பட்டேல் சிலையை உருவாக்கியது யார்?

பட்டேல் சிலையை உருவாக்கியது யார்?

இப்பொழுது இணையத்தில் ஒரு காமெடி ஓடிக்
கொண்டு இருக்கிறது. அது என்னவென்றால்
இந்தியாவின் ஒற்றுமை அடையாளம்  படேல் என்றுக்கூறி கொண்டு படேல் சிலையை சீனாவை
வைத்து உருவாக்கி இந்தியாவையே கேவலப் படுத்தி விட்டார்கள் என்று ஒரு குரூப்  அள்ளி விட்டுக்
கொண்டு இருக்கிறது.

அவர்களின் கண்ணுக்கு எல்லாமே சீனாவாக தானேதெரியும். தாய் நாட்டு பாசத்தை அவ்வளவு சுலபமாக யாரும் விட்டு விட முடியாது.. அதனால் தான்படேல் சிலையை  சீனா உருவாக்கி கொடுத்த துஎன்று கூசாமல் கூறுகிறார்கள்

குஜராத் தில் இன்று திறக்கப்பட்ட  182 மீட்டர் அதாவது 597 அடி உயரம் கொண்ட வல்லபாய்
படேல் சிலையை  வடிவமைத்தவர். பத்மஸ்ரீ  ராம்
வாஞ்சி சுதர் என்கிற மராட்டிய ர்.இவருக்கு வயது
93 .இவருடைய குடும்பமே  சிற்பிகள் தான்.  உலகின்
முதல் ஆர்க்கிடெக்ட்  யார்  என்றால் அது இந்திய
புராணங்கள் போற்றும் மயன் விஸ்வகர்மா தான்.

ராம் வாஞ்சி சுதனும் விஸ்வகர்மா வழியில் வந்த
ஒரு மாபெரும் சிற்பி.இந்திய அரசின் ஆர்க்கி யாலஜி டிபார்ட்மெண்ட் டில் வேலை பார்த்து பிறகு
அதில் இருந்து வெளிவந்து தன்னுடைய கலைத்தி றமைக்கு சவால் விடும் வேலைகளை செய்ய
ஆரம்பித்தார்.

இவர் செய்த முதல் வெலையே சம்பல் நதிக்கரையில்
மத்திய பிரதேசத்தில் கட்டப்பட்ட  காந்தி சாகர் அணையில்  45 அடி உயரத்தில் கட்டப்பட்ட  சம்பல்
தேவி சிலை தான். இதை அடுத்து நிறைய சிறிய
பெரியளவில் சிலைகளை அணைகளில் ஐயா
ராம் சுதர் அவர்கள் அமைத்து கொடுத்து ள்ளார்கள்
இதுவரை 50 க்கும் மேற்பட்ட சிலைகளை வடிவமை த்து உள்ளார்.

இதனால் தான் நர்மதா நதிக்கரையில் சர்தார் சரோவர் அணையில் வல்லபாய் படேல் சிலையை
வடிவமைக்கும் பொறுப்பை மோடி ராம் சுதன் அவர்
களுக்கு வழங்கினார்.மோடி என்றைக்கும் ஒரு
செயலை செய்தார் என்றால் அது உலக வரலாறு
இருக்கும் வரை அந்த செயல் இருக்க வேண்டும்
என்று நினைத்து செயல் படுபவர்.

அதனால் தான் வல்லபாய் படேல் சிலையை
அமைக்க போகிறோம் என்று முடிவெடுத்த உடனே
இது வரை உலகில் உள்ள சிலைகளின் உயரங் களை விட அதிக உயரத்தில் படேல் சிலை இருக்க
வேண்டும் என்று நினைத்தார்.

இதுவரை உலகில் உயரமான சிலை என்கிற
பெருமையை சீனாவில் இருக்கும் ஸ்பிரிங் டெம்பில்
புத்தர் சிலைக்குத்தான் இருந்தது. இந்த சிலையின்
மொத்த உயரமே 503 அடி தான் இதில் பீடம் மட்டுமே
82 அடியாகும்.இதனால் புத்தர் சிலையின் உயரம்
420 அடி மட்டுமே.

ஆனால் படேல் சிலை 597 அடியாவும். அதாவது. இப்பொழுது சீனாவில் இருக்கும் ஸ்பிரிங் டெம்பில்
புத்தர் சிலையை விட 100 அடி உயரம் ஜாஸ்தி. இன் னொரு முக்கிய மானது.என்னவென்றால் அமெரி க்காவின் லிபர்டி சிலையை விட படேல் சிலை இரு மடங்கு உயரமானது...சூப்பரல.

இப்போதைக்கு உலகிலேயே உயர்ந்த சிலை
எது என்றால் அது நம்முடைய படேல் சிலை தான்
இதை முறியடிக்க இன்னும் பல வருடங்கள் ஆகலாம். ஆகாமல் கூட போகலாம். எது வென்றா லும் இன்னும் 10  வருடங்களுக்கு உலகின் உயர்ந்த
சிலை என்று வல்லபாய் படேல் தான்  இனிஉலகில்
உயர்ந்து நிறக போகிறார்.கூடவே இதற்கு அடிக்கல்
நிறுவி திறந்து வைத்தவர் மோடி என்கிற பெயரும்
உலக வரலாற்றில் இணைந்து இருக்கும்.

இன்னொரு சாதனையும் படேல் சிலைக்கு இருக்கி றது.அது என்னவென்றால் இன்றைக்கு படேல்
சிலையை சீனா தான் உருவாக்கியது என்று
அள்ளி விடுகிறார்கள் அல்லவா..அந்த சீனாவில்
உள்ள இதுவரை உலகின் உயர்ந்த சிலை என்று
இருந்த ஸ்பிரிங் டெம்பில் புத்தர் சிலையை
உருவாக்க 11 ஆண்டுகள் ஆனது.ஆனால் புத்தர்
சிலையை விட 100 அடி உயரம் கொண்ட படேல்
சிலையை ஜஸ்ட்  33  மாதங்களில் உருவாக்கி
சாதனை படைத்துள்ளது எல்& டி நிறுவனம்.

எல்& டி நிறுவனம் எந்த நாட்டு கம்பெனி என்று
எல்கேஜி குழந்தை களுக்கு கூட தெரியும் பொழுது
இடது சாரி அறிவு ஜீவி கூட்டங்கள் படேல் சிலையை
சீனா தான் உருவாக்கி யது என்று உளறி வருவதை
பார்க்கும் பொழுது பரிதாபமாக இருக்கிறது.எல்&டி
நிறுவனம் மகாராட்டிரா வில் 1938 ல் உருவாக்க ப்பட்ட இந்திய தனியார் நிறுவனம்.

இந்த வல்லபாய் படேல் சிலையை வடிவமைத்தவர்
மும்பையை சேர்ந்த ஐயா பத்மஸ்ரீ ராம் சுதர் மற்றும்
அவருடைய பையன்கள் தான் என்றாலும் அதை
உருவாக்கிய ப்ராஜெக்ட் மேனஜர் .இன்னொரு குட்
நியூஸ் தெரியுமா? முகேஸ் ராவேஸ் இருப்பது
சென்னை மணப்பாக்கம்  பூந்தமல்லி ரோட்டில்
உள்ள எல்& டி நிறுவன ஆபீசில் தான் இரண்டாவது
மாடியில் இருக்கிறார்.

சந்தேகம் இருப்பவர்கள் சென்னை பூந்தமல்லி
ரோட்டில் உள்ள எல்&டி ஆபிஸ் சென்று எப்படி
சிலை உருவானது என்று கேட்டுக் கொள்ளலாம்

சிலையைப்பற்றி முகேஷ் ராவல் என்ன கூறுகிறார்
தெரியுமா? தினமும் 200 பேர் தொடர்ந்து வேலை
செய்தார்களாம். மத்திய பிரதேசம் குஜராத் மாநில
எல்லைகள் சந்திக்கும் விந்திய சாதபூரா மலைக்
காடுகளில் வைத்து உருவாக்கி சர்தார் சரோவர் அணை இருக்கும் சாது மழைக்காடுகளில் வைத்து இணைத்து அணையில் நிறுவி இருக்கிறார் கள்.

இன்னொரு விசயம் என்னவெனில் இந்த சிலை யில் கான்கிரீட் இரும்பு அலுமினியம் போல்டு
நட்டு ஸ்க்ரூ என்று அனைத்து மே மேட் இன் இந்
தியா தான்.இப்படி இருந்தும் இடதுசாரிகள் எப்படி
இந்த சிலையை சீனா தயாரித்தது என்று கூசாமல்
பொய் கூறுகிறார் கள் என்று யோசித்து பார்த்தால்
ஒரு உண்மை தெரிய வரும்.

அது என்ன வென்றால் இது வரை உலகின்
உயர்ந்த சிலை  உள்ள நாடு என்கிற பெருமை
யை சீனா தான் வைத்து இருந்தது. ஆனால் அதை
மோடி தகர்த்து எறிந்து சீனாவை விட உலகின் உயரமான சிலை இந்தியாவில்  இருக்கிறது
என்று உலக வரலாற்றில் எழுதி விட்டார். அதோடு
இனி வருங்காலங்களில் உலகில் அனைத்து துறை
களிலும் இந்தியா சீனாவை விட உயர்ந்து விட்டது
என்று உலக வரலாற்றில் எழுத இருக்கிறார்.

அப்பொழுதும் இந்தியாவில் இருக்கும் இடது
சாரிகள் என்ன இருந்தாலும் எங்க சீனா மாதிரி
இந்தியா வருமா? என்று தாய் நாட்டு பாசத்தில்
கூறிக்கொண்டு தான் இருப்பார்கள். நாம தான்
விடுங்கப்ப்பா..பாவம் என்று கண்டு கொள்ளாமல்
இருக்க வேண்டும்.

ஏம்ப்பா இது வரை சரியாகத்தானே கூறிக்கொண்டு வந்தாய் கடைசியில் கோட்டை விட்டு விட்டாயே
என்று என்னை நீங்கள் திட்ட வருவது எனக்கு
தெரிகிறது.. அதனால் பேக் டூ லாஸ்ட் பேரா

அதாவது இந்தியா சீனாவை விட உயர்ந்தாலும் என்ன இருந்தாலும் சீனா மாதிரி இந்தியா
வர முடியாது என்று இடது சாரிகள் கூறிக்கொண்டு
இருப்பார்கள் என்று கூறினேன் அல்லவா... ஸாரி
அதில் ஒரு சின்ன திருத்தம்.. இந்தியா சீனாவை
விட அனைத்து துறைகளிலும் உயரம் பொழுது
இந்தியாவில் இடதுசாரிகளே இருக்க மாட்டார்கள்.

எனி ஹவ்..உலக அரங்கில்  உலகின் உயர்ந்த
சிலையை வடிவமைத்த ஐயா பத்மஸ்ரீ ராம் சுதன்
அவர்களுக்கு ம் அதை உருவாக்கிய ப்ராஜெக்ட்
டைரக்டர் முகேஸ் ராவல் அவர்களுக்கும் இந்த
சிலையை உருவாக்க வேண்டும் அதிலும் உலகில்
உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்று சிந்தித்து
செயல் படுத்திய பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு ம் தலை நிமிர்ந்து சல்யூட்....

சுகப்பிரசவம்_எப்படின்னு #கேள்விப்பட்டிருப்பீர்கள், #எழுத்தால்_படித்து_பார்த்து #கண்_கலங்கியதுண்டா_இதை_படியுங்கள்...

😟😭😭 womens are really great

#சுகப்பிரசவம்_எப்படின்னு #கேள்விப்பட்டிருப்பீர்கள்,
#எழுத்தால்_படித்து_பார்த்து
#கண்_கலங்கியதுண்டா_இதை_படியுங்கள்....‌

மனது கலங்கும்.....

முதலில் வலப்பக்க இடுப்பில் சுரீரென்ற குத்தல், இடைவெளி விட்டு மீண்டும்,இடைவெளி விட்டு மீண்டும், இப்படியே தொடர்ந்து நடு வயிறு வலி ஆரம்பிக்கும் போது குழந்தை, தான் பிறக்க போகும் நேரத்தை முடிவு செய்தவிட்டது என்று அர்த்தம்,

புதிய உலகை காண வேண்டும் என்று குழந்தைகள் முடிவு செய்த பின், அதற்கு முதலில் இது வரை வாழ்ந்து வரும் கருவறை உலகில் தனக்கான வாழ்வாதராத்தை அழிக்கும். அது பனிக்குடத்தை உடைத்தல். அங்குதான் குழந்தை சுவாசிக்கும், நீந்திகொண்டிருக்கும்..

அதை உடைத்த பின் புதிய வாழ்வாதாரத்திற்கான வழி நோக்கி முன்னெடுக்கும் போது பிரசவ வலி உச்சத்தில் இருக்கும், (முழு பனிக்குட நீரும் வெளியேறும் முன் மருத்துவமனை சென்றுவிட வேண்டும்) மொத்த வயிறும் வலிக்கும், சீராக சுவாசிக்க முடியாது. அதிக பதட்டம், இந்த நேரத்தில் பெண் வேண்டுவதெல்லாம் கணவனின் கரத்தை இறுக பற்றுதல் தான். அந்த நேரத்தில் வேறு யாரையும் தேடாது ‘புருஷன் புருஷன் புருஷன் மட்டும்தான்..

முதலில் இனிமா கொடுத்து வயிற்றை சுத்தம் செய்வார்கள். ஏற்கனவே வயிறு வலி இதுல இது வேற.. இப்ப கால் இரண்டையும் விரித்து வைத்துக்கொள்ளச் சொல்வார்கள். அப்போது வலி முதுகுத்தண்டை தாக்க ஆரம்பித்திருக்கும், எப்படி என்றால் கத்தியை எடுத்து முதுகுதண்டின் டிஸ்க்களுக்கு இடையில் சொருகினால் எப்படி இருக்கும் அப்படியான வலி.ஒரு நர்ஸ் நெஞ்சு மேல ஏறி வயித்த பார்க்க உக்காந்து தன்னோட இரண்டு கால் முட்டுகளால் மேல்வயிற்றின் இரண்டு பக்கங்களில் இருந்தும் அழுத்தம் கொடுக்கும், கைகளால் மேல் வயிற்றை கீழாக தள்ளும்.

டாக்டர் முக்கு முக்கு ன்னு சொல்வார்கள்.. சிசேரியனில் மட்டும்தான் மயக்க மருந்து கொடுத்து பிரசவம் நடக்கும். அது சிசேரியன்,/ கத்திய வச்சி அறுப்பாங்க அப்பறம் தையல் எல்லாம் போட வேண்டுமே அதனால் என்கின்றிர்களா? நிற்க. சுகப்பிரசவதிலும் தையல் போட வேண்டும்.. அது வயிற்றில் கிடையாது /பிறப்புறுப்பு ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் விரிவடையாத சூழல் இருக்கும்,. / கத்தரிப்பான் தோற்றத்தில் தேங்காய் உரிக்கும் உபகரணம் பார்த்து இருக்கிறிர்களா? தேங்காயில் அதன் கூர்மையான முனை கொண்டு ஒரு குத்து குத்தி இரண்டாக பிளக்க வேண்டும்… அதே மாதிரி ஒரு உபகரணம் கொண்டு பிறப்புறுப்பில் செலுத்தி அதன் கைப்பிடியை விரித்து ஒரு திருக்கு.....

அங்கயே கண்ணு ரெண்டும் சொருகிடும்…. செத்தே போயிடுவோம்ன்னு தான் தோணும்.குழந்தையோட தலை வெளில தெரிது.. push push push……டாக்டர் முடியல டாக்டர்ஏம்மா உனக்கு வலிக்கற மாதிரி தான் உன்னோட குழந்தைக்கும் வலிக்கும் அதோட வலியை குறைக்கணும்ன்னா நீ சீக்கிரம் முக்கி பிள்ளைய பெத்துக்கனும் அப்பறம் உன் இஷ்டம். அப்போ வரும் ஒரு வெறி.. நரம்புகள் முறுக்கி உடம்பின் ஒட்டுமொத்த சக்தியையும் திரட்டி ஓரிடத்தில் குவித்து முப்பது நொடி அளவில் நீண்ட முக்குதல்.. பிறப்புறுப்பை கிழித்துக்கொண்டு குழந்தை வந்து விழும்.என்ன குழந்தை என்று சொல்லிய பின் குழந்தையை குளிப்பாட்ட கொண்டு போயிடுவாங்க..

ஹப்பாடா என்று நிம்மதியில் கொஞ்சம் ஆசுவாசம் அடையும் போது.. கிழிந்த பிறப்புறுப்பை டாக்டர் தைக்க ஆரம்பித்து இருப்பார் எது வரை உறுப்பு கிழிந்து இருக்கும் தெரியுமா? மலத்துவாரத்தின் மேற்பகுதி வரை.. இந்த டாக்டர் அப்பயும் மயக்க ஊசி போடாமாட்டார். அதெல்லாம் கொடுமையிலும் கொடுமை.அப்பறம் பெட் எல்லாம் மாத்தி புதுசா வார்ட் ரூம்ல கூட்டிட்டு போயி விட்ருவாங்க actually தூக்கிட்டு போயி..குழந்தைக்கு பால் கொடுக்கணும்..

அந்த பச்சை குழந்தை க்கு கண்ணும் முழிச்சு இருக்காது.. பாலும் எப்படி உறிஞ்சு குடிக்கணும்ன்னு தெரியாது. ஆனா பசில அழும் பார்க்கவே பாவமா இருக்கும்.. பாலை கொஞ்சம் பீச்சு அதோட வாய்ல விட்டுட்டு .. காதை தடவி கொடுத்தா உறிஞ்சி குடிக்க ஆரம்பிச்சிடும். இன்னிய வரைக்கும் தீராத ஆச்சர்யமாக இருக்கிறது அது../ எப்படி காதை தடவினா உறிஞ்சு குடிக்க தோணுது?எது எப்படியோ என்னிலிருந்து பிறந்த என்னுயிர், இன்னொருநான், எனக்கான பசியை என்னிடமே தீர்த்துக்கொள்வது போல இருக்கும் குழந்தையின் பால் குடித்தல். அதுவரை உடல் அனுபவித்த கஷ்டங்களுக்கு மனதின் பாரம் குறையும்.

படிக்கும் போதே மனது கண்ணீரில் நனைகிறதா.. இதை தாங்கும் பெண் ,

உண்மையில் தலையில் தூக்கி வைத்து கொண்டாட படவேண்டிய ஓர் ஜுவன், அவளை கடைசி வரை ஒரு குழந்தையாக பார்த்து கொள்வது ஒவ்வொருவர் கடமை...

( நான் படித்ததில் கண் கலங்கியது )

நட்புகளே பக்குவம் – கவியரசர் கண்ணதாசன் பக்குவம் என்ற தலைப்பில் கவியரசர் கண்ணதாசன் அசத்தலாகச் சொன்னது!!!!!

நட்புகளே பக்குவம் – கவியரசர் கண்ணதாசன்
பக்குவம் என்ற தலைப்பில் கவியரசர் கண்ணதாசன் அசத்தலாகச் சொன்னது!!!!!
கவியரசு கண்ணதாசன்
கல்லூரியில் படிக்கும்போது, ஒரு இளைஞனுக்கு எல்லாமே வேடிக்கையாகத் தெரிகிறது.
கல்யாணமாகிக் குழந்தை குட்டிகளோடு அவன் வாழ்க்கை நடத்தும்போது, ஒவ்வொரு வேடிக்கைக்குள்ளும் வேதனை
இருப்பது அவனுக்குப் புரிகிறது.
இளமைக் காலத்து ஆரவாரம், முதுமை அடைய அடையக் குறைந்து வருகிறது.
ஒவ்வொரு துறையிலும், நிதானம் வருகிறது.
இளம் பருவத்தில் இறைவனைப்பற்றிய சிந்தனை அர்த்த புஷ்டியற்றதாகத் தோன்றும்.
வாழ்வில் அடிபட்டு வெந்து, நொந்து ஆண்டவனைச் சரணடைய வரும்போது, அவனது மாபெரும் இயக்கம் ஒன்று பூமியில் நடைபெறுவது புத்தியில் படும்.
பக்குவமற்றவனுக்கு நாத்திகம், அராஜகம் எல்லாமே குஷியான தத்துவங்கள்.
பக்குவம் வர வர, ரத்தம் வற்ற வற்ற இந்தத் தத்துவங்கள் எல்லாம் மறுபரிசீலனைக்கு வரும்.
நடைமுறைக்கு ஒத்த சிந்தனை, பக்குவப்பட்ட பிறகே தோன்றும்.
இருபது வயது இளைஞனைப் பெண் பார்க்கச் சொன்னால் எல்லாப் பெண்களுமே அவன் கண்களுக்கு அழகாய்த்தான் தெரிவார்கள்.
நாற்பது வயதிற்கு மேலேதான், நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் தெளிவு அவனுக்கு வரும்.
கல்லூரி மாணவனைப் படிக்கச் சொன்னால் காதல் கதையையும், மர்மக் கதையையும் படிப்பதில்தான் அவன் கவனம் செலுத்துவான்.
காதலித்துத் தோற்றபின்தான், அவனுக்குப் பகவத் கீதையைப் படிக்கும் எண்ணம் வரும்.
விளையாட்டுத்தனமான மனோபாவம் பிடிவாதத்திற்குப் பெயர் போனது.
எதையும் சுலபத்தில் ஏற்றுக்கொண்டு `அதைவிட உலகமே கிடையாது’ என்று வாதாடும்.
எதிர்த்தால் வேரோடு பிடுங்க முயலும்.
பக்குவமற்ற நிலை என்பது இரண்டு `எக்ஸ்ட்ரீம்’ நிலை.
ஒன்று, இந்த மூலையில் நின்று குதிக்கும், அல்லது அந்த மூலையில் இருந்து குதிக்கும்.
பக்குவ நிலைக்குப் பெயரே நடு நிலை.
மேலை நாட்டில் ஒரு பழமொழி உண்டு.
`இருபது வயதிற்குள் ஒருவன் கம்யூனிஸ்ட் ஆகவில்லை என்றால் அவன் அப்பாவி; முப்பது வயதிற்கு மேலும் அவன் கம்யூனிஸ்டாக இருந்தால் அவன் மடையன்!’
இதுதான் அந்தப் பழமொழி.
பரபரப்பான பருவ காலத்தில் கோயிலுக்குப் போனால் தெய்வம் தெரியாது என்பது மட்டுமல்ல, அங்கே சிலையில் இருக்கும் அழகுகூடத் தெரியாது.
ஐம்பது வயதில் கோயிலுக்குப் போனால், சிலையில் இருக்கும் ஜீவனும் தெரியும்.
இதில் வெறும் பருவங்களின் வித்தியாசம் மட்டுமில்லை.
பக்குவத்தின் பரிணாம வளர்ச்சியும் அடங்கியிருக்கிறது.
ஏன், உடம்பேகூட இருபது வயதில் எந்த உணவையும் ஜீரணிக்கிறது.
நாற்பதிற்கு மேலேதானே `இது வாய்வு’, `இது பித்தம்’, என்கிற புத்தி வருகிறது.
`டென்ஷன்’ என்ற ஆங்கில வார்த்தைக்குச் சரியான தமிழ் வார்த்தை எனக்குப் புரியவில்லை.
`முறுக்கான நிலை’ என்று அதைக் கூறலாம்.
அந்த நிலையில் `எதையும் செய்யலாம், எப்படியும் செய்யலாம்’ என்கிற `திமிர்’ வருகிறது.
அதில் நன்கு அனுபவப்பட்ட பிறகு, `இதைத்தான் செய்யலாம்’, `இப்படித்தான் செய்யலாம்’ என்ற புத்தி வருகிறது.
இனி விஷயத்திற்கு வருகிறேன்.
`ஞான மார்க்கப் பக்குவமும் அப்படிப்பட்டது தான்’ என்பதைக் கூறவே இவற்றைக் கூறினேன்.
உள்ளம் உடலுக்குத் தாவி, உடல் ஆன்மாவுக்குத் தாவிய நிலையே, பக்குவப்பட்ட நிலை.
தேளைப் பிடிக்கப் போகும் குழந்தை, அதையே அடிக்கப் போகும் மனிதனாக வளர்ச்சியடைகிறது.
அதற்குப் பிறகு, அந்தத் தேளிடமேகூட அனுதாபம் காட்டும் ஞானியாக அந்த மனிதன் மாறி விடுகிறான்.
இன்றைய பக்குவம் இருபதாண்டுகளுக்கு முன் எனக்கு இருந்திருந்தால், எனது அரசியலில்கூட முரண்பாடு தோன்றியிருக்காது.
வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்பில், நன்மை தீமைகளை உணரும் நிதானம் அடிபட்டுப் போகிறது.
ஆரம்பத்தில் `இதுதான் சரி’ என்று ஒன்றை முடிவு கட்டிவிட்டு, பின்னால் `இது தவறு’ என நாமே சொல்ல வேண்டிய நிலை வருகிறது.
சரியாகக் கணக்கிட்டால், மனித வாழ்க்கைக்கு மூன்று கட்டங்கள்.
முதற் கட்டம் ஒன்றுமே புரியாத உணர்ச்சிக் கூத்து.
இரண்டாவது கட்டம் ஏதோ இருப்பதாக, ஆனால் தெளிவாகத் தெரியாத, மயங்கிய நிலை.
மூன்றாவது கட்டம் பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்றும், நமக்கும் மேலே ஒரு நாயகன் இருக்கிறான் என்றும் முழு
நம்பிக்கை கொண்ட ஞானநிலை.
இந்த மூன்றாவது நிலையை முதற் கட்டத்திலேயே எய்தியவர்கள் பலர் உண்டு.
சுவாமி விவேகானந்தரைப் போல, வளைந்து கொண்டே வளர்ந்த மரங்கள் உண்டு
அவர்கள் எல்லாம் பூர்வ ஜென்ம புண்ணியத்தால் அந்த நிலையை எய்தியவர்கள்.
மற்றவர்கள், அனுபவத்தின் மூலமாகத்தானே பக்குவ நிலையை அடைய வேண்டியிருக்கிறது!
எகிப்து மன்னன் பாரூக், பட்டம் துறந்து பாரிஸ் நகரில் சீரழிந்த போதுதான் `மனிதாபிமானம்’ என்றால் என்ன என்பதை உணர முடிந்தது.
ஆனால், அரண்மனை வாசத்திலேயே அதனை உணர்ந்து கொண்ட சித்தார்த்தன், கெளதம புத்தரான வரலாறும்
நம்முடைய நாட்டிலே உண்டு.
தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் நடுவே தடுமாறும் மனிதர்கள் நம்முடைய நாட்டிலே மிக அதிகம்.
ஒன்று, தூங்குவதென்றால் நிம்மதியாகத் தூங்கி விடவேண்டும்.
விழிப்பதென்றால் சுறுசுறுப்பாக விழித்துக் கொள்ள வேண்டும்.
தூக்கமும் விழிப்புமாக இருப்பதால் தூக்கத்தின் பலனும் கிட்டாது, விழிப்பின் பலனும் கிட்டாது.
`மனப்பக்குவம்’ என்பது அனுபவங்கள் முற்றிப் பழுத்த நிலை.
அந்த நிலையில் எதையுமே `இல்லை’ என்று மறுக்கின்ற எண்ணம் வராது.
`இருக்கக்கூடும்’ என்றே சொல்லத் தோன்றும். `இல்லை’ என்று சொல்பவனுக்கு எந்தப் புத்தியும் தேவையில்லை.
எதைக் கேட்டாலும் `இல்லை’ என்று சொல்ல முட்டாளாலும் முடியும்.
ஆனால் `உண்டு’ என்று சொல்பவனுக்குத்தான் அதை நிலைநாட்டப் போதுமான அறிவு தேவைப்படும்.
“பூமிக்குக் கீழே என்ன இருக்கிறது” என்று கேட்டால் எதுவுமே இல்லை, என்று குழந்தைகூடப் பதில் சொல்லிவிட முடியும்

தம்பையா ரோட்டில் இவர்களின் நிலை தெரிந்தவர்கள் மட்டும் காசு தருவார்கள்.

படித்தாலும் படிக்காவிட்டாலும் தயவு செய்து பகிரவும்.
சென்னை மேற்கு மாம்பலம் காசிவிஸ்வநாதஸ்வாமி கோயிலில் எப்போதும் அமர்ந்து இருக்கும் இந்த வயசான தம்பதியர் ஆதரவற்றவர்கள். யாரிடமும் எதுவுமே கேட்பது கிடையாது . மௌனமாக அமர்ந்து இருப்பார்கள்.
தம்பையா ரோட்டில் இவர்களின் நிலை தெரிந்தவர்கள் மட்டும் காசு தருவார்கள்.
அந்த பெரியவர் கடந்த 4 வருடங்களாக பேச்சுத் திறனை இழந்து விட்டார் என்று கூறிய மாமி வேலை எதுவும் செய்ய முடியாத நிலையில் தாம் இருப்பதாக கூறினார். கோயிலில் கிடைக்கும் பிரசாதம் தான் இவர்களின் சாப்பாடு. மேலும் எல்லையம்மன் கோவில் தெருவில் வசிப்பதாகவும் வீட்டுக்காரர் சிரமம் கொடுப்பதாகவும் தெரிவித்தார்.
தயவு செய்து இதனை பகிர்ந்தது தங்களுக்கு தெரிந்த முதியவர் இல்லங்கள் தொண்டு நிறுவனங்கள் இருப்பின் அவர்கள் கவனத்துக்கு கொண்டு வந்து உதவி செய்ய முன் வந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
படித்ததும் பகிருங்கள் ப்ளீஸ்


சின்மயி தெரிவிக்கும் கருத்துக்களில் அடிப்படை உண்மையோ, நேர்மையோ இருப்பதாய்த் தெரியவில்லை.

சின்மயி தெரிவிக்கும் கருத்துக்களில் அடிப்படை உண்மையோ, நேர்மையோ இருப்பதாய்த் தெரியவில்லை.


 2004ல் வைரமுத்து தவறாக சின்மயியிடம் நடந்துகொள்ள முயன்றதாக அவரது தாயார் தெரிவிக்கிறார்.
அதற்கு பின்னர் பல சந்தர்பங்களில் தனது டிவிட்டர் பதிவு மூலம்
வைரமுத்து அவர்களுக்கு வாழ்த்துக்களை அனுப்பியது ஏன் ?
தனது மகளை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கின்ற ஒரு நபரை பெற்ற தாயானவள் எப்படி சமூக வளைதளங்கள் மூலம் பாராட்ட முடியும் ??




அது மட்டுமல்ல 2014ல் நடந்த சின்மயியின் திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருக்கி
றார். அதில் வைரமுத்து காலில் விழுந்து வாழ்த்துப் பெறுகிறார் சின்மயி.
தன்னிடம் தவறாக நடக்க முயன்றவரை திருமணத்திற்கு அழைத்தது ஏன் ?
அவர் மோசமானவர் எனில் அவர் காலில் விழுந்து வாழ்த்துப் பெற்றது ஏன் ?
மூன்று வருடங்களுக்கு
முன்னர் கூட சமூக வளைதளங்களில் தன்னைப்பற்றி அவதூறு பரப்பிய நபரை எதிர்த்து காவல்துறையிடம்
புகார் அளித்த திடீர் போராளி, அதே நாளில் வைரமுத்து அவர்களைப் பற்றியும் சொல்லியிருக்கலாமே ?




கடந்த வருடம் சுச்சிலீக்ஸ் என்கிற பெயரில் நடிகர் தனுஷ்ஷுடன் சின்மயி அடித்த கூத்துகளை
பதிவிட்டபோது அதற்காக மறுப்பு ஏதும் தெரிவிக்காத சின்மயி தற்போது திடீர் புரட்சி செய்வது எதனால் ??
பெண்ணுரிமை பற்றி அடிக்கடி டிவிட்டுகிற சின்மயியால்.....
காஞ்சி
சங்கராச்சாரி குறித்து அனுராதா ரமணன் சாட்டிய குற்றச்சாட்டு குறித்துப் me too வில இப்போதாவது பேச முடியுமா?
*" அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம், இப்போது நாடெங்கும் நாகரிகமாகி வருகிறது.*
*அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன். அவற்றுள் இதுவும் ஒன்று.*
*உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை.*
*உண்மையைக் காலம் சொல்லும் ! "*
- என , வைரமுத்து கூறும் விளக்கத்தை நாம் ஏற்போம்.
நம்புவோம்.

கோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....

கோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு.... நீங்கள் உணவுப்பிரியரா ? சுவையான உணவிற்கு முக்கியத்துவம் கொடுப்பவரா கோவை ம‌ற்றும் ...