மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த பொறியியல் பட்டதாரி கணவர்; தாய் & சேய் பூரண நலம் − தேனியில் பரபரப்பு

மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த பொறியியல் பட்டதாரி கணவர்; தாய் & சேய் பூரண நலம் − தேனியில் பரபரப்பு
தேனி மாவட்டம் கோடாங்கிப்பட்டியில் உள்ள தென்றல் நகரில் வசித்துவருகிறார் கண்ணன். பொறியியல் பட்டதாரியான இவர், தன் மனைவி மகாலெட்சுமிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு 11.45 மணிக்கு தன் மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார் கண்ணன். இவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்தத் தகவல், அப்பகுதியைச் சேர்ந்த ஆரம்ப சுகாதார ஊழியர்கள் மூலம் வெளியே தெரியவந்துள்ளது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த கிராம நிர்வாக அலுவலர், போடி வட்டாட்சியர், இணை இயக்குநர் மாவட்ட பொது சுகாதாரம் உட்பட மொத்த மருத்துவக் குழுவும் கண்ணனின் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர், "தன் மனைவிக்குத் தானே பிரசவம் பார்த்துள்ளார் கண்ணன். இந்த தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றோம். ஆனால், தாய் மற்றும் சேயை பரிசோதிக்க எங்களை கண்ணன் அனுமதிக்கவில்லை. நேரம் ஆக, ஆக எங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விரட்ட ஆரம்பித்தார். வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தப் பலனும் இல்லை. குழந்தைக்கு தொப்புள் கொடி அறுக்காமல் இருப்பதைக் கண்டறிந்து, தொப்புள் கொடியை மட்டுமாவது அறுக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். அப்போதுகூட அலோபதி மருத்துவர்கள் வந்தால் நான் அனுமதிக்க மாட்டேன் என்று கூறினார். உடனே. சித்த மருத்துவர்கள் குழுவை வைத்து குழந்தைக்கு தொப்புள் கொடி அறுத்தோம். அதற்கு மேல் எங்களால் எந்தப் பரிசோதனைகளையும் அவர் செய்ய விடவில்லை. இது என் வீடு, என் மனைவி, என் குழந்தை, நீங்கள் புறப்படுங்கள் என்று கடுமையாகக் கூறி விரட்டுகிறார்.
மருத்துவர்கள் சொல்வதுபோல, அடிப்படையான பரிசோதனைகள் மட்டும் செய்யலாமே, அதுவும் வீட்டிலேயே பரிசோதிக்க அனுமதிக்கலாமே என்று கண்ணனிடம் கேட்டபோது, "நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்தானே, என் மனைவியும், குழந்தையும் ஆரோக்கியமாகதானே இருக்கிறார்கள். அப்படி இருக்க எதற்குப் பரிசோதனை?" என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்று கதவை தாழிட்டுக்கொண்டார். தாய், சேய் இருவரையும் பரிசோதிக்க அனுமதி கேட்டு, கண்ணனுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள் சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நம்மில் பலர் வீடு கட்டுவதில் பாதி ஆயுளையும்,வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதில் மீதி ஆயுளையும் செலவழித்து விடுகிறோம்.. வாங்கிய கடனையே இரவு முழுவதும் சிந்திப்பவர்களுக்கு பளிங்கு தரையும்,பளபள சுவர்களும் பாவம்.... வருத்தத்தையே வரவழைக்கின்றன.....

நம்மில் பலர் வீடு கட்டுவதில் பாதி ஆயுளையும்,வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதில் மீதி ஆயுளையும் செலவழித்து விடுகிறோம்.. வாங்கிய கடனையே இரவு முழுவதும் சிந்திப்பவர்களுக்கு பளிங்கு தரையும்,பளபள சுவர்களும் பாவம்.... வருத்தத்தையே வரவழைக்கின்றன..... 

ஒரு நாட்டில் சில இளைஞர்கள்அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்தார்கள். அரசு எதை செய்தாலும் அதற்கு எதிராக குரல் கொடுப்பார்கள். அந்த அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர், அவர்களை ரகசியமாக அழைத்து நான் உங்கள் சித்தாந்தத்தின் மீது பற்று கொண்டவன் நான் உங்கள் மீது வைத்திருக்கும் கரிசனத்தை வெளியில் சொல்லி விடாதீர்கள் என்று கூறி விட்டு அவர்கள் வசிக்கவும்,தங்கள் நடவடிக்கைகளை சிறப்பாக செய்யவும் உதவுவதாக ஒரு வீட்டை பரிசளித்தார்.வீடு மிக பெரியது அழகானது, வசதிகள் நிறைந்தது. பாழடைந்து இருந்தது அதை பார்த்ததும் இளைஞர்களுக்கு மகிழ்ச்சி. 

அந்த வீட்டைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தார்கள். வண்ணம் பூசினார்கள்.பழது பார்த்தார்கள் பின்னர் அங்கிருந்த புத்தகங்களைஎல்லாம் பார்த்து பிரமித்தார்கள்.புரியாத மொழியில் இருந்தாலும் அவற்றில் என்ன எழுதி இருக்கிறார்கள் என புரிந்து கொள்ள ஆர்வம் பிறந்தது. அவ்வளவு பெரிய வீட்டை பராமரிக்க பணம் தேவைப் பட்டது. சில இளைஞர்கள் பணத்திற்காக பணி செய்ய போனார்கள். 

சிலர் வீட்டை துடைக்க,பெருக்க்,சமைக்க தங்கள்நேரத்தை செலவழித்தார்கள். சில மாதங்களில் அவர்கள் சித்தாந்தமே அவர்களுக்கு மறந்து விட்டது. அவர்களால் கிளர்ச்சியும் இல்லை, புரட்சியும் இல்லை. நாமும் அந்த இளைஞர்களைப் போலத் தான் இருக்கிறோம். நம் இலக்கை நாம் இன்ன பிறவற்றில் தொலைத்து விட்டு வாழ்கிறோம். வீடுகளை கட்டுவது தேவை தான். 

ஆனால் அதை உருவாகும் போது பண்டத்தை விட முக்கியமல்ல பாத்திரம். கடவுளை விட முக்கியமல்ல கட்டடம். பறவைகள் வருகின்ற, குருவிகள் கூடு கட்டுகிற,மலர்களை பறிக்காத ,பட்டாம்பூச்சிகளை எட்டிப் பிடிக்காமல் ரசிக்கின்ற அன்பு மயமான நாம் போகின்ற இடமெல்லாம் மாறும் போது இறைமை நமக்குள் ஊரும்; இருத்தல் நம்மை வாழ்த்தும்.

கோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....

கோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு.... நீங்கள் உணவுப்பிரியரா ? சுவையான உணவிற்கு முக்கியத்துவம் கொடுப்பவரா கோவை ம‌ற்றும் ...