கோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....

கோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....

நீங்கள் உணவுப்பிரியரா ?

சுவையான உணவிற்கு முக்கியத்துவம் கொடுப்பவரா கோவை ம‌ற்றும் அதை சுற்றியுள்ள‌ இட‌ங்க‌ளில் சுவையான தரமான உணவை சாப்பிட விருப்புவரா?

பல இடங்களில் பலர் சாப்பிட்டதை வைத்து தொகுக்கப்பட்ட  உணவுக்கடைக‌ளின் தொகுப்பைக் கொடுத்துள்ளேன்.

ஸ்ரீ கிருஷ்ணா ஹோட்டல், வடவள்ளி, கோவை. Special : மட்டன் குழம்பு, தந்தூரி சிக்கன்

கௌரி மெஸ், ராம் நகர், கோவை. Special : சிக்கன் கிரேவி, பூ மீன்

ஸ்ரீ சரஸ்வதி டீ ஸ்டால், ராமசேரி, கோயம்பத்தூரில் இருந்து பாலக்காடு ரோட்டில். Special : இட்லி

கோவை to சேலம் சின்னியம்பாளையம் bridge அருகில்: Garden restaurant, non-veg & veg பிரியர்களுக்கு, honeymoon spl ice cream top class..

அவ்வா இட்லி கடை, பூ மார்க்கெட், செளடேஸ்வரி கோவில் பின்புறம், கோவை. Special : இட்லி

வளர்மதி மெஸ், ரேஸ்கோர்ஸ், கோவை. Special : பிச்சிப்போட்ட கோழி, நெத்திலி மீன் ஃப்ரை

ஸ்ரீகெளரி மெஸ், ராம் நகர், காந்திபுரம், கோவை. Special : கட்லா மீனும், சிக்கன் கிரேவியும்

கண்ணன்ணன் விருந்து, RS புரம் TV சாமி ரோடு புடிச்சு மேட்டுப்பாளையம் ரோடு நோக்கி. Special : குடல் கூட்டு, மட்டன் சாப்ஸ், நாட்டுக் கோழி வறுவல்..

டோபாஸ் ஐயர் மெஸ், பேரூர், கோவை. Special : ஊத்தாப்பம், ஆனியன் ரோஸ்ட், மசால் ரோஸ்ட்

சத்யா மெஸ், புற்றுக்கண் மாரியம்மன் கோயில் அருகே, பாப்பநாயக்கன் பாளையம், கோவை. Special : கம்பு தோசை, சோள தோசை, ராகி தோசை, கோதுமை தோசை

வைரவிழா பள்ளி அருகில் உள்ள பாய் கடை. Special : காரப்பொறி

ஜெர்மன் ஹோட்டல், காரணம்பேட்டை, சூலூர். Special : நாட்டுக் கோழி வறுவல், கிள்ளி போடப்பட்ட வரமிளகாயுடன் செம காரத்துடன் பட்டர் நானு

மதுரை அம்மா மெஸ், பவர் ஹவுஸ் ரோடு, கோவை. Special : சாப்பாடு

படையப்பா மெஸ், குமரன் சாலை, திருப்பூர். Special : முயல் கறி ஸ்பெசல்

இந்தியன் பஞ்சாபி தாபா, சித்தோடு, ஈரோடு. Special : பள்ளிபாளையம் சிக்கன், நாட்டுக்கோழி, பாயாசத்தில் சேமியாவும், முந்திரியும்

தாஸ் லாட்ஜ் கேண்டீன், நஞ்சப்பா ரோடு, உப்பிலிபாளையம், கோவை. Special : பரோட்டா

மாரிமுத்து போண்டா கடை, முருகாலயா தியேட்டர் நேர் எதிரே, பொள்ளாச்சி. Special : போண்டா பஜ்ஜி

அபூர்வ விலாஸ், கணபதி, கோவை. Special : தேங்காய் பால், பலகாரம் ஸ்பெசல்

ரமேஷ் மெஸ், அழகேசன் சாலை, சாய்பாபா காலணி, கோவை. Special : ஆப்பம், தேங்காய் சட்னி

ஓம்சக்தி ஹோட்டல், இடையர் வீதி அருகே உள்ள குரும்பூர் சந்து, மநக வீதி, கோவை. Special : சிக்கன் 65

திருமூர்த்தி டீ & டிபன் ஸ்டால், அவிநாசி புது பேருந்து நிலையத்தில் இருந்து கோவை செல்லும் வழியில் இடப்பக்கம் நடக்கும் தூரத்தில் உள்ளது. Special : தோசை, ஆப்பம்

பாரதியார் உணவகம், வரதராஜா மில் அருகில், பீளமேடு. Special : திண்டுக்கல் ரோஸ்ட், மற்றும் கோதுமை தோசை
பிஸ்கட்

சென்னையிலிருந்து பெங்களூருக்கோ, கோவைக்கோ, இல்லை எங்கயோ ஆம்பூர் வழியாக ரயிலில் பயணித்தால், ஆம்பூர் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக இந்த நம்பர்களில் ஸ்டார் பிரியாணிக்கு 04174 249393, CELL : 9894247373 போன் செய்து பிரியாணி ஆர்டர் செய்து உங்கள் கோச் நம்பரையும் சொல்லி விட்டால் ஆம்பூர் ரயில் நிலையத்தில் உங்கள் கோச்சில் வந்து டெலிவரி செய்கிறார்கள்.

காவேரி ஜூஸ் கடை, 5 கார்னர், கோவை. Special : நன்னாரி சர்பத், ரோஸ் மில்க்

பிரியா, கோவை சித்தாப்புதூர் அய்யப்பன் கோவில். Special : அடப்பிரதமன்

சிவ விலாஸ் ஹோட்டல், கோவை, கணபதி. Special : தேங்காய் பால்

மயூரா பேக்கரி, கருமத்தம்பட்டி மெயின் ஜங்ஷன். Special : காரட் கேக்

பழனியம்மா பாட்டி டீக்கடை, சரவணம்பட்டி, கோவை. Special : இஞ்சி டீ

கணபதி மெஸ், வடவள்ளி பழமுதிர் நிலையம் அருகே, கோவை. Special : ஈவ்னிங் வெஜிடேரியன் டிபன்.

பர்மா பாய் கடை, கோவை. Special : பரோட்டா பெப்பர் லெக்

எஸ்.ஆர்.கே.பி மெஸ், ஹோப் காலேஜ், கோவை. Special : ஃபுல் மீல்ஸ்

ஸ்ரீசாய் கபே, கோவை அண்ணா சிலை. Special : ஃபுல் மீல்ஸ்

Barbeque Nation, கோவை டவுன் ஹால். Special :  Unlimited Barbeque

மீசை பாணி பூரி, சுக்ரவார்பேட்டை. Special : முட்டை பூரி

கொங்கு மெஸ், ஹோப் காலேஜ், கோவை. Special : ஃபுல் மீல்ஸ்

பாபு ஹோட்டல், கோவை சுந்தராபுரம் பஸ்ஸ்டாப். Special : ஆப்பம், சாம்பார் பொடி

SMS ஹோட்டல், கோவை, Special : நல்லி எலும்பு சூப், மட்டன் கீமா, தோசை

கீர்த்தி மெஸ், தெற்கு ஆர்.டி.ஓ ஆபீஸ், கோவை. Special : ஃபுல் மீல்ஸ்

அன்ன பூரணி மெஸ், காந்திபுரம் வீதி 1, கோவை. Special : அனைத்து வகை சிற்றுண்டி

ஆஜ்மர் பிரியாணி, மணி கூண்டு, கோவை. Special : பிரியாணி, குஸ்கா

MR ஹோட்டல், கோவை நேரு ஸ்டேடியம். Special : நாட்டுக் கோழி லெக் பீஸ் ப்ரை

CFC HOT FRIED CHICKEN, கோவை ராம்நகர் சிட்டி டவர் ஹோட்டலில். Special : வறுத்த கோழி

நல்உணவு, கோவை ஆர்எஸ் புரம் அன்னபூர்ணா அருகில். Special : சிறு தானியங்கள் உணவு

பிரியாணி மண்டி, ராம்நகர் காளிங்கராயர் தெரு. Special : பிரியாணி

ஹாஜி முத்து ராவுத்தர் பிரியாணி, உக்கடம், கோவை. Special : பிரியாணி, அரி பத்திரி

லக்ஷ்மி சங்கர் மெஸ், ஜி சி டி, கோவை. Special : ஃபுல் மீல்ஸ், எண்ணையில்லா சாப்பாடு

ஆச்சி மெஸ், லாரி பேட்டை, கோவை. Special : 12 வகை வெரைட்டி  சாத வகைகள்

சஹாய் க்ரில்ஸ், கோவை, பீளமேடு. Special : செட்டிநாடு க்ரில், பெப்பர் க்ரில்

ஸ்ரீ லக்ஷ்மி நாராயண டீ காஃபீ, வரதராஜபுரம், கோவை. Special : குருமா, பரோட்டா

கோவை RS புரம் பாலாஜி மெஸ், பெண்களே சமையல். Special : மீன் குழும்பு, கைமா வடை

அம்மா மெஸ், லாரி பேட்டை, கோவை. Special : மீன் குழம்பு, மீன் சாப்பாடு

குப்பண்ணா ஹோட்டல், கோயம்புத்தூர், ராம்நகர். Special : அசைவ சாப்பாடு

சி கே மீல்ஸ், ரயில் நிலயம், கோவை. Special : அளவுச் சாப்பாடு

வில்லேஜ் லஞ்ச் ஹோட்டல், கோவை ரெக்ஸ் ஆஸ்பத்திரி. Special : அனைத்து வித தோசைகள்

பாரதி மெஸ், NEAR NATIONAL MODEL SCHOOL, கோவை. Special : அனைத்து வித தோசைகள்

கீதா கெண்டீன், ரயில் நிலையம், கோவை. Special : அனைத்து வகை டிபன்

கண்ணணண் கறி விருந்து, கோவை. Special : நாட்டுக்கோழி சிக்கன், புதினா சிக்கன்

சுப்பு மெஸ், ரயில் நிலையம், கோவை. Special : சைவ, அசைவ ஃபுல் மீல்ஸ்

ஃபுட் கார்டன், RS Puram, கோவை. Special : தயிர் பூரி

குப்தா ஜி சாட்ஸ், கோவை சாய்பாபா காலனி, சர்ச் ரோடு. Special : தயிர் பூரி

வைரமாளிகை, நெல்லை. Special : ப்ரைடு சிக்கன், ஷார்ஜா மில்க்‌ஷேக்

சுகுணவிலாஸ் ஹோட்டல், அண்ணா சிலை, கடை வீதி, திருசெங்கோடு. Special :  பள்ளிபாளையம் சிக்கன்

அன்னை மெஸ், குன்னத்தூர் பஸ் ஸ்டாண்ட். Special : நாட்டுக் கோழிக் குழம்பு, ஆசாரி வறுவல்.

தூத்துக்குடி பரோட்டோ கடை, கோவை ஹோப்ஸ். Special : பரோட்டோ

சென்ட்ரல் பிரியாணி கடை, திருப்பூர் காங்கேயம் கிராஸ் ரோடு. Special : பிரியாணி

ஜோஸ் கடல் மீன் உணவகம், குமார் நகர், திருப்பூர். Special : கடல் மீன் உணவு

ஆச்சிஸ், திண்டுக்கல். Special : அயிரை மீன் பக்கோடா

டேன்ஜரின் ரெஸ்டாரன்ட், ரேஸ்கோர்ஸ், கோவை. Special : சாப்பாடு

சாய் கப்சப், RS PURAM, கோவை. Special : இஞ்சி டீ:

JMS சர்பத் கடை, திண்டுக்கல். Special : சர்பத்

ஸ்ரீ பாலாஜி பவன் ஹைகிளாஸ் வெஜ ஹோட்டல், திண்டுக்கல். Special : ஃபுல் வெஜ் மீல்ஸ்

அப்பா மெஸ், திருப்பூர் கரட்டாங்காடு பஸ் ஸ்டாப். Special : ஃபுல் மீல்ஸ்

மணி கவுண்டர் மெஸ், திருப்பூர் குமார் நகர் 60 அடி ரோடு. Special : சிந்தாமணி சிக்கன்

தம்புடு ஹோட்டல், பல்லடம் போலிஸ் ஸ்டேசன். Special : இரவு இட்லி, ரோஸ்ட், பரோட்டா

செட்டியார் கடை, திருப்பூர். Special : டயனமைட் சிக்கன் :

ராமசாமி மட்டன், திருப்பூர் புதிய பஸ்நிலையம், திருப்பூர். Special : மட்டன், குடல்பிஃரை

கவுண்டர் மெஸ், அவினாசி ஆட்டயாம்பாளையம். Special : அசைவச் சாப்பாடு

முத்துமெஸ், தாராபுரம் ரோடு, திருப்பூர். Special : அசைவ சாப்பாடு

இந்திராணி அக்கா இட்லி கடை, காரணம் பேட்டை. Special : இட்லி

திருப்பூர் ஷெரிப் காலனி மெயின்ரோடு. Special : அடை சுண்டல்

கொங்கு மீன் ஸ்டால், திருப்பூர் காங்கயம் ரோடு. Special : மீன் வறுவல்

HBH, ஊட்டி சேரிங் கிராஸ் அருகே. Special : பிரியாணி

இதயம் பப்ஸ், திருப்பூர் PN ரோடு, மேட்டுப்பாளையம் பஸ்டாப் அருகில். Special : வெஜ் சமோசா, அரைத்து விட்ட குருமா

அம்மாயி வீட்டு மண் பானை சமையல், கோவை ஆவாரம்பாளையம். Special : குடல்கறி, தோசை

கிங் பரோட்டா, டாஜ், டவுன்ஹால் ரோடு, கோவை. Special : பட்டர் சிக்கன்

வில்லெஜ் விருந்து, பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையம். Special : பன், பரோட்டா

சூரியா ஹோட்டல், NGM கல்லூரி அருகில், பொள்ளாச்சி. Special : கொழுக்கட்டை

அமுதசுரபி, பொள்ளாச்சி. Special : விதம் விதமான தோசை

கௌரி கிருஷ்ணா, பொள்ளாச்சி. Special : மினி காஃபி.

பிரியாணி ஹவுஸ், பொள்ளாச்சி. Special : சிக்கன் பிரியாணி

ஆனந்தாஸ் செட்டி நாடு உணவகம், கோவை கலெக்டர் ஆபிஸ் ரோடு. Special : அன்லிமிட் சாப்பாடு

கீதா ஹால், கோவை. Special : நீர் தோசை

ரமேஷ் மெஸ், அழகேசன் சாலை, சாய்பாபா காலனி, கோவை. Special : ஆப்பம், தேங்காய் சட்னி

Our Sincere thanks to Kovai Neram( Mr.Jeevanandam )

யார் இந்த கான்ட்ராக்ட்டர் நேசமணி என்று சிலர் கேட்கிறார்கள்.

யார் இந்த கான்ட்ராக்ட்டர் நேசமணி என்று சிலர் கேட்கிறார்கள்.

நேசமணி, காரைக்குடி பக்கத்தில் கானாடுகாத்தான் என்ற ஊரில் பிறந்தவர். அவரின் பிறப்பு சாதாரணமானது கிடையாது. பிறக்கும் முன்பே ஒரு பேனில்லாமல், ஏசி இல்லாமல், திரும்பக்கூட இடமில்லாமல் வயிற்றில் பாடுபட்டு பிறந்தவர் நேசமணி. சிறு வயதிலேயே தன் அண்ணனை விட்டு பிரிந்த நேசமணி பல வருடங்கள் கழித்தே தன் அண்ணனுடன் சேர்ந்து கொண்டார்.

தன் அத்தை பெண் திவ்யாவை மனப்பூர்வமாக காதலித்தார் நேசமணி. அந்த காதல் கைகூடாதபோதும் கூட 'நீ யாரையோ நெனச்சி வாழாவெட்டியா இருக்கப்போற. நான் உன்னையே நெனச்சி வெட்டியா வாழாம இருக்கப்போறேன்' என்று பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்தவர் நேசமணி. வெறும் ஏரியா கவுன்சிலராக இருந்து சட்டம் படித்து வக்கீல் வண்டுமுருகனாகி, லண்டனில் வக்கீலாக வேலை செய்தாலும் நேசமணிக்கு வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கவில்லை. மீண்டும் குற்றாலத்தில் வந்து ஒரு டிவிஎஸ் 50 வாங்கிக்கொண்டு கடலைமிட்டாய் வாங்கித்தின்பதோடு சரி என்று எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர் நேசமணி. இதற்கிடையில் நேசமணி துபாயிலும் இரண்டு வருடங்கள் கேக்ரான் மேக்ரான் கம்பெனியில் வேலை பார்த்தார். அங்கிருந்து சாதிசனத்தை பார்க்க வேண்டுமே, மண்ணை மாற்ற வேண்டுமே என்று பேராசைப்பட்டு இந்தியா வந்தார். இப்படி இருந்தபோது தமிழ்நாடு போலீஸ் அவரை கைது செய்து கொரில்லா செல்லில் அடைத்தது. அதிலிருந்து ஹெல்மேட்டோடு ஒரு ஆட்டோவில் தப்பி வந்து மீன் வியாபாரம் செய்தபோதும் அவருடைய விற்பனை கரும்பலகையை அந்நிய சக்திகள் அழித்த கதையும் மிகவும் கவலைக்குரியது.

எதுவும் சரியாய்ப்போகவில்லை என்று திருடியாவது பிழைப்போம் என்று முடிவெடுத்தபோது ஒரு குதிரை ஏமாற்றிவிட பீச்சில் கையும் களவுமாக பிடிபட்டார் நேசமணி. வாழ்க்கை நேசமணியை துரத்தியது. ஆனால் நேசமணி துவண்டுபோகவில்லை. சண்முகம் சலூன் கடை வைத்து ஸ்டெப் கட்டிங்க், ஸ்டைல் கட்டிங்க், பாப் கட்டிங்க் என்று தொழிலை கற்றுக்கொண்டு சைன் பண்ண ஆரம்பித்தார் நேசமணி. ஆனால் அந்த வேலையும் சில சக்திகளால் போய்விட வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற தன்னார்வமற்ற சங்கத்தை துவங்கினார் நேசமணி. கட்டதுரையின் பொறாமையாலும் அரசியலாலும், அவர் தேசிக்காய் உரித்து வைக்க மற்றவர்கள் விளக்கை ஏற்றும் கொடூரமும் நேசமணியின் வாழ்வில் நடந்தேறியது.

யார்யாரோ காலை பிடித்து பேலஸ்ஸில் ஒரு கான்ட்ராக்ட்டை வாங்கி பங்களாவுக்கு வெள்ளையடிக்கப்போன நேரத்தில் தான், தன் அண்ணன் மகனாலேயே சுத்தியல் தாக்குதலுக்குட்பட்டு தற்போது ICU வில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் நேசமணி. அவருக்காக பிரார்த்திக்க தேவையில்லை. கொஞ்சமாவது அனுதாபப்படுங்கள்.
உண்மையான தமிழர்கள் சேர் பண்ணுங்க எசமான்

தமிழகத்தை யாராலும் காப்பாற்ற இயலாது.

❌❌❌தமிழகத்தை யாராலும் காப்பாற்ற
இயலாது.

அதிர்ச்சி அடையாமல் படிக்கவும்
இது ஒரு உண்மை ஸ்டேட்டஸ்...
மீத்தேன் என்னும் எமன்
இன்று காலை தஞ்சையில்
காவேரி பாசன
பகுதிகளை பாலைவனமாய் மாற்ற
கூடிய மீத்தேன்
எடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு பொதுப்பணித்துறை
மூத்த பொறியாளர் சங்கம் நடத்திய
கருத்தரங்கத்திற்கு செல்லும்
வாய்ப்பு கிட்டியது...அனைவரையும்
அதாவது ஒட்டுமொத்த
தமிழகத்தையும் அழிக்க கூடிய
கொடிய அரக்கன்
இது எனபது அறிந்து பெரும்
அதிர்ச்சியே ஏற்பட்டது.
அனைத்து நட்புகளுக்கும் நான்
வைக்கும்
வேண்டுகோள் ....பொறுமையாய்
படித்து அறிந்து இதை முடிந்த
அளவுக்கு பகிருங்கள் என்பதே.
முற்றிலும் பாலைவனமாய்
மாறப்போகும் தமிழகத்தின்
நெற்களஞ்சியமாம் தஞ்சை மாவட்டம்
என்றும்
அதோடு சேர்ந்து பாதிக்கபடப்போகு
ம் மாவட்டங்கள்
திருவாரூர் ,நாகை மாவட்டம் ஆகிய
இரண்டும் தான் என்பதே நான்
இது வரை அறிந்த
விபரம்...உண்மை அதுவல்ல..
  இன்று நடந்த
கருத்தரங்கில் பொறியாளர்கள்
கூறியது மனதை பதைபதைக்க
வைத்தது. மீத்தேன் எடுக்க போகும் விபரம்
இங்கு இருப்போற்க்கே சரிவர தெரியாத
ஒரு செய்தி என்பதே உண்மை..இதே கருத்தை இன்றைய
கருத்தரங்கிலும் பகிர்ந்தனர்..
எங்கேயோ போடப்போகும்
ஆழ்துளை கிணறுதானே நமக்கு என்ன
வந்தது என்று எண்ண வேண்டாம்
தோழமைகளே..
1.நிலத்தடியில் சுமார் 6000
அடி ஆழத்தில்
நிலக்கரியோடு இருக்கும்
மீத்தேனை எடுக்க
நிலக்கரி இருக்கும் மட்டம்
வரை நிலக்கரிப் படிவத்தில்
இருக்கும் நீரை இறைக்கவேண்டும்.
2.கடும் உப்பும், பிற மாசுகளும்
நிறைந்த இந்த நீர், நிலத்தில் வாழும்
தாவர உயிரியல் மற்றும்
நுண்ணுயிர்களைக் கொல்லும்
ஆற்றல் வாய்ந்தது.
3.அதோடு நிலம் சுடுகாடாய்
மாறும்.
4.கடல் நீர் உள் நுழையும்.
5.நிலம் சுமார் 20
அடிகளுக்கு உள்வாங்கும்.
6.கட்டிடங்கள், பாலங்கள்,
ஆற்றுக்கரைகள் , கோயில்கள்
சிதையும்.நிலநடுக்கங்கள்
ஏற்படும் .
7.குடிநீர் , பாசன நீர் தரும்
நிலத்தடி நீர்பிடிப்புகள் வற்றிப்
போகும்.
8.மீதம் இருக்கின்ற நீர்நிலைகளிலும்
ஆழ்துளை குழாய் இட
பயன்படுத்திய ரசாயனங்கள்,
மீத்தேன் ஆகியவை கலக்கும்.
இச்செயல் முறை மண்ணையும்,
நீரையும் நஞ்சாக்கி நிரந்தரமாக
நாசம் செய்யும்.
ஒப்பந்தம் போட்டிருக்கும்
ஜி.இ.இ.சி கம்பெனிக்கு கொடுக்கபோகும்
இடம் 691 சதுர
கிலோமீட்டர் .ஆனால்
பாதிப்பு ஏற்படபோகும்
மூன்று மாவட்டங்களின்
பரப்பளவு 8270 சதுரகிலோமீட்டர்
அதாவது 21 லட்சம் ஏக்கர்
நிலங்களை நாசம் செய்யும்.
மொத்த ஆழ்துளை கிணறுகளின்
எண்ணிக்கை 2000.
அடுத்த கட்டமாய் பாதிக்கபோகும்
மாவட்டங்கள் புதுக்கோட்டை,
திருச்சி மற்றும் கடலூரும் தான்.
இதனால் காற்றும் மாசுபட
போவதால் அது ஒட்டுமொத்த
தமிழகத்தையும் பாதிக்கபோகும்
கொடிய அரக்கன் என்பதே நிதர்சனம்.
ஒட்டுமொத்தமாக
இப்பகுதி பாலைவனமாய் மாற
போவதால் 50 லட்சம் மக்களின்
வாழ்க்கை கேள்விக்குறியாய்
நிற்கிறது..சென்ற
அரசு ஒப்பந்தத்தில்
கையெழுத்து இட்டு தற்போது ஆங்காங்கே நடைபெறும்
போராட்டம் காரணமாய் இந்த
அரசு தற்காலிகமாய்
நிறுத்தி வைத்துள்ளது.இந்த
ஒப்பந்தம் மட்டும் மீண்டும்
தொடர்ந்தால் ...............
தமிழகத்தை யாராலும் காப்பாற்
இயலாது. .அதற்கு முன் மக்கள்
விழித்தெழ வேண்டியது மிக
அவசியம் மற்றும் அவசரமும் கூட.

(ஒரு வேண்டுகோள் - ஷேர் செய்)
R.SARAVANAN.MA.BL.MPHIL.MBA.MLM.
ADVOCATE.HIGH COURT.
CHENNAI.
PLEASE SHARE IT.
THANK YOU.TAMILNADU

இப்ப சொல்லு ஆடு மாடு மேய்த்தல் அரசுப்பணி என்பது பிற்போக்கு வாதமா...???

நான் engineering படிச்சுருக்கேன்..

Dairy industry processing technical டீம் வேலை கொடுத்தா செய்ய மாட்டியா..

நான் agri படிச்சுருக்கேன்...

Dairy industry க்கு தேவையான தீவனம் வளர்ப்பு ஆலோசகர் வேலை தந்தா செய்ய மாட்டியா.. ...

நான் microbiology படிச்சுருக்கேன்

Dairy industry ல quality யூனிட் ல வேலை கொடுத்தா செய்ய மாட்டியா..

நான் computer science படிச்சுருக்கேன்

Dairy industry ல system operator வேலை கொடுத்தா செய்ய மாட்டியா..

நான் commerce  படிச்சுருக்கேன்..

Dairy industry ல accounts வேலை கொடுத்தா செய்ய மாட்டியா

நான் vetrinary science படிச்சுருக்கேன்..

Dairy industry ல கால்நடை health inspector வேலை கொடுத்தா செய்ய மாட்டியா..?

நான் MBA படிச்சுருக்கேன்..

Dairy industry ல marketting section ல வேலை கொடுத்தா செய்ய மாட்டியா...

மாடு மேய்த்து பால் கறக்கறதை படிக்காதவங்க பாத்துப்பாங்க...  படிச்ச உனக்கு உன் துறை சார்ந்து வேலை..  அதுவும் அரசாங்க வேலை..  இந்தியாவில்  பாலின் சந்தை மதிப்பு 4 லட்சம் கோடி...  ஆவின் நிறுவனத்தின் வருடாந்திர வருமானம் 8500 கோடி...  ஹட்சன் எனும் தனியார் நிறுவன வருமானம் 4 ஆயிரம் கோடி..

இப்ப சொல்லு ஆடு மாடு மேய்த்தல் அரசுப்பணி என்பது பிற்போக்கு வாதமா...???

ஒரு பெண் போட்டோ பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.

ஒரு பெண் போட்டோ பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.

முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள் கொஞ்சம் கறுப்பு. அவனுக்கு ஏனோ அவளை பிடிக்கவில்லை மனைவியை வெறுத்தான். படுக்கையை விட்டு தள்ளிவைத்தான். என்னதான் தன் கனவன் தன்னை வெறுத்தாலும் அவன் மீது அளவுகடந்த அன்பும் பாசமும் வைத்திருந்தாள்.

இப்படிதான் ஒருநாள்.

ஏன் என்னை வெறுக்கின்றீர்கள்! நான் உங்கள் மனைவி. உங்களை காதலிக்கின்றேன்! அது ஏன் உங்களுக்கு புரியவில்லை!! என்று அவள் சொல்ல இவன் ஒன்றும் சொல்லாமல் சென்றுவிடுகிறான்.

இரவு 1மணி போல அவனுக்கு திடீரென நெஞ்சு வலி வருகிறது.
வலி தாங்க முடியாமல் அய்யோ!!! அம்மா!!! என்று கதறுகிறான். அவனை பார்த்த மனைவி அவனைவிட கதறுகிறாள். உடனே தன் வீட்டாருக்கும் கணவனின் நன்பருக்கும் Phone செய்கிறாள். கணவன் துடிப்பதை தாங்கிகொள்ள முடியாதவள். தலை மீது கைவைத்து ஒரு பைத்தியக்காரி போல் புலம்பிக்கொண்டு வீட்டையே சுற்றி சுற்றி வருகிறாள்

இவளை பார்த்த கணவன் பயந்து போகி திரு திருவென முழிக்கிறான். பாவம் எத்தனை நாள் வைத்த பாசமோ!!! கணவனின் நண்பன் Car எடுத்துக்கொண்டு வேகமாக வருகிறான். தன் மார்போடு கணவனை அனைத்துக்கொண்டு அண்ணா கொஞ்சம் வேகமாக செல்லுங்கள் என்கிறான். அந்த ஒரு நொடி இவளையா வெறுத்தேன் என்று கண் மூடி அழுகிறான் கணவன்.

மருத்துவமனையில் தீவீர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டான். மனைவியின் உறவினர்கள் வருகின்றனர். அவள் அழுகை அப்போதும் அடங்கவில்லை இந்த பெண்ணிற்கு இப்படி ஒரு காதலா என்று எல்லோரும் வியந்தும் பொறாமையுடனும் அவளை பார்க்கின்றனர். உங்கள் கணவர் புகை பிடித்ததால் வந்த பாதிப்பு... என்கிறார்

மருத்துவர்...உறவினர்கள் அவனுக்கு அறிவுரை சொல்ல அவன் தன் மனைவியை தேடுகிறான்...
அவள் கதவு அருகில் நின்று இன்னும் அழுதுக்கொண்டுதான் இருக்கிறாள். தன் மனைவியின் பெயரை முதன்முதலாக சொல்லி சத்தமாக அழைக்கிறான். சடார் என்று "என்னங்க" என்று பதறி ஓடிவருகிறாள். அழுது அழுது அவன் கண்கள் சிவந்து போனது. அவள் கையை பிடித்துக்கொண்டு இனி நான் புகை பிடிக்கமாட்டேன்! உனக்காக என்கிறான்.

தன் கணவன் தன்னுடன் பேசுகிறான் என்ற சந்தோஷமும் அழுகையும் ஒன்றாய் வர அழுதுக்கொண்டே சிரிக்கிறாள். என் மேல் இவ்வளவு பாசமா என்று கணவன் கண்ணால் கேட்க நீங்கள் என் கணவர். நான் உங்கள் மனைவி என்று ஒரு வார்தையில் ஆயிரம் அர்த்தங்கள் சொல்லி அவன் நெற்றியில் முத்தமிடுகிறாள் அந்த காதல் கொண்ட மனைவி.

காலம் எப்படி மாறிப்போனாலும் கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள்.

இந்த உலகத்தில் எல்லா உறவு முறையும் ஒரு காலகட்டத்தில் நம்மை விட்டு கட்டாயம் பிரிந்துவிடும் ஆனால் கணவன் மனைவி உறவு மட்டும் நாம் சாகும் வரை நம் பின்னாலே தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

ஜெகன் மோகன் ரெட்டி ஏன் காங்கிரஸ் என்ற ஓர் மாபெரும் இயக்கத்தின் பெயரை தன் கட்சியில் பெயரில் வைத்திருக்கிறார் தெரியுமா?

ஜெகன் மோகன் ரெட்டி ஏன் காங்கிரஸ் என்ற ஓர் மாபெரும் இயக்கத்தின் பெயரை தன் கட்சியில் பெயரில் வைத்திருக்கிறார் தெரியுமா? ஏன் நான் மன்னிக்கிறேன் என்று கூறுகிறார் என்பதற்கு இந்த விளக்கம்.

2009 ல் ஆந்திர பிரதேசத்தின் காங்கிரஸ் சார்பாக முதல் அமைச்சராக இருத்தவர் Y. S. Rajashekhara Reddy . காங்கிரஸ் இங்கு செல்வாக்கு சரிவை சந்தித்த போது குழப்பமான சூழ்நிலையில் இருந்த போது  சாதாரண MLA வாக இருந்த Y. S. Rajashekhara Reddy முதல் அமைச்சராக்கப்பட்டார். இவர் தலைமையில் இரண்டாவது முறையாக காங்கிரஸ் ஆட்சியை பெருமான்மையோடு பிடித்தது. இவர் உயிருடன் இருந்த போது இப்போது உள்ள தெலுங்கானாவை பற்றி ஒருவரும் குரல் எழுப்பவில்லை. அவ்வளவு துணிவும் இல்லை. தனி பெரும் தலைவராக உருவெடுத்தார் Y. S. Rajashekhara Reddy . இவர்கள் பாரம்பரியமாக மிகப்பெரிய பணக்கார குடும்பம்.  

இவரின் குடும்பம் ஓர் பக்தியுள்ள குடும்பம். இரவு கண்டிப்பாக குடும்ப ஜெபம் இருக்குமாம். அதிகாலையில் பரிசுத்த வேதாகமம் வாசித்து விட்டு தான் குடும்ப உறுப்பினர்கள் வேலைக்கு செல்வார்கள். Y. S. Rajashekhara Reddy அவர்களின் மனைவி மிகவும் கண்டிப்பான கிறிஸ்தவ மார்க்கத்தை பின்பற்றும் வழக்கத்தை கொண்டிருந்தார்கள்.

2009 ல் ஓர் வானவூர்தி விபத்தில் Y. S. Rajashekhara Reddy அவர்கள் காலமானார். இது யாரும் எதிர்பாராத ஓர் மரணம். இதில் காங்கிரசில் அடுத்த முதல்வர் யார் என்ற போட்டி வந்தது. Y. S. Rajashekhara Reddy அவர்களின் மகனான ஜெகன் மோகன் அவர்கள் முதல்வராக்க அனைவரும் ஒன்று திரண்டனர். ஆனால் அப்பொழுது காங்கிரஸ் ல் இருந்த சில மூத்த அமைச்சர்கள் டெல்லியில் முகாமிட்டு முதல் அமைச்சர் பதவியை பறித்து கொண்டனர். இது ஜெகனுக்கும் காங்கிரசுக்கும் விரிசல் உண்டாக்கியது .

Y. S. Rajashekhara Reddy யின் தீவிர தொண்டரான ஓர் வழக்கறிஞ்சர் Y. S. Rajashekhara Reddy பெயரில் கட்சியை ஆரம்பித்தார். அப்பொழுதும் ஜெகன் காங்கிரஸ் தனக்கு கை கொடுக்கும் என்று நம்பி இருந்தார். அதன் பிறகு YSR காங்கிரசில் 2010 ல் இணைத்தார். இவருடன் ஆந்திராவின் அதிக மூத்த அரசியல்வாதிகள்  YSR காங்கிரசில் இணைந்தனர். இதை காங்கிரஸ் எதிர்பார்க்கவில்லை.

2012 ல் காங்கிரஸ் ஆட்சியோ ஜெகன் திருட்டு தனமாய் பணம் சம்பாதிக்கிறார் என்று சொல்லி அவரை சிறையில் தள்ளி அவமானப்படுத்தியது.

இது மிகப்பெரிய மதிப்புடன் இருந்த ஜெகன் குடும்பத்திற்கு மிகுந்த தலை குனிவை ஏற்படுத்தியது. ஆனால் CBI இந்த குற்றசாட்டை நிரூபிக்க முடியாமல் விடுதலை செய்தது.

சிறையில் இருந்து வந்தவுடன் கொடுத்த பேட்டியில் தான் காங்கிரசை மன்னித்து விட்டதாக கூறினார். இயேசு கிறிஸ்து தனக்கு மன்னிக்க கற்று கொடுத்திருக்கிறார். ஆதலால் நான் மன்னிக்கிறேன் என்று தைரியமாக தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுத்தார். இது மக்கள் மத்தியில் அவருக்கு நன் மதிப்பை உருவாக்கியது.

1 பேதுரு 6. ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.7. அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.

என்ற பரிசுத்த வேத வாக்கியம் நிறைவேறியது அல்லவா?

நான் இப்படியும் யோசித்து பார்க்கிறேன். ஏன் காங்கிரஸ் இந்த தேர்தலில் படுதோல்வி அடைய வேண்டும்? மீண்டும் எதிர்க்கட்சியாக இருப்பதற்கு கூட எண்ணிக்கைகள் இல்லாமல் போய் விட்டதாய்? அப்பொழுதுதான் இந்த வசனம் நினைவிற்கு வந்தது..

உபாகமம் 28:7 உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களைக் கர்த்தர் உனக்குமுன்பாக முறிய அடிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்பார்; ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்.

தேவனுடைய மனிதர்களுக்கு விரோதமாய் எவன் எலும்பினாலும் எத்தகைய ஆட்சியை கையில் வைத்திருந்தாலும் தேவன் அவர்களை அழித்து போடுவார். இது பாரதீய ஜனதா கட்சிக்கும் நிச்சயம் பொருந்தும். இன்று ஒரு வேலை அவர்கள் உச்சத்தில் இருக்கலாம். ஆனால் தேவனுடைய பிள்ளைகளுக்கு தொடர்ந்து தீங்கிழைக்க நினைத்தால் என் தேவன் அவர்களை அழிப்பார். உன் கண்மணியை தொடுகிறவன் என் கண்மணியை தொடுகிறான் என்ற வசனத்தின் அர்த்தத்தை அவர்களும் புரிந்து கொள்ளும் நாள் வரும்.!

கோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....

கோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு.... நீங்கள் உணவுப்பிரியரா ? சுவையான உணவிற்கு முக்கியத்துவம் கொடுப்பவரா கோவை ம‌ற்றும் ...