பாடகி எஸ்.ஜானகியின் பிறந்த நாள் இன்று..

பாடகி எஸ்.ஜானகியின் பிறந்த நாள் இன்று

'60 ​​​​​​ஆண்டுகளாக இசைத் துறையில் ஜொலித்த இசை அரசி, எஸ்.ஜானகியின் பிறந்த தினம் இன்று'. தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் பலவற்றிலும் ஒலித்த இவரது குரலுக்கு மயங்காதோர் இல்லை.

" 'வயசான காலத்துலேயும் ஏன் பாடிக்கிட்டு இருக்காங்க. குரலில் தடுமாற்றம் வந்துடுச்சு'னு ஒரு குரல் ஒலிக்கும் முன்பே, கெளரவத்துடன் இசைத் துறையில் இருந்து விலகிக்கிறேன்'' என அதிரடியாக முடிவெடுத்தவர் எஸ்.ஜானகி. யாரும் எந்தச் சூழலிலும் தன்னை குறைசொல்லிவிடக் கூடாது என்பதில் உறுதியுடன் இருப்பவர். இந்திய இசையமைப்பாளர்கள் பெரும்பாலானவர்களின் இசையில் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய இவர், இசைத்துறைக்கு வந்த கதை மிகவும் சுவாரஸ்யமானது.

ஆந்திர மாநிலம் பள்ளப்பட்டி கிராமத்தில் பிறந்தவர். ஒவ்வோர் ஊரிலும் சில ஆண்டுக்காலம் என மாறி மாறி வசிக்கும் இளமைக் காலம். தந்தை ஆசிரியராக இருந்தாலும், ஜானகிக்குக் கல்வியில் பெரிய அளவில் நாட்டம் இல்லை. அப்பாவிடம் அடியும் திட்டும் வாங்கியபோதும் தனக்குப் பிடிக்காத கல்வியிடம் இருந்து விலகியே இருந்தார். இளம் வயது முதலே ஒரு முடிவு எடுத்தால், அதில் விடாப்பிடியாக இருப்பது ஜானிகியின் குணம். 'இனி என்னதான் செய்றது? படிக்க மாட்டேன்னு சொல்றாள். இனி அவளோட தலையெழுத்தை அவளே முடிவு செய்யட்டும்' என அவரது அப்பா சொல்லிவிட்டார்.

படிப்பில் நாட்டம் இல்லாமல் இருந்தாலும், இசைஞானம் ஜானகியைப் புகழின் உச்சிக்கு கொண்டுசென்றது. மூன்று வயதிலேயே கேள்வி ஞானத்துடன் கடினமான பாடல்களையும் பாடி அசத்தினார். இவரது ஆர்வத்தைப் பார்த்து, எட்டாவது வயதில் பைடிசாமி என்கிற நாதஸ்வர வித்வானிடம் இசை கற்க அனுப்பினார் தந்தை. ஆர்வமுடன் இசை கற்றுவந்த ஜானகியிடம், 'நீ சங்கீதம் கத்துகிட்டது போதும். நீயே சங்கீதம்தான். இனி உனக்குச் சங்கீதம் கத்துக்கொடுக்கத் தேவையில்லை' என பத்தே மாதங்களில் குருநாதர் வாழ்த்தி அனுப்பினார்.

சென்னைக்கு குடிபெயர்ந்த நிலையில், ஏவிஎம் ஸ்டுடியோவில் பணிக்குச் சேர்ந்தவருக்கு, படிப்படியாகச் சினிமா பாடல் பாடும் வாய்ப்பு கிடைத்தது. 1957-ம் ஆண்டு, 'விதியின் விளையாட்டு' என்ற திரைப்படத்தில் 'பெண் என் ஆசை பாழானது ஏனோ' என்ற பாடலைப் பாடினார். தொடர்ந்து அவரது குரலில் ஏராளமான வெற்றிப் பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்தன. குறிப்பாக, 1962-ம் ஆண்டு 'கொஞ்சும் சலங்கை' திரைப்படத்தில் இவர் பாடிய 'சிங்கார வேலனே தேவா' பாடலை இன்றளவும் பிற பாடகர்கள் பாட அச்சப்படுவர். அவ்வளவு கடினமான பாடலை இளம் வயதிலேயே பாடி அசத்தினார் ஜானகி. தெலுங்கு, இந்தி மொழிகளைப் பேசவும் எழுதவும் கற்றுக்கொண்டார். கன்னடம், மலையாள மொழிகளை நன்றாகப் பேசுவார். இந்திய மொழிகள் பலவற்றிலும் பாடல்களை ஓய்வின்றி பாடினார்.

பாடகி எஸ்.ஜானகி
தமிழில் ஏராளமான ஹிட் பாடல்களைக் கொடுத்திருந்தபோதும், 70-களின் இறுதியில்தான் எஸ்.ஜானகிக்கு தமிழ் திரையுலகில் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கத் தொடங்கியது. பல வெரைட்டியான பாடல்களையும் பாடும் திறமை இருந்தும், அதற்கான முழுமையான வாய்ப்பும் கிடைக்காமல் இருந்தது நேரம் உருவானது புதுக்கூட்டணி. 1976-ம் ஆண்டு வெளியான 'அன்னக்கிளி' திரைப்படம், ஜானகிக்குத் தமிழ் திரையுலகில் அசைக்கமுடியாத புகழைக் கொடுத்தது. அந்தப் படத்தில் இவர் பாடிய எல்லாப் பாடல்களும் செம ஹிட். இந்தப் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, தொடர்ந்து ஜானகியின் திறமையை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டார். அதனால், எழுபதுகளின் பிற்பகுதியில் தொடங்கி, தொண்ணூறுகள் வரை, இளையராஜா இசையமைப்பில் எஸ்.ஜானகி பாடிய பாடல்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தன. இளையராஜா இசைடமைப்பில் எஸ்.ஜானகி - எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய டூயட் பாடல்கள் இன்றளவும் காதல் மனங்களை வருடும் கீதங்கள். தொடர்ந்து 90-களில் அறிமுகமான ஏ.ஆர்.ரகுமான் தொடங்கி தற்போதைய அனிருத் வரையில் எல்லா இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடல்களைப் பாடி ரசிகர்களை கவர்ந்தார்.

சோலோ, டூயட், தாலாட்டு, குத்து, பக்தி என எல்லா வகையான பாடல்களையும் பாடி, இன்றளவும் சாதனையில் முன்னிலையில் இருக்கும் தென்னிந்திய பின்னணிப் பாடகி இவரே. கஷ்டமான பாடலாக இருந்தாலும், கண்களை மூடாமல், கைகளை அசைக்காமல், முகபாவனைகளில் கஷ்டப்படாமல் மிக எளிதாகப் பாடுவது இவருக்கே உரிய சிறப்பு. குழந்தைக் குரலில், ஆண் குரலில் பாடி எல்லோரையும் ஆச்சர்யப்படவைப்பார். அதிகமான இந்தி மொழிப் பாடல்களைப் பாடிய ஒரே தென்னிந்திய பாடகியும் இவரே. நான்கு தேசிய விருதுகள், பல்வேறு மாநிலங்களின் முப்பதுக்கும் அதிகமான விருதுகளை வென்றவர் ஜானகி. புகழ் உச்சியில் இருந்தபோது மத்திய அரசின் பத்ம விருதுகள் கிடைக்கவில்லை. எனவே, 2013-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்த 'பத்ம பூஷண்' விருதைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். தென்னிந்திய கலைஞர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதை தைரியமாகச் சொன்னார்.

1992-ம் ஆண்டு, தேவர் மகன் படத்தில் பாடிய 'இஞ்சி இடுப்பழகா' பாடலுக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருதைப் பெற டெல்லி சென்றிருந்த சமயம். ஜானகியைப் பேட்டி எடுத்த செய்தியாளர்களிடம், 'இதே ஆண்டில் 'ரோஜா' படத்தில் 'சின்னச் சின்ன ஆசை பாடலை பாடகி மின்மினி மிகத் திறமையாகப் பாடியிருந்தார். எனக்குக் கிடைத்த தேசிய விருது அந்தப் பொண்ணுக்கு கிடைத்திருந்தால் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பேன்' என கூறி நெகிழவைத்தவர். அந்த அளவுக்குத் திறமையான கலைஞர்களை ஊக்குவிப்பதிலும் முன்னோடியாக இருந்தவர் ஜானகி.

பாடகி எஸ்.ஜானகி
நடிகர் கமல்ஹாசன் பின்னணிப் பாடகராக இவருடன் இணைந்து பாடிய பாடல்கள் மிகப்பெரிய ஹிட். நடிகர் ரஜினிகாந்த் பாடிய ஒரே பாடலான, 'மன்னன்' படத்தின் 'அடிக்குது குளிரு' பாடலில் இனைந்து பாடியவரும் ஜானகிதான்.

எந்த அலங்காரமும் செய்துகொள்ளாத, நகைகள் அணியும் பழக்கம் இல்லாத எளிமையான தோற்றம். எப்போதும் வெள்ளை நிறச் சேலையுடன், கழுத்துவரை நீண்ட ரவிக்கையுடன் இருப்பது ஜானகியின் அடையாளம். 'ஒருவேளை எனக்குப் படிப்பில் ஆர்வம் வந்து படிக்கச் சென்றிருந்தால், வேறொரு துறைக்குப் போயிருப்பேன். என் குரல் வீட்டைத் தாண்டிருக்காது. இப்போ இத்தனை பேர் என் பாடல்களை ரசிச்சுக்கிட்டு இருக்க மாட்டாங்க. கடவுள் எனக்குக் கொடுத்த அன்புப் பரிசு இசைஞானம். நான் சின்ன வயசுல இருந்து ஒரு முடிவெடுத்தால், அது சரியாகத்தான் இருக்கும்' என அடிக்கடிச் சொல்வார்.

''திறமை இருக்கிறது, வாய்ப்பு வருகிறது என நாம் மட்டும் பாடி புகழையும் பணத்தையும் சம்பாதிச்சுக்கிட்டு இருப்பது நியாயமில்லை. அதனால், வருங்கால சந்ததியினருக்கு வழிவிட வேண்டும். அதன்படி மற்றவர்கள் யாரும் என்னை நேரடியாகவோ, மறைமுகமாகவோ குறை சொல்லும்முன், என் வருங்கால தலைமுறையினரும் புகழ்பெற வேண்டும் என நான் அமைதியாக இசைத் துறையில் இருந்து ஓய்வு பெற்றுக்கொள்கிறேன்'' எனக் கடந்த ஆண்டு அறிவித்தார். அதன்படியே ஓய்வுக் காலத்தை இசையுடனே கழித்து வருகிறார், எஸ்.ஜானகி.

81ம் பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கும் எஸ்.ஜானகி, இன்னும் பல்லாண்டுகள் நீடித்த ஆயுளுடனும் புகழுடனும் வாழ வாழ்த்துவோம்!

- கு.ஆனந்தராஜ்

திடீரென்று கண் பார்வை இழந்த கணவரின் கனவுகளை சுமக்கும் மனைவி; பாபநாசத்தில் ஓர் நெகிழ்ச்சி ஸ்டோரி..

திடீரென்று கண்  பார்வை  இழந்த கணவரின் கனவுகளை சுமக்கும் மனைவி; பாபநாசத்தில் ஓர் நெகிழ்ச்சி ஸ்டோரி

தென்காசியைச் சேர்ந்தவர் விக்னேஷ். தனது சிறுவயது முதல் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் இருந்ததால், பின்னாளில் புகைப்படத் தொழிலைத் தொடங்கினார். சாத்தூரைச் சேர்ந்த பிரேமாவை 2011-இல் விக்னேஷ் திருமணம் செய்துகொண்டார். இதைத்தொடர்ந்து, பாபநாசம் அருகே முதலியார்பட்டி என்ற முத்துநகரில் 'அம்மா ஸ்டுடியோ' என்ற பெயரில் ஸ்டுடியோவை அமைத்து இருவரும் தங்கள் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கினர்.

இந்தத் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டில் திடீரென விக்னேஷின் வலது கண்ணில் பார்வை குறைந்தது. தொடர்ந்து, சிறிது சிறிதாக குறைந்துவந்த பார்வை 2016-இல் இரு கண்களிலும் முழுமையாக பறிபோனது. இதனால், திக்குத்தெரியாத காட்டில் விடப்பட்டதைப் போன்று திகைத்தனர் விக்னேஷ் - பிரேமா தம்பதியினர்.

ஒருவேளை உணவிற்கும் வழியில்லாத நிலையில், தனது நண்பரை அழைத்துவந்து அவருக்குத் தொழில் கற்றுக்கொடுத்து, அவரை தனது தொழிலை செய்ய வைத்தார் விக்னேஷ். ஆனால் நண்பர், விக்னேஷுக்கு எதிராக வாடிக்கையாளர்கள் அனைவரையும் தன் பக்கம் இழுத்துத் தனியாகக் கடை வைத்துவிட்டார்.

நண்பரின் இச்செயலைத் தாங்கிக்கொள்ள முடியாத விக்னேஷ், நம்பிக்கை இழந்து, மனைவிக்கு இரண்டாவது குழந்தை பேறு காலத்திற்கு ஒருசில நாள்கள் இருந்த நிலையில், தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றார். ஆனால், அதிர்ஷ்டவசமாக அவர் பிழைத்துக் கொண்டார். அதன் பிறகு வந்த புகைப்பட ஆர்டர்களை, தனக்குத் தெரிந்த ஸ்டுடியோ நண்பர்களிடம் கொடுத்து கமிஷன் பெற்று வந்தார். ஆனால், வாடிக்கையாளர்கள் விக்னேஷ் வந்து புகைப்படம் எடுத்தால் மட்டுமே ஆர்டர் தருவோம் என்று கூறியதால், கையறு நிலையில் தவித்தார் விக்னேஷ்.

தொழில் செய்ய முடியாத நிலையில், தம்பதியும், குழந்தைகளும் தண்ணீரை மட்டுமே குடித்து 6 நாள்களைக் கழித்துள்ளனர். கணவரின் இயலாமை, அவரது பரிதவிப்பை கண்டு மிகவும் வேதனையடைந்த பிரேமா, அவரிடம் தனக்குப் புகைப்படம் எடுக்க கற்றுக் கொடுக்குமாறும், தானே இனிமேல் நிகழ்ச்சிகளுக்குப் புகைப்படம் எடுக்கச் செல்வதாகவும் கூறினார். இதை தயக்கத்துடன் ஏற்றுக்கொண்டார் விக்னேஷ்.

5 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த பிரேமா, தன்னம்பிக்கையுடன் புகைப்படத் தொழிலைக் கற்றுக்கொண்டு, தனது கணவரையும், குழந்தைகளையும் காப்பாற்ற முடியும் என்ற தன்னம்பிக்கையில், கழுத்தில் கேமராவை மாட்டிக்கொண்டு குடும்பத்தைக் காப்பாற்ற கிளம்பினார். என்றாலும், போதுமான வருவாய் கிடைக்காததால், மிகவும் நொடிந்த நிலையில் இருந்த தம்பதிக்கு அவர்களது ஸ்டுடியோ நண்பர்கள், கண்ணன் உள்ளிட்டோர் நம்பிக்கை அளித்து தங்களுக்கு வரும் நிகழ்ச்சிகளுக்கு பிரேமாவை அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, கடந்த ஓராண்டுக்கும் மேலாக பிரேமா, தானே நிகழ்ச்சிகளுக்குச் சென்று படங்கள் எடுத்துத் தருகிறார். கிராமப்புறங்களில் நடைபெறும் பூப்புநன்னீராட்டு, திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போது பெண்கள் ஆதரவு கிடைத்தபோதும், ஒருசிலர் புறம்பேசியது மனதில் முள்ளாய் குத்தியதாகக் கூறுகிறார் பிரேமா. என்றாலும், சாதிக்க வேண்டும் என்ற முனைப்பில், அவற்றை காதில் வாங்கிக் கொள்ளாமல், தொழிலில் மேலும் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு தொடர்ந்து நிகழ்ச்சிகளுக்குச் சென்று புகைப்படம் எடுத்து வருகிறார்.

தற்போது 2 குழந்தைகளோடு, பார்வையிழந்த கணவரையும் அரவணைத்து நம்பிக்கை அளித்து வாழ்ந்து வருகிறார் பிரேமா. தன்மேல் இரக்கம் கொண்டு உதவிசெய்ய வருபவர்களிடம், பணமோ, பொருளோ பெறாமல், அவர்களது வீட்டு நிகழ்ச்சிகளுக்கோ அல்லது அவர்களது நண்பர்கள், உறவினர்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கோ புகைப்படம் எடுக்க வாய்ப்பு அளிக்குமாறு மட்டுமே கேட்டுக்கொள்கிறார் பிரேமா. பிரேமாவுடைய கேமராவின் ஒவ்வொரு மின்னலிலும், அவருடைய குடும்பம் வெளிச்சம் பெறுகிறது.

ஆர்டர்களுக்கு அழைக்க: 9486220407, 9345333377

பெண் உருவில் இருக்கும் அதிசய பிள்ளையார் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

பெண் உருவில் இருக்கும் அதிசய பிள்ளையார் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

இந்த உலகில் ஆண் வடிவிலும், பெண் வடிவிலும் பல தெய்வங்களை நாம் வணங்கி வருகிறோம். அந்தவகையில், பிள்ளையாரை ஆண் தெய்வமாக தான் இதுவரை வழிபட்டு வருகிறோம். ஆனால் பிள்ளையாரை பெண் தெய்வமாக வழிபடும் மரபு தமிழகத்தில் இருந்திருக்கிறது அது பற்றி இப்போது பார்ப்போம்.
கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் எனும் ஊரில் அமைந்துள்ளது தாணுமாலயன் கோயில். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்துள்ள இக்கோயில்
தாணுமாலயன் கோயில் என அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் உள்ள தூணில் பெண் உருவம் கொண்ட விநாயகரைக் காணலாம்.

பெண் வடிவத்தில் உள்ள பிள்ளையார் விக்னேஷ்வரி, விநாயகி, கணேஷினி, கணேஷ்வரி எனப் பல பெயர்களில் வணங்கப்படுகிறார்.
இக்கோயில் நாகர்கோவில் - கன்னியாகுமரி நெடுஞ்சாலையில், நாகர்கோவிலில் இருந்து கிழக்கே 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தாணுமாலயன் என்ற இக்கோயிலின் பெயரே மும்மூர்த்திகளின் பெயரை உள்ளடக்கியிருக்கிறது. தாணு என்பது சிவபெருமானையும், மால என்பது பெருமாள் விஷ்ணுவையும், அயன் என்பது பிரம்மாவையும் குறிக்கிறது.

17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயிலானது கேரளத்தைச் சேர்ந்த நம்பூதிரிகளின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது. குறிப்பாக தீக்குமொன் மடம் என்ற நம்பூதிரி குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக இக்கோவிலை நிர்வகித்து வந்திருக்கின்றனர். இந்தக் கோவிலின் மூலவராக மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோர் இணைந்து ஒரே ரூபமாக தாணுமாலயனாக அருள்பாலிக்கின்றனர். இப்படி மும்மூர்த்திகளையும் ஒரே ரூபமாக பார்ப்பது அரிதிலும் அரிதானதாகும்.

பெண்ணுக்குரிய ஆபரணங்களோடு ஒரு காலை ஊன்றியும் மறுகாலை மடக்கியும், புடவையோடு அற்புத பெண் தெய்வமாக காட்சி தருகிறாள் கணேஷினி. இங்குள்ள அலங்கார மண்டபத் தூணில் உள்ள விநாயகியை, 8 அமாவாசை தினங்கள் தீபம் ஏற்றி வழிபட்டால், பெண்களின் மாதவிலக்கு பிரச்னை தீரும் என்று கூறப்படுகிறது.
தாணுமாலயன் கோவிலில் ஒரே கல்லினால் செய்யப்பட்ட 5.5 மீட்டர் உயரமுள்ள நான்கு மிகப்பெரிய இசைத்தூண்கள் இருக்கின்றன. அலங்கார மண்டபம் என்ற பகுதியில் இருக்கும் இந்த இசைத்தூண்களை தட்டினால் சப்தசுவரங்களில் இசை வெளிப்படுவது பிரமிப்பின் உச்சம்.
மேலும், இக்கோயிலில் தான் 22 அடி உயரமுள்ள ஒரே கல்லினால் செய்யப்பட்ட ஆஞ்சநேயர் சிலையும், 13அடி உயரமும், 21அடி அகலமும் கொண்ட நந்தி சிலையும் இருக்கின்றன. இந்த நந்தி சிலை இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய நந்தி சிலைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன.

பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன. அவை,

1. ஆண் பனை
2. பெண் பனை
3. கூந்தப்பனை
4. தாளிப்பனை
5. குமுதிப்பனை
6.சாற்றுப்பனை
7. ஈச்சம்பனை
8. ஈழப்பனை
9. சீமைப்பனை
10. ஆதம்பனை
11. திப்பிலிப்பனை
12. உடலற்பனை
13. கிச்சிலிப்பனை
14. குடைப்பனை
15. இளம்பனை
16. கூறைப்பனை
17. இடுக்குப்பனை
18. தாதம்பனை
19. காந்தம்பனை
20. பாக்குப்பனை
21. ஈரம்பனை
22. சீனப்பனை
23. குண்டுப்பனை
24. அலாம்பனை
25. கொண்டைப்பனை
26. ஏரிலைப்பனை
27. ஏசறுப்பனை
28. காட்டுப்பனை
29. கதலிப்பனை
30. வலியப்பனை
31. வாதப்பனை
32. அலகுப்பனை
33. நிலப்பனை
34. சனம்பனை

Creation : #கிராமத்துக்குயில்_Facebookpage

பனையிலிருந்து பெறப்படும் பயன்கள் :

பனை உணவு பொருட்கள் :

🌴நுங்கு
🌴பனம் பழம்
🌴பூரான்
🌴பனாட்டு
🌴பாணிப்பனாட்டு
🌴பனங்காய்
🌴பனங்கள்ளு
🌴பனஞ்சாராயம்
🌴வினாகிரி
🌴பதநீர்
🌴பனங்கருப்பட்டி
🌴பனைவெல்லம்
🌴சில்லுக் கருப்பட்டி
🌴பனங்கற்கண்டு
🌴பனஞ்சீனி
🌴பனங்கிழங்கு
🌴ஒடியல்
🌴ஒடியல் புட்டு
🌴ஒடியல் கூழ்
🌴 புழுக்கொடியல்
🌴முதிர்ந்த ஓலை
🌴 பனை குருத்து

உணவுப்பொருள் அல்லாதவை :

🌴பனை ஓலைச் சுவடிகள்
🌴பனை ஓலைத் தொப்பி
🌴குருத்தோலை

வீட்டுப்பயன்பாட்டுப் பொருட்கள் :

🌴பனையோலை
🌴நீற்றுப் பெட்டி
🌴கடகம்
🌴பனைப்பாய்
🌴கூரை வேய்தல்
🌴வேலியடைத்தல்
🌴பனைப்பாய்
🌴பாயின் பின்னல்
🌴பனையோலைப் பெட்டி

Creation : #கிராமத்துக்குயில்_Facebookpage

விவசாயப் பயன்பாட்டுப் பொருட்கள் :

🌴கிணற்றுப் பட்டை
🌴எரு
🌴துலா

அலங்காரப் பொருட்கள் :

🌴பனம் மட்டை
🌴வேலியடைத்தல்
🌴நார்ப் பொருட்கள்
🌴தட்டிகள் பின்னல்

வேறு பயன்பாடுகள் :

🌴கங்குமட்டை
🌴தும்புப் பொருட்கள்
🌴விறகு
🌴மரம்

கட்டிடப்பொருட்கள் :

🌴தளபாடங்கள்
🌴பனம் விதை
🌴எரிபொருள்

இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பனை உணவுப் பொருட்கள் பனைத் தொழிலாகளிடம் இருந்து நேரடி விற்பனை தமிழ் நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்படும்*

கிடைக்கும் பனை உணவுப் பொருட்கள் :

🌴 பனங்கருப்பட்டி
🌴பனைவெல்லம்
🌴சில்லுகருப்பட்டி
🌴சுக்கு கருப்பட்டி
🌴பனங்கற்கண்டு
🌴பனஞ்சக்கரை
🌴 பனங்கிழங்கு மாவு
🌴 பனங்கிழங்கு சத்துமாவு
🌴பதநீர்
🌴பனம்பழம் ஜுஸ்
🌴பனை விதை
🌴பனங்கன்று
🌴பனங்கிழங்கு
🌴பனைப்பாய்
🌴புழுக்கொடியல்
🌴ஓடியல்

Creation : #கிராமத்துக்குயில்_Facebookpage

நட்புகளே அவார்கள் தவறு செய்தாலும் மன்னியுங்கள் ஏன் தெரியும் அவர்கள் அதை தெரிந்து செய்வதில்லை !!!!

Wife *** ஏங்க நான் கற்ப்பமாக இருக்கேன்

hus *** ஏய் எவ்வளவு சந்தோஷமாக இருக்கு இது போதும்டி எனக்கு

wife *** சரி உங்களுக்கு என்ன குழந்தை வேணும்.

hus *** எனக்கு பையன் தான் வேண்டும்

wife *** ஏன் பெண் பிள்ளை பிடிக்காதா???

hus *** ஏய் பிடிக்கும்டி ஆனால் ஆண் வாரிசு இருந்தால் நம் தலைமுறை சொத்து அவன்,,

wife *** ஓஓஓ அப்போ பெண் பிள்ளை பிறந்தால்

hus **** அது நமக்கு செலவை கொடுக்கும்டி.சரி அதை விடு நமக்கு hospital போயி chek பண்ணலாம்,ஆணா.பெண்ணா என்று,,.

wife **** வேண்டாம் அப்புறம் நமக்குள்ள சண்டை வந்து பிரச்சினைகள் ஏற்ப்படும் அது பிறக்கும் போது எது கிடைத்தாலும் பார்க்கலாம்!!!

மாதங்கள் ஒடியது அழகான குழந்தை ஒன்று பிறந்தது!!!!

boy **** ஏய் எனக்கு பையன் பிறந்திட்டான்டீ,,

girl *** ஆனால் அவளுக்கு ஒரு dout இருந்திச்சு அதன் முகபாவனைகள் பெண் போன்று இருந்தது ஆனால் அவள் தன் கணவனிடம் சொல்லவில்லை

வருடங்களும் ஒடியது தனது பிள்ளையின்பேச்சு.நடை,உடல்மாற்றம் அனைத்தும் வித்யாசமானது!!!

hus *** ஏய் இது நம்ம பையன்தானா இப்படி பெண் போன்று ஆடை அணிகிறான்!!!

thirunangai **** அப்பா நான் ஆணும்.இல்லை பெண்ணூம் இல்லை என் உடல் மாற்றம் எனக்கே தெரிகிறது
நான் ஆண் இல்லையா??

hus *** ஏய் என்னடா சொல்கிறாய் அடியே இங்கே வா நம் பையனுக்கு ஏதோ ஆயிடிச்சி

wife **** ஒன்றும் ஆகவில்லை அவன் கடவுள் பிள்ளை எனக்கு தெரியும் இது ஆணும்.இல்லை பெண்ணூம் இல்லை

hus *** அடியே அப்போ அவனா??இவன்??

thirunangai*** ஏன் அப்பா என்னை நீங்களே கிண்டல் பண்ணுனா என்னை இந்த சமூகம் ஏன் கிண்டல் பண்ணாது நான் இப்படி பிறப்பேன் என்று எனக்கு தெரியுமா???
ஏன் எங்களை மட்டுமே பிரித்து பார்க்கின்றீங்க எங்களுக்கும் ஆசைகள் நிறைய உண்டு உங்களை போன்று வேலைகளும் எங்களால் செய்ய முடியும் ,,ஆனால் எங்களுக்கு கிடைக்கும் பெயர் அலி,9. என்றுதான்,,

hus **** ஏய் உன்னால் எனக்கு கெட்ட பெயர்டா ஊருல

thirunangai **** அழுதுகிட்டு )) அப்பா ஏன் என்னை புடிக்கலையா???

hus **** ஏய் போயிர கண் முன்பு நிற்க்காதே,,ஏன்டி இந்த கறுமத்துக்கு தான் அப்பவே போய் chek பண்ணலாம் என்று சொன்னேன் இப்போ பார்த்தாயா??

wife **** ஏன் இது நம்ம பிள்ளை நம்ம இரத்தம் அப்புறம் எப்படி புடிக்கலை உங்களுக்கு நான் பெற்றவள் அது கடவுளின் பிள்ளை அது எனக்கு கிடைத்திருக்கு ஆணூம்,பெண்ணும்,சேர்ந்து கிடைத்திருக்கு!!!

thirunangai ***- அம்மா என்னால் உங்களுக்கு பிரச்சினை வேண்டாம் நாங்கள் ஒரு அதிசயபிறவி எங்களுக்கு தனியாக ஒரு கழிவறை கூட கிடையாது நாங்கள் எங்கே போக வேண்டும் அந்த நிலமை எங்களுக்கு மட்டும் ஏன்,,

wife **** வேண்டாம் நீ போக கூடாது நீ இந்த வீட்டு பிள்ளை சமுதாயத்தில் நீயும் நன்றாக வளர்ந்து காட்டணும் மற்ற பெற்றோரை போன்று நான் உன்னை ஒதுக்கமாட்டேன் நீ சாதிக்க பிறந்தவள் !!!!

திருநங்கை!!!

நட்புகளே அவார்கள் தவறு செய்தாலும் மன்னியுங்கள் ஏன் தெரியும் அவர்கள் அதை தெரிந்து செய்வதில்லை !!!!

நட்புகளே என்னிடம் ஒரு திருநங்கை தோழி கேட்டாங்க எல்லாருக்கும் கதை எழுதொம் நீங்கள் எங்களுக்கு ஒரு கதை எழுதமாட்டீங்களா என்று கேட்டாங்க!!!

அந்த தோழிக்கு இது சமர்ப்பணம் எப்படி இருந்தாலும் coment பண்ணுங்க!!

ஒரு பெண்ணின் மீதான சபலம்... Saravanabavan hotel owner

வெறும் எட்டாம் வகுப்பு மட்டுமே
படித்த ஒரு மனிதன்,
வேலை தேடி சென்னைக்கு வந்து
மளிகை கடையில் பொட்டலம் மடித்தும்
ஹோட்டலில் டேபிள் துடைத்தும்
தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய
ஒரு மனிதன், மிகச்சிறிய முதலீட்டில்
ஓடாத ஒரு பழைய ஓட்டலை வாடகைக்கு
எடுத்து, தன்னுடைய இஷ்ட தெய்வமான
முருகனின் பெயரையே
அந்த ஓட்டலுக்கு வைத்து
ஓட்டல் சரவணபவன் என்று முதன்முதலாக
ஓட்டல் தொழிலுக்குள் இறங்கி
தன்னுடைய அயராத உழைப்பினாலும்
சுவையான, தரமான உணவினாலும்
இன்று உலகம் முழுவதும் நூற்றுக்கும்
மேற்பட்ட உணவகங்களை திறந்து
1500 கோடிக்கும் அதிகமான மதிப்புகொண்ட
ஓட்டல் நிறுவனமாக அதை மாற்றி
தனிப்பட்ட வாழ்க்கையில் மிகப்பெரிய
சாதனை மனிதனாக வாழ்ந்து காட்டி
வலம் வந்த அதன் முதலாளி
திரு.ராஜகோபால் இன்று உச்சநீதிமன்ற
தீர்ப்பில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு
தன்னுடைய முதுமையை நோய்நொடியோடு
ஜெயிலில் கழிக்கவேண்டிய கட்டாயத்துக்கு
ஆளாகி இருக்கிறார்!
இவ்வளவு பெரிய வீழ்ச்சிக்கு காரணம் என்ன?
ஒரு பெண்ணின் மீதான சபலம் தான்!
அடுத்தவன் மனைவி என்று தெரிந்தும்
அவள் மீது ஆசைப்பட்டது,
அவளை அடைய முயற்சி செய்தது,
அந்த முயற்சிக்கு தடையாக இருந்த
அவளுடைய கணவனை கொன்றது.
ஒரு பெண்ணின் மீதான சபல புத்தி
அவளை அடையவேண்டும் என்று
வெறியாக மாறி அதற்கு தடையாக இருந்த
கணவனையும் கொல்லும் அளவிற்கு
அவருடைய காமம் கண்ணை மறைத்துவிட்டது!
படிப்பறிவு இல்லாத ஒரு சாதாரண மனிதன்
உழைப்பால் முன்னேற வேண்டும் என்று
நினைத்து அயராது உழைத்த போது
முருகன் அவருடன் இருந்தார்,
அவருடைய உண்மையான உழைப்புக்கு
ஆசீர்வாதங்களை வாரி வழங்கினார்,
அந்த சாதாரண மனிதனும்
மேலே மேலே உயர்ந்து பல சாதனைகளை
படைத்து சிகரங்களை தொட்டான்.
எப்போது அவனுடைய பார்வை
அடுத்தவன் மனைவி மீது போனதோ
அப்போதே அவனுக்கான பாவக்கணக்குகள்
தொடங்கிவிட்டது,
முருகனும் அவனை விட்டு விலகிவிட்டார்!
அதன்பின் அவன் செய்த அடுத்தடுத்த
பாவங்களுக்கு தண்டனைக்கு மேல்
தண்டனைகள் அதிகமாகி,
அவருடைய குடும்பத்திற்கும்,
பிள்ளைகளுக்கும், மிகப்பெரிய
அவப்பெயர் உண்டாகி, காலங்காலமாக
நிலைத்து நின்று இந்த ஆளா இப்படி?
பார்த்தா பெரிய மனுஷன் மாதிரி
வேஷம்போட்டு திரிஞ்சானே என்று
எல்லோருமே கேவலமாக பேசும் அளவுக்கு
அத்தனை மரியாதையும் சரிந்து
இன்று தரைமட்டத்திற்கு வந்துவிட்டார்!
அத்தனைக்கும் ஒரே ஒரு காரணம்
பெண்ணாசை!
அதுவும் பிறர் மனைவி மீதான ஆசை!
ஒழுக்கம் தவறுவதோடு
அடுத்த பெண்ணையும் ஒழுக்கம் தவற
நிர்பந்தித்து, அல்லது அவளை தூண்டி
தவறான பாதைக்கு இழுப்பது என்பது
மன்னிக்க முடியாத பாவம்!
இதுவே தவறு செய்கின்ற பெண்ணுக்கும்
பொருந்தும்!
ஒழுக்கம் தவறி நடக்க ஆரம்பித்தால்
எந்த கடவுளும் துணைக்கு வரமாட்டார்!
குடும்பத்தினர் முன்பும்
உறவினர்களின் முன்பும்,
ஊர் உலகத்தின் முன்பும்,
அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு
மரியாதையை இழந்து எல்லோரும்
காரித்துப்பும் அளவிற்கு கொண்டுவந்து
நிறுத்தப்படுவது தான் ஒழுக்கம் கெட்டு
அலைகின்ற அத்தனை ஆண்
பெண்களுக்கான கடவுளின் தண்டனை!
—#அஷோக்குமார்

#saravanabavan hotel #hotelowner #rajagopal

கோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....

கோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு.... நீங்கள் உணவுப்பிரியரா ? சுவையான உணவிற்கு முக்கியத்துவம் கொடுப்பவரா கோவை ம‌ற்றும் ...