உலக #பணக்காரர்_கம்ப்யூட்டர் உலகின் பேரரசன் #பில்_கேட்ஸிடம் ஒருவர் கேட்கிறார். உங்களை விடப் பணக்காரர் யாராவது இருக்கிறாரா ?"

உலக #பணக்காரர்_கம்ப்யூட்டர் உலகின் பேரரசன் #பில்_கேட்ஸிடம் ஒருவர் கேட்கிறார்.
உங்களை விடப் பணக்காரர் யாராவது இருக்கிறாரா ?"

ஆம்,ஒருவர் இருக்கிறார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டேன்.
நியூயார்க் நகர விமான நிலையம் சென்றேன்.
நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளைப் படித்துக் கொண்டிருந்தேன்.
நாளிதழ் ஒன்றினை விரும்பி வாங்கலாம் என நினைத்தேன்.

ஆனால், என்னிடம் சில்லறை நாணயம் இல்லை. எனவே, அதை விடுத்தேன். அப்போது,
ஒரு கருப்பினச் சிறுவன், என்னை அழைத்து, அந்த நாளிதழ் பிரதியைக் கொடுத்தான்.
என்னிடம் சில்லறை இல்லை எனக் கூறினேன். அவன் பரவாயில்லை ,
இலவசமாகக் கொடுக்கிறேன் என்றான்.
மூன்று மாதங்கள் கழித்து, நான் அங்கு சென்றேன்.

மறுபடியும், அதே கதை நடந்தது. அந்தச் சிறுவன் நாளிதளை இலவசமாகக் கொடுத்தான்.
ஆனால், நான் வாங்க மறுத்தேன். அவன், அவனுக்கு வந்த அன்றைய லாபத்திலிருந்து தருவதாகக் கூறி கொடுத்தான்.
*19 வருடங்கள் கழிந்தன.*
நான் பணக்காரன் ஆகிவிட்டேன்.

அந்தச் சிறுவனைக் காணும் ஆவல் எனக்கு வந்தது.
ஒன்றரை மாதத் தேடுதலுக்குப் பின் அவனைக் கண்டு பிடித்தேன்.
அவனைக் கேட்டேன்.
"என்னைத் தெரிகிறதா ?"
"தெரிகிறது. நீங்கள் புகழ் வாய்ந்த *பில்கேட்ஸ்*"
பல வருடங்களுக்கு முன்னால், இரண்டு முறை இலவசமாக நாளிதழ்களை வழங்கினாய் எனக் கூறினேன். தற்போது அதற்காக , நீ என்னவெல்லாம் விடும்புகிறாயோ, அவற்றைக் கைமாறாகத் தர விரும்புகிறேன் என்றேன்.

உங்களால் அதற்கு ஈடு செய்ய முடியாது. என்றான் அந்தக் கருப்பு இளைஞன்....
ஏன் ? என்றேன் நான்.
அந்த இளைஞன்

*"நான் #ஏழையாய் இருந்த போது* , *உங்களுக்குக் #கொடுத்தேன்* *
ஆனால், நீங்கள் பணக்காரர் ஆன பின்னே எனக்குக் கொடுக்க வருகிறீ்ர்கள்.*

*ஆகவே, நீங்கள் எவ்வாறு சரிக்கட்டமுடியும் ??? "* என்றான்...
*கருப்பு இளைஞன் தான் என்னை விடப்* *பணக்காரன் என்பதை* *உணர்ந்தேன்.""* *என்றார் பில்கேட்ஸ்.*
*கொடுப்பதற்கு நீ பணக்காரனாக இருக்க* *வேண்டுமென்பதோ,பணக்காரன் ஆகும்* *வரை காத்திருக்க வேண்டும் என்பதோ கிடையாது....*

*#உதவ வேண்டும் என்ற #குணத்திற்கு #கால, #நேரம் அல்லது #ஏழை, #பணக்காரன் என்பது கிடையாது*
#மகிழ்வித்து_மகிழ்வோம்...

பழனி பெரிய நாயகி அம்மன் கோயில்...

பழனி பெரிய நாயகி அம்மன் கோயில்:

16ம் நூற்றாண்டில் பல்வேறு கால கட்டங்களில் நாயக்க மன்னர்களால் புணரமைப்பு செய்யப்பட்ட “ஊர்க்கோயில்” “யானைக்கோயில்” எனப்படும் “பெரியநாயகி அம்மன்” கோவில் சிற்பங்கள், காண்போரை பரவசமடையச் செய்து தமிழர்களின் கலை மேன்மையை உலகுக்கு உணர்த்துவதாய் உள்ளது. இந்தச் சிற்பங்கள் இதுவரை உலகுக்கு கவனப்படுத்தப்படாமல் குடத்திலிட்ட விளக்காய் உள்ளன.

நவரங்க மண்டபத்தின் அமைப்பு:

சிற்பக்கலையின் மேன்மையைப் பறைசாற்றும் விதமாக அமைந்துள்ள நவரங்க மண்டபம் என்று அழைக்கப்படும் முன் மண்டபத்தில் 12 இராசிகளுக்கு 12 கலைநுட்பம் மிகுந்த மிகப் பெரிய தூண்கள் ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ளது. அதை சுற்றிலும் 27 நட்சத்திரங்களை குறிப்பிடும் 27 தூண்கள் மண்டபத்தின் மேற்கூரையைjjத் தாங்கி நிற்கின்றது. முற்றிலும் கருங்கல்லில் வடிவமைக்கப்பட்ட இம்மண்டபத்தைக் காணக் கண் கோடி வேண்டும். வெறும் கடவுளாக மட்டுமே பார்ப்பவர்களுக்கு அதில் உள்ள கலை நுணுக்கமும், நுண்ணிய வேலைப்பாடுகளும் தெரிய முடியாது போகலாம்.

தூண் சிற்பங்கள்:

மண்டபத்தின் மேற்கூரையில் 12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும் செதுக்கப்பட்டுள்ளது. அதற்குத் தகுந்தாற் போல் 12 உள்புறத் தூண்கள் அந்தந்த ராசிக்கு உரிய கடவுளர் உருவங்கள் தாங்கி கம்பீரமாக நிற்கின்றது. ஒவ்வொரு தூணிலும் ஒரு புராணக் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது.

மேசராசி தூணில் ரிசபக் காளை வாகனத்தில் அமர்ந்து எதிர் தூணில் உக்கிரமாய்க் காட்சி தரும் நரசிம்மரை சாந்தப்படுத்துவது போன்று சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மிதுனராசி தூணில் மிதுன ராசிக்கு உரிய ரதியும், மன்மதனும் கரும்பு வில்லோடு காட்சி தருகின்றனர்.

கடகராசிக்காரராகிய முருகக்கடவுள் கோவனத்துடன் தண்டு ஊன்றி நிற்கும் காட்சி முன்னோர்களின் சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டு. இத்தூணில் மேற்குப் பக்கம் அர்த்தனாரீஸ்வரரும், கிழக்குப் பக்கம் பூக்கூடையுடன் முருகன் அடியாரும் உள்ளனர். பூக்கூடை பனை ஓலையால் செய்யப்பட்டது போலவே நுட்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது.

சிம்மராசிக்கு உரிய தூணில் பத்திரகாளியம்மன் தலைகவிழ்ந்து காட்சியளிக்கின்றாள். அதற்கு நேர் எதிரில்

மகரராசித் தூணில் சிவதாண்டவக் காட்சி அருமையாய் செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தின் கலை நுணுக்கம் காண்போரை வியப்படையச் செய்யும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளாது.

துலாம் ராசித் தூணில் சூரியன் தேர் பூட்டிய ரதத்தில் செல்வது போன்ற சிற்பமும் சூரியனின் முழு உருவமும் 6 அடி உயரத்தில் கலை நுணுக்கத்துடன் வடித்துள்ளது பண்டைய தமிழ் மக்களின் கலைத் திறத்திற்கு எடுத்துக்காட்டு .

கன்னிராசி தூணில் வாமன அவதாரக் காட்சி செதுக்கப்பட்டுள்ளது.

விருச்சிக ராசித் தூணில் சந்திரன் குதிரை பூட்டிய தேரில் ஏறிச் செல்வது போன்று முழு உருவம் தத்ரூபமாய் வடிவமைக்கப்பட்டுள்ள காட்சியைக் காண கண் கோடி வேண்டும்.

நடராஜரும், மீனாட்சியம்மையும் மகர ராசித் தூணிலும் நடராஜர் பாதத்திற்கு கீழ் காரைக்கால் அம்மை பேய் உருவம் கொண்ட காட்சி சிற்பக்கலையின் அழகுக்கு அழகு.

கும்ப ராசிக்கு உரிய தூணில் சுப்பிரமணியர் உருவமும் வள்ளி, தெய்வானை உருவங்களும் கலையழகுடன் செதுக்கப்பட்டுள்ளது.

கல்லிலே கலை வண்ணம் கண்ட தமிழனின் கலை நுட்பத்திற்கு எடுத்துக்காட்டாய் உமையொரு பாகன் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. ஒரே கல்லில் சக்தியும் , சிவனும் அர்த்தனாரீஸ்வரராக செதுக்கப்பட்டுள்ளது கலை நுட்பத்திற்கு எடுத்துக்காட்டாகும்.

நடுவில் உள்ள தூண்களில் இக்கோயில் சிற்பங்கள் செதுக்க உதவிய அரசர்கள், அவர்களின் மனைவிமார்கள், மன்னர்களின் தளபதிகள் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. கலைக்கண் கொண்டு நோக்கின் இவர்கள் உண்மையிலேயே நிற்பது போன்ற காட்சி புலப்படுகின்றது.

வெளிப்பிரகாரத்தில் உள்ள தூண்களில் நுழைவு வாயில் பக்கத்தில் உள்ள தூணில் மீனாட்சியம்மை திருமணக் காட்சியும் அதை தென்திசை அகத்தியர் பார்ப்பது போன்ற காட்சி 30 அடி அளவில் ஆறு தூண்கள் அப்பால் செதுக்கப்பட்டுள்ளது. கட்டிடக் கலை வடிவமைப்பிற்கு எடுத்துக்காட்டாகவும் அறிவியல் தொழில் நுட்பத்திற்கு சான்றாகவும் உள்ளது.

அரசர்கள் புலியை வேட்டையாடிய காட்சி பல தூண்களில் இயற்கையாக அமைக்கப்பட்டுள்ளது.

சனிபகவான் காக்கை வாகனத்தில் அமர்ந்திருக்கும் காட்சி சிறப்பானதாகும்.

சிவபெருமானின் அடியையும், முடியையும் காண பன்றியாகவும், அன்னமாகவும் சென்ற காட்சியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கலை நுணுக்கத்துடன் வெளிநாட்டில் இச்சிற்பங்கள் இருந்திருக்குமேயானால், அவர்கள் இந்தச் சிற்பங்களின் பெருமையை உலகெங்கும் பரவச் செய்திருப்பர். எதையும் பக்தி கண்ணோட்டத்துடனே பார்க்கும் நம் மக்கள் அச்சிலைகளில் கடவுளை மட்டும் பார்த்தார்களேயன்றி அதில் உள்ள கலை நுட்பத்தையும், சிற்பியின் கலைத் திறனையும், அரசர்களின் முயற்சியையும் காணவில்லையாதலால் இச்சிற்பக் கலையின் பெருமை உலகோர்க்கு தெரியாமல் போய்விட்டது.

ஒருசில இடங்களில் ஆண், பெண் உடல் உறவை சித்தரிக்கும் சிற்பங்கள் சிதைக்கப்பட்டு காணப்படுகின்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிற்பங்கள் இங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பானதாகும். மன்னர்கள் புலியை வேட்டையாடிய காட்சி, காட்டுப் பூனை அன்னப்பறவையை வேட்டையாடிய காட்சி தத்ரூபமாக வடிவமைக்கபட்டுள்ளாது. இக்கோயிலின் நவரங்க மண்டபத்திலும் அர்த்த மண்டபத்தில் எல்லாக் கடவுளர் சிற்பங்களும் உள்ளது.

இக்கோயில் ஒரே மன்னர்களால் கட்டப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை எனலாம். அர்த்த மண்டபம் திருமலை மன்னரால் கட்டப்பட்டிருக்கலாம். அர்த்த மண்டப முன்புறத் தூண்களில் ஒரு தூணில் அரசரும் அவரது மனைவிமார்கள் இருவரும் மற்ற இரண்டு தூண்களில் அரசர் மற்றும் அவரது மனைவிமார்கள் செதுக்கப்பட்டுள்ளனர். அரசருக்குப் பக்கத்தில் உள்ள தூணில் அரசரின் குல குருவின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. திருமாலின் அவதார காட்சிகள் பல தூண்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

திருமால், இந்திரன், பலராமன், அனுமன், நரசிம்மர், வாமனர், வராகம் என பல சிற்பங்கள் தூண்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அர்த்த மண்டபம் எனப்படும் உள்மண்டபத்தில் 12 அடி உயரத்தில் 84 தூண்களில் பல நுண்ணிய இயற்கை காட்சிகள் வியக்க வைக்கும் வண்ணம் செதுக்கப்பட்டுள்ளது.

ஒரே கல்லில் முருகனின் வாகனமாகிய மயில், யானை, குதிரைகள் ஆகியவை நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சிற்பமும் ஒவ்வொரு புராணச் செய்தியைக் கூறுவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 12 அடி உயரமுடைய தூண்களின் மேல் யாழிகள் செதுக்கப்பட்டு மேற்கூரையைத் தாங்குவதாக உள்ளது.

யாரு " அட டிரைவரா ...என ஏளனமாகவே எங்களை பார்க்கும் சராசரி பொது மக்களுக்கு டிரைவர் நான் எழுதுவது......

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய டரைவர்களின் நிலமை

  யாரு " அட டிரைவரா ...என ஏளனமாகவே எங்களை பார்க்கும் சராசரி பொது மக்களுக்கு டிரைவர் நான் எழுதுவது......

   உங்கள் வழிப்பயணங்களில் தங்கள் வாழ்க்கைப்பயணங்களை நடத்தும் எங்களையும் சற்று சிந்தியுங்கள்....😭😭

   ஏதாவது ஒரு இடத்தில் விபத்து நடக்கும்போது முதலில் பாதிப்படைவது டிரைவர்தான் ,🙍🏼‍♂ அதே சமயம் முதலில் பழிசொல்லிற்கு ஆளாவதும் டிரைவர்தான்....🙍🏼‍♂

  ஒரு வருடத்திற்கு முன்பு வட இந்தியாவில் புனிய யாத்திரையில் தன் உயிரை பணயம் வைத்து ஐம்பது பயணிகளை காப்பாற்றி தன் உயிரை இழந்தவனும் டிரைவர்தான்....🙍🏼‍♂

  தினந்தோறும் வாடகையிலேயே வாழ்க்கையை கழிக்கும் எங்களின் துயரக்கதையை ஒருநாளாவது கேட்டதுண்டா....????😭

நாங்கள் கேட்கும் வாடகையை நீங்களும் தர மாட்டீர்கள் , எங்கள் மீது விதிக்கும் வரியை அந்த அரசும் குறைக்காது....

தினம்தோறும் டீசல்💧 விலையை தனியார் நிறுவனங்கள் ஏற்றிக்கொள்ளலாம் தவறில்லை  , ஆனால் நாங்கள் வருடம் ஒருமுறை வாடகையில் ஐம்பது ஏற்றினால் பாவம் " அந்த கார்காரன் வாடகையில் கொள்ளையடிக்கிறான் " என்று விடுவீர்கள்....💴

  ரோடே இருக்காது ,ஆனால் ரோடு டேக்ஸ் கட்ட வேண்டும்...பல நிறுவனங்கள் புகை வெளியிடலாம் தவறில்லை , ஆனால் வருடம் ஒரு முறை நாங்கள் புகை பரிசோதனை செய்ய வேண்டும்....

  வாடகை வாகனத்தில் பயணிக்கும்போது ஒரு முறையாவது வண்டியின் டயர் விலையை கேட்டிருக்கிறீரா....??? மாட்டீர்கள்...

எங்களுக்கு இந்த தொழிலில் மிஞ்சுவது எங்கள் உயிரும்  , அந்த உயிர் போனால் எங்களை எரிக்க அந்த டயரும்தான்....

  அரசு சொன்ன அளவில் பாரம் ஏற்றினால் டீசலுக்கு கூட கட்டாது , அதிக பாரம் ஏற்றினால் வரும் பணம் போலீஸ்க்கு லஞ்சம் கொடுக்கவே பத்தாது....

பயணிக்கும் உங்களுக்கும் சேர்த்து காப்பீடு எவ்வளவு தெரியுமா....??? சிறிய ரக வாகனத்திற்கே ரூபாய் இருபதாயிரம் தொடும்....அது போக F.C லொட்டு லொஸ்கு...இதல்லா உங்களுக்கு எப்படி தெரியும்....நீங்கதா சொல்ர வாடகைல நூறு ரூபா கொறச்சு கொடுக்கர ஆளாச்சே.....

  ஆமா...வாடக வண்டீல போரப்போ ஒரு முறையாவது அந்த சுங்க சாவடி பக்கம் எட்டி பார்த்ததுண்டா....அவ கேட்கர வரிய பாத்தா , இந்த வண்டிய அவனுக்கே கொடுத்தர்லானு தோனும்....

   ஒரு லிட்டர் டீசல் அடுச்சா 15 கி.மீட்டர் கூட தாண்டாது, ஆனா உங்க கிட்ட டீசலுக்கு கட்ர மாதிரியாவது கொடுங்கனு வாடகைக்கு கெஞ்சனம்ல....

இவ்வளவு கஷ்ட்டப்பட்டு இந்த தொழில ஏன் செய்ரீங்கனு கேட்கரீங்களா....???

எங்களுக்கும் ஒரு ஜான்ல வயிரு இருக்கே அதுக்குதான்....இத விட்டா வேற தொழில் தெரியாது...

டிரைவனு சொல்லிபாருங்க ஒரு பய பொண்ணு தரமாட்டா...ஆனா எல்லா கல்யாணத்திலையும் பொண்ணு , மாப்பிலைய உட்கார வெச்சுட்டு நாங்கதான் வண்டி ஓட்டுவோம்....அந்த கஷ்டமெல்லாம் உங்களுக்கு எங்க புரிய போகுது...உங்களை பொறுத்த வரை டிரைவர்ங்கரவ காசு கொடுத்த வண்டி ஓட்ர மாடுதானே.....

  உங்களுக்காக எத்தனை நைட் கண்முழுங்சு வண்டி ஓட்ரோம் , ஒரு டைம் டீ சாப்பிடராயானு கேட்ருப்பீங்களா....????

  மீனவர் போலதான் எங்க பொழப்பும் தொழிலுக்கு போனா , உயிருக்கு உத்திரவாதம் கிடையாது...எமனோட அக்ரிமென்ட் போட்டு பொழைக்கர பொழப்பு இது...

F.C  இன்சூரன்ஸ் , டயர் , டீசல் விலை ,போலிஸ் , ஆர்.டி.ஓ , பர்மிட் , ரோட் டேக்ஸ் , ஆயில் சர்வீஸ் , வெங்காயனு இதல்லா நினைக்கும் போது இந்த தொழில விட்டரலானு தோனு , ஆனா வேற தொழில் தெரியாதே.....

  குடும்பத்த நினைச்சுப் அப்படியே போக வேண்டியதுதான்....வண்டி வேகமா போர அளவிற்கு எங்க வாழ்க்கை போரதில்லை , நாங்க வாங்குன வரம் அப்படி....

இத படுச்சுச்சு  டிரைவனா கொஞ்சம் மரியாதை கொடுத்தீங்கனா அதுவே போதும்...ஏன்னு கேட்கரீங்களா....????
      
    நாங்களும் மனிதர்கள்தான்....
Driver's & Owner's
🚕🚌🚎🚖🚖😭😭😭😭🚖🚖😢😢🚕🚕🚕

BJP க்கு ஓட்டு போடாதீங்க...😌 வாங்கிய விலையில் பெட்ரோல் விற்க வேண்டும் என்று கேள்வி கேட்கும் நீங்கள் ...

BJP க்கு ஓட்டு போடாதீங்க...😌
வாங்கிய விலையில் பெட்ரோல் விற்க வேண்டும் என்று கேள்வி கேட்கும் நீங்கள் ...

1. பதினான்கு  ரூபாய்க்கு கோதுமை வாங்கி மக்களுக்கு இரண்டு ரூபாய்க்கு ஏன் குடுக்கிறது அரசு என்று கேட்கவில்லையே?

2.  ரூபாய் 50 க்கு கெரஸின் வாங்கி ரூபாய் 15 க்கு ஏன் குடுக்கிறது என்று கேட்கவில்லையே?

3.  ரூபாய் 49 க்கு சீனி வாங்கி ரூபாய் 26 க்கு ஏன் குடுக்கிறது என்று கேட்கவில்லையே?

4.  ரூபாய் 25 க்கு அரிசி  வாங்கி இலவசமாக ஏன் குடுக்கிறது என்று கேட்கவில்லையே?

5. ஆறு கோடி கழிப்பறைகள் இலவசமாக ஏன் கட்டியது என்று கேட்கவில்லையே?

6.  மூன்று கோடி ஏழைகளுக்கு இலவச கேஸ் கனக்ஷன் ஏன் குடுத்தது என்று கேட்கவில்லையே?

ஜெயலலிதா அனைவருக்கும் அம்மா ஆகமுடியும்;
சோனியா தேசத்திற்கே மருமகள் ஆக முடியும் ;
மாயாவதி சகோதரி ஆக முடியும்;

நேரு மாமா ஆக முடியும்
காந்தி தேசப்பிதா ஆக முடியும்.
ஆனால்....
மோடி மட்டும் தேசத்தின் மகன் ஆகக்கூடாது...

இவ்வளவு வெறுப்பு ஏன்?

உங்கள் கோவம் பெட்ரோல் விலை மீது இல்லை.

உங்களால் முன்னைப் போல பொய் பில்களை காட்டி வரி ஏய்ப்பு செய்ய முடியவில்லை.

ஜிஎஸ்டி யில் முறையாக கணக்கு  காண்பித்து வியாபாரம் செய்ய மனசே வரமாட்டேனென்கிறது.

இன்னமும் "அவன் திருடுகிறான்,
இவன் திருடுகிறான் " என்று சொல்லிச் சொல்லி *உங்களை சரி செய்து கொள்ள மறுக்கிறீர்கள்*

உங்களால் மக்கள் பணத்தை கொள்ளையடிக்க முடியவில்லை.

இலட்சக்கணக்கான போலி குடும்ப கார்டுகள் ஒழிக்கப்பட்டு அரசு மானியம் இப்போது நேரடியாக அவரவரது வங்கி கணக்கில். இதனால் மட்டும் *ஒரு லட்சம் கோடி ரூபாய் மக்களுக்கு (அரசுக்கு) வருமானம்.*

நான்கு ஆண்டுகளுக்கு முன் 8 மணி நேர மின்வெட்டு தமிழகமெங்கும்...
அசுர கதியில் உற்பத்தி , தேசத்தின் பிரதான கிரிட்டுகளோடு மின் இணைப்புகளை  பலப்படுத்தியதில்

*இன்று ஜீரோ மின்வெட்டு.*

60 ஆண்டாக மின்சாரம் செல்லாத 18,000 கிராமங்களுக்கு மின் இணைப்பு.

ஐந்து இலட்ச ரூபாய்க்கு இலவசமாய் மருத்துவ காப்பீடு.... ஒவ்வொரு சாமானியனுக்கும்.

தைரியமாக இனி எந்த மருத்துவமும் பார்க்கலாம்.
ஜெனிரிக் மருந்துகள், ஸ்டென்ட், மற்றும் மருத்துவ சம்பந்தப்பட்ட விலை வீழ்ச்சி.

தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஊரகசாலை 73% வளர்ச்சி.

ரயில்வே நிர்வாகம் சீரமைப்பு. முதலீடு அதிகரிப்பு.

நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தல். அண்டை நட்பு நாடுகளுடன், வளர்ந்த நாடுகளுடன் மேம்பாட்ட உறவுக.

விவசாயிகளூக்கு தட்டுபாடில்லா உரம், இஸ்ரேல் தொழில் நுட்பம், இடுபொருள் சிலவிற்கு மேல் 150% கொள்முதல் விலை.  E-commerce மின் வர்த்தகம்.

இருபத்து நாலு மணி நேரமும் இயங்கும் பிரதமர். *சொத்து சேர்க்க அவருக்கு குடும்பமும் இல்லை.*

காக்கா பிடிக்கும் , சலாம் போடும் ஏன்... துறை அறிவே இல்லாத பொழுதும் "ஆட்சியை கவிழ்த்து விடுவார்கள் " என்ற பயத்தில் அரை வேக்காடுகளை கூட மத்திய அமைச்சராக  ஆக்கும் அசிங்கம் மருந்துக்கும் இல்லை..

உங்கள் கொள்ளை நின்றுவிட்டது அல்லது தடுமாறுகிறது.  

அந்த கோபம் இப்போது மோடி மீது...
மற்றவர்கள் போல் குடும்பத்திற்காக கொள்ளையடித்து சொத்து சேர்த்தாரா. அவர்கள் குடும்பத்தினர் இன்றும் ஆட்டோவில் பயணம் செய்து வருகின்றனர்.
மோடி ஒரு நாளுக்கு16 முதல்18 மணி நேரம் நாட்டுக்காக நாட்டு மக்கள் வளர்ச்சிக்காக உழைக்கிறார்.

இன்னுமொன்று...

அப்படியே பெட்ரோல் விலையை நீங்கள் சொல்வதையும் தாண்டி ஐம்பது ரூபாய்க்கே கொடுத்தாலும் வாழ்த்தி விடவா  போகிறீர்கள்...?
வாக்குச்சீட்டு போலி என்றோ ,
வாத்து முட்டைகள் கறுப்பு என்றோ கூவத்தானே போகிறீர்கள்...?

முதலில் பார்வையை *முடிந்தால்* சரி செய்யுங்கள்.

தப்புத், தப்பாகவே எதையும் பார்த்து விட்டால் , நூறு சதம் சரியானது கூட தப்பித்து விடும் பார்வையிலிருந்து.....

உங்களது ஆவேச பேச்சுக்கும் ,
ஜாதிய இனமான வீச்சுக்கும் உணர்ச்சி வசப்பட்டு வீழ்ந்துவிடும் " பச்சைத் " தமிழரல்ல இனி இவர்கள்...

என்ன நடந்திருக்கிறது?
எப்படி நடந்திருக்கிறது ?
என்று மாற்றங்களை கண்கூடாக பார்த்து , உணர்ந்து , புரிந்து கொண்ட பிறகே ஓட்டுப் போடும் " மெச்சும் " தமிழர்கள் ...

உங்களை மாற்றிக்கொள்ள முடியும் என்றால் மாறுங்கள்
உங்கள் வருங்கால வாழ்க்கை நன்றாக இருக்கும்.

"மோடி" *மந்திரி அல்ல.....!*

அவர் ஒரு
*கண்டிப்பான பள்ளிக்கூட வாத்தியார்.....!*

நன்றி நண்பர்களே.

#modi #bjp #tnbjp #modipm

சிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது..! ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள்...

#சிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது..! ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள்

ஆன்மிகத்தில் நாட்டம் உடையவர், ரஜினி. தி.மு.க.,வினரோ, ஹிந்துக்களை இழிவாக பேசுவதையும், யாகசாலை மற்றும் பூஜைகள் குறித்து தரக்குறைவாக விமர்சிப்பதையும், வழக்கமாக கொண்டுள்ளனர்.

சமீபத்தில், விழா ஒன்றில் பேசிய, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், யாகசாலை பூஜை குறித்து, சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இதற்கு, ஹிந்துக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், ஸ்டாலினின் ஹிந்து விரோத பேச்சு, ரஜினி ரசிகர்களிடையே, கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. ரசிகர்கள், தங்களின் முகநுால் பக்கங்களில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு, அதிக தகவல்களை பகிர்கின்றனர். குறிப்பாக, 'சுடலை' என்ற பெயரில், ஸ்டாலினை வறுத்தெடுக்கின்றனர்.

பேட்ட சினிமாவில் ரஜினி, 'சிங்காரம் நீ என்ன தொட்டிருக்கக்கூடாது. ஆனா, தொட்டுட்ட... உன்ன விட்டா, நீ தொடர்ந்து வந்துட்டே இருப்ப. உன்ன விட மாட்டேன்' என, வசனம் பேசுவார்.தற்போது, ஸ்டாலினை, சுடலை என்ற பெயருக்கு பதிலாக, 'சிங்காரம்' என குறிப்பிட்டு, ரஜினி ரசிகர்கள் முகநுாலில், மீண்டும் வம்புக்கு இழுத்துள்ளனர்.

அதில், 'ஹிந்துக்களுக்கு விரோதமாக பேசும், ஸ்டாலினுக்கு, லோக்சபா, 18 சட்டசபை தொகுதி, இடைத்தேர்தல் மற்றும் வரப்போகும் சட்டசபை பொதுத் தேர்தலில், தகுந்த பாடம் புகட்ட வேண்டும். அதற்காக, தலைவர் ரஜினி வழியில், ஆன்மிக அரசியல் செய்வோம். 'தலைவர் ஏற்கனவே அறிவித்தபடி, மக்கள் நலன், நதிகள் தேசிய மயம் கொள்கைகளை, தேர்தல் வாக்குறுதியாக தரும் கட்சிக்கே, 40 லோக்சபா, 18 சட்டசபை இடைத் தேர்தலில் ஆதரவு தருவோம். ஒரு போதும் ரஜினி ரசிகன் ஓட்டு, தி.மு.க.,வுக்கு அல்ல' என, பதிவிட்டு வருகின்றனர்.

ஹிந்துக்களுக்கும், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு எதிராகவும், காய் நகர்த்தி வரும் கட்சிகளுடன், தி.மு.க., கூட்டணி அமைத்து, தேர்தல் களம் காண்பதால், ரஜினி ரசிகர்களின் ஆதரவு, தி.மு.க.,வுக்கு இல்லை என்ற மனநிலை, ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. 'ரஜினி ரசிகர்களின் கோபம், தேர்தலில் வெளிப்படப் போவது உறுதி. இதன் வெளிப்பாடே, 'சிங்காரம்' என்ற பெயரில், ஸ்டாலின் குறித்தும், கூட்டணி கட்சிகள் குறித்தும், முகநுாலில், விமர்சனம் செய்யப்படுகிறது' என, மூத்த ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமலர் பதிவு

GetoutNagasamy?

#GetoutNagasamy

“தமிழ் இலக்கியம் அனைத்தும் சமஸ்கிருத நூல்களின் தழுவல்”என்று எழுதிய ஒருவரைத் தேர்ந்தெடுத்து,தமிழ் செம்மொழி ஆய்வு மையத்தின் - The Central Institute of Classical Tamil (CICT) ‘’தலைவராக’’பதவி கொடுப்பார்களா?
கொடுப்பார்கள்...!
திரு . இரா.நாகசாமி என்பவருக்குக் கொடுத்துள்ளார்கள்..!

சமஸ்கிருத வித்துவான் இராமச்சந்திரனின் மகனாக 1930ல் பிறந்தவர் நாகசாமி. இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத மொழியில் முதுநிலைப் பட்டப்படிப்பும்,டெக்கான் கல்லூரியில் தொல்லியல் தொடர்பான ஆய்வில் முனைவர் பட்டமும் பெற்றவர்.
தொடர்ந்து ,இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தில்  பயிற்சி எடுத்துவிட்டு 1959 முதல் 1963 முடிய சென்னை அரசு அருங்காட்சியகத்தின் பாதுகாவலராக (curator) பணியில் சேர்ந்தார்.
அத்தோடு ,1963 முதல் 1966 முடிய தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் உதவி சிறப்பு அதிகாரியாகவும், பின்னர் 1966 முதல் 1988 முடிய தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முதலாவது இயக்குநராகவும் இருந்தவர்.
80 வயதை கடந்த அவரின் இந்திய வரலாறு, தொல்லியல் மற்றும் கல்வெட்டு எழுத்துக் குறிப்பு அறிஞரான இவரின் வரலாற்றுப் பங்களிப்பும்,தமிழ் மொழிக்கான பங்களிப்பும் மதிக்கத் தக்கதாகத்தான் இருந்தது.....அவர் அந்த புத்தகம் எழுதும் வரை...!

ஆம்...2012ல் ‘’தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தின் கண்ணாடி” (The Mirror of Tamil and Sanskrit)என்ற தலைப்பில் இவர் எழுதிய ஆங்கில நூலில் ‘’தமிழ் மொழி எழுத்து முறை’’ பிராமணர்களிடமிருந்து பெற்றது என்றும்,தொல் காப்பியம், புறநானூறு, அகநானூறு சிலப்பதிகாரம் முதலியவை சமஸ்கிருத நூல்களைப் பார்த்து எழுதப்பட்டவை என்றும்,சங்க இலக்கியங்கள் அனைத்தும் சமயச் சார்புடையவை ,என்றும் பதிவு செய்கிறார்.
இவை எல்லாவற்றையும் விடத் தொல்காப்பியம் ஓர் இலக்கண நூலே அன்று என்றும் எழுதியுள்ளார்.
அத்தோடு திருக்குறள் பற்றிய மற்றுமொரு நூலில் நான்கு வர்ணத்தை கொண்டு “திருக்குறளை”கட்டமைக்கும் அவரது செயல் சிறிதும் நாணயமில்லாதது ; கண்டனத்துக்குரியது.
அத்தோடு , தமிழை ஒரு கிளை மொழி ( Dialect) என்கிறார். பழங்குடிகளின் ஒரு கிளைமொழியாக (Dialect) இருந்த தமிழ் சமஸ்கிருதத்திலிருந்து கடன் பெற்றுத்தான் செம்மொழியாக வளர்ந்தது என்கிறார்.

அத்தோடு, இன்று நம்மிடம் உள்ள புத்தர்,அசோகர் காலத்தைப் பற்றிய வரலாற்று ஆதாரங்களைக் கூட தவிர்த்து விட்டு அதற்கு எதிர்மறையான கருத்துகளையும் பதிவிட்டுள்ளார். மொத்தத்தில் இந்த நூலின் நோக்கம் சமஸ்கிருதத்தை தூக்கிப்பிடிப்பதே !  சமஸ்கிருதத்தை ஒரு மொழியாக மதிக்கிறோம்! ஆனால் அதிலிருந்துதான் தமிழ் பிறந்தது என்ற அவரின் கருத்தை வன்மையாக்க்  கண்டிக்கிறோம்!
இந்நூல் வெளிவந்த பின் தமிழ் அறிஞர்கள் பலரும்,இதற்கு எதிரான கருத்துகளை ஆதாரப்பூர்வமாக வெளியிட்டுக் கண்டனக் குரல்  எழுப்பினார்கள் ! எழுப்பி வருகிறார்கள் ..!

இந்த நிலையில் தான்..
இவரது பணிகளைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு 2018 ஆம் ஆண்டு”பத்ம பூசண்’’விருதை வழங்கியது. தமிழைத் தாழ்த்தி, சமஸ்கிருதத்தை தூக்கிப்பிடித்த அவருக்கு ‘’பத்மபூசண் பட்டம்’’ கொடுத்த கையோடு .....
இன்று தமிழ் இலக்கியம் அனைத்தும் சமஸ்கிருத நூல்களின் தழுவல் என்று எழுதிய அவரைத் தேர்ந்தெடுத்து தமிழ் - செம்மொழி ஆய்வு மையத்தின் - The Central Institute of Classical Tamil (CICT) ' செம்மொழி ஆய்வு மைய தலைவர் பதவி கொடுத்திருப்பது முரண்பாட்டின் உச்சம்..!

உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் இதற்கு எதிர்ப்பைக் காட்ட அனைவரும் ஒன்று சேர்ந்து கையெழுத்திட்டு தங்கள் எதிர்ப்பை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்..!
அதற்கான போராட்டத்தை முன்னெடுத்து பெரியவர் திரு.நாகசாமி அவர்களை பதவி நீக்கம் செய்யும் வரை விடக்கூடாது..!
தேர்தலில் போட்டியிடும் எழுத்தாளர்கள் மற்றும்  வேட்பாளர்கள்  தங்கள் தேர்தல் அறிக்கையில் இரா.நாகசாமியை பதவியில் அமர்த்திய மத்திய அரசை கேள்வி கேட்க வலியுறுத்துவோம்……!

#GetoutNagasamy

பொன்வண்ணன்.

கோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....

கோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு.... நீங்கள் உணவுப்பிரியரா ? சுவையான உணவிற்கு முக்கியத்துவம் கொடுப்பவரா கோவை ம‌ற்றும் ...