கடவுள் ஒரு நாள் கழுதையை படைத்து அதனிடம் சொன்னார்,

கடவுள் ஒரு நாள் கழுதையை படைத்து அதனிடம் சொன்னார்,

"நீ ஒரு கழுதை. காலை முதல் மாலை வரைக்கும் நீ உழைக்க வேண்டும். உன் மேல் சுமைகள் இருக்கும். நீ புல் தான் சாப்பிட வேண்டும். உனக்கு அவ்வளவாக அறிவு இருக்காது. நீ 50 வருடங்களுக்கு வாழ்வாய்.

இதற்கு கழுதை சொன்னது

"நான் கழுதையாக இருக்கிறேன். ஆனா 50 வருடம் ரொம்ப அதிகம். எனக்கு 20 வருடம் போதும்."

கடவுள் கழுதையின் ஆசையை நிறைவேற்றினார்.

அடுத்து ஒரு நாயை படைத்து அதனிடம் சொன்னார்

"நீ மனிதனின் வீட்டைகாக்கும் காவலன். அவனுடைய அன்பு தோழனாக இருப்பாய். மனிதன் உண்ட பிறகு உனக்கு கொடுப்பான். நீ 30 வருடங்களுக்கு வாழ்வாய்."

இதற்கு நாய் கூறியது,

"கடவுளே, 30 வருஷம் ரொம்ப அதிகம். எனக்கு 15 வருஷம் போதும்"

கடவுள் நாயின் ஆசையை நிறைவேற்றினார்.

அடுத்து கடவுள் குரங்கை படைத்து அதனிடம் சொன்னார்
"நீ ஒரு குரங்கு. மரத்திற்கு மரம் தாவ வேண்டும். நீ வித்தைகள் காட்டி மற்றவர்களை மகிழ்விப்பாய். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்."

இதற்கு குரங்கு கூறியது "20 வருஷம் ரொம்ப அதிகம். 10 வருஷம் போதும்"

கடவுளும் குரங்கின்ஆசையை நிறைவேற்றினார்.

கடைசியாக மனிதனை படைத்து அவனிடம் சொன்னார் " நீ ஒரு மனிதன். உலகில் உள்ள ஆறு அறிவு ஜீவன் நீ மட்டுமே. உன் அறிவை கொண்டு மற்ற மிருகங்களை ஆட்சி செய்வாய். உலகமே உன்கையில். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்."

இதற்கு மனிதன் கூறினான் "20 வருஷம் ரொம்ப குறைவு.

கழுதை வேண்டாம் என்ற 30 வருடங்களையும், நாய் வேண்டாம் என்ற 15 வருடங்களையும், குரங்கு வேண்டாம் என்ற 10 வருடங்களையும் எனக்கு கொடுத்து விடு"

கடவுள் மனிதனின் ஆசையை நிறைவேற்றினான்.

அன்று முதல்

மனிதன் முதல் 20 வருடங்களை ஜாலியாக வாழ்கிறான் மனிதனாக.

கல்யாணம் செய்து கொண்டு அடுத்த 30 வருடங்களை கழுதை போல் எல்லாம் சுமைகளை தாங்கி கொண்டு, அல்லும் பகலும் உழைக்கிறான்.

குழந்தைகள் வளர்ந்தபிறகு, அடுத்த 15 வருடங்களுக்கு அவன் வீட்டின் நாயாக இருந்து, அனைவரையும் பாதுகாத்து கொள்கிறான். மிச்ச மீதி உள்ளதை சாப்பிடுகிறான்.

வயதாகி, Retire ஆன பிறகு குரங்கு போல் 10 வருடங்களுக்கு மகன் வீட்டிலிருந்து மகள் வீட்டிற்கும், மகள் வீட்டிலிருந்து மகன் வீட்டிற்கும் தாவி, தன் பேரகுழந்தைகளுக்கு வித்தைகள் காட்டி மகிழ்வித்து மரணக்கின்றான்.

*மனித வாழ்க்கையின் உண்மை*

வலியே இல்லாமல் 15 நிமிடத்தில் பிரசவமா? எந்த ஊசியும் தேவை இல்லை இதை மட்டும் செய்தால் போதுமாம்!..

வலியே இல்லாமல் 15 நிமிடத்தில் பிரசவமா? எந்த ஊசியும் தேவை இல்லை இதை மட்டும் செய்தால் போதுமாம்!..

குழந்தை பிரசவிக்கும் பெண்களின் அடிவயிற்றினில் முடக்கறுத்தான் இலை கொண்டு கனமாக அதாவது அதிக அடர்த்தியுடன் பற்று போட, பிரசவ வலி இல்லாமல் பதினைந்து நிமிடத்தில் சுகமாக குழந்தை பிறக்குமாம்.

மாற்றடுக்கில் அமைந்த பல்லுள்ள இலைகளையும் கோணங்களில் இறகுள்ள காய்களையும் உடைய ஏறு கொடி. இதன் இலை, வேர் மருத்துவ குணமுடையது.

பெண்களின் கூந்தல் நீண்டு வளர முடக்கத்தான் வேர் கூட்டு பொருளாக பயன்படுகிறது என்பது நம்மில் பலருக்கு தெரியாது.  இந்த அற்புதத்தை தெரியாமல் கண்டகண்ட ஷாம்புகளை பயன்படுத்துகிறோம்
இதன் இலையை அவித்துச் சாறு எடுத்து ரசமாக்கி சூப் போல உணவோடு வாரம் ஒரு உட்கொள்ள மலச்சிக்கல் தீரும். வாயு உடையும்,

இலையை அரிசி மாவுடன் கலந்து அடை செய்து சாப்பிட உடம்பு வலி காணாமல் போகும். வேரை ஒரு பிடி நல்ல நீரில் காய்ச்சி ஒரு குவளையை அப்படியே  கால் குவளையாக வரும் வரை  காய்ச்சி, காலையிலும்,மாலையிலும் 21 நாட்கள் சாப்பிட்டு ஒரு வாரம் இடைவெளி விட்டு மீண்டும் 21 நாட்கள் சாப்பிட மூலம் தீரும்..

நான் ரசித்த மிக அழகான பதிவு..

*நான் ரசித்த மிக அழகான பதிவு*..

அவசியம் முழுவதுமாக படித்துவிட்டு பிறர் பார்க்க பகிருங்கள்...

ஒரு நடுத்தர குடும்பத்து வீட்டில் நடக்கும் பதிவு,

மகனுக்கு வீட்டில் இருக்கவே
பிடிக்கவில்லை.

‘பேஃனை ஆப் பண்ணாமல் வெளியே போகிறாய்,

ஆளில்லாத ரூமில் டி.வி. ஓடுகிறது பார், அதை அணை,

பேனாவை
ஸ்டாண்டில் வை, கீழே கிடக்குது பார்.

இப்படியே சின்னச்சின்ன விஷயத்திற்கு அப்பா அவனை நச்சரித்துக் கொண்டிருப்பது
அவனுக்குப் பிடிக்கவில்லை.

நேற்று வரை வீட்டில் இருந்ததால்
அதையெல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டி
இருந்தது.

இன்று அவனுக்கு வேலைக்கான நேர்காணலுக்கு அழைப்பு வந்திருந்தது.

”வேலை கிடைத்ததும் வேறு எங்காவது வெளியூர் போய்விட வேண்டும். அப்பாவின் நச்சரிப்பு குறையும்”

என்று எண்ணிக் கொண்டான்.

நேர்காணலுக்கு கிளம்பினான்.

“கேட்கிற கேள்விக்கு தயங்காமல் தைரியமாக பதில் சொல்” தெரியவில்லை என்றாலும் தைரியமாக எதிர்கொள், என்று செலவுக்கு கூடுதலாக பணம் கொடுத்து வழியனுப்பி வைத்தார் அப்பா.

நேர்காணலுக்கு அழைக்கப் பட்டிருந்த முகவரிக்கு வந்து சேர்ந்தான் மகன்.

கட்டிடத்தின் பெரிய கேட்டில் செக்யூரிட்டி இல்லை.

கதவு சற்றே திறந்திருந்த தாலும் அதன் தாழ்ப்பாள் மட்டும் வெளியே நீட்டிக்
கொண்டு உள்ளே நுழைபவர் மேல் இடித்துவிடுவது போல் இருந்தது.

அதை சரி செய்து கதவை சரியாக சாத்திவிட்டு உள்ளே நுழைந்தான்.

நடைபாதையின் இருபுறமும் அழகு மலர்ச்செடிகள் வரவேற்றன.

தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த காவலாளி மோட்டாரை அணைப்பதற் காக
குழாயை அப்படியே போட்டுவிட்டுப் போயிருந்தான். தண்ணீர் செடிகளுக்குப் பாயாமல் நடைபாதையை நனைத்துக்
கொண்டிருந்தது.

குழாயை கையில்
எடுத்தவன் செடியின் அடியில் நீர்படும்படி போட்டுவிட்டு கடந்து சென்றான்.

வரவேற்பறை யில் யாரும் இல்லை. நேர்காணல் முதல் தளத்தில் நடைபெறுவதாக அறிவிப்பு வைத்திருந்தார் கள். மெதுவாக
மாடிப்படியில் ஏறினான்.

நேற்று இரவில் போடப்பட்ட
விளக்கு காலை பத்து மணியாகியும் எரிந்து கொண்டிருந்தது.

“விளக்கை அணைக்காமல் செல்கிறாயே?” என்ற அப்பாவின் கண்டிப்பு காதுக்குள் ஒலிப்பதுபோல் தெரிய, எரிச்சல் வந்தாலும் படியின் அருகே இருந்த சுவிட்சை இயக்கி விளக்கை அணைத்தான்.

மாடியில் பெரிய ஹாலில், ஏராளமானவர் கள் இருக்கையில் அமர்ந்திருந்தார் கள். கூட்டத்தைப் பார்த்த மகனுக்கு ஒரே
திகைப்பு.
“நமக்கு இங்கு வேலை
கிடைக்குமா?”
என்று மனசாட்சி படபடக்க ஆரம்பித்தது.

பதற்றத்துடன் அறைக்குள் நுழைய காலடி வைத்தவன், மிதியடியில் ’வெல்கம்’ என்ற எழுத்து தலைகீழாக இருந்ததை கவனித்தான்.

அதையும் வருத்தத் துடனேயே அதை காலால் சரி செய்துவிட்டு உள்ளே நுழைந்தான்.

அறையின் முன்புறத்தில் நேர்காணலுக்கு நிறைய இளைஞர்கள் அமர்ந்திருக்க, பின்பக்கத்தில் பல மின்விசிறிகள் சும்மா சுற்றிக் கொண்டிருந்தன.

”யாருமே இல்லாமல் ஏன் அறையில் விசிறி
ஓடுகிறது?” என்ற அம்மாவின் கேள்வி காதிற்குள் ஒலிக்க, மின் விசிறிகளையும் அணைத்துவிட்டு, மற்ற இளைஞர் களுடன் சென்று அமர்ந்தான்.

இளைஞர்கள் ஒவ்வொருவராக உள்ளே அழைத்து மற்றொரு வழியாக வெளியே அனுப்பிவிட்டனர்.

இதனால் என்ன கேள்வி கேட்பார்கள் என்பது மகனுக்கு தெரியவில்லை.

கலக்கத்துடனே
நேர்காணல் அதிகாரி முன்புபோய் நின்றான்.

சர்டிபிகேட்டுகளை வாங்கிப் பார்த்த அதிகாரி, அதைப் பிரித்து பார்க்காமலே

“நீங்கள் எப்போது வேலைக்கு
சேருகிறீர்கள்?” என்று கேட்டார்.

“இது நேர்காணலில் கேட்கப்படும் புத்திக் கூர்மை கேள்வியா, இல்லை
வேலை கிடைத்து விட்டதற்கான அறிகுறியா? என்று தெரியாமல்” குழம்பி நின்றான் மகன்.

”என்ன  யோசிக்கிறீர்கள்? என்று பாஸ் கேட்டார்,

நாங்கள் இங்கே யாருக்கும் கேள்வி கேட்கவில்லை.

கேள்வி பதிலில் ஒருவனின்
மேலாண்மையை தெரிந்து கொள்வது
கடினம்.

அதனால் செயல்பாட்டின் அடிப்படையில் தேர்வு வைத்து விட்டு, கேமரா
மூலம் கண்காணித் தோம்.

இங்கு வந்த எந்த இளைஞனுமே
தேவையில்லா மல் வீணாகிய நீர், எரிந்த மின்விளக்கு, ஓடிய விசிறி எதையுமே சரி செய்யவில்லை. நீங்கள் ஒருவர் தான் அத்தனையும் சரி செய்துவிட்டு உள்ளே வந்தீர்கள்.

நாங்கள் உங்களையே தேர்வு செய்திருக்கி றோம்” என்றார்.

அப்பாவின் கண்டிஷன்கள் எப்போதும் அவனுக்கு எரிச்சலையே தரும். அந்த ஒழுங்கு முறையே இன்று வேலை வாங்கித் தந்திருக்கிறது என்பதை அறிந்த போது நெகிழ்ச்சியாக இருந்தது.

அப்பாவின் மீதுள்ள எரிச்சல் சுத்தமாக தணிந்தது.

வேலைக்குச் செல்லும் இடத்திற்கு
அப்பாவையும் அழைத்துச் செல்லும் முடிவுடன் சந்தோஷமாக வீடு திரும்பினான்
மகன்.

அப்பா நமக்காக எது செய்தாலும்
சொன்னாலும் ஒரு சிறந்த எதிர்காலத்திறாக மட்டுமே இருக்கும் !!!

உளி விழுகையில் வலி என நினைக்கும் எந்த பாறையும் சிலையாவ தில்லை,
வலி பொறுத்த சில பாறைகளே சிலையாகி ஒளி கூட்டுகின்றன.

நாம் அழகிய சிலையாக உருவாக நமக்குள் இருக்கும் வேண்டாத சில தீய குணங்களை கண்டிப்பால், தண்டிப்பால், சில நேரம் வில்லனாக நமக்கு தெரியும் தந்தை, உளி போன்று வார்த்தைகளால்,
கட்டுப்படுத்துவதால் தான்,

நாம் காலரை தூக்கிக்கொண்டுகண்ணாடி முன் நின்று,

அவர்கள் உருவாக்கிய சிலையாகிய நம்மை அழகனாக, அழகியாக  பார்த்துக் கொள்வது அந்த தந்தை என்ற உளி செதுக்கிய கைங்கர்யமே.

தாய் தன் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு தான் பாலூட்டுவாள், தாலாட்டுவாள், கதை சொல்லி தூங்க வைப்பாள்.

" ஆனால் தந்தை அப்படி அல்ல "

தான் காணாத உலகையும், தன் மகன் காணவேண்டும் என தோள் மீது அமரவைத்து தூக்கி காட்டிக் கொண்டு போவார்.

ஒரு சொல் கவிதை அம்மா !

அதே ஒரு சொல்
சரித்திரம் அப்பா !!

தாய் கஷ்டப்படுவதை கண்டுபிடித்து விடலாம்.

தந்தை கஷ்டபடுவதை பிறர் சொல்லி தான் கண்டுபிடிக்க முடியும்.

நமக்கு ஐந்து வயதில் ஆசானாகவும், இருபது வயதில் வில்லனாகவும், தெரியும் தந்தை இறந்தவுடன் மட்டுமே நல்ல நண்பனாக பாதுக்காவலராக தெரிகிறார்.

தாய் முதுமையில் மகனிடமோ, மகளிடமோ புகுந்து காலத்தை  கடத்தி விடுவாள்.

அந்த வித்தை தந்தைக்கு தெரியாது. கடைசி வரை தனி மனிதன் தான்.

எனவே தாயோ, தந்தையோ  உயிருடன் இருக்கும் போது உதாசினப்படுத்திவிட்டு, இறந்தபின் அழுவதால் அவர்களுக்கு எந்த பிரயோஜனமுமில்லை

தர்மபுரி - ஓம் சக்தி செவிலியர் கல்லூரியில் மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.

தர்மபுரி - ஓம் சக்தி செவிலியர் கல்லூரியில் மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி - பாதிக்கப்பட்ட மாணவி குடும்பத்தை மிரட்டும் போலீஸ் - அனைவரும் பகிருங்கள். மாணவியின் மார்பை அறுத்து குற்றவாளிகள் தப்பியோட்டம். தயவு செய்து ஒரு லட்சம் அன்பர்கள் வரை பகிருங்கள் - பாதிப்புக்குள்ளான மாணவிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் - அதிர்ச்சி தகவல் - பாதிக்கப்பட்ட மாணவியை தற்போது கல்லூரி நிர்வாகம் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று காவல்துறையிடம் கூறியிருப்பதாகவும் - இந்த மாணவிக்கு ஆதரவாக நீதி கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட சக மாணவிகளுக்கு மாதம் 3500 ரூ ஆக இருந்த விடுதிக்கட்டணத்தை பழிவாங்கும் படலமாக 7000 ரூ ஆக உயர்த்தியுள்ளதாகவும் மாணவிகள் தொடர் குற்றஞ்சாட்டுக்களை தெரிவிக்கின்றனர்.

பொன்மொழிகள்..!! வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி.

பொன்மொழிகள்..!!

வெற்றி பெற வேண்டும்

என்ற பதற்றம்

இல்லாமல் இருப்பதுதான்

வெற்றி பெறுவதற்கான

சிறந்த வழி.

🌻 வெற்றியை அடைவதற்கு நீங்கள் கொடுக்கவேண்டிய மிகப்பெரிய விலை உழைப்பே.

🌻 கிடைக்கும் வாய்ப்புகளைத் திறம்பட பயன்படுத்துபவனே பெருமைக்குரியவன்.

🌻 கண்ணியமான மனிதன் எப்போதும் நீதியின் வழியே சிந்தனை செய்கிறான்.

🌻 ஆற்றல் நிறைந்தவனாக இருப்பதைக் காட்டிலும் நேர்மையானவனாக இருப்பதே மேலானது.

🌻 நல்ல நண்பர்களைத் தேடிக்கொள்வதற்கு அடுத்தபடியாக நல்ல புத்தகங்களைத் தேடிக் கொள்வது இனிமையானது.

🌻 இந்த உலகில் நிகரில்லாத செல்வம் தன்னம்பிக்கை தான்.

அருமையான பதிவு...

👉👉சீனாவில், லீ லீ என்ற பெண்ணுக்குத் திருமணமாகி ,தன் கணவன் வீட்டிற்குச்
சென்று வாழத் துவங்குகிறாள்.அங்கு
லீ லீக்கும் அவள் மாமியாருக்கும் எந்த
விஷயத்திலும் ஒத்துப் போகவில்லை.
எதற்கெடுத்தாலும் வாக்குவாதம்,சண்டை,
சச்சரவு.நாள்தோறும் இருவர்க்கிடையே
வேற்றுமை வளர்ந்து கொண்டே இருந்தது.
👎👎👎👎👎👎👎
லீ லீயின் கணவனோ இருதலைக் கொள்ளி
எறும்பு போல திண்டாடினான்.

   👉👉ஒரு நாள் லீ லீ,அவள் தகப்பனாரின்
நண்பரைப் பார்க்கச் சென்றாள்.அவர்
பச்சிலை,மூலிகை மருத்துவத்தில் கைதேர்ந்த மருத்துவர்.
   அவரிடம் லீ லீ, தனக்கும் தன் மாமியாருக்கும் உள்ள சண்டை பற்றிக்
கூறி,மாமியாரைக் கொன்றுவிட வழி
கேட்டார். அந்த நாட்டு மருத்துவர்,மூலிகைப்
பொடி ஒன்றைக் கொடுத்து,- இது மெல்லக்
கொல்லும் நஞ்சு,இதைத் தினம் 👉👉👉உன்
மாமியார் சாப்பாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக
கலந்து கொடு,ஒரு சில மாதங்களில் இயற்கை மரணம் போல் இறந்து விடுவார் -
என்று கூறினார்.மேலும், - மிகவும் கவனமாக
செயல் படவேண்டும்; முக்கியமாக உன்
மாமியாரிடம் மிகுந்த அன்போடு நடந்து
கொள் ,அப்பொழுதுதான் உன் மேல் யாருக்கும் சந்தேகம் வராது. எல்லாம் ஒரு
சில மாதங்கள் தானே - என்று கூறி அனுப்பி
வைத்தார்.
   👉👉அதன்படி மருந்தை உணவில் கலந்து,
அன்புடன் மாமியாருக்கு பரிமாறினாள்.
மருமகளின் அன்பைக் கண்டு மாமியாரும்
அன்பாக நடந்து கொள்ள ஆரம்பித்தார்.
நாளடைவில் இருவருக்கும் நல்ல நெருக்கம் ஏற்பட்டது.
   மாதங்கள் சென்றன. மாமியாரின் அன்பில்
திக்குமுக்காடிய லீ லீ மருத்துவரிடம் ஓடினாள் .- ஐயா,இந்த மருந்துக்கு மாற்று
மருந்து கொடுங்கள் - என கெஞ்ச,-
ஏன் இப்படி ?- என அவர் கேட்க,- என்
மாமியாரை நான் இழக்க விரும்பவில்லை
என அழுதாள்.
   அந்த மருத்தவர் சொன்னார், நான் நஞ்சு
மருந்து எதுவும் கொடுக்கவில்லை; அது
வெறும் சத்துப்பொடி தான்.அப்போது நஞ்சு
உன் மனதில் தான் இருந்தது. நீ அன்பாய்
நடந்து கொண்டதால் உன் மனதில் இருந்த
நஞ்சு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து
இப்பொழுது முழுவதும் நீக்கப்பட்டு விட்டது.
சந்தோஷமாய் போய் வா என்று அனுப்பினார்.

------படித்ததில்
-------பிடித்ததது.-------

இன்றைய சிந்தனை..( 23.02.2018.)

🌹இன்றைய சிந்தனை..( 23.02.2018.)
……………………………………………

‘’விடா முயற்சி..’’
................................

அமெரிக்க விஞ்ஞானி John Bardeen (ஜான் பார்ட்டீன்). டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த மாமேதை.

இந்தக் கண்டுபிடிப்புக்காக அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.

குடும்பத்துடன் விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கபட்டது. தன்னுடைய மகன்கள் இருவர் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தார்கள்.

படித்துக்கொண்டிருப்பவர்களை தொந்தரவு செய்ய இவர் விரும்பவில்லை.

அதனால் மூன்றாவது மகனை மட்டும் நோபல் பரிசு பெற விழாவுக்கு அழைத்து சென்றார்.

விழாவிற்கு தன்னுடைய ஒரு மகனை மட்டும் அழைத்து வந்ததால்,

"குடும்பத்துடன் வரவில்லையா?" என சுவீடன் நாட்டு மன்னர் குவோஸ்டா ஜான்பார்டினை அன்பாக கடிந்துகொண்டார்.

"அடுத்த முறை விழாவுக்கு வரும்போது நிச்சயம் அவர்களை அழைத்துவருகிறேன். இப்போது அவர்கள் படித்துக் கொண்டு இருப்பதால் தொந்தரவு செய்ய வேண்டாம் என அழைத்து வரவில்லை" என்றார் ஜான்பார்டீன்.

மன்னருக்கோ ஆச்சர்யம்.. ஒரு முறை நோபல் பரிசு பெறுவதே மிகப்பெரிய சாதனை.. கடினமாக உழைக்க வேண்டும். இவர் மீண்டும் வருகிறேன் என்கிறாரே.. என்று ஆச்சர்யப்பட்டார்.

1972 ம் வருடம். மீண்டும் அதே நோபல் பரிசு கொடுக்கும் விழா.. ஜான்பார்டன் தனது மகன்களுடன் விழாவில் கலந்துகொண்டார்..

நோபல் பரிசு வழங்கப்பட்டது.. யாருக்கு? நம் ஜான்பார்டன் விஞ்ஞானிக்குத்தான். இரண்டாம் முறை மீண்டும் நோபல் பரிசு பெறுகிறார்.

எதற்கு? மின்சாரக் கடத்திகளைப் பற்றிய உண்மைகளை இவர் கண்டுப்பிடித்திருந்தார்.

விழாவில் மன்னர் திக்குமுக்காடிப் போனார்.

சொன்ன சொல்லை நிறைவேற்றுவதற்கு அவர் எடுத்துக்கொண்ட காலம் பதினைந்து வருடங்கள்..

எப்படி இது இவருக்கு மட்டும் சாத்தியமாகியது?

தளராத தன்னம்பிக்கை. மன உறுதி.. எடுத்துக்கொண்ட செயலில் முழு கவனம். வெற்றிப் பெற்றே தீருவேன் என்ற உறுதி...

ஆம்., நண்பர்களே..,

கடினமான உழைப்புக்கு என்றுமே தோல்வி
(There is always not a defeat for hard work ) கிடையாது.
.
இவ்வாறு நீங்கள் விரும்பும் துறை எதுவாயினும் அதற்குத் தேவையான, முறையான பயிற்சி மற்றும்
விடா முயற்சி, எடுத்த செயலை செயல்படுத்துதல் ஆகிய இம்மூன்றும் தேவை.

இவைகளை தொடர்ச்சியாக பின்பற்றும்போது, நிச்சயம் உங்கள் குறிக்கோளில் வெற்றிப்பெறுவது திண்ணம்.

நீங்கள் நினைப்பது எதுவாக இருப்பினும்

உங்களை வெற்றி தேடிவரும்..

தமிழக அரசுக்கு ஒரு அற்புத ஆலோசனை!🤔

தமிழக அரசுக்கு ஒரு அற்புத ஆலோசனை!🤔

காவிரி ஆறு கரூரிலிருந்து திருச்சி வரை அகன்ற காவிரி ஆறாக உள்ளது. அதனால், காவிரியின் இரு கரைகளையும் சுமார் 10லிருந்து 15அடி வரை உயர்த்தி தடுப்பணை மிக எளிதாக கட்டலாம்.

இதன் பயன்கள்:-

1. ஆற்றின் இரு கரைகளை 15அடி உயர்த்தி சாலைகள் அமைத்து, போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைக்கலாம்!

2. 15அடிகள் உயர்த்தி நீர் தேக்கி வைக்கும் போது தஞ்சையில் முப்போகம் தங்கு தடை இன்றி விளையும்!

3. ஒரே ஒரு முறை காவிரி நீர் மற்றும் மழை நீர் கொண்டு தேக்கி வைத்தால், அங்குள்ள மண் மூலம் அத் தண்ணீர் கிரகிக்கப் பட்டு, அடுத்த மூன்றாண்டுகளுக்கு நிலத்தடி நீர் பஞ்சமே இருக்காது.

4. விவசாய நிலங்கள் விளை நிலங்களாக மாறும் போது அது சார்ந்த.இஞ்சினியரிங் படித்த மாணவர்களுக்கு ஏகப்பட்ட தொழில் வாய்ப்புக்கள் அமையும்!

6, ஆங்காங்கே இரு கரைகளுக்கு இடையே பாலங்கள் கட்டி, போக்குவரத்து தூரங்களை குறைக்கலாம். அத்துடன் இரு ஊர்களுக்கும் இடையே உள்ள பொருட்களை மிக எளிதாக பண்டம் மாற்றிக் கொள்ளலாம்!

7. இந்த நீண்ட தடுப்பணையில் மீன்கள் வளர்க்க ஏற்பாடு செய்யலாம். அதன் மூலம் அரசு மிகப் பெரும் வருவாய் ஈட்டலாம்!

8. மிகப் பெரிய அளவில் நடக்கும் மணல் கொள்ளை தடுப்பணை கட்டி விட்டால், கனவில் கூட நடக்காது.

9. கரூர், திருச்சி, தஞ்சை ஐந்தே ஆண்டுகளில் உலகின் முக்கிய நகரங்களில் ஒன்றாகி விடும். சுற்றுலா வருமானம் மூலம் அந்நிய செலவாணி அள்ளலாம்!

இன்னும் எவ்வ்வளவோ நன்மைகள் இருக்கு!
செய்வீர்களா? செய்வீர்களா?

செய்ய வைக்க வேண்டுமெனில் இதனை உடனே அனைவரும் அறிந்து கொள்ள ஷேர் செய்யுங்கள்!
நன்றி

ஒரு இனம் என்றால் அதற்க்கு மொழிதான் அடையாளம், அதே போல் குறும்ப இன மக்களுக்கு குறும்ப மொழிதான் இன அடையாளம், ஆனால் பல ஊர்களில் குறும்ப மொழி வழக்கொழிந்து விட்டது

குறும்பா் மொழி :-

ஒரு இனம் என்றால் அதற்க்கு மொழிதான் அடையாளம், அதே போல் குறும்ப இன மக்களுக்கு குறும்ப மொழிதான் இன அடையாளம், ஆனால் பல ஊர்களில் குறும்ப மொழி வழக்கொழிந்து விட்டது, சில ஊர்களில் பேசி வருகிறார்கள், ஆனால் அது கன்னடம் என்று நினைத்து அறியாமையில் குறும்பர்களின் மொழி கன்னடம் என்றே கூறி வருகிறார்கள், இது மிக பெரிய அறியாமை, தான் பேசுவது என்ன மொழி என்றே தெரியாமல் குழப்பத்தில் இருக்கும் மன நிலமை, அதாவது குறும்ப மொழி ஒரு தனி மொழி, திராவிட மொழி குடும்பத்தில் கொடவா பிரிவில் குடுகு,குறும்ப மொழிகள் வகை படுத்தப்படும், இந்த இரண்டு மொழிகளுக்கும் சில சில ஒலி வேறுபாடுகள்தான்,

ஆனால் குறும்ப மொழி தெரிந்தாலுமே அதை கன்னடம் என்று கூறி வருகிறோம் அது அறியாமை, நமது குறும்ப மொழி உச்சரிப்பு சொல் பயன்பாட்டை கன்னட உச்சரிப்பு சொல்லாடலுக்கு மாற்றி விடுவதால் குறும்ப மொழி கன்னடத்திற்க்குள் அழிந்து விடும், அதாவது குறும்ப மொழி தமிழ் போல் பல வட்டார வழக்குகளை கொண்டது, தேனி வட்டார வழக்கு வேறு, திண்டுக்கள் வட்டார வழக்கு வேறு,புதுக்கோட்டை வட்டார வழக்கு வேறு, வேலூர்,திருவண்ணாமலை வட்டார வழக்கு வேறு, கோவை வட்டார வழக்கு, சேலம் நாமக்கல் வட்டார வழக்கு, கிருஷ்ண கிரி,தருமபுரி வட்டார வழக்கு வேறு, இவைகளை கன்னடம் போல் உருவக படுத்தி கன்னட உச்சரிப்பை குறும்ப மொழிக்குள் புகுத்தினால் குறும்ப மொழி கன்னடமாகி விடும்,,,, எனவே நாம் அந்த அந்த ஊர்களில் என்ன உச்சரிப்பில் நமது குறும்ப மொழியை கையால்கிறோமோ பேசுகிறோமோ, அதன் மாதிரியே பேச வேண்டும், சரி குறும்பா மொழி எங்குதான் தனி மொழியாக காட்ட படுகிறது அப்படி என்றால், தமிழகத்தில் உள்ள குறும்பர்கள் தமிழுடன் அதன் உச்சரிப்பு அசை சொற்களாக பயன்படுத்துவார்கள், அதே கர்நாடக குறும்பர்கள் கன்னடத்துடன் சேர்த்தே குறும்ப மொழியை பேசுவார்கள், அப்போது தெளிவான தூய குறும்ப மொழி எங்கே இருக்கும் என்றால் மேற்க்கு தொடர்ச்சி மலைகளில் வாழும் குறும்ப பழங்குடிகளிடமே தனி குறும்ப மொழி கிடைக்கும், நாம் விட்ட வழக்கொழிந்த பல ஏராளமான குறும்ப மொழி வார்த்தைகள் கொட்டி கிடக்கும், அதை எடுத்து தொகுத்து இலக்கியம் ஒரு தனிதுவமான குறும்ப மொழியாக காட்டலாம்,

தமிழ் யாரும் இலக்கிய மொழி பேசுவது இல்லை வட்டார மொழிகள் சமஸ்கிருத கலப்பு, நம்ம குறும்ப மொழிய விட தமிழ் மொழி சிதஞ்சுதான் பேசுராங்க, சரி முதலில் நாம் குறும்பர்கள் வாழும் ஊர்களில் அவர் அவர்கள் வட்டார மொழியினை கட்டாயம் அவர்களின் சந்ததிகள் தெரியாதவர்கள், மற்றும் தெரியாத மாவட்டங்களில் தெரிந்த மக்கள் கற்று பயிற்று விக்க பட வேண்டும்,,,,,

குறும்ப மொழி எழுத்து:-

குறிப்பாக எந்த மொழிக்கும் மொழி தோன்றிய உடன் எழுத்து தோன்றுவது இல்லை பேச்சு வழக்காக இருந்து பின்னேதான் எழுத்து வழக்காக மாறும், அது போல் தமிழ் கிமு 3 ம் நூற்றாண்டில்தான் வட்டெழுத்து எழுத்துருவாக உருவானது,,, ஆனான பட்ட சமஸ்கிருதத்திற்க்கு எழுத்தே இல்லை சமிக்கையாகவும், ஒலியின் ஏற்ற இறக்க குறியீடகவும் இருந்து வந்தது கிபி 3 ஆம் நூற்றாண்டில்தான் தேவ நகரி குறீயீட்டை பயன்படுத்தி சமஸ்கிருதத்தை எழுதினார்கள், வட இந்தியாவில் பெரும்பாண்மை மொழிகள் எழுத பயன்படுவது தேவ நகரி குறியீடு, சமஸ்கிருதம்,இந்தி,பெங்காலி,மராத்தி,குஜராத்தி ஒடிசி போன்ற மொழிகள் தேவ நகரி எழுத்துக்களை அதன் குறியீடுகளை மாற்றி இல்லை அப்படியே அவர் அவர்கள் மொழியை எழுதுவார்கள்,,,

அது போல் குறும்ப மொழி போன்று துளு,தோடா,இருளா,படுகா, இவர்களுக்கும் மொழிகள் இல்லை கன்னட எழுத்தை இல்லை தமிழ் எழுத்தை தங்கள் மொழியை எழுத பயன்படுத்துவார்கள், அதே போல் கன்னடம் எழுத பயன்படும் எழுத்து பிராமி எழுத்து முறை, நாம் குறும்ப மொழிக்கு எழுத்துக்களை கன்னட மொழியில் இருந்து எடுத்து எழுதலாம், ஆனால் ஒன்றை சிந்திக்க வேண்டும், இந்தியாவில் 1700 மொழிகள் இருக்கிறது, அதில் 10 மொழிகள் விரைவில் அழியும் தருவாயில் இருக்கிறது, அதில் நம் குறும்ப மொழியும் ஒன்று, சிறு அளவே குறும்ப மொழியை அடையாளம் காட்டு கின்றனர் காரணம் மேற்க்கு தொடர்ச்சி மலைகளில் வாழும் குறும்ப பழங்குடிகள் இன்றும் எந்த மொழி கலப்பில்லாமல் இயங்குவதால் அந்த குறிப்பும் வருகிறது இல்லை குறும்ப மொழி அழிந்த மொழியில் பட்டியல் படுத்தப்படும்,,,
எனவே கன்னட எழுத்துக்களை கையால்வதால் விரைவில் நாம் மேலும் நாம் பேசும் மொழி கன்னடம் என்று கன்னடத்தை கற்று குறும்ப மொழியை அழித்து விடுவோம், ஆகவே,

வட இந்திய மொழிகள் எழுத பயன்படும் தேவ நகரி எழுத்து முறையை குறீயீடுகளை மாற்றி நம் குறும்ப மொழிக்கு எழுத்துருக்களை உருவாக்க வேண்டும்,, இதற்க்கு ஒரு அறிஞர்கள் குழு வேண்டும், சரி எழுத்துக்களை உருவாக்கியாச்சு, அதை எப்படி புகுத்துவது,

நாம் முதலில் வட்டார வழக்குகளை கட்டாய பேச்சுவழக்காக மாற்றினால் 5 வருடத்தில் எழுத்து வழக்கு பேச்சு வழக்க இரண்டையும் புகுத்தலாம்,

ஆகவே மொழி அழிவில் இருந்து விரைவில் மீளலாம், மொழியை மீட்பது சாத்தியமா என்று சிலருக்கு தோன்றும், ஆமாம் ஹீப்ரு என்று ஒரு மொழி அதை பெரும்பாண்மையானவர்கள் உலகத்தின் முதல் மொழி என்பார்கள், யூதர்கள் பேசி வந்த மொழி, அது 4000 ஆண்டுகளுக்கு முன்பே அழிந்து விட்டது, ஆனால் யூதர்கள் தனி இனமாக காட்ட 4000 வருடத்திற்க்கு முன்பு அழிந்த ஹீப்ரூ மொழியை மீண்டும் உருவாக்கி யூதர்கள் அனைவருக்கும் கற்று கொடுத்து புதுமை படுத்தினார்கள் இன்று இஸ்ரேலில் யூதர்கள் அனைவருக்கும் ஹீப்ரூ மொழி தெரியும், இது வெறும் 10 ஆண்டுகளில் சாத்தியமானது,

நமது குறும்ப மொழி ஹீப்ருவை போல் முழுவதுமாக அழியவில்லை, ஒரு இடத்தில் பேசுகிறார்கள் ஒரு இடத்தில் பேச வில்லை அழிந்து விட்டது, அந்த மொழியை பரவலாக்கினாலே எளிதில் குறும்ப மொழி மீண்டு விடும்,,,,

அனைவருக்கும் தாய் மொழி தின அனுதாபங்கள் .....

கோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....

கோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு.... நீங்கள் உணவுப்பிரியரா ? சுவையான உணவிற்கு முக்கியத்துவம் கொடுப்பவரா கோவை ம‌ற்றும் ...