.
அந்த ரெண்டு குடுபத்தினர் விநாயகர் வைத்து வழிபட நான் பாதுகாப்பு கொடுகிர்றேன்.
எவனாவது எதிர்த்து வந்தால் சுட்டு புடுவேன்.சுட்டு என்று கையில் துப்பாக்கி எடுத்தார்..
விநாயகர் சதுர்த்தி இன்று வரை சிறப்பாக நடைபெற்றது.
நன்றிகளுடன் தம்மம்பட்டி பொதுமக்கள் சார்பாக வாழ்த்துக்கள்
Thanks pon. Maanikavel. IPs

எழுதிங்கள்சீர்....

எழுதிங்கள்சீர்
கொங்கு வெள்ளாளர் இனத்தில், பெண்ணிற்குப் பெண்பிள்ளை பிறந்து, அந்த குழந்தை பெரியவளாகி ருதுவாவதற்கு முன் அப்பெண்ணிற்கு அவள் தகப்பன்-தாய் வீட்டீல் செய்யும் சீர்தான் எழுதிங்கள்சீர். கொங்கு வெள்ளாளர் இனத்தில் இது ஒரு திருமண நிகழ்ச்சி போல் நடைபெரும். திருமணம் போல அனைத்து சொந்தகாரர்களையும் நேரில் சென்று அழைப்பர். குறித்த நல்ல நாளில் மாலை நல்ல நேரத்தில் உறவினர்சூழ அருமைக்காரர் முகூர்த்தகால் நடுவார். பின்வரும் சடங்குகள் எழுதிங்கள்சீர் பாட்டாக…

    கற்பு குலையாத காராள வம்சம்
    வேற்பு குலையாத வேளாளர் வம்சம்
    காப்பு குலையாத கவுண்டர்கள் வம்சம்
    காராள குலதிலகர் கவுண்டர்கள் வம்சம்
    கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் வம்சம்
    ஆல்போல் தழைத்து அருகுபோல் வேறூன்றி
    பட்டி மரவு
    எலந்த மரம் குடை மரவு
    நுகம்
    கொலுவு
    குழவி லிங்கம்
    உரல் லிங்கம்
    அம்மி
    நிறைக்குடம்
    புடைச்சட்டி
    வாணைச்சட்டி
    பிறந்தான் பிறந்த மணைக்கு எழுதிங்கள்சீர் செய்ய பிறந்தாளை ஊரிலிருந்து அழைத்துவர
    புது துணி எடுத்து விரத விருந்து வைத்து
    வெள்ளைமாத்தில் எழுகுடம் வைக்க எழுதிங்கள்காரிகள் அருமைக்காரருடன் ஏழு கிணற்றிலிருந்து சீர்தண்ணீர் கொண்டு வந்து
    வெள்ளைமாத்தில் வைத்து, கங்கணம் கட்டி, மூன்று முறை அரிசி போட்டு  கணபதி பூசை செய்து
    உரல், நுகம் அம்மி குழவி புடைச்சட்டி வாணைச்சட்டி பூசை செய்து
    பாலக்கால் வெட்டி வந்து முகூர்த்தகால் நட்டு
    வாசல் தொளித்து வண்ண கோலமிட்டு செம்மண் சுண்ணாம்பினால் சீராக கரைகட்டி
    எழுதிங்கள்காரிக்கு வெற்றிலைப் பாக்கு வைத்து
    ஐந்துபடி திணை மாவில் நீர்விட்டு நன்றாகப் பிசைந்து, இருகூராக்கி, இடையில் ஆச்சுவெல்லமிட்டு மாவால் நன்கு மூடி, ஆரச இலையிலிட்டு,
    மூன்று படி தண்ணீர் விடு, குறுக்கே குச்சி வைத்து, கோதை மாவை மூழ்காமல் புதுப் புடைச்சட்டில் வைத்து
    பிறந்தான் புடைச்சட்டியை எடுத்து அடுப்பில் வைத்து, கோதைமாவை வேகவிட
    எழுதிங்கள்காரிக்கு ஆக்கையிட்டு தண்ணீர் ஊற்றி, அரூமை பெரியவர் அருகுமணம் எடுக்க
    எழுதிங்கள்காரியை மரஉரல் முன் நிறுத்தி, எலந்தமுள் குடையை உடன்பிறந்தான் தான் பிடிக்க
    நல்ல நாவிதன் கொழுமுனையை காய்ச்சி, எழுதிங்கள்காரி முன்வைத்து சுட சுட மோர்விட
    எழுதிங்கள்காரி உரலை உதைத்து தள்ளி வீட்டினுள் சென்று அமர
    நங்கை கொழுந்தியாள் குழவிகல் எடுத்து வந்து எழுதிங்கள்காரியின் மடியிலிட
    எழுதிங்கள்காரிக்கு ஆக்கையிட்டு தண்ணீர் ஊற்றி, பட்டிமாவு பந்தலில் நுகத்தருகே ஒருசிந்திவிட (விரத விருந்து வைத்தல்)
    வீட்டு வாசல் நிலவுமேல் பேழை கூடையில் கோதைமாவை வைக்க, கோடாரியில் துணி சுற்றி அறுமை பெரியவருடன் சீர்காரி கோதையை பிளக்க, சீர் வெல்லம் குழையாமல் முழுதாக இருக்க நல்லதென்பார்.
    பின், சீர்காரி படி சாதம் பானையில் சமைத்து உறவினற்கு பரிமாறி, கோதை மாவுடன் ஒருசிந்திவிட்டு (விரத விருந்து வைத்தல்) கணபதி பூசை செய்து பெரியவரை வணங்கியதுடன் எழுதிங்கள் சீர் இனிதே முடிந்தது.

எழுதிங்கள் சீருக்காகும் செலவுகள் அனைத்தும் தாய் வீட்டாரே செய்வர். சீர்காரியின் சகோதரன் பணமுடுப்பு, நகை மற்றும் சீர்குடையில் அரிசி, வெல்லம், தேங்காய், பழம், வெற்றலை, பாக்கு, பட்டுபுடவை வைத்து பிறந்தான் ஏடுத்துவர ஊர்பிள்ளையரை வணங்கி சீருடன் கணவன் வீடு செல்வாள்.
கொங்குவேள்ளாளர்களில் எழுதிங்கம் செய்துகொண்ட பெண்கள்தான் சுபகாரிங்களில் முன் நிற்பார்கள். அப்பெண் அருமைகாரருடன் நல்லகாரியாங்களில் சீர்-சடங்கு செய்யும் தகுதியை பெறுகிறாள். இதனால் அவள் முழுச்சுமங்கலியாகிறாள்.

தாய்மையும் ஊசியில் நடக்கப்போகுது........ காமமும் காலாவதி ஆகப்போகிறது.

பசுவை காளையோடு புணரவிடுவதில்லை.....

ஆட்டை கிடாவோடு புணரவிடுவதில்லை. தாவரங்களை மகரந்தசேர்க்கை நடைபெறவிடுவதில்லை......

கோழியை சேவலோடு சேரவிடுவதில்லை......

அத்தனை ஜீவராசிகளின்  இன்பத்தை கெடுத்து ஊசி மூலமே இனப்பெருக்கம் செய்ய எத்தனித்த மானுடனே......

ஒருநாள் நீயும் காம இன்பம் இன்னது என்பதை அறியாமல் போகும் காலம் வரும்.........

ஐந்தறிவு ஜீவனின் சாபம் ஆறறிவை தாக்காதா என்ன.......

 தாய்மையும் ஊசியில் நடக்கப்போகுது........
காமமும் காலாவதி ஆகப்போகிறது.

அப்போது உணர்வாய் இயற்கைக்கு முரணாய் நடந்தால் அது  உன்னை பிணமாய் மாற்றும் என்று....

#சுசீலாசாமியப்பன்.
#கரூர்..

உணர்சிபட வைத்த வரிகள் Pls read all boys an girls ...

உணர்சிபட வைத்த வரிகள்
       Pls read all boys an girls

பாவப்பட்ட
பெண்ணே!!

கழிப்பறையில்
கவனம்...!

குளியறையில்
கவனம்...!

படுக்கையறையில்
கவனம்...!

பள்ளியறையில்
கவனம்...!

அலுவலகறையில்
கவனம்...!

கோவில் கருவறையில்
கவனம்...!

பேருந்து பயணத்தில்
கவனம்...!

இரயில் பயணத்தில்
கவனம்...!

பாலூட்டும் அறையில்
கவனம்...!

மருத்துவறையிலும்
கவனம்...!

ஆடை மாற்றும் அறையிலும்
கவனம்...!

நீ
பெண் என்று தெரிந்து கொண்டால்
தாயின் கருவறையிலும்
கவனமாக இரு,

பெண்ணே நீ
கடந்து போகும்
பாதையை
கவனிப்பாயா...?

சில
காம வெறிநாய்களின்
கண்களை
கண்காணித்து கொண்டு
இருப்பாயா...?

பெண்ணின் கவனத்திற்க்கான பதிவு இல்லை...!
ஆணின் அவமானத்திற்க்கான பதிவு...!

அப்பான்னு நினைச்சேன்
அசிங்கமாய் தொட்டான்....!

சகோதரன்னு பழகினேன்
சங்கட படுத்தினான்......

மாமான்னு பேசினேன்
மட்டமாய் நடந்தான்......!

உறவுகள் அனைத்தும்
உறவாடவே அழைக்கின்றன.....!

பாதுகாப்பை தேடி
பள்ளிக்கு சென்றேன்.....!

ஆசிரியனும் அரவணைத்து
மறுக்காதே மதிப்பெண் குறையும் என்றான்.....!

நட்பு கரமொன்று நண்பனாய்
தலைகோதி தூங்கென்றான்.....!
மரத்த மனம் மருண்டு சுருண்டு
தூங்கையில் கைபேசியில் படமெடுத்தான்
அவனும் ஆண்தானே .....!

கதறி அழுது கடவுளிடம் சென்றேன்
ஆறுதலாய் தொட்டு தடவி
ஆண்டவன் துணையென்றான் பூசாரியான்..!

அலறி ஓடுகிறேன்..எங்கே போவேன்?

சமத்துவம் வந்ததென சத்தமாய் கூறுகின்றனர்....!
பெண்னை பெண்ணாக பார்க்காமல்
மனிதராய் பார்ப்பது எக்காலம்?

பாவிகளின் பாலியல் வன்முறை என்று ஓயுமோ??

#பாலியல் வன்முறைக்கு எதிராக எல்லாரும் இதை ஷேர் பண்ணுங்கள் நட்புகளே.....!

உறவு முறைகள்* *பற்றி* ......

.  👉 *உறவு முறைகள்* *பற்றி* 👈

*மிகவும் சிந்திக்கவேண்டிய*
*one of the BEST பதிவு*
~~~~~~~~~~~~~~~~~~~

*அண்ணன், தம்பி, அக்கா,* *தங்கை, சின்ன அண்ணன்,* *பெரிய அண்ணன், சின்ன அக்கா,* *பெரிய அக்கா,*
*சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, மச்சான்,* *மச்சினி, அண்ணி, கொழுந்தனார், நாத்தனார்,* *தாய்மாமன், சித்தப்பா பையன், சித்தப்பா பொண்ணு,*
*பெரியப்பா பையன்,*
*பெரியப்பா பொண்ணு,*
*அத்தை பையன்,*
*அத்தை பொண்ணு,* *மாமன்* *பொண்ணு,*
*மாமன் பையன்,*

இது போன்ற வார்த்தைகள் எல்லாம் *2050* மேல் யாருடைய காதிலும் விழாது,

யாரும் கூப்பிடவும் மாட்டார்கள்,

அகராதியில் இருந்து கூட கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவிடும்.

👉 *காரணம், . . .*

 *ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு* என்று ஒரே ஒரு குழந்தை மட்டும் போதும் என்று முடிவெடுக்க ஆரம்பித்ததுதான்!

அப்படி இருக்கும் போது இந்த உறவுகள் எல்லாம் எப்படி வரும்?

பெண்கள் வயதுக்கு வந்ததும் சீர்வரிசை செய்யவோ, பந்தல் போடவோ, முதல் புடவை எடுத்துத்தரவோ எந்த தாய்மாமனும் இருக்கப்போவது இல்லை!

திருமணத்தின் போது அரசாணைக்கால் நட
எந்த அண்ணனும் இருக்கப்போவதில்லை,

மாப்பிள்ளைக்கு மோதிரம் போட எந்த தம்பியும் இருக்கப்போவதில்லை,

குழந்தைக்கு மொட்டை போட யார் மடியில் உட்கார வைப்பார்கள்?

கட்டிக்கொடுத்த பெண்ணுக்கு எதாவது பிரச்சனை என்றால் அண்ணனும், தம்பியும் பறந்து செல்வார்கள்.

👉 *இனி யார் போவார்?*

ஒவ்வொரு பெண்ணும், சொந்தபந்தம் ஏதுமின்றி
ஆறுதலுக்கு ஆள் இன்றி தவிக்க போகிறார்கள்.

ஒவ்வொரு ஆணும்
தன் கஷ்டநஷ்டங்களில் பங்குகொள்ள அண்ணன், தம்பி யாருமின்றி அவதிப்பட போகிறார்கள்.

அப்பா, அம்மாவை தவிர எந்த உறவுகளும் இருக்கப்போவதில்லை,

அந்த ஒரு குழந்தையும்
வெளியூருக்கோ,
இல்லை தனிக்குடித்தனமோ சென்றுவிட்டால், . . .
ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்று வளர்த்தவர்கள் எல்லாம் வயதான காலத்தில், ஏனென்று கேட்க நாதியற்று முதியோர் இல்லத்திலோ, இல்லை அந்த ஒரு குழந்தைக்காக கட்டிய வசதியான வீட்டிலோ அனாதையாக கிடந்து சாவார்கள்!

உறவுகளின் உன்னத மதிப்பை உணராமல் பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு
ஒரு குழந்தைக்கு மேல் வேண்டாம் என சோம்பேறித்தனப்பட்டு
எந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் அத்தனைபேருக்கும்
இதே நிலைதான் !

உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பிடலில் சேர்க்கப்பட்டால் ஓடோடி வந்து பார்க்க உறவுகள் வேண்டாமா?!

சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம்
எனக்கு, உனக்கு என்று சண்டைபோடும் அதே குழந்தைகள் தான், . . .

வயதான காலத்தில் அப்பா, அம்மாவுக்கு எதாவது ஒன்று என்றால் நான் நீ என்று ஓடிவருவார்கள்!

கணவன் குடும்பம், குழந்தை என்று உயிரைவிட்ட பெண்கள் கூட பெற்றோருக்கு
ஒன்று என்றால் அத்தனையும் தூக்கியெறிந்துவிட்டு முதலில் வந்து நிற்பார்கள்!

ஒரே ஒரு முறை உங்கள் கடைசி காலத்தை நினைத்துபாருங்கள்!

பணமில்லாத ஒருவனை அனாதை என்று யாரும் சொல்வதில்லை!

*ஆனால், உறவுகள் இல்லாத ஒருவன் எத்தனை கோடி வைத்திருந்தாலும் அனாதை தான் என்பதை மறந்துவிடக்கூடது!*

கார், பங்களா வசதி வாய்ப்புகளுடன்
ஒண்ணே ஒண்ணு , கண்ணே கண்ணு என்ற பெயரில் உறவுகளற்ற ஒரு அனாதையை வளர்ப்பதற்கும்,

*வயதான காலத்தில் நாதியற்று சாவதற்குமா இவ்வளவு பாடுபட்டு, . . .*

               😳👇😟

*ஓடி ஓடி சம்பாதிக்கிறீர்கள்?*உறவுகளை போற்றுங்கள்! உறவுகளை சம்பாதியுங்கள்!!!
விட்டுக்குடுப்போர் கெட்டுப்போவதில்லை!!

.    👉 *Plz share to all* 👈

😳😳😳😟👍😟😳😳😳
🌷🙏🏻🌷🙏🏻🌷🙏🏻🌷🙏🏻🌷🙏🏻

அவர் பாடல்களுக்கு கிடைக்கும் ராயல்டி தொகையை அவர் பயன்படுத்தப் போவது இல்லை....

இசைக்கலைஞர் சங்கத்திற்காக ,
தனது பாடல்களின் காப்புரிமையை பெற்ற இசைஞானி #இளையராஜா ,
அதை முறைப்படி 

தன்
காப்புரிமையின் ராயல்டி தொகையை அவர்களே பெற்றுக்கொள்ள பத்திரம் எழுதி கொடுத்து விட்டார்..

அவர் பாடல்களுக்கு கிடைக்கும் ராயல்டி தொகையை அவர் பயன்படுத்தப் போவது இல்லை..

அவர் சட்ட போராட்டம் நடத்தியதே, இந்த கம்ப்யூட்டர் இசைகளால் வேலை இழந்த நலிந்த கலைஞர்களுக்கான பிற்கால வருமானமாக இருக்க வேண்டும் என்பதே.. அதனை முறைப்படி திரை இசைக்கலைஞர் சங்கத்தின் தற்போதைய தலைவர் தினாவிடம் ஒப்படைத்தார்..
.
தனக்காக வாசித்தவர்களின் வாழ்வாதாரத்திற்காக தன்னால் ஆன நிரந்தர உதவியை செய்த இவரைத்தான் அவதூறும் அசிங்கமும் பேசி வருகிறது இணையத்தின் குப்பைகள்..

நியாயமாக பாராட்ட வேண்டிய விஷயம் இது..

கழுதைகளுக்கு கற்பூர வாசம் தெரியவேண்டியது இல்லை..

காரணம் இன்றி காரியம் இல்லை..

#என்றென்றும்ராஜா..

பழனி கிளையில் வாகனம் பராமரிப்பில்லாமல் இருப்பதால்தான் தானாக டயர் கழன்று ஓடும் நிலையில் உள்ளது...





பழனி கிளையில் வாகனம் பராமரிப்பில்லாமல் இருப்பதால்தான் தானாக டயர் கழன்று ஓடும் நிலையில் உள்ளது. இதற்கு காரணம் வாகன பராமரிப்பை கிளை மேலாளர் கண்டுகொள்வதே இல்லை, வாகன இயக்கத்திற்கு மட்டும்தான் முன்னுரிமை கொடுக்கிறார். ஓட்டுனர்களையும் நடத்துனர் களையும் பணிச்சுமையை அதிகப்படுத்தி வாகனம் இயக்குவது மட்டும்தான் அவரது குறிக்கோளாக உள்ளது. பழனி கிளையில் வாகனம் பராமரிப்பில்லாமல் செல்வதைப்பற்றி கிளை மேலாளருக்கு சிறிதுகூட கவலை இல்லை மேலும் பராமரிப்பில்லாமல் வாகனத்தை எடுத்துச் செல்லும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மற்றும் வாகனத்தில் பயணம் செய்யும் பயணிகள் மீதும் விபத்து ஏற்பட்டு பாதிப்புக்கு ஆவார்கள் என்று சிறிதளவு கூட அச்சமில்லாமல் இருக்கிறார்கள். ஆகையால் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கிளை மேலாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

கோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....



கோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....

நீங்கள் உணவுப்பிரியரா ?

சுவையான உணவிற்கு முக்கியத்துவம் கொடுப்பவரா கோவை ம‌ற்றும் அதை சுற்றியுள்ள‌ இட‌ங்க‌ளில் சுவையான தரமான உணவை சாப்பிட விருப்புவரா?

 பல இடங்களில் பலர் சாப்பிட்டதை வைத்து தொகுக்கப்பட்ட  உணவுக்கடைக‌ளின் தொகுப்பைக் கொடுத்துள்ளேன்.

ஸ்ரீ கிருஷ்ணா ஹோட்டல், வடவள்ளி, கோவை. Special : மட்டன் குழம்பு, தந்தூரி சிக்கன்

கௌரி மெஸ், ராம் நகர், கோவை. Special : சிக்கன் கிரேவி, பூ மீன்

ஸ்ரீ சரஸ்வதி டீ ஸ்டால், ராமசேரி, கோயம்பத்தூரில் இருந்து பாலக்காடு ரோட்டில். Special : இட்லி

கோவை to சேலம் சின்னியம்பாளையம் bridge அருகில்: Garden restaurant, non-veg & veg பிரியர்களுக்கு, honeymoon spl ice cream top class..

அவ்வா இட்லி கடை, பூ மார்க்கெட், செளடேஸ்வரி கோவில் பின்புறம், கோவை. Special : இட்லி

வளர்மதி மெஸ், ரேஸ்கோர்ஸ், கோவை. Special : பிச்சிப்போட்ட கோழி, நெத்திலி மீன் ஃப்ரை

ஸ்ரீகெளரி மெஸ், ராம் நகர், காந்திபுரம், கோவை. Special : கட்லா மீனும், சிக்கன் கிரேவியும்

கண்ணன்ணன் விருந்து, RS புரம் TV சாமி ரோடு புடிச்சு மேட்டுப்பாளையம் ரோடு நோக்கி. Special : குடல் கூட்டு, மட்டன் சாப்ஸ், நாட்டுக் கோழி வறுவல்..

டோபாஸ் ஐயர் மெஸ், பேரூர், கோவை. Special : ஊத்தாப்பம், ஆனியன் ரோஸ்ட், மசால் ரோஸ்ட்

சத்யா மெஸ், புற்றுக்கண் மாரியம்மன் கோயில் அருகே, பாப்பநாயக்கன் பாளையம், கோவை. Special : கம்பு தோசை, சோள தோசை, ராகி தோசை, கோதுமை தோசை

வைரவிழா பள்ளி அருகில் உள்ள பாய் கடை. Special : காரப்பொறி

ஜெர்மன் ஹோட்டல், காரணம்பேட்டை, சூலூர். Special : நாட்டுக் கோழி வறுவல், கிள்ளி போடப்பட்ட வரமிளகாயுடன் செம காரத்துடன் பட்டர் நானு

மதுரை அம்மா மெஸ், பவர் ஹவுஸ் ரோடு, கோவை. Special : சாப்பாடு

படையப்பா மெஸ், குமரன் சாலை, திருப்பூர். Special : முயல் கறி ஸ்பெசல்

இந்தியன் பஞ்சாபி தாபா, சித்தோடு, ஈரோடு. Special : பள்ளிபாளையம் சிக்கன், நாட்டுக்கோழி, பாயாசத்தில் சேமியாவும், முந்திரியும்

தாஸ் லாட்ஜ் கேண்டீன், நஞ்சப்பா ரோடு, உப்பிலிபாளையம், கோவை. Special : பரோட்டா

மாரிமுத்து போண்டா கடை, முருகாலயா தியேட்டர் நேர் எதிரே, பொள்ளாச்சி. Special : போண்டா பஜ்ஜி

அபூர்வ விலாஸ், கணபதி, கோவை. Special : தேங்காய் பால், பலகாரம் ஸ்பெசல்

ரமேஷ் மெஸ், அழகேசன் சாலை, சாய்பாபா காலணி, கோவை. Special : ஆப்பம், தேங்காய் சட்னி

ஓம்சக்தி ஹோட்டல், இடையர் வீதி அருகே உள்ள குரும்பூர் சந்து, மநக வீதி, கோவை. Special : சிக்கன் 65

திருமூர்த்தி டீ & டிபன் ஸ்டால், அவிநாசி புது பேருந்து நிலையத்தில் இருந்து கோவை செல்லும் வழியில் இடப்பக்கம் நடக்கும் தூரத்தில் உள்ளது. Special : தோசை, ஆப்பம்

பாரதியார் உணவகம், வரதராஜா மில் அருகில், பீளமேடு. Special : திண்டுக்கல் ரோஸ்ட், மற்றும் கோதுமை தோசை
 பிஸ்கட்

சென்னையிலிருந்து பெங்களூருக்கோ, கோவைக்கோ, இல்லை எங்கயோ ஆம்பூர் வழியாக ரயிலில் பயணித்தால், ஆம்பூர் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக இந்த நம்பர்களில் ஸ்டார் பிரியாணிக்கு 04174 249393, CELL : 9894247373 போன் செய்து பிரியாணி ஆர்டர் செய்து உங்கள் கோச் நம்பரையும் சொல்லி விட்டால் ஆம்பூர் ரயில் நிலையத்தில் உங்கள் கோச்சில் வந்து டெலிவரி செய்கிறார்கள்.

காவேரி ஜூஸ் கடை, 5 கார்னர், கோவை. Special : நன்னாரி சர்பத், ரோஸ் மில்க்

பிரியா, கோவை சித்தாப்புதூர் அய்யப்பன் கோவில். Special : அடப்பிரதமன்

சிவ விலாஸ் ஹோட்டல், கோவை, கணபதி. Special : தேங்காய் பால்

மயூரா பேக்கரி, கருமத்தம்பட்டி மெயின் ஜங்ஷன். Special : காரட் கேக்

பழனியம்மா பாட்டி டீக்கடை, சரவணம்பட்டி, கோவை. Special : இஞ்சி டீ

கணபதி மெஸ், வடவள்ளி பழமுதிர் நிலையம் அருகே, கோவை. Special : ஈவ்னிங் வெஜிடேரியன் டிபன்.

பர்மா பாய் கடை, கோவை. Special : பரோட்டா பெப்பர் லெக்

எஸ்.ஆர்.கே.பி மெஸ், ஹோப் காலேஜ், கோவை. Special : ஃபுல் மீல்ஸ்

ஸ்ரீசாய் கபே, கோவை அண்ணா சிலை. Special : ஃபுல் மீல்ஸ்

Barbeque Nation, கோவை டவுன் ஹால். Special :  Unlimited Barbeque

மீசை பாணி பூரி, சுக்ரவார்பேட்டை. Special : முட்டை பூரி

கொங்கு மெஸ், ஹோப் காலேஜ், கோவை. Special : ஃபுல் மீல்ஸ்

பாபு ஹோட்டல், கோவை சுந்தராபுரம் பஸ்ஸ்டாப். Special : ஆப்பம், சாம்பார் பொடி

SMS ஹோட்டல், கோவை, Special : நல்லி எலும்பு சூப், மட்டன் கீமா, தோசை

கீர்த்தி மெஸ், தெற்கு ஆர்.டி.ஓ ஆபீஸ், கோவை. Special : ஃபுல் மீல்ஸ்

அன்ன பூரணி மெஸ், காந்திபுரம் வீதி 1, கோவை. Special : அனைத்து வகை சிற்றுண்டி

ஆஜ்மர் பிரியாணி, மணி கூண்டு, கோவை. Special : பிரியாணி, குஸ்கா

MR ஹோட்டல், கோவை நேரு ஸ்டேடியம். Special : நாட்டுக் கோழி லெக் பீஸ் ப்ரை

CFC HOT FRIED CHICKEN, கோவை ராம்நகர் சிட்டி டவர் ஹோட்டலில். Special : வறுத்த கோழி

நல்உணவு, கோவை ஆர்எஸ் புரம் அன்னபூர்ணா அருகில். Special : சிறு தானியங்கள் உணவு

பிரியாணி மண்டி, ராம்நகர் காளிங்கராயர் தெரு. Special : பிரியாணி

ஹாஜி முத்து ராவுத்தர் பிரியாணி, உக்கடம், கோவை. Special : பிரியாணி, அரி பத்திரி

லக்ஷ்மி சங்கர் மெஸ், ஜி சி டி, கோவை. Special : ஃபுல் மீல்ஸ், எண்ணையில்லா சாப்பாடு

ஆச்சி மெஸ், லாரி பேட்டை, கோவை. Special : 12 வகை வெரைட்டி  சாத வகைகள்

சஹாய் க்ரில்ஸ், கோவை, பீளமேடு. Special : செட்டிநாடு க்ரில், பெப்பர் க்ரில்

ஸ்ரீ லக்ஷ்மி நாராயண டீ காஃபீ, வரதராஜபுரம், கோவை. Special : குருமா, பரோட்டா

கோவை RS புரம் பாலாஜி மெஸ், பெண்களே சமையல். Special : மீன் குழும்பு, கைமா வடை

அம்மா மெஸ், லாரி பேட்டை, கோவை. Special : மீன் குழம்பு, மீன் சாப்பாடு

குப்பண்ணா ஹோட்டல், கோயம்புத்தூர், ராம்நகர். Special : அசைவ சாப்பாடு

சி கே மீல்ஸ், ரயில் நிலயம், கோவை. Special : அளவுச் சாப்பாடு

வில்லேஜ் லஞ்ச் ஹோட்டல், கோவை ரெக்ஸ் ஆஸ்பத்திரி. Special : அனைத்து வித தோசைகள்

பாரதி மெஸ், NEAR NATIONAL MODEL SCHOOL, கோவை. Special : அனைத்து வித தோசைகள்

கீதா கெண்டீன், ரயில் நிலையம், கோவை. Special : அனைத்து வகை டிபன்

கண்ணணண் கறி விருந்து, கோவை. Special : நாட்டுக்கோழி சிக்கன், புதினா சிக்கன்

சுப்பு மெஸ், ரயில் நிலையம், கோவை. Special : சைவ, அசைவ ஃபுல் மீல்ஸ்

ஃபுட் கார்டன், RS Puram, கோவை. Special : தயிர் பூரி

குப்தா ஜி சாட்ஸ், கோவை சாய்பாபா காலனி, சர்ச் ரோடு. Special : தயிர் பூரி

வைரமாளிகை, நெல்லை. Special : ப்ரைடு சிக்கன், ஷார்ஜா மில்க்‌ஷேக்

சுகுணவிலாஸ் ஹோட்டல், அண்ணா சிலை, கடை வீதி, திருசெங்கோடு. Special :  பள்ளிபாளையம் சிக்கன்

அன்னை மெஸ், குன்னத்தூர் பஸ் ஸ்டாண்ட். Special : நாட்டுக் கோழிக் குழம்பு, ஆசாரி வறுவல்.

தூத்துக்குடி பரோட்டோ கடை, கோவை ஹோப்ஸ். Special : பரோட்டோ

சென்ட்ரல் பிரியாணி கடை, திருப்பூர் காங்கேயம் கிராஸ் ரோடு. Special : பிரியாணி

ஜோஸ் கடல் மீன் உணவகம், குமார் நகர், திருப்பூர். Special : கடல் மீன் உணவு

ஆச்சிஸ், திண்டுக்கல். Special : அயிரை மீன் பக்கோடா

டேன்ஜரின் ரெஸ்டாரன்ட், ரேஸ்கோர்ஸ், கோவை. Special : சாப்பாடு

சாய் கப்சப், RS PURAM, கோவை. Special : இஞ்சி டீ:

JMS சர்பத் கடை, திண்டுக்கல். Special : சர்பத்

ஸ்ரீ பாலாஜி பவன் ஹைகிளாஸ் வெஜ ஹோட்டல், திண்டுக்கல். Special : ஃபுல் வெஜ் மீல்ஸ்

அப்பா மெஸ், திருப்பூர் கரட்டாங்காடு பஸ் ஸ்டாப். Special : ஃபுல் மீல்ஸ்

மணி கவுண்டர் மெஸ், திருப்பூர் குமார் நகர் 60 அடி ரோடு. Special : சிந்தாமணி சிக்கன்

தம்புடு ஹோட்டல், பல்லடம் போலிஸ் ஸ்டேசன். Special : இரவு இட்லி, ரோஸ்ட், பரோட்டா

செட்டியார் கடை, திருப்பூர். Special : டயனமைட் சிக்கன் :

ராமசாமி மட்டன், திருப்பூர் புதிய பஸ்நிலையம், திருப்பூர். Special : மட்டன், குடல்பிஃரை

கவுண்டர் மெஸ், அவினாசி ஆட்டயாம்பாளையம். Special : அசைவச் சாப்பாடு

முத்துமெஸ், தாராபுரம் ரோடு, திருப்பூர். Special : அசைவ சாப்பாடு

இந்திராணி அக்கா இட்லி கடை, காரணம் பேட்டை. Special : இட்லி

திருப்பூர் ஷெரிப் காலனி மெயின்ரோடு. Special : அடை சுண்டல்

கொங்கு மீன் ஸ்டால், திருப்பூர் காங்கயம் ரோடு. Special : மீன் வறுவல்

HBH, ஊட்டி சேரிங் கிராஸ் அருகே. Special : பிரியாணி

இதயம் பப்ஸ், திருப்பூர் PN ரோடு, மேட்டுப்பாளையம் பஸ்டாப் அருகில். Special : வெஜ் சமோசா, அரைத்து விட்ட குருமா

அம்மாயி வீட்டு மண் பானை சமையல், கோவை ஆவாரம்பாளையம். Special : குடல்கறி, தோசை

கிங் பரோட்டா, டாஜ், டவுன்ஹால் ரோடு, கோவை. Special : பட்டர் சிக்கன்

வில்லெஜ் விருந்து, பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையம். Special : பன், பரோட்டா

சூரியா ஹோட்டல், NGM கல்லூரி அருகில், பொள்ளாச்சி. Special : கொழுக்கட்டை

அமுதசுரபி, பொள்ளாச்சி. Special : விதம் விதமான தோசை

கௌரி கிருஷ்ணா, பொள்ளாச்சி. Special : மினி காஃபி.

பிரியாணி ஹவுஸ், பொள்ளாச்சி. Special : சிக்கன் பிரியாணி

ஆனந்தாஸ் செட்டி நாடு உணவகம், கோவை கலெக்டர் ஆபிஸ் ரோடு. Special : அன்லிமிட் சாப்பாடு

கீதா ஹால், கோவை. Special : நீர் தோசை

ரமேஷ் மெஸ், அழகேசன் சாலை, சாய்பாபா காலனி, கோவை. Special : ஆப்பம், தேங்காய் சட்னி

Our Sincere thanks to Kovai Neram( Mr.Jeevanandam )

சொத்தை வாங்கி விட்டு சோறு போடாத மகன்கள் ; பத்திர பதிவை ரத்து செய்து உத்தரவிட்ட கலெக்டர்.! இது ஒரு நல்ல தொடக்கம் தானே..!



சொத்தை வாங்கி விட்டு சோறு போடாத மகன்கள் ; பத்திர பதிவை ரத்து செய்து உத்தரவிட்ட கலெக்டர்.!
இது ஒரு நல்ல தொடக்கம் தானே..!

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தாலுகா, வேடனத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன்(75). விவசாயி. அவரது மனைவி பூங்காவனம்(63). இவர்களது மகன்கள் பழனி(40), அரசு பஸ் கண்டக்டர். செல்வம்(37), கட்டிட தொழிலாளி. இருவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்நிலையில், விவசாயி கண்ணன் தனது 5 ஏக்கர் நிலத்தை, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு மகன்களுக்கும் தலா 2.5 ஏக்கர் வீதம் தான செட்டில்மென்ட் பத்திரப் பதிவு மூலம் எழுதி வைத்தார். அதன்பிறகு, மகன்களின் நடவடிக்கைகள் மாறி, பெற்றோருக்கு சோறு போடாமல் தவிக்கவிட்டனர். இளைய மகன் செல்வம், தந்தையை அடித்து துன்புறுத்தவும் தொடங்கினார். உணவுக்கும் வழியின்றி மனைவியுடன் தவித்த கண்ணன், இருவரும் தலா 60 சென்ட் நிலத்தையாவது ெகாடுங்கள், விவசாயம் செய்து சாப்பிடுகிறோம் என கேட்டும், மகன்கள் மறுத்துவிட்டனர்.  இதனால் கண்ணன், அவரது மனைவி பூங்காவனம் ஆகியோர், கடந்த வாரம் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், கலெக்டர் கந்தசாமியிடம் இதுகுறித்து புகார் தெரிவித்தனர்.

அவரது உத்தரவின்பேரில், ஆர்டிஓ(பொறுப்பு) உமாமகேஸ்வரி, அவரது மகன்களை அழைத்து விசாரித்தார். அப்போது, மூத்த மகன் பழனி மட்டும் பெற்றோருக்கு ஜீவனாம்சம் தருவதாகவும், 60 சென்ட் நிலத்தை தருவதாகவும் தெரிவித்தார். இளைய மகன் செல்வம் சொத்துக்களை தர மறுத்துவிட்டார். இதுதொடர்பான அறிக்கையை கலெக்டரிடம், ஆர்டிஓ ஓப்படைத்தார். இதை தொடர்ந்து, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டத்தின் கீழ், மகன்களுக்கு தான செட்டில்மென்ட் பத்திரப்பதிவு செய்ததை ரத்து செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி, பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டது. இளைய மகன் செல்வம் வேறொருவருக்கு விற்ற நிலத்தின் உரிமமும் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மீண்டும் 5 ஏக்கர் நிலமும் விவசாயி கண்ணன் பெயரில் 2.15 ஏக்கரும், பூங்காவனம் பெயரில் 2.85 ஏக்கரும் பட்டா மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து கண்ணன், அவரது மனைவி பூங்காவனத்தை நேற்று அழைத்து, நிலத்தின் உரிமைக்கான பட்டாவை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வழங்கினார். முதியவர்கள் இருவரும், அவருக்கு நன்றி தெரிவித்தனர்....

சபாஷ் கலெக்டர்.!

பாக்யராஜ் விளக்கம்...

பாக்யராஜ் விளக்கம்...

”சர்க்கார் பட கதை விவகாரத்தில் நான் கெஞ்சியும்  இயக்குனர் முருகதாஸ் உடன்படவில்லை.இதன் காரணமாகவே சன் பிக்சர்ஸ் போன்ற பெரிய தயாரிப்பாளரின் படத்தின் கதையை பற்றி வெளியே சொல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன். தேர்தலில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்படாமல் நேரடியாக நான் தேர்வானதுதான்  நான் சந்தித்த அசௌகரியங்களுக்கு காரணமாக நினைக்கிறேன்
எனக்கு நேர்ந்த அசௌகரியங்களை பற்றி சங்க நலன்கருதி வெளியிட  விரும்பவில்லை” என இயக்குனர் கே பாக்யராஜ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.#bhagyaraj #Sarkar #kumudam

கோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....

கோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு.... நீங்கள் உணவுப்பிரியரா ? சுவையான உணவிற்கு முக்கியத்துவம் கொடுப்பவரா கோவை ம‌ற்றும் ...